சிந்திக்க கவிகள் -12

   வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

சிந்திக்க கவிகள்-12

26-04-2022-செவ்வாய்

ஒழுக்கவியல் கல்வி

சாதனையே அறநெறி(21-12-1961)

அறநெறியை போதிக்கப் புதிய நூல்கள்

அவசியமே இல்லைஇனி: மேலும் மேலும்

அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்

அறிஞர்பலர் அளித்துள்ளார்; அவையே போதும்

அறம்பிறழா நெறிநின்று,  மக்கள் வாழ

அவசியமாம் பொருட்களொடு கல்வி கிட்ட,

அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!

அதன் மூலம் அறம் வளரும்; உலகம் உய்யும்.  .. ஞா.க.க.எண். 533

                                                            . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  

            

குறிப்பு: ‘கவியினால் பயன் பெற’  என்பது  கவியினால் சிந்தித்தல் என்பதாகும்.    வாழ்க வளமுடன் அன்பர்களே! பயிற்சிக்கு முன்னர் கவியினால் பயன் பெற புதுயுக்தியை படித்துவிட்டீர்களா அன்பர்களே!

 

பயிற்சி:

 

1. என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்??

2. அறநெறியை போதிக்கப் புதிய நூல்கள் இனி  அவசியம் இல்லை என எப்படி உறுதியாகக்  கூறமுடிகின்றது இருபதாம் நூற்றாண்டில்?

3. சாதனையே அறநெறி என்றால் என்ன?

4. இதுவரை அறநெறி சாதனையாக்கப்படவில்லையா?  ஏன்?  அறநெறி கருத்தியலாகக் கூறப்பட்டும் அதனை செயலுக்கு கொண்டுவர செய்முறை பயிற்சி இதுவரை ஏன் கொண்டுவரப்படவில்லை?  சாதனைக்கான  அவசியம் இதுவரை அறியப்படவில்லையா?

5.  சாதனைக்கான வழிகள் தெரியவில்லையா? 

6. அறம் பிறழாமல் மக்கள் வாழ்வதற்கு இப்போது எப்படி  மகரிஷி அவர்களால் தீர்வுகள் கூறமுடிகின்றது?

7. அவசியமாம் பொருட்கள் கிட்டுவது ஒரு தீர்வாகக் கூறுகிறார்.  அதன் பொருள் என்ன?

8. கல்வி வேண்டும் என்கிறார். அந்த கல்வி என்ன? அக்கல்விக்கான பெயர் என்ன? அக்கல்வி எப்போது ஆரம்பிக்கப்பட வேண்டும்?

9. கல்வியால் மட்டுமேவா அறத்தை சாதனைக்கு கொண்டுவர முடியும்?  அறத்தை சாதனைக்கு கொண்டுவருவதற்கு  வேறு வழியில்லையா?

10.  அறம் என்பது என்ன?  அதில் உள்ள அங்கங்கள் என்ன? அதில்  எது முதன்மையானது?

11. நம் குருநாதர் வழியில் சிந்திப்போமே!  அவரது  சிந்தனைக்கும், எண்ணத்திற்கும் வலு சேர்ப்போமே! எப்படி? வாழ்க வளமுடன்!  

                                        வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!