சிந்திக்க அமுதமொழிகள்

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 7/?

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

     

    FFC – 174

    23-03-2016—புதன்.

    FFC-174-23-3-16-NEW-Maharishi PFOTO in frame

    FFC-123-அறிவிப்புவாழ்க வளமுடன்.

    சென்ற அறிவிற்கு விருந்தில் அறிவின் ஏழு செயல்பாடுகள் என்னென்ன என்றும், அதில் உணர்வு தொடர்பான 4, 5, 6, 7 ஆம் நிலைகளை சிந்தனைக்கு எடுத்துக் கொண்டோம். அவற்றில் 4, 5, 6 ஆம் நிலைகளான உணர்தல், அனுபவம், பிரித்துணர்தல் ஆகிய ஐயுணர்வைப்பற்றி சிந்தித்தோம். ஐயுணர்வே பகுத்துணர்வும் என்றும் அறிந்து கொண்டோம். இன்று அறிவின் கடைசியும், 7 ஆம் நிலையுமான ‘அறிவு தன்னை உணர்வது’ பற்றி சிந்திக்க இருக்கிறோம். ‘அறிவு தன்னை உணர்வதும், அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பது எவ்வாறு இயற்கையின் நிகழ்வு என அறிந்து விட்டு, பண்பாட்டை உயர்த்தும் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு, மனிதகுலத்தின் பூர்விக சொத்தான அமைதியினை அனுபவிக்கச் செய்து, பேரின்பநிலையை அனுபவிக்கச் செய்கின்றது/செய்ய முடியும் என்பதனை அறிவோம். வாழ்க வளமுடன்.

    ஆறாம் அறிவிற்கும் ஐந்தாம் அறிவிற்கும் உள்ள வித்தியாசமே ஆறாம் அறிவு சிந்தனை செய்வதுதான். எதனைப்பற்றி சிந்தனை செய்வது? வாழ்க்கையை பற்றி நினைத்துப் பார்த்து எதார்த்தத்தை அறிவது. இந்த உலக வாழ்க்கை நிலையானதல்ல. நிலையில்லாத வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்கின்ற தெளிவுதான் சிந்திப்பதன் பலன்.

    யாரும் விரும்பிப் பிறப்பதில்லை. மனிதன் பிறக்கிறான். ஒரு நாள் இறக்கப்போகிறான். அதுவும் ஆறிலும் நடக்கலாம். அறுபதிலும் நடக்கலாம். பிறப்பதும், இறப்பதும் இயற்கையின் நிகழ்வுகள். இந்த இடைப்பட்ட காலத்தில் இன்பம், துன்பம் ஆகிய இரண்டை மாறி, மாறி அனுபவிப்பதே வாழ்க்கையாகின்றது. அதிலும் ஒரு சிலருக்கு இன்பம் அதிகமாக இருக்கலாம். துன்பம் குறைவாக இருக்கலாம். வேறு சிலருக்கோ இன்பம் குறைவாக இருக்கலாம், துன்பம் மிகுதியாக இருக்கலாம். ஏன் இந்த வேறுபாடுகள்? இதற்கெல்லாம் காரணங்கள் என்ன? பிறக்கும்போது என்ன கொண்டுவந்தோம், போகும்போது என்ன கொண்டு போகப்போகிறோம் என சிந்திக்கின்றானா மனிதன்? இவ்வாறாக அறிவின் 7 ஆம் செயல்பாடான சிந்தனைக்கு ஆறாம் அறிவு வருவதில்லை.

    உடல்வளர்ச்சியில் முழுமை அடைவதுபோல். அறிவு தனது வளர்ச்சியில் முழுமை அடைவதில்லை. உடல் பருப்பொருள் என்பதால் அது வளர்ச்சி அடைந்து முழுமை அடைகின்றது தெரிகின்றது. ஆனால் உருவமில்லா அறிவு என்பது வளர்ச்சி அடைய வேண்டும் எனில் அது பண்பேற்றத்தில் உயரவேண்டும் என்பது பொருளாகின்றது. எனவேதான் வாழ்வியல் கலையான மனவளக்கலை பயிற்சியின் இறுதிப் பயன் (End Result) அறிவின் முழுமை(Perfection of Consciousness) என்கிறார் மகரிஷி அவர்கள்.

