இன்றைய விருந்து

 • ஆன்ம அலங்காரம்

  வாழ்க மனித அறிவு!                             வளர்க மனித அறிவு!!

  lotus

  FFC. C.284

  28-03-2018—புதன்

  1. அலங்காரம் எதற்காக?

  இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொண்ட பொருள்   ‘ஆன்ம அலங்காரம்’. தலைப்பில் ஆன்மா மற்றும் அலங்காரம் ஆகிய இரண்டு சொற்கள் உள்ளன. ஆன்மா எது என்பது பற்றி அறியாதவர்கள் அநேகர் இருக்கலாம். ஆனால் மனவளக்கலைஞர்கள் ஆன்மாவைப் பற்றி அறிந்தவர்கள். அலங்காரம் என்கின்ற சொல்லின் பொருள் பற்றி எல்லோருமே அறிவர். இருப்பினும் அலங்காரம் என்பதனை ஆன்மாவுடன் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம். அலங்காரம் என்றால் என்ன? அலங்காரம் எதற்காக?
  ‘அலங்கரி’ என்றால் அழகுபடுத்து என்று பொருள். அலங்காரம் என்பது ஒப்பனையால் அலங்கரிக்கப்பட்ட நிலை. அழகு படுத்துவது அலங்காரம். எது அழகு? எதற்காக அழகுபடுத்துதல் அவசியமாகின்றது? அழகு என்பது கண்களாலோ, காதுகளாலோ, மனதாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி. அழகு என்ற சொல்லுக்கு,

  • பொருத்தமான குணம்,
  • தகுதியான தன்மை.
  • ஒழுங்கு முறை ஆகிய பொருட்களும் (meanings) உண்டு.

  அலங்காரத்தில் சிகை அலங்காரம், ஆடை அலங்காரம், நகை அலங்காரம் இவ்வாறாக பல வகைகள் உள்ளன. வாசனைப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இயற்கையாக, இயல்பாக இருக்கும் அழகைவிட செயற்கையால், மிகைப்படுத்திக் காண்பிக்கவும், பார்க்கவும்,
  • தன்னை அழகுபடுத்தி தானே மகிழ்ந்து கொள்ளவும்,
  • பிறருக்கு தன்னை எடுத்துக்காட்டி, பிறர் புகழ தான் மகிழ்ச்சி அடைவதற்காகவும்,
  • முதுமையை மறைத்து இளமையாகக் காட்டிக் கொள்வதற்கும்,
  • தற்காலிக போலி இன்பம் காண்பதற்காகவும், தற்காலிகமாக போலியாக மகிழ்ச்சி அடைவதற்காகவும்,
  அலங்காரம் செய்து கொள்ளப் படுகின்றது.

  அசலில்(original) அழகில்லை என்றுதானே செயற்கையாக அழகூட்டப்படுகின்றது. அலங்காரம் ஒரு போலிச்செயல். அலங்காரம் நிலையானது அல்ல. அலங்காரம் கலையக்கூடியது. ஆதலால் அலங்காரம் கலைந்தால், அழகில்லை எனக்கருதப்பட்ட முந்தைய அசல்தான் மிஞ்சும்.

  சுருங்கச் சொல்வதென்றால்,
  மிகைப்படுத்திய அலங்காரம் தன்முனைப்பின் மறைமுக வெளிப்பாடு.
  • தன்னை உடலுடன் தவறாக அடையாளம் காண்பது.
  • தன்னுடைய சரியான அடையாளத்தை மறந்துவிடுவதாகின்றது.
  • தான் ஆன்மா என்பதனை மறந்துவிடுதல். இவைகளெல்லாம் தன்முனைப்பின் வெளிப்பாடுதானே?
  • இதனால் தானே பிறவிதோறும், மீண்டும், மீண்டும் பிறவி எடுக்கின்ற வினைகள் ஆன்மாவில் அழுத்தமாகப் பதிந்து கொள்கின்றது.
  • மண்ணிற்கோ அல்லது நெருப்பிற்கோ இரையாகவிருக்கின்ற உடலை அலங்காரம் செய்துகொள்வதில் இருக்கின்ற ஆர்வம் அழியாத ஆன்மாவை அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாதது, அறியாமைதானே!

  இதற்கெல்லாம் காரணம்,
  1. ஆன்மா கண்களுக்குத் தெரியாததே.
  2. ஆன்மா என்றும் அழியாதது, மற்றும் செயல்களை பதிவு செய்து (recording) அதற்கேற்ற விளைவுகளைத் தரும்(playing) தெய்வீக நீதிமன்ற, காந்த குறுந்தகடு (மறைந்துள்ள – invisible but existing magnetic compact disc) என்கின்ற விஞ்ஞானத்தை அறியாதிருத்தல்.
  3. தெய்வீக நீதி மன்றம் என்று கருத்தியலாக (theoretically) தெரிந்திருந்தாலும், அதனை செயல்முறையில் (practically) உறுதி படுத்தாமை.

  ஆகவே ஆன்மாவை (கருமையத்தை) பெரும்பாலோர் அலங்காரம் செய்து கொள்வதில்லை.
  அரூபமாகிய தெய்வத்தை ஆலயத்தில் சிலை வடிவத்தில் அலங்காரப்படுத்திப் பார்த்து இன்பம் அடையும் மனிதன், அதுபோலவே
  தன்னுடைய ஊனுடம்பு ஆலயத்திலும்,
  அதே அரூபமான தெய்வம்,
  மனதின் மறுமுனையாகவும், கருமையாகவும் நீதி வழுவாவமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால்,
  கருமையத்தைத் தூய்மை செய்து,
  ஆன்மாவை அலங்காரம் செய்து பேரின்பத்தை அனுபவிக்க வேண்டும்.

  கண்களுக்குத் தெரியாமல் அகத்தே அரூபமாக இருக்கும் ஆன்மாவை எப்படி அலங்காரம் செய்வது என்கின்ற ஐயம் எழலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனப்படுவது எதனைத் தெரிவிக்கின்றது? மனத்தூய்மை என்கின்றச் சொற்றொடர் எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைப் போல் மனதிற்கும்தான் உருவமில்லை. உருவமில்லாத மனதை எவ்வாறு தூய்மை செய்ய முடியும் என்கின்ற ஐயம் அங்கே எழவில்லையே! அகத்தின் அழகு எனப்படுவது எதனைக் குறிக்கின்றது,? அகம் என்றால் உள்ளே என்று பொருள். ஆகவே உள்ளம் என்பது உள்ளே இருக்கின்ற மனதின் மறுமுனையான உள்ளத்தைக் குறிக்கின்றது. உள்ளத்திற்கு உருவம் இருக்கின்றதா? அகத்தின் அழகு என்பது எதனைக் குறிக்கின்றது? உள்ளே இருக்கும் மனதின் மறுமுனையான உள்ளமாகிய தெய்வத்தைத் தான் குறிக்கின்றது.

  அதனால்தான் திருவள்ளுவர்,

  “ ஐயப் படா அது அகத்து உணர்வானைத்
  தெய்வத்தோடு ஒப்பக்கொளல்” . . . . .என்கிறார்

  பொதுவாக தூய்மை என்பது என்ன? சுத்தமாக இருப்பது தூய்மை. மனம் சுத்தமாக இருந்தால் அது தூய்மையாக இருக்கின்றது எனப் பொருள். மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் எப்போதும் தனக்கும் பிறர்க்கும் சமுதாயத்திற்கும் நலம் பயப்பதாக இருக்க வேண்டும். இதற்கு மனதில் எப்போதுமே நல்ல எண்ணங்களே நிறைந்திருக்க வேண்டும். இதுதான் மனத்தூய்மை எனப்படும். நற்சொற்களுக்கும், நற்செயல்களுக்கும் விதை நல்லெண்ணம், நிலம் மனம். ஆகவே மனதை நல்லெண்ணங்களால் அலங்கரிக்க வேண்டும். மனதில் தோன்ற வேண்டிய நல்லெண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? ஆன்மாவில் உள்ள பதிவுகளுக்கேற்பவே மனதில் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் தோன்றுகின்றன. அலங்காரத்தில் தூய்மை இடம் பெற்றிருப்பதால் ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதைத்தான் அலங்காரம் என்கிறோம்.

