சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க கவிகள்-10

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்10

    14-06-2020-ஞாயிறு

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

    உண்மை யறிவே மிகும்”.

    —குறள்        

     பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் பொய்யாமொழி தெய்வப்புலவர்?
    2. குறள் எந்த பாலில் எந்த அதிகாரத்தில் எந்த அதிகாரத்திற்கு பின் வருகின்றது? அதற்கான காரணங்கள் ஏதேனும் இருக்குமா?
    3.  ‘நுண்ணிய நூல்பல கற்பினும்’ என்றால் என்ன?
    4.  ‘மற்றும் தன் உண்மை அறிவே மிகும்’ என்பதில்   ’ மிகும்’  என்கின்ற சொல்லால் அறிந்துகொள்ள வேண்டியது என்ன ?
    5. பொதுவாக உரையாசிரியர்கள் கூறும் பதவுரை என்னென்ன?
    6. திருவள்ளுரை மானசீக குருவாகக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் சீடரான பெருமைக்குரிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறள் பற்றி கூறும் விளக்கம் என்ன?
    7. எந்த நூலில் மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு விளக்கமளிக்கிறார்?
    8. அதில் இந்த அதிகாரத்தில் மேலும் ஒரு குறளுக்கு விளக்கம் அளித்துள்ளதை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.
    9. திருவள்ளுவரும் அவரது இருபதாம் நூற்றாண்டு சீடரும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?
    10.  இறையுணர்வு கருத்தியல் பாடத்தில் மிகுந்த தெளிவையும்(Theoretical understanding) செய்முறை பாடத்தில்(Practical realisation through Meditation-துரியாதீத தவத்தில்) தேர்ச்சியையும் வலியுறுத்துகிறார்களோ  இரு அறிஞர்களும்!?

    வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • சிந்திக்க அமுத மொழிகள்- 309

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 309

    13.06.2020— சனி

    உழைப்பு மூவகைத் தீமைகளைப் போக்குகிறது. அவையாவன, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.”

    …… அனுபவமொழி

    பயிற்சி:

    1) ‘பொழுது போகாமை’ அவ்வளவு கொடுமையானதா? எப்படி? நன்மை இழக்கப்படுகின்றதா?

    2) பொழுது போகாமைக்கும் கெட்டபழக்கத்திற்கும் என்ன தொடர்பு?

    3) இதனாலன்றோ ‘An idle mind is devil’s paradise’ என்கின்றனர்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள்- 308

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 308

    12.06.2020— வெள்ளி

    வாழ்வின் லட்சியம் இன்பம் என எண்ணியே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஞானம் பெறுவது தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.”

    — சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    2. வாழ்வு என்பது என்ன? அதில் லட்சியம் என்பது என்ன?
    3. இன்பம் என்பது என்ன?
    4. சுவாமி விவேகானந்தர் கூறுவது உண்மை தானே? அவரின் ஆதங்கம் வேதாத்திரிய தோற்றத்திற்குப் பின் நிறைவேறி வருகின்றதா? எப்படி?
    5. ஞானம் என்றால் என்ன?
    6. அந்த விளக்கப்படி ஞானம் பெறுவது தான் வாழ்வின் லட்சியமா?
    7. மனிதன் இறை உணர்வு பெறுவது  வாழ்வின் நோக்கம் எனப்படுகின்றது. அப்படியானால் இறை உணர்வு பெறுவதும் ஞானம் அடைவதும் எவ்வாறு ஒன்றாகின்றன?
    8. ஞானம் பெறுவதிலும், இறை உணர்வு பெறுவதிலும்  உள்ள அறிவியல் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க அமுத மொழிகள்- 307(58)

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 307(58)

    10.06.2020— புதன்

    உண்மையில் கடவுளும், குருவும் வேறல்லர். ஓர் உருவானவரே.

                                                                                                                                 …ஸ்ரீ ரமணா்

    பயிற்சி—

    1) எப்படி?

    2) இந்த அமுத மொழி அறிவுறுத்துவது என்ன?

    3) இதே பொருளை திருவள்ளுவர்  எந்த குறட்பாவில் கூறுகிறார்?

