வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-328
ஆசை பேராசையாக மாறும் நிலை
31-03-2022-வியாழன்
வாழ்க வளமுடன்!
பிரதான வினா(Main Question): 328
மெய்யுணர்வோடு இணைந்து இயங்காத எந்த ஆசையும் பேராசையாகத்தான் முடியும் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதன் அடிப்படையில் கூறுகிறார்?
துணைக் கேள்விகள்(Sub questions)
1. இக்கூற்றினில் ஐயம் உள்ளதா?
2. இதில் எச்சரிக்கை உள்ளதா? என்ன எச்சரிக்கை?
3. அவ்வளவு துல்லியமாக வாழ்க்கையை நடத்த வேண்டுமா? அறிவு அந்த துல்லியத்தை எங்கிருந்து பெறுவது? அல்லது எவ்வாறு பயிற்சி செய்வது? சிரமமாக இருக்குமே?! அமைப்பு(pattern), துல்லியம்(precision), ஒழுங்கமைப்பு(regularity) ஆகிய முக்கண்களைக் கொண்ட பேரறிவேதான் மனித அறிவாக இருக்கும்போது சிரமம் இருக்குமோ?
4. ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வரையறை என்ன?
5. பேராசை கூடாது என்கின்றபோது இக்கூற்றினை எவ்வாறு ஆராய்ந்து எதனை நடைமுறைக்குக் கொண்டு வருவது?
6. மெய்யுணர்வு என்றால் என்ன?
7. ‘மெய்யுணர்வோடு இணைந்து இயங்காத’ என்றால் என்ன பொருள்?
8. ‘விழிப்புணர்வுடன் இணைந்து இயங்காத’ எனக் கொள்ளலாமா?
9. விழிப்புணர்வு அயராது எப்போதும் அயராவிழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிறாரா?
10. ‘சீரமைக்காத ஆசை பேராசையாக முடியும்’ என்கிறாரா?
11. விழிப்புணர்வு இல்லாது ஆசைப்படும்போது அது பேராசையாக முடியும் என்கிறாரா?
12. அயராவிழிப்புணர்வும் மெய்யுணர்வும் ஒன்றா? வேறு வேறா?
13. சிந்தனைப் பயிற்சி என்பதால் ஒரு கூற்றினை(information) உறுதிப்படுத்தி (confirmation) நடைமுறைக்கு கொண்டுவர (transformation)இவ்வளவு துணைக்கேள்விகளுக்கும் விடை காணவேண்டுமா?
வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச்செல்வம்! வளர்க அறிவுச்செல்வம்!!