  அந்த தெய்வீகக் கருமையத்தில்தான் மனிதன் செய்கின்ற முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தெய்வீக நீதி மன்றத்தில் பதிவான பதிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் தெய்வீகத் தீர்ப்பின்படிதான்(divine judgement) வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவிக்க வேண்டியுள்ளது. அடுத்த விருந்தில் 01-04-2018—ஞாயிறு எது ஆன்மாவை அலங்கரிக்கின்றது என்பது பற்றி சிந்திப்போம்.

 • அறிவிப்பு-14-03-2018-புதன்

  வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

  அறிவிப்பு

  14-03-2018-புதன்

  அன்பர்களே!
  வாழ்க வளமுடன்!

  இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும். (Click)

  சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன்படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

  தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
  வாழ்க வளமுடன்!

  வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!

 • FFC-283-மனவளம் என்றால் என்ன?

  வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

  lotus

  மனவளம் என்றால் என்ன?

  FFC-283

  14-03-2018-புதன்.

  உ.ச.ஆ.14-03-33.

  வாழ்க வளமுடன்!

  வளம் என்பது என்ன என்று தெரியும். இருப்பினும் வளம் என்பதன் பொருளை நினைவுபடுத்திக் கொள்வோம்.

  வளம் என்றால்

  • நிறைவு,
  • செழுமை,
  • மேம்பட்ட நிலை,
  • வளர்ச்சி அல்லது சிறந்த பயனைத் தரக்கூடிய அம்சங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ள தன்மை என்பதாகும்.

  வளம் என்கின்ற சொல்லுக்கு மேற்கண்ட நான்கு அர்த்தங்களைக்கொள்ளமுடியும். இத்தகைய ‘வளம்’ என்கின்ற சொல் வேறு சொல்லுடன் சேரும் போது என்ன பொருள் வருகின்றது என அறிவோம். உதாரணத்திற்கு ‘வளம்’ என்கின்ற சொல் ‘மண்’ என்கின்ற சொல்லுடன் சேரும்போது என்ன பொருள் வரும்?

  அதாவது ‘மண்வளம்’ என்கின்ற சொல்லிற்கு என்ன பொருள்? பயிரிடப்படுகின்ற பயிருக்கு மண் உகந்ததாக இருந்து நல்ல விளைச்சலைக் கொடுத்தால், அம்மண் வளமாக இருக்கின்றது என்போம்.

  மண்வளமாக இருந்தால் அதில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். பயிருக்கு ஏற்றதாக உள்ளதா என விவசாயத்தில் மண் பரிசோதனை செய்யப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பயிருக்கு மண் ஏற்றதாக இல்லை என்றால், விஞ்ஞானத்தின் துணைகொண்டு என்ன குறைபாடு உள்ளது என்று எடுத்துரைத்து பயிருக்கு ஏற்றவாறு மண்வளத்தை அதிகரிக்க என்ன உரம் இட வேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றது விவசாயத்துறை. இல்லையெனில் பயிர் விளைச்சல் குறைவாகலாம். அல்லது பயிர் விளைச்சலில் குறைகள் இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அக்காலத்தில் இது சாத்தியமில்லை.

  வளம் என்றால் என்ன என்று பார்த்தோம். தலைப்பில் ‘மனவளம்’ என்றிருக்கின்றது. மனதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மனம் உருவமற்றது. ஆனால் இல்லை என்று கூறமுடியாது. மனம் என்பது என்ன என்று தெரிந்தால் தான்,

  • மனம் வளமாக உள்ளதா, இல்லையா,
  • மனம் வளமில்லாமல் இருந்தால் என்ன தீமை மனிதனுக்கு,
  • மனம் வளமில்லாமல் இருந்தால் மனதை எவ்வாறு வளப்படுத்துவது,
  • மனதை வளப்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்,
  • மனதை வளப்படுத்தியே ஆக வேண்டுமா,
  • மண்ணை பரிசோதித்து வளமில்லாது இருந்தால், அதற்கு ஏற்ற பரிந்துரைகள் விவசாயத்துறை வல்லுனர்கள் அளிப்பதுபோன்று
  • மனவளம் இல்லாமல் இருந்தால் அதனை யார் பரிசோதித்து பரிந்துரைகள் வழங்குவது போன்ற ஐயங்களுக்குத் தீர்வு காணமுடியும்.

  FFC-264-5-11-17-Maharishi takin claass

  மனம் என்பது பற்றி அறிவுப்பூர்வமாக திருவேதாத்திரியம் தெரிவிக்கின்றது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனதை பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல் அருளியுள்ளார். ஒரு முறை ஆங்கிலத்தில் திருவான்மீயூரில் சிறப்பு பயிற்சி நடத்தும் போது மகரிஷி அவர்கள் கூறியதை நினைவிற்கொள்வோம். தன்முனைப்பின் அறிவியலை (Science of Ego) ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்கள்,

  I am not telling out of Ego. Nobody else except myself has given explanation about mind” என்றார்.

  நம் குருநாதர் சொல்வது உண்மைதானே! அத்தகைய பெருமைக்குரியவரை நாம் குருநாதராக அடைந்தது நாம் செய்த பாக்கியமன்றோ?!. காரணம், துன்பங்களுக்கு ஆணிவேரான தன்முனைப்பிற்கான(Ego) அறிவியலைத் தந்து நம்மை துன்பங்களிலிருந்து விடுவிக்க தன்முனைப்பைக்களைய தக்க அறிவுரைகளும் பயிற்சிகளும் தந்துள்ளாரே மகரிஷி அவர்கள்.

  மனம் என்பது என்ன என்று மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?

  • உயிரின் படர்க்கை நிலையே மனம்.
  • மனதின் மறுமுனை தெய்வம். (The other end of mind is God.)
  • மனம் என்பது காந்த அலை.

  மேலே கூறியுள்ளவை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  மற்றொரு அறிஞர் கூறுவதனைக் கவனிப்போம்.

  Untitled

  இக்கூற்றில் அறிஞரின்  ஆதங்கம் தெரிகின்றது. மனதைப் பற்றி புதிராக உள்ளது. இக்கூற்றிலிருந்து எது மனமாக உள்ளது என அறிய முடிகின்றதா? மனவளக்கலைஞர்களால் அறிய முடிகின்றது. அறிவதுமட்டுமல்லாமல் புதிரும் விடுவிக்ப்படுகின்றது. என்ன அறிய முடிகின்றது? மனவளக்கலைஞர்கள் மனதை பற்றி அறிந்தவர்கள் என்பதால் எது மனமாக இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது. ஆகவே புதிரும் விடுவிக்கப்படுகின்றது.

  ‘I am not telling out of Ego. Nobody else except myself has given explanation about mind’ என்று நம்முடைய குருநாதர் கூறியதிலிருந்து அவரின் திறமையை, சிறப்பை அறிந்து மகிழ முடிகின்றது. அவரது மாணவர்களுக்கும் அது பொருந்துவதாக அமைகின்றதல்லவா?

  எவ்வாறு?

  ‘பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பதுபோல் நாம் அவருடைய பூரண, முழுமனது கொண்ட மாணவர்களாக (implicit obedient students) இருப்பதால் நாமும் அவரைப்போன்றே மனதைப் பற்றி அறிந்துகொண்டது முதலில் பெருமையும், அதனோடு இணைந்துள்ள பயனையும் தருகின்றதல்லவா? புதிர் எவ்வாறு விடுவிக்கப்படுகின்றது என்று பார்ப்போம்.

  புதிர் விடுவிக்கப்படுகின்றது:

  ‘இறையே மனமாக இருந்தாலும், மனம் இறைவனாக இல்லையே!’ என்பதுதான் புதிர் அவிழ்ந்த பிறகு வெளிப்படையாகவே தெரிகின்றது மனதிற்கான வரையறை. இந்நிலைக்கான காரணத்தையும் மனவளக்கலைஞர்கள் அறிவரே! என்ன காரணம்? மனிதனாக தன்மாற்றம் அடைந்தபோது ஏற்பட்ட பரிணாமக் கசடான(Evolutionary Effluent) விலங்கினப்பண்பே, இறையே மனமாக இருந்தும் மனம் இறையாக இல்லாமல் செயல்படுவதற்குக் காரணம். இதற்கு வழியே இல்லையா? ஏன் இல்லை? வழி இருந்ததால்தான் இன்று நம் சத்சங்கத்தில் இது பற்றி சிந்திக்கிறோம். 1911 க்குப் பிறகு வழி பிறந்துவிட்டது. இதற்கு வழி மனதை வளப்படுத்தும் கலையாகிய மனவளக்கலையேயாகும்.