    4) எப்போது, குருவின் சேர்க்கை பிறவிப் பயனை நல்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள்- 306(62)

    வாழ்கமனிதஅறிவு                                               வளர்கமனிதஅறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 306(62)

    07.06.2020-ஞாயிறு

     

    உழைப்பில் உறுதிகொண்டு வாழ்நாளைப் பயனுள்ளதாக்குங்கள். உலகில் பிறந்ததற்கு அறிகுறியாக ஏதாவது நல்ல செயலைச் செய்து உங்கள் அடையாளத்தை உலகில் விட்டுச்செல்லுங்கள்.”

    – சுவாமிவிவேகானந்தர் 

    பயிற்சி—

    1. இந்த ஆலோசனை எல்லோருக்கும்தானே? எல்லோருக்கும் இது சாத்தியமா?
    2. பிறந்ததற்கான அடையாளத்தை உலகில் விட்டுச் செல்வதற்கான நற்செயல்கள் என்னென்ன இருக்கின்றன?
    3. அவற்றுள் இன்றுள்ள உலக சூழ்நிலையில் எது முக்கியமானதாக இருக்கும்?
    4. ஒருசிலராவது அடையாளம் நிலைப்பதற்கான நற்செயல்களைப் பெருக்கினால் எப்படி இருக்கும் இவ்வுலகம்? சற்று கற்பனை செய்துபாருங்களேன்!

     வாழ்கஅறிவுச்செல்வம்               வளா்கஅறிவுச்செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 305(282)

    வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 305(282)

     

    06-06-2020 — சனி

    பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே நல்ல செயல்களையே பழகிக்கொள்ள வேண்டும்”   

    . . .    ஓர் அறிஞர்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர்?
    2) பழக்கம் என்பது என்ன?
    3) பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்றால் என்ன பொருள்?
    4) பழக்கம் என்பது சக்தி வாய்ந்தது என்று சொல்லி இருக்கலாம் அறிஞர். ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது என்கிறார் அறிஞர். இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?
    5) ஒழுக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    6) பழக்கத்திற்கும் எண்ணத்திற்கும் தொடர்புள்ளதா?
    7) இந்த அறிஞரும் வேதாத்திரி மகரிஷி அவர்களும் பழக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்ற கண்டுபிடிப்பில் எவ்வாறு இணைகிறார்கள்?
    8) விளக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    9) பண்பேற்றம், பழக்கம், விளக்கம், ஒழுக்கம் இந்நான்கிற்கும் என்ன தொடர்பு?
    10) அறிஞர் ரூஸோ ஒழுக்க வாழ்வு பற்றி என்ன கூறுகிறார்? (இந்த இணையதள சத்சங்கத்தில் அது பற்றி உரையாடி இருக்கிறோம். Click here)
    11) ‘இளமையில் கல்’ என்று ஏன் கூறப்படுகிறது?
    12) ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ ,’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பதற்கும் பழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
    13) இச்சிந்தனையின் முடிவில் நாம் என்ன முடிவிற்கு வர இருக்கிறோம்?
    14) வேதாத்திரியக் கல்வி முறையில் ஒழுக்கப்பழக்க அறிவு இடம் பெற்றிருப்பதாலும், கல்வி என்பது பள்ளியிலிருந்து ஆரம்பிப்பதால், கருத்தியலும், செய்முறையும் இணைந்த ஒழுக்கவியல் பாடம் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மற்ற பாடங்களைப்போல் கட்டாயப் பாடமாக்க வேண்டும். இந்த புனித அலைகளை எல்லா அருளாளர்களையும் மனதில் நினைந்து வணங்கி வான்காந்தத்தில் பரவவிடுவோம்.

     

    வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                  வளா்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க அமுத மொழிகள் – 304(281)

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 304(281)

    05-06-2020 — வெள்ளி

    மனிதனுடைய சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது உண்டாகும் இன்பம் பேரின்பமாகும்.”

