வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 318(237)
11-07-2020 — சனி
சிந்தித்து, சிந்தித்து மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து என்கின்ற நூலில் எழுதியுள்ள கவிகள் பல உள்ளன. அந்நூலில் உள்ள கவிகள் ஒவ்வொன்றையும் பல முறைகள் நீங்கள் படிக்க வேண்டும். இல்லை என்றால் அந்தக் கவிகளுடைய முழு அர்த்தத்தையும், நான் எந்த அறிவு நிலையில் இருந்து கொண்டு எழுதினேன் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியாது.
– வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
. .
பயிற்சி—
1) அவருடைய அறிவு நிலையினை ஏன் நம்மைப் புரிந்து கொள்ளச் சொல்கிறார்?
2) அவரது அறிவுநிலையினை புரிந்து கொள்வதால் என்ன பயன்?
3) யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று விரும்புகிறாரா?
4) ‘இல்லை என்றால்’ மற்றும் ‘முடியாது’ என்கிற இரண்டு எதிர்மறை வார்த்தைகளை ஏன் பயன்படுத்துகிறார்?
5) நாம் கவிகளின் பொருளை முழுமையாக உணரவேண்டும் என்பதில் அவரது கருணை வெளிப்படுகிறதல்லவா?
6) உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என்ற வரிகளை இணைத்துப் பார்த்து சிந்திப்போமே!
வாழ்க சிந்தனைச் செல்வம்! வளர்க சிந்தனைச் செல்வம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
ஒவ்வொரு பதிவுகளும் நேர்த்தியாகவும் பொறுப்புடனும் எளிமையாகவும் முரண்பாடுகள் இல்லாமலும் அமைந்துள்ளன. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்! இந்த கட்டுரைக்கு உங்கள மேலான கருத்துக்களை அனுப்பவும். நன்றி. வாழ்க வளமுடன்!
நன்றிகள் பல.