  வேறொரு அறிஞர் கூறுவது:-

  Untitled-2

  வளம் என்கின்ற சொல்லின் பொருளுக்கேற்ப வளமுடைய மனம் எவ்வாறிருக்க வேண்டும்? மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே அறமாகும் என்கிறார் திருவள்ளுவர்.

  ஆகவே மனம்,

  நிறைவுடையதாகவும், 

  மேம்பட்ட நிலையிலும், 

  வளர்ச்சி அல்லது சிறந்த பயனைத் தரக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

  மனம்போல் வாழ்வு எனப்படுகின்றது, மண் வளமாக இருந்தால் எப்படி பயிர் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்குமோ, அது போன்று மனம் வளமாக இருந்தால் வாழ்வும் வளமுடையதாகவும் இருக்கும். மனவளத்திற்கு என்ன இலக்கணம்? மனம் தூய்மை உடையதாக இருக்க வேண்டும். தூய்மையான மனம் எவ்வாறிருக்க வேண்டும்?

  • எண்ணமே வாழ்க்கையின் சிற்பி என்பதால் நல்ல எண்ணங்களையே எண்ணுவதாக இருத்தல் வேண்டும்.
  • பேராசை பெரும் நஷ்டம் என்பதால் ஆசையை சீரமைக்க வேண்டும்.
  • கோபமே பாவங்களுக்கெல்லாம் தலையாயது என்பதால் வளமுடைய மனம் சினத்தைத் தவிர்க்க
  • வேண்டும்.
  • வளமுடைய மனதில் கவலை இருக்கக் கூடாது.
  • ஆறாம் அறிவுடைய மனமாக இருப்பதால் தான் யார் என்கின்ற அறிவு இருக்க வேண்டும்.

  இந்த ஐந்தும் இல்லாத மனம் வளமுடையது என்று சொல்ல முடியுமா? முடியாது. இதனை ஆராய்ந்த மகரிஷி அவர்கள் மனதை வளப்படுத்த உளப்பயிற்சியினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

  அப்பயிற்சியே தவமும், தற்சோதனையும் ஆகும்.

  கூடா ஒழுக்கம் என்கின்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் அருளியுள்ள

  மழித்தலும், நீட்டலும் வேண்டா உலகம்,
  பழித்தது ஒழித்து விடின்.”

  என்கின்ற கடைசிக் குறளையும்,
  அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் உள்ள

  மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்;அனைத்துஅறன்
  ஆகுல நீல பிற.”

  என்கின்ற குறளையும் மனதில் கொண்டு மனவளக்கலை பயில்வோம். மனதை வளமாக்கி, இதமாக வைத்துக்கொண்டு வாழ்வாங்கு வாழ்வோம்.

  வாழ்க மனவளக்கலை!   வளர்க மனவளக்கலை!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                                       வளர்க அறிவுச் செல்வம்!!

  வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!


  அறிவிப்பு

                                        14-03-2018-புதன்

  அன்பர்களே!

       வாழ்க வளமுடன்!

  இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும்.

  சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன் படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

  தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

  வாழ்க வளமுடன்!

  www.posperspiritually.com

   வாழ்க அறிவுச் செல்வம்!                                                          வளர்க அறிவுச் செல்வம்!!

 • மனவளக்கலை ஓர் அறிவுச்சுரங்கம்

   

  வாழ்க மனித அறிவு!                       வளர்க மனித அறிவு!!

  lotus
  மனவளக்கலை ஓர் அறிவுச்சுரங்கம்

  FFC-282

  11-03-2018-ஞாயிறு
  உ.ச.ஆ. 11-03-33

  Vethathiri_a_Living_Dictionary (2)
  வாழ்க வளமுடன்!

  தலைப்பு எதனைத் தெரிவிக்கின்றது? இயற்கை அன்னைக்கு/இறைக்கு நன்றியோடு தெரிவிக்கும் கருத்துரைத்தலாகும்(Feedback). மனவளக்கலை ஏன் சுரங்கத்தோடு ஒப்பிடப்படுகின்றது? சுரங்கம் என்பது என்ன என்று யாவரும் அறிவர். நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றது. தங்கச்சுரங்கத்தில் தங்கம் வெட்டி எடுக்கப்படுகின்றது. அதுபோன்றா அறிவுச்சுரங்கத்தில் அறிவு எடுக்கப்படும்? தங்கமும், நிலக்கரியும் பருப்பொருளாக உள்ளதால் அவற்றை பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும். ஆனால் அறிவு அரூபமாயிற்றே! ஆனால் அறிவின் இருப்பிடம் அறிந்து கொள்ளமுடியும். அறிவை அறிய நினைந்துவிட்டால் அறிவை அறியும் வரை அறிவிற்கு ஓய்வு கிடையாது என்பார் அறிவின் அறிவியலில் முதல் அறிவியலாளரான வேதாத்திரி மகிரிஷி அவர்கள். அறிவு தன்னைப் பற்றி அறிய வேண்டிய அனைத்து வளங்களையும் உடையது மனவளக்கலை.

  அறிவு முந்தையதா? அல்லது மனம் முந்தையதா? அறிவுதான் முந்தையது. மனதை வளமாக்கும் கலைக்கு மனவளக்கலை என பெயர் வைத்துள்ளார் மகரிஷி அவர்கள். அறிவுவளம் இயற்கையின் முதன்மை வளம். மனவளக்கலையில் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற முடியும் என்பதால் மனவளக்கலை என்பது அறிவுச்சுரங்கம் ஆகின்றது. மனவளக்கலை அறிவுச்சுரங்கம் என்பதற்கு சான்று அறிவின் அறிவியலில் முதல் அறிவியலாளரைத் தந்துள்ளதே இதற்குச் சான்று. யார் அந்த முதல் அறிவியலாளர்? நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களே. மனவளக்கலையின் முதல் வெற்றியாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனவளக்கலை உருவாக்கியவரே வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனவளக்கலையின் தந்தையாக இருக்கும்போது வேதாத்திரி மகரிஷி அவர்களை மனவளக்கலையின் முதல் வெற்றியாளர் என்று எவ்வாறு கூறமுடியும் என்கின்ற ஐயம் எழலாம். தான் வழிமுறையாகச்(process) சென்று இறைஉணர்வு பெற்றதால் அதே வழிமுறையை அவ்வாறே நமக்கு சொல்லித் தரமுடிகின்றது என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அந்த வழிமுறைக்கு மகரிஷி அவர்கள் கொடுத்த பெயர்தான் மனவளக்கலை என்கின்ற அரிய கலை.

  எனவே மனவளக்கலையின் முதல் வெற்றியாளர் மகரிஷி அவர்கள் என்பது சரிதானே?

  மேலும் மகரிஷி அவர்கள் கூறுவது, இயற்கை தனக்குத் தெரிவிக்கின்றது. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க, தனக்கு தெரிவித்ததை உலகநலன் கருதி சமுதாயத்திற்குத் தெரிவிக்கும் கருவியாக செயல்படுவதாகக் கூறுவார். ஆகவே, பொறுப்பாலும், கடமையாலும் உந்தப்பட்டு தனக்கு இயற்கை தெரிவித்ததை எல்லாம் ஒன்று விடாமல் இந்த சமுதாயத்திற்கு அவர் தெரிவித்ததுதான் திருவேதாத்திரியம். பூதஉடலை உதிர்ப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும்கூட நூல் ஒன்றினை எழுதியுள்ளார்.