    . . . புளூடார்க்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் புளூடார்க்?
    2) சிந்தனையும் செயலும் சேர்வது என்பது என்றால் என்ன பொருள்?
    3) சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது இன்பம் உண்டாகுமா? எப்படி?
    4) அந்த இன்பம் எப்படி பேரின்பமாகும்?
    5) மனித மனம் லாபம் பார்த்து (கணக்குப்பார்த்து – human mind is so calculative) செயல் புரியும் தன்மை உடையதால், இன்பத்தைவிட பேரின்பம் அதிகமாக இருக்கும்போது அறிஞர் புளூடார்க் கூறுகின்றபடி சிந்தனையையும் செயலையும் சேர்த்து செய்து பேரின்பம் அடையலாமே!
    6) இதே போன்று சிந்தனையுடன் செயலையும் இணைத்து ஏதாவது கவி அருளியுள்ளாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
    7)  இரு அறிஞர்களும் எவ்வாறு இணைகிறார்கள் இவ்வுண்மையின் கண்டுபிடிப்பில்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க அமுத மொழிகள்- 303

    வாழ்க மனித அறிவு!      வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 303

    02-06-2020—செவ்வாய்

     

    நம்மை நாமே சீர்திருத்தம் செய்துகொண்டால் சமுதாயத்தில் சீர்திருத்தம் தானே வரும்”   

    . . . ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்கள்

              பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்கள்?
    2. சீர்திருத்தம் என்றால் என்ன?
    3. சீர்திருத்தம் மனிதவாழ்விற்கும், சமுதாயத்திற்கும் அவசியமா?
    4. ஏன் அவசியம்?
    5. தற்போது மனிதசமுதாயம் வாழ்கின்ற சூழலில் எவை எவையெற்றில் சீர்திருத்தம் அவசியம்? அதனை முன்னுரிமை அடிப்படையில்(on priority basis) பட்டியலிடமுடியுமா?
    6. சுயதிருத்தம்/சுயசீர்திருத்தம் போதுமானதாகாதா? சமுதாயத்திலிலும் சீர்திருத்தம் அவசியம்தானா?
    7. சீர்திருத்தம் சமுதாயத்தில் தானாகவே ஏற்படமுடியுமா? அல்லது ஏற்படுத்த முடியுமா?
    8. சுயதிருத்தம்/சுயசீர்திருத்தம் எப்படி சமுதாய சீர்திருத்தத்திற்கு வழிகோலும்?
    9. இருபதாம் நூற்றாண்டின் சீர்திருத்தச் செம்மலான வேதாத்திரி மகரிஷி அவர்கள் சீர்திருத்தம் பற்றி பாடல்கள் வாயிலாகவும் உரைநடை வாயிலாகவும் என்ன கூறியிருக்கிறார்? வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்

    வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள்- 302(51)

    வாழ்க மனித அறிவு      வளர்க மனித அறிவு

    31-05-2020—ஞாயிறு

     

    • ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லாது, அந்தப் பதார்த்தத்தின் ருசி தெரியாது.
    • ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் ஆசை ஏற்படாது.
    • அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லாது அதன் மேல் பிரியம் வராது.
    • ஆதலால் தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்தைக் கொண்டிருங்கள்”.

    …அருட்பிரகாச வள்ளலார்.

    பயிற்சி—

    1) வள்ளலார் கூறும் அருட்செய்தி என்ன?
    2) “தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தல்” என்றால் என்ன?
    3) தெய்வத்தை உணரும் பயிற்சிகளை மட்டுமே செய்து வந்தால் போதாதா?
    4) தெய்வத்தின் மேல் பிரியம் வர என்ன செய்ய வேண்டும்?
    5) தெய்வத்தை உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது?
    6) வள்ளலார் கூறும் இந்த அறிவுரையைச் செயல்படுத்த வேதாத்திரியம் எவ்வாறு பேருதவியாக இருக்கும்?  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்     வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுதமொழிகள்-301(274)

    வாழ்க மனித அறிவு!                வளர்க மனித அறிவு!!


    சிந்திக்க அமுத மொழிகள்-301(274)

                                                                                                                                                               30-05-2020-சனி

    அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.”

    . . . புத்தர்.

    பயிற்சி:

    1) அறியாமை என்று எதனைக் கூறுகின்றார் புத்தர்?

     2) ‘அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது’ என்கிறாரே புத்தர்! 

    3) அறியாமை ஆயுள் முழுவதும் அப்படியே இருந்துவிட்டு போகலாமா?

    4) அறியாமை நீங்கினால் அதன் விளைவு, திருவள்ளுவர் கூறுவது போன்று அறிவு அறிவுடைமை ஆகுமா?

