வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-333 (996th Posting)
29-05-2022-ஞாயிறு
சுத்த அத்வைதம்!!!
பிரதான வினா(Main Question): 333
இருபதாம் நூற்றாண்டில்அவதரித்த அத்வைதத்தின் இரண்டாம் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களால் வெகுகாலமாக இருந்து வந்த அத்வைத தத்துவத்தை இந்த நவயுக விஞ்ஞானத்திற்கேற்ப எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ளுமாறு, தெளிவுபடுத்தி சுத்த அத்வைத தத்துவமாக அருள முடிந்தது எப்படி/எவ்வகையில்/எவ்வாறு?
துணை வினாக்கள் (Sub questions):
1) இந்த வினாவின் நோக்கம் என்ன?
2) அத்வைதம் என்பது என்ன?
3) சுத்த அத்வைதம் என்கின்றபோது அத்வைதத்தில் இரண்டு உள்ளதுபோல் தோன்றுகிறதா?
4) ஒன்றே பலவாகியது என்று அத்வைதம் உரைத்தாலும் அந்த ஒன்று எது, அது எவ்வாறு பலவாகியது என்று இதுவரை(1911) கூறப்பட்டுள்ளதா?
5) பலவாகியது என்றால் விண், பஞ்சபூதங்கள், மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுமே அந்த பலவற்றில் அடங்கும் அல்லவா?
6) ஆனால் ஒன்றிலிருந்து மற்றொன்று தொடர் நிகழ்ச்சியாகத்தானே நடந்திருக்கும்!?
7) இரண்டற்ற நிலை என்றுதானே அத்வைதம் கூறுகின்றதல்லவா!?
8) அதாவது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் வெவ்வேறல்ல என்றுதானே அத்வைதம் கூறுகின்றது!?
9) ஆனால் எது, எந்த ஒன்று பலவாகியது, எவ்வாறு மனிதன் வரை பலவாகியது, அந்த ஒன்றின் பயணம் எவ்வாறு மனிதனில் முடிவடைந்து மனித அறிவை முழுமை அடையச் செய்கின்றது என்கின்ற செயல்முறையை(process) இன்றுவரை அத்வைதம் எவ்வாறு விளக்கியுள்ளது?
10) ‘வேதாத்திரிய சுத்த அத்வைதமும்’ ஒன்றே பலவாகியது என்றாலும் எந்த ஒன்று என்பதனை உறுதியாக அச்சமின்றி அறிவேதான் தெய்வம் என்று கூறுவதாலும், ஏன், அது எவ்வாறு, பலவாகியுள்ளது என்பதனை அறிவுபூர்வமாகவும், அறிவியல் ரீதியாகவும் கூறுகின்றதல்லவா?
11) ஆகவே வேதாத்திரிய அத்வைதத்தை வேதாத்திரிய மாணவர்கள் சுத்த அத்வைதம் என்று கூறி மகிழ்வுறுவது சரிதானே!?
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
உலகெங்கிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!