  உணர்ச்சியாய் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று பல நாள் உணர்ந்திருந்ததை மேலும் உண்மை விளங்க உணர்ச்சிக்கு முன்னர் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும் இறையின் திருநிலையும் அறிவே என உணர்ந்ததாகக் கூறுகிறார். அறிவின் செயல்பாடுகளை ஏழாகக் கண்டுபிடித்துள்ளார்.

  அறிவிச் செயல்பாடுகள்-TSS

  இந்த கண்டுபிடிப்புதான் திருவேதாத்திரிய அறிவின் அறிவியலுக்கு மகுடம் சூட்டுகின்றது. அறிவே தெய்வம் என்று பல அருளாளர்கள் கூறியிருந்தாலும், அறிவே தெய்வம் என்கின்ற உண்மை வெட்டவெளிச்சமாகியது இருபதாம் நூற்றாண்டில்தான்(1911). அறிவு எவ்வாறு தெய்வம் என்பதனையும், அறிவின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால சரித்திரத்தையும் (past, present and future history of Nature/God) தெரிவிக்கின்றது திருவேதாத்திரியம்.அறிவின் இருப்பிடத்தைத் தெரிவிக்கின்றது. அதுவே இறைநிலை என்றும், அறிவின் இருப்பிடம் அறிந்தால் இன்பமுறலாம் என அன்பு வேண்டுகோள் விடுக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  அன்பர்களே வாரீர்’  என அழைப்பு விடுக்கின்றார்.

  அன்பர்களே வாரீர்-TSS-

  ஆகவே அவரது அழைப்பை ஏற்று மனவளக்கலை பயில்வோம். மனவளக்கலை அறிவுச்சுரங்கத்தில் அறிவு அறிய வேண்டியதை எல்லாம் கருத்தியலாகவும், செயல்முறையாகவும் பெற்று ‘அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை, அது முக்தி’ என்பதற்கினங்க அறிவு முழுமை பெறுவோம்.

  வாழ்க மனவளக்கலை!        வளர்க மனவளக்கலை!!

  வாழ்க அறிவுச் செல்வம்                               வளர்க அறிவுச் செல்வம்

 • FFC-281-வேதாத்திரியார் – ஓர் அகராதி- 5/5

  வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

  lotus

  வேதாத்திரியார் – ஓர் அகராதி– 5/5

  FFC-281

  28-01-2018-ஞாயிறு
  உ.ச.ஆ. 28-01-33

  Vethathiri_a_Living_Dictionary (2)

  VETHATHIRI MAHARISHI – A  LIVING DICTIONARY

  வாழ்க வளமுடன்!

       சென்ற நான்கு சத்சங்கங்களில் வேதாத்திரியார்-ஓர் அகராதி என்பது பற்றி சிந்தித்து வருகிறோம். இன்றைய சத்சங்கத்திலும் அச்சிந்தனையைத் தொடர்கிறோம். இதுவரை 45 துணைத் தலைப்புகளில் சிந்தித்துள்ளோம். நான்காவது(சென்ற) சத்சங்கத்தில் சிந்தித்த துணைத்தலைப்புகளை நினைவு படுத்திக் கொள்வோம்.

  நான்காவது(சென்ற) சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்:

  1) சிந்தனை வளம் பெருகும்; அகம் மகிழுங்களேன்!
  2) வேதாத்திரிய அறிவியல் அகராதியினைப் புரட்டுவோம்.
  3) கௌதமபுத்தரின் பொன்மொழியில் சிந்திக்க வைப்பது என்னென்ன?
  4) புத்தரின் கூற்று சிந்திக்க வைக்கின்றது.
  5) உருவமில்லாமலும் ஒன்று இருக்கின்றது என்கின்ற கோட்பாடு.
  6) வறுமை என்றால் என்ன?
  7) அறிவின் வறுமை என்றால் என்ன?
  8) அறிவின் அடிப்படைத் தேவை என்பது என்ன?
  9) எப்போது அறிவு வறுமையில் உள்ளதாகிவிடும்?

  ‘வேதாத்திரியம் எவ்வாறு அகராதியாகத் திகழ்கின்றது என்பதனை இன்று மேலும் அறிந்து கொள்வோம். இதுவரை சிந்தித்ததில் எவ்வாறு வேதாத்திரியம் அகராதியாகத் திகழ்கின்றது என்பதனை ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
  ஏன்,
  வேதாத்திரியத்தை திருவேதாத்திரியம் என்றும்,
  வேதாத்திரியார் ஓர் அகராதி அதாவது திருவேதாத்திரியம் ஓர் அகராதி என்றும்,
  வேதாத்திரி மகரிஷி அவர்களை, நவயுகவியாசர் என்றும்,
  வேதாத்திரி மகரிஷி அவர்களை முதல் அறிவின் அறிவியலாளர்(The first Scientist of Consciousness) என்றும் போற்றுகிறோம்?

  வள்ளுவரைப் போற்றுவதுபோல் போற்றுகிறோம்.

       வள்ளுவரை ஏன் திருவள்ளுவர் என்கிறோம்? வள்ளுவரை ஏன் தெய்வப்புலவர், செந்நாப்போதார், நாயனார், நான்முகனார், பெருநாவலர் என்றும் பல சிறப்புப் பெயர்களால் அழைக்கிறோம்? திருமூலர் அருளிய மந்திரம் என்று சொல்லாமல் திருமந்திரம் என்று சிறப்புடன் அழைக்கிறோம். அவர்கள் சிறப்புடையவர்கள் ஆகவே சிறப்புப் பெயர்களால் அழைக்கிறோம். அவர்கள் வாழ்ந்த காலத்தில் மற்றவர்கள் ஆற்றாத சேவையினை, அருளாளர்கள் ஆற்றியுள்ள அருட்சேவை சிறப்பிற்கும். போற்றுதற்கும் உரியது. அவர்களின் அருட்சேவையால் பயன் பெற்ற மக்கள் நன்றியுணர்வாக பல சிறப்புப் பெயர்களால் அழைக்கின்றனர்.

  அறிவில் தெளிவு பெறவே ஆன்மீகப் பயிற்சி:

     அறிவில் தெளிவு பெறவே பல ஆன்மீகப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு வழிகாட்டியாக குருமார்கள் தேடப்படுகின்றனர். அவ்வாறு குருவைத் தேடுபவர்கள் மிகச் சிலரே. குருவைத் தேடாமலேயே சிலருக்கு சஞ்சித கர்மாவின் பயனாகவே குரு தானாகவே வருவார்.

  எது எப்படி இருந்தாலும்,

  குருவைக் காட்டிக்கொடுக்கும் வைபவம் சமுதாயத்தில் மறைந்துவிட்ட சூழ்நிலையில், மனவளக்கலைஞர்களுக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த நம் குருவை மதித்து ஒழுகி நன்முறையில் பயன்படுத்தி பிறவிப்பயனை அடைந்து வாழ்க்கையை வாழ்வாங்கு வாழவேண்டும்.

       அவரவர்கள் கருமையத்தில் உள்ள ஆன்மீகத் தாகத்தின் அழுத்தத்திற்கு ஏற்றாற்போல் குருமார்களை அமைத்துக்கொடுக்கின்றது இயற்கை/இறை. அல்லது அவர்களே குருமார்களை தேடிக்கொள்கின்றனர். விளைவறிந்து அல்லது நோக்கத்தோடு எந்த செயலையும் செய்வதுதான் சாலச் சிறந்தது. ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் முடிவான பயனை(End result) அடைய வேண்டும் என்பதே பயிற்சியின் நோக்கம். அதற்கு பயிற்சியுடன் அறிவிற்கு தெளிவும் அவசியம்.

  தெளிவு என்பது என்ன?

       சுருங்கச் சொல்வதென்றால் அறிவிற்கு விளக்கம் வேண்டும். பல்லாயிரம் பிறவிகளாக அறிவிற்கு விளக்கமில்லாமல் வாழ்ந்துவிட்டது ஆன்மா.

  என்ன விளக்கம் அறிய வேண்டும்?

  மனிதப்பிறவியின் நோக்கம் என்ன? பிறந்துவிட்டோம், அதனால் வாழ்கிறோம். ஒரு நாள் மடியப்போகிறோம். இது நிச்சயம்.

  ஏன் பிறந்தோம்? தெரியுமா? தெரியாது.