    5) அறியாமை பற்றி வேதாத்திரிய அறிவியல்(அறிவு+இயல்) அகராதி (Vethathrian Dictionary of Science of Consciousness) என்ன கூறுகின்றது?

    6) என்றோ (சுமார் இருபத்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர்) வாழ்ந்தார் புத்தர். ஆனால் இன்று நாம் அறியாமை பற்றி புத்தர் எண்ணிய எண்ணங்களை அறிந்து கொண்டு, வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘அறியாமை’ பற்றி எண்ணிய எண்ணங்களோடு ஒப்பீடு செய்து, அறிவின் அறிவியல் உருவானது பற்றி நினைந்து மகிழ்ச்சி அடையலாமே!  இவ்வாறு எல்லாம் இயல்பூக்க நியதியினை பயன்படுத்தி பண்பேற்றத்தில் ஏற்றம் பெறலாமே!

    7) அன்பர்களே புத்தரின் இந்த அமுதமொழியைத் தூண்டுகோலாகக் கொண்டு ஒரு சிறு கட்டுரை எழுதிப்பார்க்கலாமே! எழுதும்போது புத்தர் என்னென்ன எண்ணி, இந்த அமுதமொழியினை அருளினாரோ அவையெல்லாம் நமக்கு தெரிய வருமே! புத்தரைப்போன்றே சிந்தனையாளர்களாகலாமே! வேதாத்திரிய அகராதி அதற்கு நமக்குத் துணை செய்யக் காத்திருக்கின்றதே!

    8) ஆழ்ந்த சிந்தனையில், உள்ளே இருக்கும் உத்தமனுடன் ஒருவேளை பேசுகின்ற  ஆனந்த அனுபவ வாய்ப்பைப் பெறலாமே!  சுயசிந்தனையே இறையுடன் பேசுவதுதானே! வாதி பிரதிவாதியாக இருந்து சிந்திக்கலாமே!  வாழ்க வளமுடன்!

    9) இன்னும் ஏதேனும் வினாக்கள் உங்களுக்குள் இருந்தால் அவ்வினாக்களை எழுப்பி விடை காணலாமே!

     வாழ்க வளமுடன். வாழ்க திருவேதாத்திரியம்!

    வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்

    வளர்க அறிவுச் செல்வம்.


  • சிந்திக்க அமுத மொழிகள்- 300(261)

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    lotus

    [rev_slider home-slider-1]

    சிந்திக்க அமுத மொழிகள்- 300(261)

    29-05-2020 — வெள்ளி

    கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருந்து ஆன்மா   விழித்தெழுகின்றது.”

                                                                                                                  . . . சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி—

    1) தன்னம்பிக்கை என்பது என்ன?
    2) எத்தகைய கல்வியால் தன்னம்பிக்கை வளரும்?
    3) தன்னம்பிக்கையால் ஆன்மா விழித்தெழச்செய்வது என்றால் என்ன?
    4) ஆன்மா விழித்தெழுந்தால் என்ன பயன்?
    5) சுவாமி விவேகானந்தர் கல்வி பற்றி கூறியுள்ளதை இந்த பொன் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள்- 299(244)


    சிந்திக்க அமுத மொழிகள்- 299(244)

    27-05-2020  — புதன்

    இறைவனை நேசித்தால் விவேகமும், வைராக்கியமும் தானாக வரும்”.  

                                                               . . .  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

     பயிற்சி—

    1. நேசிப்பது என்பது என்ன?
    2. இறைவனை நேசிப்பது என்பது என்ன?
    3. இறைவனை எவ்வாறு நேசிப்பது?
    4. விவேகம் என்பது என்ன?  அதன் அவசியம் என்ன?
    5. வைராக்கியம் என்பது என்ன? எதற்கு வைராக்கியம் அவசியமாகின்றது?
    6. இறைவன் உருவமாக இருந்தால்தான் நேசிக்கவும், ரசிக்கவும் முடியுமா?
    7. இறைவன் அரூபி எனத்தெரிந்து விட்டதால் அவனை நேசிக்க முடியாதா?  ரசிக்க முடியாதா?
    8. இறைவனை நேசித்தலுக்கும், விவேகம் மற்றும் வைராக்கியம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?
    9. மேற்கொண்டு சிந்திக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்