    எதற்காக ஆன்மா மனிதனாக பிறந்துள்ளது என்பதனை, அவ்வையார் எவ்வாறு கூறுகிறார் என்பதனை நினைவு கூர்வோம். அவ்வையார் மானுடனாக பிறப்பதே அரிது என்கிறார். அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது என்கிறார். ஆம். உயிரினங்களிலே மானுடப்பிறவி உயர்ந்தது, சிறந்தது. எல்லா உயிரினங்களுக்கு அடிப்படையாகவும், பொதுவாகவும் இருப்பது உயிர். உயிர் பலகோடி விலங்கினப் பிறவிகளாக வாழ்ந்துவிட்ட பிறகே மனித உயிராக பிறவி எடுத்துள்ளது. எனவே தான் அரிது அரிது மானிடனாய்ப் பிறத்தல் அரிது என்கிறார். இவ்வாறாக அரிய பிறவி எடுத்துப் பிறந்தாலும் ஞானத்தைப் பெறுவது அரிது என்கிறார்.

    அவ்வையாரின் இந்த ஆதங்கத்தை,

    இப்போது, மனவளக்கலை, தனது பயிற்சியாளர்களை பிறவியின் நோக்கம் எது என
    திருவள்ளுவர் காட்டிய வழியில் சிந்திக்க வைத்து,
    ஞானம் பெறுவதற்கு பயிற்சியினை தொடரச் செய்து நிறைவு செய்கிறது.

    வாழ்வின் நோக்கம் அறிய திருவள்ளுவர் காட்டிய வழி என்ன?

    அறிவு, ஐயுணர்வாக, ‘அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை மட்டுமே உணர்ந்து கொண்டிருந்தபோது, அறிவிற்கு சிந்தனை மலரவில்லை. ஆனால் அறிவு, ஆறாம் அறிவாக மனிதனிடம் வந்தபோது அதன் சிந்தனைத்திறன் மலர வேண்டும்/மலர்ந்திருக்க வேண்டும் என்பதுதானே இயற்கையின் நிகழ்வாக இருக்க வேண்டும். அவ்வாறு மலர்ந்து என்ன செய்ய வேண்டும் ஆறாம் அறிவு? ‘ஐவகை நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை உணர்ந்து கொண்டிருக்கின்றோமே, இவை என்ன? இவை ஏன், எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன, இவற்றை உணர்ந்து கொண்டிருக்கின்ற நான் யார்?’ என்கின்ற வினாக்களால் உந்தப்பட்டு, தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளியுள்ள குறளான

    “சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
    வகை* தெரிவான் கட்டே உலகு” …. குறள் எண்: 27

    என்பதற்கேற்ப அறிவு அவ்வினாக்களுக்கான விடைகளைக் கண்டுபிடித்து உலக வாழ்க்கையை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

    ஓரறிவிலிருந்து ஆறாம் அறிவு சீவன்கள் வரை, ஒவ்வொன்றிற்கும் உள்ள உணர்வுகளைத் தெரிந்து கொள்வோம்

     FFC-174-23-3-16- பிரிக்கப்பட்ட சமன்பாடு

    ஒவ்வொரு அறிவிற்கும் ஒரு உணர்வு என்கின்றபடி ஐந்து சமன்பாடுகள் பூர்த்தியாகி உள்ளன. ஆறாவது சமன்பாட்டில் கோடிட்ட இடத்தில் ஒரு விடையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அது என்ன? சற்று சிந்திப்போம்.
    திருவள்ளுவர் கூறும் ‘வகை* தெரிவான் கட்டே உலகு’ என்பதற்கேற்ப பிரபஞ்ச நிகழ்ச்சிகளான, புலன்களுக்கு புலப்படுகின்ற ஐந்து நிகழ்ச்சிகள் ஏற்படுகின்ற வகையினை அறிந்து கொள்வதேயாகும். புலன்களால் உணரப்படுகின்ற ஐந்து நிகழ்ச்சிகளாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றால் (தெரிந்தவை) ஏற்படுகின்ற வழியினை(வகையினை) அறிந்து கொள்வதன் மூலம் இதுவரை புலன்களால் அறியமுடியாததாக இருந்து வருகின்ற(தெரியாமல்) இறையையேக் கண்டுபிடித்துவிடலாம். அதாவது தெரிந்ததை வைத்து தெரியாததைக் கண்டுபிடிப்பது எளிதல்லவா?! இப்போது ஆறாவது சமன்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற முடிவிற்கு வருவோம். ஆறாவது சமன்பாடு