  எங்கிருந்து வந்தோம்? தெரியாது! (எங்கிருந்து வந்தோம் என்றால் தாய், தந்தையிடமிருந்து வந்தோம் என்பது விடை அல்ல.)

  எங்கு செல்ல இருக்கிறோம்? தெரியாது.

  எப்போது செல்ல இருக்கிறோம்? தெரியாது!

  இதற்கிடையில் துன்பத்தையும், இன்பத்தையும் கலந்துதான் அனுபவிக்க வேண்டியிருக்கின்றது.
  ஏன் துன்பம் வருகின்றது? தெரியாது!

  ஒருசிலருக்கு துன்பம் அதிகமாக இருக்கும். வேறு சிலருக்கு துன்பம் குறைவாக இருக்கும். ஏன் இந்த வேறுபாடு? தெரியாது!

  எந்த கேள்விக்கும் விடைதெரியாது? இத்தனை ‘தெரியாதுகள்’ அறிவிற்கு இருந்தால் எப்படி? என்ன நியாயம் உள்ளது?!  அறிவு அறிவொளியாகத் திகழவேண்டாமா?! ஆறாம் அறிவிற்கு இந்த வினாக்களுக்கெல்லாம் விடை தெரிவதுதான் ஆறாம் அறிவின் சிறப்பு.

      இவற்றிற்கெல்லாம் விடை தெரிந்திருந்தால் அறிவிற்கு தெளிவு உள்ளது என்று பொருள். விடை தெரிந்துகொள்வது மட்டுமல்ல தெளிந்த வழியில் வாழ்வதே தெளிவு பெற்றதற்கானப் பயன். கருத்தியலாக மட்டும் தெரிந்து கொண்டிருப்பது மட்டுமே தெளிவாகாது, செயல்முறையில் தெளிவடைய வேண்டும்.  அப்போதுதான் நல்லோர்களாகத் திகழமுடியும். நல்லோர்களின் இயல்பு பற்றி நம் ஆசான் கூறுவதனை நினைவு கூர்வது நலம் பயக்கும்.

  நல்லோர்களின் இயல்பு:

  தெளிவு சிந்தனையால் பெறுவது. சிந்தனை செயலுடன் பந்தித்து நிற்கவேண்டும், அது நல்லோர்களின் இயல்பு என்கிறார் நம் குருநாதர். நல்லோர்களாக ஆவதற்காகத்தானே ஆன்மீகப்பயிற்சி.

  பண்பு(02-01-1955)

  சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
  பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு. . . . ஞா.க. எண். 632

  தெளிவினை எவ்வாறு பெறுவது?

  அறிவிற்குத் தெளிவினை எவ்வாறு பெறமுடியும்?

  குருவின் வழியாகவும்,
  சத்சங்கத்தாலும்,
  மூச்சு போன்று இடைவிடாது தொடர் சிந்தனையாலும்,
  விழிப்புணர்வோடு இருத்தலாலும்,
  இவற்றிற்கெல்லாம் மேலாக அகமே விரும்பி விரும்புவதாலும்(inner quest) தெளிவு பெறலாம்.

       இடைவிடாது தொடர் சிந்தனை என்பதால், மற்ற கடமைகளை தவிர்த்துவிடவேண்டும் என்பது பொருளல்ல. ‘ஒன்றால் மற்றொன்று கெடக்கூடாது’ என்று மகரிஷி அவர்கள் கூறியுள்ளதனை நினைவிற்கொண்டே ‘இடைவிடாத தொடர் சிந்தனை அவசியம்’ என வலியுறுத்தப்படுகின்றது. பரம்பொருள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாலும், எல்லா நிகழ்ச்சிகளும் இறையால் நடைபெறுவதாலும் யார் எங்கு, எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும், செய்யும் பணிக்கு குந்தகம் ஏற்படாமல், எவ்வாறு சுவாசித்தல் அனிச்சையாக நடைபெறுகின்றதோ, அதுபோல், சிந்தனையும் அனிச்சையாக செயல்படுவதற்குப் பழகவேண்டும்.

  பயிற்சி வேறு, தெளிவு வேறு:

     பயில்வது பயிற்சி. விளங்கிக்கொள்வது தெளிவு. எவ்வளவு காலம் பயிற்சி செய்தாலும் தெளிவில்லாமல் இருப்பது, பயிற்சியின் இறுதிப்பயனை அடைவதனை காலதாமதம் ஆக்கிக்கொண்டே இருக்கும். பல்லாயிரம் பிறவிகளாக அறிவு இருட்டில்(அறியாமையில்) உள்ளதால், அறிவு வெளிச்சத்திற்கு வரவேண்டும் (அறியாமை நீங்கி அறிவுடைமையாக வேண்டும்). அறிவு ஒளி பெறவேண்டும். அறிவொளியாகத் திகழ்தல் வேண்டும். அதற்கு அறிவிற்கு தெளிவு அவசியம். தெளிவை நோக்கித்தான் பயிற்சி. பயிற்சியும், தெளிவுமே ஆன்மீகப்பயிற்சியின் இலக்கை(End result) அடையச்செய்ய முடியும். தெளிவு பற்றி அறிந்துகொள்ள ‘பட்டினத்தார் அவர்களின் சீடரான, அரசராக இருந்து ஞானியான பத்திரகிரியாரை’ வணங்கி நமது சத்சங்கத்தில் எழுந்தருளுமாறு வேண்டுவோம்.

  எவ்வாறு அழைப்பது?

       அருளாளர் பத்திரகிரியார் இப்போது இல்லையே! அருளாளர்கள் என்றோ பூதவுடலை உதிர்த்தாலும் அவர்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். எப்படி அவ்வாறு கூறமுடியும் என்கின்ற ஐயம் எழலாம்! பூதஉடல்தான் இல்லை. அவர்களின் ஆன்மா இருக்கின்றதே! அருளாளர்கள் எண்ணிய எண்ணங்கள் உள்ளனவே! எண்ணங்களுக்கு மரணம் என்பதில்லை. எண்ணுவதற்கு காரணமாக இருந்த உடல் மறைந்துவிடலாம். ஆனால் எண்ணங்கள் மறைந்துவிடுவதில்லை. சுருங்கச் சொல்வதென்றால் அருளாளர்கள் தாங்கள் எண்ணிய எண்ணங்கள் அறநூல்களாக மலர்ந்துள்ளன. அவற்றின் வாயிலாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். திருவள்ளுவர் சுமார் இரண்டாயிரத்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பூதவுடலோடு வாழ்ந்தவர். திருவள்ளுவர் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? 1330 திருக்குறட்பாக்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவர் எண்ணிய எண்ணங்கள்தானே குறட்பாக்களாக மலர்ந்துள்ளன இன்று. உலகம் உள்ளவரை அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

  இதேபோன்றுதான் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலகம் உள்ளவரை 1854 கவிகள் வழியாக வாழ்ந்து கொண்டிருப்பார்.

  gurudevar

   மறைந்த பிறகும் எவ்வாறு மானசீகக் குருவானார்?

            பூதவுடல் தான் மறைந்தது. திருவள்ளுவர் மறையவில்லை.   திருவள்ளுவர் எப்போதும் 1330 திருக்குறட்பாக்களில் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் அவருக்குப் பின்னர் கி.பி. 1911 இல் அவதரித்த அருளாரான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு மானசீகக் குருவாக அமைந்தார். அமைந்ததோடு மட்டுமல்லாமல் ‘அகத்ததுதான் மெய்ப்பொருள்’ என்று எடுத்துக்காட்டி வேதாத்திரியை வேதாத்திரி மகரிஷி ஆக்கினார். இதேபோன்றுதான் அருளாளர்களான தாயுமானவரும், திருமூலரும் வேதாத்திரி மகரிஷிக்கு மானசீக குருவாக இயற்கை/இறை அமைத்துக் கொடுத்தது. மேலும் வள்ளலார் ஆன்மாவையும் மகரிஷி அவர்களுடன் இணைத்து, வள்ளலாரின் இறுதி சங்கல்பாமான(எண்ணமான) அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம். என்பதனைப் பூர்த்தி செய்து தெய்வீக நாடகம் நடத்தியது இயற்கை/இறை. அத்துடன் இல்லாமல் தனது சாதுரியத்தால் அனைத்து அருளாளர்களையும் நினைந்து அவர்களின் நல்லாசிகளையும் பெற்றுக் கொண்டார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். நல் வாய்ப்புகளையெல்லாம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்து, வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் உதிக்கின்ற அருளாளர்கள் வரிசையில் இடம் பெற்று, உலக மக்களையே நெறிபடுத்திக் கொண்டிருக்கின்றார்.

