admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 38

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    10-01-2015

    அரை குறையாக ஆண்டவனை நம்புவதால் ஒரு பயனும் இல்லை. முழுமையாக சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் பார்வை நம்மீது விழும்.
    ……ஸ்ரீ ரமண பகவான்.
    பயிற்சி: 1) அரை குறை யாக ஆண்டவனை நம்புவது என்றால் என்ன?
    2) முழுமையாக சரணாகதி அடைவது என்பது என்ன?

    3) இறைவன் பார்வை நம்மீது விழும் என்றால் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 37

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    09-01-2015

     

    ”உலகின் அடக்க முடியாத அசுரன் அலட்சியம்.”
    ……ஒயிடர்.
    பயிற்சி:
    சிந்திக்கவும்: 1) அலட்சியம் என்றால் என்ன?
    2) ஏன் ‘அலட்சியத்தை ‘ அடக்க முடியாத அசுரனுக்கு ஒப்பிடுகிறார்?
    3) அலட்சியம் மனித அறிவின் குறைபாடுகளில் ஒன்று. மனித அறிவோ தெய்வஅறிவின் ஒரு துளி. அவ்வாறு இருக்கும் போது அலட்சியத்தை நீக்க முயற்சி செய்யவில்லை எனில், அறிஞர் ஒயிடர் அலட்சியத்தை அசுரனுடன் ஒப்பிடும் கண்ணோட்டத்தில் சிந்தித்தால் அலட்சியம் ஏற்படுத்தும் தீங்குகள் என்னென்ன?
    4) அலட்சியம் தன்முனைப்பின் வெளிப்பாடு. தன்முனைப்போ வேண்டாத அறுகுணங்களின் வாயில். விளைவு துன்பம் தான்.
    5) எனவே அலட்சியமாகிய தன்முனைப்பு இறைக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள திரை. இறையுணர் பாதையில் பயணிப்பதற்கு அலட்சியம் ஒவ்வாது.

    வாழ்க வேதாத்திரியம் வளர்க வேதாத்திரியம்

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 36

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    08-01-2015-வியாழன்

    வாழ்க வளமுடன்,

    ‘தான்’ “தனது“ என்றால் என்ன?  பேரறிவு மனிதனிடம் ஆறாம் அறிவாக வந்து போது, அதற்கு எவ்வாறு ‘தான்’ “தனது“ என்கின்ற எண்ணக்கோடுகள் வந்துவிட்டன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Please Note:

    வாழ்க வளமுடன்.

    அறிவிற்கு விருந்து பகுதியில் நேற்றையத் தொடர்ச்சியினை இன்று

    பார்க்கவும்.

    Loading