    FFC-174-23-3-16-பிரிக்கப்பட்ட சமன்-6ஆம்

    என்றிருக்க வேண்டும்.

    திருவள்ளுவர் கூறுவதுபோல், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்கின்ற ஐந்தின் வகை அறியும் வகையில்,
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, திருவள்ளுவரை மானசீக குருவாக வணங்கி ஏற்றுக் கொண்டு,

    தெய்வப்புலவரான திருவள்ளுவரின் இறையைப்பற்றிய எண்ணங்களை அப்படியே உள்வாங்கி,

    தன்னுடைய இறையியலுக்குச் சான்றாக ஐம்பது குறட்பாக்களுக்கு உட்பொருள் விளக்கத்தினை,

    திருவள்ளுவரே வந்து இப்போது சொல்லியிருந்தால் எவ்வாறு சொல்லியிருப்பாரோ, அதுபோல்

    நூல் எழுதி, வெற்றி பெற்றவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் அருளியுள்ள

    திருவேதாத்திரியத்தில், ஐவகை நிகழ்ச்சிகள் என்ன, அவை எவ்வாறு ஏற்படுகின்றன,

    அவற்றின் மூலம் என்ன, அவற்றின் முடிவு என்ன என்பதனை அறிவித்து.
    ஆதியிலிருந்து முடிவுவரை பிரபஞ்சத்தையும் அறிவையும் எளிதில் புரிந்து கொள்ள முடிகின்றவாறு
    விளக்கங்கள் கூறியுள்ளார்.

    வேண்டியதெல்லாம் செய்முறைத் தேர்வில் வெற்றி(துரியாதீத தவத்தில் வெற்றி பெறுவது/ success in Thuriyatheeth meditation) பெறுவது. தேர்வில் வெற்றி பெற்றால் சான்றிதழ் தருவதுபோல் இந்தத் தோ்வில் வெற்றி பெற்றதற்கு ஏதாவது சான்றிதழ் உண்டா? உண்டு. அதனை நாமே அளித்துக் கொள்ள வேண்டியதுதான். அறிவிற்கு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற நிலை கைவல்யமாகிவிட்டால் அதுவேதான் அதற்கு சான்றிதழ். அறிவிற்கு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ கைவல்யமாகிவிட்டால் இயற்கையாகிய புவிமேல் எல்லாம் இன்பமயம்தான்.

    இத்துடன் இன்றைய அறிவிற்கு விருந்தை நிறைவு செய்து கொள்வோம். அறிவித்துள்ளபடி, அடுத்த அறிவிற்கு விருந்து, மகரிஷி அவர்களின் மகாசமாதி தினமான 28-03-3016 திங்களன்று நடைபெறும். அச்சமயம் ‘தெளிவு’ பற்றி சிந்திக்க இருக்கிறாம். ‘தெளிவு’ பற்றிய சிந்தனை முடிந்த பிறகு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருவது தொடங்கும் என அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 162

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    19-03-2016 — சனி

    “சோம்பித் திரிபவர்கள் ஒர் எறும்பிடம் சிறப்பான பாடம் பயில மாட்டார்களா?

    . . . சாலமன் மன்னன்.

    பயிற்சி—
    1) அறிஞர் சாலமன் மன்னனின் ஆதங்கம் பற்றி சிந்திக்கவும்?

    2) சோம்பலைப் பற்றி திருவள்ளுவர் அருளியுள்ள அதிகாரம் என்ன?
    3) அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்கு பின், எந்த அதிகாரத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளது?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 161

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    18-03-2016 — வெள்ளி

    “நாம் சிந்திப்பதைப் பொருத்து நாம் விரும்பிய அளவு உயர்வடைய முடியும்.’