  அருள்துறையில் யுக்தியினைக் கடைபிடிக்கும் குருவணக்கம்:

       மகரிஷி அவர்களைப்போன்றே அருள்துறையில் அனைவரின் துணையை நாடும் யுக்தியினைக் கடைபிடிக்க ஏதுவாக குருவணக்கம் பாடலை அருளியுள்ளார்.

  FFC-62 -PIC - மகான்களின் படம்

  guruvanakkam_prosperspiritually

                                                                                     . . . ஞா.க. பாடல் எண். 7

   அருளாளர் பத்திரகிரியார் பருகிய சிவானந்தத்தேன்:

       தெளிவு பற்றி அருளார்கள் அனுபவித்த ஆனந்த அனுபவத்தை அறிந்துகொள்வோம். அரசராக இருந்து பின்னாளில் அருளாளரான பத்திரகிரியார் நமது சத்சங்கத்தில் எழுந்தருளி தெளிவைத் தெளிவு படுத்தட்டும். பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் பகுதியில் 65 வது செய்யுளில் கூறுவதனைக் காண்போம்.

  65. தெளியத் தெளியத் தெளிந்தசிவா னந்தத்தேன்
  பொழியப் பொழியமனம் பூண்டுஇருப்பது எக்காலம்.

  பொருள்:

      ‘தெளிய’ என்றால் என்ன? அறிவு தெளிவு பெறுவது. விளக்கம் பெறுவது. ஒரே நாளில் அறிவு தெளிவு பெற்றுவிடமுடியாது. கருவில் திருஉடையவர்களுக்கு வேண்டுமென்றால் அது சாத்தியமாகும்.

      ஆனால் கருவில் திரு அல்லாதவர்களுக்கு மெல்ல மெல்ல தான் தெளிவு ஏற்படும். அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. அகமே விரும்பினால் போதும்.

      தெளிவு பெறுவது அவரவர்களின் அகம் கொண்டுள்ள ஆர்வத்தைப் பொறுத்தது. அவ்வாறு அறிவிற்கு தெளிவு பிறக்கப் பிறக்கத் தெளிந்த சிவானந்தத் தேனானது பொழியும் என்கிறார் அருளாளர் பத்திரகிரியார்.

     அரசராக இருந்தபோது கிடைக்காத அந்தத் தேன், ஞானப்பாதையில் அடி எடுத்து நடந்து வரும்போது கிடைப்பதனை அறிந்து கொண்டார் அருளாளர் பத்திரகிரியார்.

      தேனானது பொழியப் பொழிய, அதனை ஏற்கும் மனத்தைப் பெறுவது எப்பொழுது என்று நம்மையெல்லாம் தூண்டுகிறார் அருளாளர் பத்திரகிரியார்.

      சிவானந்தத்தேன்(அறிந்தது சிவம். மலர்ந்தது அன்பு. துரியாதீதம் கைவல்யமான நிலை) என்பது பேரின்பநிலை. தெளிவு இருந்தால்தான் பேரின்ப நிலையை அனுபவிக்க முடியும்.

     சிவானந்தத்தேனை அருந்த ‘செயலிலே இறைவனைக் காணலாம்’ என்கின்ற நிதர்சன உண்மையின் படி இரண்டொழுக்கப்பண்பாட்டின் நெறியில் செய்யப்படும் நல்ல செயல்களின் மூலம் அந்தத் தேனை அருந்தலாம்.

  அறிஞர் திருமூலரை எழுந்தருள வேண்டுவோம்:

       அறிஞர் திருமூலர் வாழ்ந்த காலத்தில் மகரிஷி அவர்கள் அவதரிக்கவில்லை. இருப்பினும் அறிஞர் திருமூலரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார் மகரிஷி அவர்கள். அவ்வாறே நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக குருவணக்கம் பாடலை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள். அறிஞர் திருமூலர் எழுந்தருளி, அவர் தெளிவில் தெளிவடைந்தவாறு (தெளிவு பற்றி மிகத்தெளிவாக அறிந்ததுபோல்) நமக்கும் தெளிவுபடுத்தட்டும்.   தெளிவினை அறிஞர் திருமூலர் வாய்மொழியாகவே அறிந்துகொள்வோம்.

  thelivu_guruvin

  போற்றுவதால் யாருக்கு என்ன பயன்?

       போற்றுபவருக்கே பயன்!! இறைவா போற்றி! என்கின்றனர் பக்திமான்கள். போற்று என்றால் என்ன பொருள்? போற்று என்றால் பாராட்டுதல், புகழ்தல் என்று பெயர். புகழ் மேலும் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் பாதுகாத்தல்(preserve with adoration). கடவுள், மகான் போன்றவர்களை புகழ்ந்து துதித்தல், வணங்குதல். இஃதெல்லாம் எதற்காக? சுயநலம்தான்!! பண்பேற்றத்தில் ஏற்றம் பெற்று துன்பமில்லாத இன்பவாழ்வு வாழ ஆரம்பித்து பேரின்ப வாழ்வில் திளைப்பதற்காகும். இதில் சுயநலம் மட்டுமில்லை. பிறர் நலமும் இருக்கின்றது பேரின்ப வாழ்வில். பேரின்ப நிலை இரண்டொழுக்கப் பண்பாட்டினால் கிட்டும். இரண்டொழுக்கப் பண்பாடு எதனை வெளிப்படுத்துகின்றது? அன்பையும் கருணையையும். அன்பும் கருணையும் வெளிப்படுமானால் யார் பயனாளி? முதலில் தானும் பிறகு பிறரும், சமுதாயமும். அன்பினாலும், கருணையினாலும் பிறர் பயன்பெறுவது சரி. தான் பயன் பெறுவது என்பது எவ்வாறு?

  பாவங்கள் அகன்று புண்ணியங்கள் சேரும்:

       ஒழுக்கத்தின் வெளிப்பாடே அன்பும், கருணையும். ஒழுங்காற்றலாக இருந்த அறிவு நம்மிடம் ஒழுக்க நெறியாக நடப்பது பேரின்பம்தானே! பாவங்கள் அகலுகின்றன. புண்ணியங்கள் சேர்கின்றன.

      ஆகவே திருவேதாத்திரியத்தைப் போற்றி மகிழ்கிறோம். மனிதர்கள் முகஸ்துதிக்காக மற்றவர்களை போற்றுவது வழக்கம். அதுபோன்று அல்ல, திருவேதாத்திரியத்தைப் போற்றுவது. போற்றுவதால் இயல்பூக்க நியதிப்படி போற்றப்படுகின்ற பொருளின் தன்மையில் ஏற்றம் பெறுவார் போற்றுகின்றவர். பேரின்பநிலையில் திளைக்க பண்பேற்றம் பெறவேண்டும். பண்பேற்றம் பெற இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்த வேண்டும். இயல்பூக்கம் என்ன என்பதனை அறிவோம். உயர்வு பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

  இயல்பூக்க நியதி என்பது என்ன?

      இயல்பூக்க நியதி என்ன கூறுகின்றது? எந்த ஒரு பொருளையோ, செயலையோ, குணத்தையோ, எவ்வுயிரையோ அடிக்கடி நினைத்து வந்தால், அப்பொருளின் தன்மையாக நினைப்பவரின் ஆற்றல் அறிவிலும், உடலிலும் மாற்றம் காணும் என்பது இயல்பூக்க நியதி.

