வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்- 323(255)
17-08-2020 – திங்கள்
கருவில் திருவுடைமை
ஞானிகளைப்பற்றிக் கூறும்போது அவர் கருவில் திருவுடையவராகப் பிறந்தார் என்று எந்த பொருளில் கூறுகிறோம்?
(இந்த பொருள் பற்றி மேலும் ஆழ்ந்தும், அகலமாகவும் சிந்திக்கவும், நடைமுறைப்படுத்த வேண்டியதை அறியவும், இந்த முதன்மை வினாவிற்குரிய துணை வினாக்களையும் எடுத்துக் கொண்டு சிந்திப்போம். வாழ்க வளமுடன்!)
துணை வினாக்களுக்குள் செல்வோம்.
i) ‘திரு’ என்றால் என்ன?
ii) ‘கரு’ என்றால் என்ன?
iii) ‘உடைமை’ என்றால் என்ன?
iv) ‘கருவில் திருஉடைமை’ என்றால் என்ன?
v) திருஉடைமையின் பயன்கள் என்ன?
vi) கருவில் திரு உடைமையை அறிவியல் ரீதியாக எவ்வாறு கொண்டு வருவது? அல்லது எவ்வாறு கருவில்/கருமையத்தில் ‘திரு’ வை சேர்ப்பது?
vii) கருவில்/கருமையத்தில் ‘திரு’ வை சேர்ப்பது என்ன பொருள்?
viii) கருவில் ‘திரு’ வை சேர்ப்பது என்றால் அது யாருடைய பொறுப்பு?
ix) கருமையத்தில் ‘திரு’ வை சேர்ப்பது என்றால், அப்போது அது யாருடைய பொறுப்பாகின்றது? அந்தபொறுப்பு எப்போது இன்றியமையாததாகின்றது?
x) இச்சிந்தனை ஆன்ம சாதகனுக்கு எப்போது எழும்/எழலாம்? ஆன்ம சாதகர்கள் எல்லோருக்குமே இச்சிந்தனை எழவேண்டியது அவசியமா?
xi) ஏன் அவசியமாகின்றது? ஆழ்ந்து சிந்திக்கலாமே!
xii) ‘கருவில் திரு’ பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு படுத்திக்கொள்ளலாமே!
xiii) கருவில் திருஉடைமையாகப் பிறந்துவிட்டால் ஆன்ம வெற்றிக்கு சிரமமில்லையோ!
xiv) தெய்வீகப் பண்பான முயற்சி மனிதனிடம் உள்ளதால் அதனைக்கொண்டு ஒரு பிறவியிலேயே கருவை திருஉடையதாக்கி பிறவிப்பயனை அடையலாமன்றோ!?
xv) பல்லாயிரம் பிறவிகளில் கொண்டு வந்த பழிச்செயல் பதிவுகள் கருமையத்தில் இருந்தாலும் அவற்றை ஒரு பிறவிக்காலத்திலேயே மாற்றி அமைக்கலாம் என்கின்ற உத்திரவாதம் உள்ளதே! அதனை யார் கொடுத்துள்ளது?
குருநாதர் வழிகாட்டுதலும், அவரின் அருளாசியும், அவரால் கிடைத்துள்ள திருவருளும் துணை நிற்கட்டுமாக. வாழ்க வளமுடன்!
வாழ்க மனிதஅறிவு! வளர்க மனித அறிவு!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க வையகம்!!!!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!