சிந்திக்க அமுத மொழிகள்-337 பகுதி – II  (998th Posting)

வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்-337 பகுதி – II  (998th Posting)

            

    13-06-2022 — திங்கள்

 

அறிவிற்கு அமைதி எப்போது?

அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால் அது   தன்னையறிந்து முடிக்கும் வரை அமைதி பெறாது.”

                                                       . . .   வேதாத்திரி மகரிஷி 

பயிற்சி-பகுதி-II

30-05-2022  அன்றைய சிந்திக்க அமுதமொழி பகுதியின் தொடர்ச்சி (முந்தைய பதினாறு வினாக்களையும் அறிய Please click here)

17) கருத்தியல் விளக்கம்/விளக்க அறிவில்(theoretical understanding)  அழுத்தம் பெறுவது எவ்வாறு?

18) கருத்தியல் விளக்கம்/விளக்க அறிவில்(theoretical understanding) விரைவில் அழுத்தம் பெறுவதற்கு அறிவிற்கு அயரா விழிப்புடன்,  அறிவுக்கூர்மையும் அவசியமன்றோ?

19)அறிவின் விழிப்பு, அறிவுக் கூர்மை என்பன யாவை?

20)  அயராவிழிப்பு நிலை என்பது நாம் அறிந்ததே.  அறிவுக்கூர்மை என்பது சிந்தனையேதான்! என்ன அன்பர்களே?

21) அச்சிந்தனை தொடர் சிந்தனையாக இருக்க வேண்டாமா?

22) தொடர் சிந்தனை என்பது சுவாசம் போல் இருக்க வேண்டும் என்பதுதானே  வலியுறுத்தப்படுகின்றது?  சுவாசத்தை  யாரும் மறப்பதில்லை.  அது அனிச்சை செயலாக நடப்பதுபோல் சிந்தனையும் மறவாமல் நடக்க வேண்டும் என்கிறாரா? அதாவது அனிச்சையாக நடக்க  வேண்டும் என்கிறாரா?

23) ‘சிந்திக்கும்  அறிவு தன்னை அறியும் வரை அமைதி பெறாது’ என்கிறாரே! அதன் பொருள் என்ன?

24) “அறிவை தன்னை அறிய நினைத்தால் அறிவிற்கு ஓய்வேது?” என்று வேறோர் இடத்தில் கூறியுள்ளார் மகரிஷி அவர்கள். அதே பொருளில் தானே   ‘அறிவு தன்னை அறிந்து முடிக்கும்  வரை  அமைதி பெறாது’ என்கின்ற பொன்மொழியிலும் கூறுகின்றார் மகரிஷி அவர்கள்? 

25) ‘அறிவு தன்னை அறிந்து முடிந்துவிட்டால் அமைதி பெறும்’ என்பது என்ன?

26)  அமைதி பெற்றுவிட்டால் அடுத்த நிலை பேரின்பம் (ecstasy)* தானே?  அதுதானே தன்னிலையில் நிலை பெறும் நிலை?  அனுபவ ஞானத்திலும்  முழுமை அடையவேண்டுமல்லவா? அதனைத்தானே அறிவின் முழுமைப்பேறு என்கிறார் மகரிஷி அவர்கள்? கருத்தியல் ஞானம்   அனுபவ ஞானத்தை எளிதிலும், விரைவிலும்  உறுதிபடுத்துமன்றோ?  இவ்விரண்டும் இணைதலைத்தானே   அறிவின் முழுமைப்பேறு என்கிறார் மகரிஷி அவர்கள்?  இதுதான்   ஆங்கிலத்தில் கூறப்படும் ‘Enlightenment’ எனப்படுவதா?

(* ‘ Ecstasy’ க்கான மகரிஷி அவர்களின் வரையறையை அறிய ‘Logical Solutions For the Problems of Humanity’ என்கின்ற ஆங்கில நூலில் பக்கம் 30 ல் காணவும்.  தமிழ் பதிப்பான  ‘சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள்’ – பக்கம் 23ல் பேரின்பத்திற்கான மகரிஷி அவர்களின் வரையறையைக் காண்க.)

 

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

   உலகெங்கிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

 

வாழ்க சிந்தனைச் செல்வம்!           வளர்க சிந்தனைச்   செல்வம்!!