    . . .      அறிஞர் டபில்யூ. டி. ஸ்டேபிள்ஸ்

    பயிற்சி—
    1) சிந்திப்பதற்கும் உயர்வதற்கும் தொடர்பு எவ்வாறு ஏற்படுகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 160

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     12-03-2016 — சனி.

    ஒழுக்கத்தில் நாம் கவனம் எடுத்துக் கொண்டால் புகழ் தானாகவே தன்மீது கவனம் எடுத்துக்கொள்ளும்.

    ….. அறிஞர் டி.எல். முடி

    பயிற்சி—
    1) ஒழுக்கத்தில் கவனம் எடுத்துக்கொள்வது என்றால் என்ன?
    2) புகழ் தானாகவே தன்மீது கவனம் எடுத்துக் கொள்ளும் என்பதன் பொருள் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 159

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    11-03-2016 — வெள்ளி

    ஒரு நாடு அந்த நாட்டின் கல்வி நிறுவனங்களில் தான் உருவாக்கப்படுகிறது.
    . . . Dr. இராதாகிருஷ்ணன்.

    பயிற்சி—
    1) ஏன்? எப்படி?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 158

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    05-03-2016 — சனி.

     

    காய்க்காக மரம் பூக்கின்றது? காய் தோன்றியதும் பூ உதிர்கின்றது. அதுபோல ஞானத்திற்காக வினை செய்தால் ஞானம் கிட்டியதும் வினை அழியும்.

    . . . கபீர்தாசர்.

    பயிற்சி:–
    1) ஞானம் என்பதற்கான பொதுவான விளக்கம் என்ன?
    2) ஞானம் என்பதற்கான சிறப்பு விளக்கம் என்ன?
    3) வினை அழியும் என்கிறாரே கபீர்தாசர் எந்த வினை அது?
    4) இது எவ்வாறு நடக்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 157

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    04-03-2016 — வெள்ளி.

    மரணம் உறுதி.  ஆனால் இறப்பதற்கு முன் ஏதாவது ஒரு நன்மையைச் செய்தாக வேண்டும் என்று மேலான லட்சியத்தைக் கொண்டிருங்கள்.

     . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—

    1) தற்போது உலகிற்கு எந்த நன்மையைச் செய்யலாம் மனவளக்கலைஞர்கள்? ஏன்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 156

     

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    27-02-2016—சனி.

    “மனம் போனபோக்கில் நடப்பதோ, ஆசை வயப்பட்டு எல்லாவற்றையும் அனுபவிக்கத் துடிப்பதோ, நமக்குள் இருக்கும் இன்ப வெறியை அதிகரிக்கச் செய்து விடும். தர்ம சாத்திரங்கள் சொல்லும் அறிவுரைகளைப் பின்பற்றி நம்மை நாமே கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுவோம்.”

    . . . ஸ்ரீ அரவிந்தர்.

    பயிற்சி— 1) ஸ்ரீ அரவிந்தா் அன்று கூறியது இப்போது நடந்தேறிவருகின்றதா? எவ்வாறு? 2) மனவளக்கலை இதனை எவ்வாறு நிறைவேற்றி வருகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு.

                                                                        26-02-2016

    அன்புடையீர்,

                 வணக்கம். வாழ்க வளமுடன்.  (24-02-2016- புதன்கிழமை) அறிவிற்கு விருந்து, அன்று மாலை 5-00PM அளவில் updation செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்னர் (5-00 PM on 24-02-2016)

    முன்னர் இணையதளத்தை பார்வையிட்டவர்களின் நலன் கருதி இங்கே அப்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. வாசித்து பயன் பெறவும். அல்லது முழுவதுமாக மீண்டும் அன்றைய (24-02-2016) அறிவிற்கு விருந்தை அருந்த வேண்டும் என நினைக்கின்றவர்கள் தயவு செய்து இங்கே சொடுக்கவும்

     

    (Click here please).

    https://www.prosperspiritually.com/category/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

       வாழ்க வளமுடன்.  