  அடிக்கடி நினைப்பது எப்போது நடக்கும்? அகம் பயன் பெறும்போது அடிக்கடி நினைப்பது நடக்கும்.
  அகம் பயன்பெற்று வருவதைப் பொருத்து அடிக்கடி நினைப்பது இயல்பாகும்.
  ஒரு பொருளின் தன்மையையோ அல்லது ஒருவரைப் பற்றியோ அடிக்கடி நினைப்பது எப்போது சாத்தியமாகும்? அதில் ஈர்ப்பு இருக்கும்போது சாத்தியமாகும்.
  அத்தன்மையை மதிக்கும்போதும் அதனை அடிக்கடி நினைக்க வேண்டியிருக்கும்.
  அப்பொருளின் தன்மை எவ்வாறு இருக்கும்?
  உயர்வாக இருக்கும்? உயர்விற்கு ஏதேனும் ஒப்பீடு இருக்குமா? இருக்கும்.
  யாருடைய உயர்வுடன் ஒப்பீ்டு இருக்கும்? தன்னுடைய நிலையுடன் ஒப்பீடு இருக்கும்.
  விளைவு அந்த பொருளின் அல்லது அந்த ஒருவரின் தன்மையாக அடிக்கடி நினைப்பவரின் ஆற்றல் உடலிலும், அறிவிலும் மாற்றம் காணும்.

  மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

  தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது.”

  என்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? மற்றவரது உயர்வை மதிப்பதும் ரசிப்பதும் எப்போது சாத்தியம்? மற்றவரது உயர்வைக் கவனிப்பவரின் அகம் அதனைப் போற்றுகின்றது. புறமும் அகமும் போற்றினால் போற்றுபவரும் உயர்ந்து வருகிறார் என்றுதான் பொருள். புறம் மட்டும் போற்றி அகம் போற்றவில்லை எனில் அதனால் பயன் பெறுவது கடினம்.

  தெளிவே வினைப்பதிவில் தூய்மை பெறச் செய்யும்:

       மனவளக்கலைஞர்கள் பூர்வ புண்ணியத்தால், அதாவது பெற்றொர்கள் செய்த புண்ணியத்தால் அரிதினும் அரிதான நவயுக வியாசரான, நவயுக ராஜரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்களை குருநாதராகப் பெற்றுள்ளோம். “உத்தம நண்பர்காள்! எனக்கு கிடைத்த பேறு உங்கட்கும் உரியது” என்கின்ற உண்மையினை நமக்கெல்லாம் ஆசிர்வாதமாகத் தந்துள்ளார் என்பதனை எப்போதும் நினைவில் கொள்வோம். “நீ எனினும் நான் எனினும் நிறை அறிவில் ஒன்று. வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்” என்கின்ற உண்மையினை வெளிப்படுத்தி அவர் நிலைக்கு உயர்ந்துவரத் தூண்டி அழைக்கிறார். நம் குருநாதர் அவர்கள். ஆகவே ‘வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளதை’ அவர்நிலைக்கு வினைப்பதிவில் தூய்மை பெறுவதற்கு பயிற்சியோடு, தெளிவு இருந்தால்தான், பண்பில் ஏற்றம் பெறமுடியும். அதற்கு இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்துவோம்.

  குருவின் சேர்க்கை சீடரிடத்தில் என்ன செய்ய வேண்டும்?

        குருவணக்கம் பகுதியில் குருவின் சேர்க்கை சீடரிடத்தில் என்ன செய்ய வேண்டும் என குருவணக்கம் பாடலில் கூறியுள்ளார். பண்பேற்றம் பெறுவதற்கு சீடர் என்ன செய்ய வேண்டும் என்பதனைக் கூறுகிறார். அப்பாடலை நினைவிற்கொள்வோம்.

  FFC-70-எப்பபொருளை-to-post-on-28-03-15-636x480

                                                                                                 . . . ஞா.க. பா.எண். 10

        ‘வேதாத்தரியார் ஓர் அகராதி’ என்கின்ற தலைப்பின் சிந்தனை நிறைவு செய்துகொள்ளும் தருவாயில் இருக்கிறோம். வேதாத்திரியார் ஓர் அகராதியாகத்(lived as Dictionary/Encyclopedia and continued to be a living Dictionary/Encyclopedia) திகழ்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாதிரிக்காக ஒரு பட்டியலைத் தயாரிப்போம்.

  Vethathiri_a_Living_Dictionary

    13  இயல்களைப் பட்டியலிட்டுள்ளோம். இவ்வளவு இயல்களா உள்ளன திருவேதாத்திரியத்தில் என  ஐயம் எழலாம்.   இன்னும் உள்ளன. சுருக்கி பதிமூன்றாக பட்டியலிட்டுள்ளோம்.  இயல் என்பது பெரிய புத்தகமாக இருக்க வேண்டும் என்பதல்ல.  எனவே இயல் என்பது பற்றி சற்று விளங்கிக்கொள்வோம்.

  இயல் என்றால் என்ன?  ஆங்கிலத்தில் ‘Science’   எனப்படுகின்றது. ‘இயல்’  என்கின்ற சொல் ‘ஒன்று நடந்துவரும் முறை அல்லது ஒன்றன் இயல்பு’ என்பதனைக் குறிக்கும் விகுதி. உதாரணங்கள், உலகியல். இல்லறவியல் போன்றவையாகும்.  இயல் பற்றி கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் கூறுவதனைக் கவனிப்போம்.  இயல் வழியாக அறிவை புகட்டுவதால் அது அறிவியல் எனப்படுகின்றது. ஏன், எதற்கு, எப்படி எனக் கூறுவது இயல் என்கிறார் அறிஞர் சாக்ரடீஸ்.  ஆகவே  நல்வாழ்விற்கு  அறிய வேண்டிய பல்வேறு துறைகளைப் பற்றிக் கூறுவதால் திருவேதாத்திரியம் பல இயல்களை உள்ளடக்கியது என்கிறோம்.    

  அறிவின் மலர்ச்சியில் எழுச்சி!  

  அன்று(என்றோ! காலம் சொல்ல முடியுமா?!)ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சி பெற்று அணு என்ற உயிராகி, பிரபஞ்சமாகி உயிரினங்களாகி, நீதிநெறி உணர்கின்ற மாந்தராகியது. அந்த எழுச்சியின் பயன் முழுவதுமாக மாந்தரிடம் வெளிப்பட பலகோடி ஆண்டுகள் தேவையிருந்ததால், எழுச்சி அடங்கி இருந்ததுபோல் இருந்தது. இருந்தாலும் அந்த எழுச்சியின் நோக்கம்/பயன் முழுவதுமாக இருபதாம் நூற்றாண்டில்( 1911 ற்கு பிறகு) வெளிப்பட ஆரம்பித்துள்ளது. அந்த மெய் எழுச்சியின் பயன் பரவலாக மாந்தரிடம் ஆறாம் அறிவில் இப்போது திருவேதாத்திரியத்தின் வாயிலாக மலர ஆரம்பித்துள்ளது.

         வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

      ஆகவே வேதாத்திரியார் ஓர் அகராதி என்று கூறி அகம் மகிழ்வது வேதாத்திரியத்தால் நாம் பெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவுவொளியையே எடுத்துக் காட்டுகின்றது.

       எவ்வாறு ஒரு மொழியிலுள்ள புதிய, புதிய வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்து கொள்ள அகராதியை பயன்படுத்துகிறோமோ, அதுபோல் வாழ்வாங்கு வாழ அறிவிற்கு வேண்டிய தெளிவினைப் பெற திருவேதாத்திரியம் அகராதியாக விளங்குகின்றது. எனவே வேதாத்திரியார் ஓர் அகராதி என்பது சாலப் பொருந்தும். Vethathiri Maharishi was a Living Dictionary/Encylopedia and continues to be so.

