அ.வி. 334 சாகாவரமும் பரிபக்குவ நிலையும்

வாழ்க வையகம்!                                                                                     வாழ்க வளமுடன்!!

இனிய ‘சுபகிருது’ வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்

அ.வி. 334

சாகாவரமும் பரிபக்குவ நிலையும்

14-04-2022-வியாழன்

     படம்: வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் பொழுது திருவாய் மலர்ந்தது

 

வாழ்க வளமுடன்!

நேற்றைய (13.04.2022) சத்சங்கத்தில் சிந்திக்க வினாக்கள் பகுதியில் தொடுக்கப்பட்ட  வினாவின் தொடர்ச்சியாக…

வள்ளல் பெருமானாரின் ஆன்மா வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடங்கள் இருந்து அருள்பாலித்தது மனவளக்கலைஞர்கள் அனைவரும் அறிந்ததே.

வள்ளலாரின் கடைசி செய்தி:

 1. இதுவரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தேன். ஒருவரும் கேட்டுத் திருந்தவில்லை; ஒருவரும் தேறவில்லை.
 2. அகவினத்தாருக்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்அளிப்பேன்.
 3. இப்போது இந்த உடலில் இருக்கின்றேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும் இருப்போம்.
 4. திருத்திடுவோம். அஞ்சவேண்டாம்.

 

 

 1. ஏன் வள்ளலாரின் ஆன்மா வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடம் இருந்தது?
 2. ஒருவரும் தேறவில்லை என்று எதனை குறிப்பிடுகிறார்?
 3. அகவினத்தார் என்பவர்கள் யார்?
 4. சாகாவரம் என்றால் என்ன ?
 5. ஏன் அகவினத்தாருக்கு மட்டும் சாகா வரம் தருகிறேன் என்கிறார்?
 6. ஏனையோர்கள் என்பவர்கள் யாவர்?
 7. ஏன் அவர்களுக்கு பரிவக்குவ நிலை அளிப்பேன் என்கிறார்?
 8. பரிபக்குவ நிலை என்றால் என்ன?
 9. அகவினத்தார்க்கு சாகாவரம் தருவேன் என்கின்ற வரிசையில் மகரிஷி அவர்களிடம் வள்ளலார் ஆன்மா இருந்ததா?
 10. பரிபக்குவநிலை அளிப்பேன் என்ற நம்பிக்கையளிக்கும் உறுதியளிப்பு கவனிக்கப்பட வேண்டியதல்லவா?
 11. “திருத்திடுவோம்.  அஞ்சவேண்டாம்” என்கிறாரே,  அதன் பொருள் என்ன?
 12.  திருத்துதல் நடந்துகொண்டிருக்கின்றதா?  அதனால் கவலைப்படவேண்டாம் என்கிறாரே வள்ளலார் அவர்கள்?
 13. இப்பிறவியில் பரிபக்குவ நிலை கிடைத்தால் சாகா வரம் எப்போது?
  1. அடுத்த பிறவியிலா? காத்திருக்க வேண்டுமே!( வள்ளலார் அவர்கள்  அருட்தந்தை அவர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி பற்றி அறிய –please read page 111- of ‘எனது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூல்)
  2. இப்பிறவியில் பரிபக்குவ நிலை கிடைத்து அடுத்த பிறவியில் சாகாவரம் கிடைக்கும் என்றால் அடுத்த பிறப்பு கருவிலே திருஉடைய‌பிறப்பா?
  3. நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளதா?
  4. ஆனால் அடுத்த பிறவி‌ என்றால் நாம் இல்லையே அப்போது?
  5. நாம் இல்லை என்றால் என்ன ?
  6. நம் பிறவியின் தொடரான மகன் அல்லது பேரன் அல்லது கொள்ளுப் பேரன் அல்லது வம்சாவளி இருப்பார்களன்றோ!?
  7. பல்லாயிரம் பிறவிகள் எடுத்திருந்தாலும் இப்பிறவி ஒன்றே போதும் என உறுதி(ஞா.க.கவி.எண் 1743) அளிக்கின்றாரன்றோ நம் அருட்தந்தை அவர்கள்.

  21.அதற்கு என்ன செய்ய வேண்டும்? 

  1. மற்றொரு உறுதி மொழியும் அளித்துள்ளாரே! அது என்ன?
  2. எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு மதிப்போர் தம்மை தரத்தில் உயர்த்திப் பிறவிப் பயனை நல்கும் என்கிறாரே வையகத்துள்ளோரை வாழ்வாங்கு வாழவைக்க வந்த விடிவெள்ளி வேதாத்திரி‌ மகரிஷி அவர்கள்.

  வள்ளலார் அருள் தனக்கு கிடைத்ததுபற்றி மகரிஷி அவர்கள் கூறும் கவியினை நினைவுகூர்தல் நலம்பயக்கும்.

வாழ்க வளமுடன்!

வேறொரு சத்சங்கத்தில்  குருவை மதித்தொழுகல் பற்றி விரிவாக சிந்திப்போம்.  அதற்கு இறையருளும் குருவருளும் துணை புரியுமாக!

 

 வாழ்க திருவேதாத்திரியம்!                வளர்க திருவேதாத்திரியம்!!