  வேதாத்திரிய ஆன்மீக பொது மொழி:

         அன்னிய நாட்டிற்கு செல்லும்போது அந்நாட்டின் மொழி தெரிந்திருந்தால், அங்குள்ள மக்களிடம் அந்த மொழியில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம். அந்நாட்டின் மொழி தெரியாதிருந்தால், உலகப்பொது மொழியான ஆங்கிலத்தில் பேசி கருத்துக்கனைப் பரிமாறிக்கொள்ளலாம். அதே போன்று ஆன்மீக வளர்ச்சி என்பது நேற்று, இன்றிலிருந்து ஆரம்பிக்கவில்லை. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப வெவ்வேறு அருளாளர்களால் ஆன்மீகம் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. வெவ்வேறு சிந்தனாப்பள்ளிகள் ஏற்பட்டுள்ளன(various schools of thought). ஒருநாட்டின் மொழி தெரியாதிருந்தால் உலகப்பொது மொழியான ஆங்கிலம் உதவுவதுபோல் பொதுவான ஆன்மீக மொழி இல்லாமையால் எல்லா சிந்தனாப்பள்ளியின் கருத்துக்களையும் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளாத நிலை இருந்து வந்தது, அந்த நிலையினை மாற்றி அமைத்துள்ளது வேதாத்திரிய ஆன்மீக மொழி. ‘வேதத்தை யான் படித்ததில்லை, ஆனால் வேதத்தின் உட்பொருளாய் என்னைக் கண்டேன்’ என்கிறார். அவரைப்போன்றே, வேதங்களை நாம் படிக்காவிட்டாலும் வேதத்தின் மகா வாக்கியங்களான

  • பிரக்ஞானம் பிரம்மம்” —– அறிகின்ற அறிவு எதுவோ அது பிரம்மம்.
  • அஹம் பிரஹ்மாஸ்மி” —- நான் பிரம்மமாய் இருக்கிறேன்.
  • தத்துவமஸி” —- அது நீயாக இருக்கிறாய்
  • அயம் ஆத்மா பிரம்மம்” —- இந்த ஆத்மா பிரம்மம்.

  ஆகியவற்றின் உட்பொருளை நமக்கும் விளங்கச் செய்திருக்கின்றது வேதாத்திரியம் என்று கூறுவது அகம் மகிழ்ந்து உரைக்கும் வார்த்தை..

       வேதங்கள் பற்றி வேதாத்திரியக் கவிகள் பல இருந்தாலும் அவற்றில் ஒன்றினை மட்டும் இப்போது நினைவுகூர்வோம்.

  வேதத்தின் நோக்கம்.

  அறிவொடுஐம்புலன்கள் தமைப்பண் படுத்தி
  அனைவருக்கும் நலம்விளைக்கும் வேத நூல்கள்
  சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள்
  செல்வந்தர், ஏழைஎனும் எல்லோர்க் கும்நந்
  நெறியுணர்த்தும் போதனைகள் என்று கண்டோம்;
  நிலஉலகில் இன்றுஉள்ள வேதங்கள் எல்லாம்
  குறியொன்றே கொண்டுளது; கூர்ந்தா ராய்ந்தால்
  கொள்கைஎலாம் மனித இனப் பண்பா டாகும்!

                                                                                                               . . . ஞா.க. ப. எண். 515

   நம் குருநாதருக்கு இயற்கை/இறை என்னென்ன விளக்கியதோ, அவற்றை எல்லாமல் ஒன்று விடாமல் திருவேதாத்திரியம் நமக்கு விளக்கித் தெளிய  வைக்கின்றது.  ஆகவே நாமும், இவ்வுலகமும் உய்வதற்காக மலர்ந்துள்ள  திருவேதாத்திரியத்தை போற்றி, போற்றி, உளமாற  வாழ்த்துவோம்.

  வாழ்க திருவேதாத்தரியம்!    வளர்க திருவேதாத்திரியம். 

  அதே நேரத்தில் மனித அறிவையும் வாழ்த்துவோம்.

  வாழ்க மனித அறிவு!    வளர்க மனித அறிவு!!
  வாழ்க அறிவுச்செல்வம்!   வளர்க அறிவுச் செல்வம்!!

  வாழ்க வையகம்!   வாழ்க வளமுடன்!!

  வேதாத்திரியார் ஓர் அகராதி என்கின்ற தலைப்பில் இதுவரை 63 துணைத்தலைப்புகளில் சிந்தித்து இருக்கிறோம் என்பதனை நினைவிற்கொள்வோம். 

  காலங்கருதி வேதாத்திரியார் ஓர் அகராதி என்கின்ற சிந்தனையை இத்துடன் நிறைவு செய்துகொள்வோம். இயற்கையின்/இறையின், நம் குருநாதரின் திருவுளப்படி வேறொரு தலைப்பில் அறிவிற்கு விருந்து படைத்து அருந்துவோம். காத்திருப்போம். வாழ்க வளமுடன்.

  பயிற்சியால் பெற்றுக்கொண்டிருக்கின்ற பயன் அறிந்திருத்தல் நலம்:

       மகரிஷி அவர்கள் கூறும் பல அறிவுரைகளில் ஒன்றினை இப்போது நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.  மகரிஷி அவர்கள் கூறுவதனை உற்று நோக்குவோம்.  ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அன்பர்கள். அவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறுவதாவது:-

   ‘சில அன்பர்களுக்கு நாம் எந்த அளவில் பயிற்சியால் நன்மை அடைந்து வருகிறோம் என ஐயம் எழலாம்.  சிலர் நம்மிடமே  கூட  எந்த அளவில் பயன் பெற்றிருக்கீறிர்கள் ஆன்மீகப்பயிற்சியால்’ என்று கூடக்கேட்கலாம்.  ஆகவே நாம் முதலில் ஆன்மீகப் பயிற்சியால் என்ன பயன் அடைந்து வருகிறோம் எனத்தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  அப்போதுதான் பிறர் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவான பதிலைத் தந்து மனநிறைவு பெறமுடியம்.’ என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனை மிகவும் கவனிக்கத் தக்கது.  அவர் கூறுவதாவது:-

    ‘திருப்தியான பதிலை அறிவுபூர்வமாக, அறிவின் தெளிவோடு அளிக்க முடியவில்லை எனில் நமக்கே சோர்வு உண்டாகிவிடும்.  இதனால்  நட்டமும், குழப்பமும் வந்துவிடாமல் இருக்கவும் கேள்விக் கேட்போருக்குத் தெளிவோடும், உறுதியோடும் பதிலளிக்க வேண்டும்.  ஆகவே ஆன்மீகப்யிற்சியின் பயன்களை அறிந்திருக்க வேண்டும் பயிற்சியாளர்கள்.’ என்று வலியுறுத்துகிறார் அருட்தந்தை அவர்கள்.

     ஆகவே அவர் அறிவுரையை நிறைவேற்றும் வகையில் திருவேதாத்தரியம் ஓர் அகராதி என்கின்ற தலைப்பில் சிந்தித்தது நிறைவளிக்கின்றது.  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

  உன் பாதாரவிந்தங்களில் சரணடைகிறோம்!

  குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு

  குரு தேவோ மஹேஸ்வரஹ

  குரு சாட்சாத் பரப்ரம்மா

  தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

        குருஸ்லோகத்தில் முதல் இரண்டு வரிகள் குருவேபிரம்மா, குருவேவிஷ்ணு, குருவேதேவன், குருவே மகேஸ்வரன் என கடவுளின் பல பெயர்களைச் சொல்லி, குருயார் என உணர்த்துகின்றது. மேலும் அழுத்தமாக சொல்வதற்கு, மூன்றாவது வரியில் ‘குருசாட்சாத் பரப்ரம்மா’ என ஐயமின்றி உறுதிபடுத்தப்படுகின்றது.

        எனவே நிச்சயமாக குருவாகிய நீங்களே இறைவன் என அறிந்துகொண்டோம். மேலும் தங்கள் மானசீகக் குருவாகிய அறிஞர் திருவள்ளுவர் கூறியதையும் இவ்விடத்தில் நினைவு கூர்கிறோம்.

  “ஐயப்படாஅது அகத்து உணர்வானைத்

    தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.“                குறள் 702

  திருவள்ளுவரின் வாக்குப்படி, ஐயமின்றி அகத்தை உணர்ந்தவராகிய நீங்களும் தெய்வமும் ஒருவரே.

   

  guru_paadham

  குருவே!  உங்களின் பாதாரவிந்தங்களில் சரண்புகுந்துவிட்டோம். நீங்கள் அறிவொளியாகத் திகழ்வது போன்று எங்களையும்  அறிவொளியாகத் திகழ அருள் புரிவீர்களாக! 

             குருவே சரணம்! குருவே சரணம்!!  குருவே சரணம்!!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                          வளர்க அறிவுச் செல்வம்!!