    விடை – 15

    FFC – 166

    24-02-2016—புதன்

    சிந்திக்க வினாக்கள்-143

    (18-01-2016 – திங்கள்)

     

    மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?

     

    Updated portion of FFC 166 posted Yesterday(24-02-2016)  

     

    இப்போது தெய்வப்புலவர் திருவள்ளுவரை வணங்குவோம். திருவள்ளுவரை உலகமே போற்றுவதாலும், திருக்குறள் உலகப் பொதுமறை நூல் எனப்போற்றப்படுவதாலும், திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதிலிருந்தும் திருவள்ளுவரின் அரிய பெருமைகள் தெரிய வந்தாலும், திருவள்ளுவரின் அறிவாற்றலை நினைத்துப்போற்றுவதாலும், இயல்பூக்க நியதியின் பயனை அடைய முடியும் என்பதற்காக, நம் குருதேவர் வழியாக திருவள்ளுவர் பற்றி அறிவது சிறப்புடையதாகும்.   திருக்குறளை அறிவுக்கடல் என்கிறார் நம் மகரிஷி அவர்கள். அதனை நாம் ஆராய்ச்சி செய்து அதனை ஏற்றுக்கொள்ளலாமே.

      இறைஉணர் பயிற்சியாளர்கள் பயிற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவது?

      முதல் படி: ஆராய்ச்சியாகும்.

    1)   முதலில் இறை என்பது எது,

    2)   இறை எவ்வாறு இப்பிரபஞ்சமாகியது,

    3)   இறை எவ்வாறு நாமாக ஆகியுள்ளது அல்லது இறைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன,

    4)   கண்களால் காணமுடியாத ஒன்று எவ்வாறு இறையாக இருக்கமுடியும்,

    5)   அப்படியானால் இறையைக் கண்டதாக அருளாளர்கள் கூறுவது என்ன   போன்ற வினாக்களின் மூலமாக ஆராய்ச்சியினைத் தொடங்க வேண்டும்.

      இரண்டாவது படி: தெளிவு பெறுதலாகும்.

    இவ்வளவு ஆராய்ச்சி செய்ததன் முடிவு என்னவாக இருக்க வேண்டும்? தெளிவு பெறவேண்டும் என்பதேயாகும். என்ன தெளிவு அது?

    1)   இறை என்பது எது,

    2) அதற்கும் நமக்கும் உள்ள உறவு என்ன,

    3) பிறந்து இறக்கப்போகின்ற இவ்வாழ்க்கையின் பொருள் என்ன,

    4) புலன்இன்பங்களில் அளவு மீறி, முறையையும் மாற்றி, மயக்கமுற்று புலன்களுக்கு அடிமையாகிய அறிவை மீட்டு விடுதலை செய்து (Liberation) தன்னையே உணர்வது ஒன்றேதான் என்கின்ற தெளிவுதான் முதற்படியான ஆராய்ச்சியின் முடிவு அது.

    5) இதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்பதனை உறுதியாக கருத்தில் கொண்டு கடமை ஆற்றுவதே மனித வாழ்க்கையின் பொருள், அர்த்தம், நோக்கம், பயன், பேரின்பம். மரணமிலா பெறுவாழ்வு வாழ்தல் என்கின்ற தெளிவு.  

    மூன்றாவது படி: பயிற்சியாகும்.   ஆராய்ச்சி செய்து, தெளிவு பெற்ற பிறகு செய்யவேண்டியது பயிற்சியாகும். ‘கற்க கசடறக் கற்பவை; கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்பதற்கேற்ப முறையான பயிற்சியாகிய மனவளக்கலையை மேற்கொள்ள வேண்டும்.  

    நான்காவது படி: வெற்றி பெறுவதாகும்.   வெற்றி பெறுவது. இது கர்மயோக வாழ்வு வாழ்ந்து மரணமிலா பெறுவாழ்வு வாழ்வதாகும். மனித வாழ்வில் முழுப்பயனளிக்கக்கூடிய, எக்காலத்திற்கும், எவ்விடத்திற்கும், பொருத்தமானவையாக இருக்கும் நூல்கள் எது எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். அவை, ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி என்கின்ற நான்கு படிகளின் வழியாக திறமை அடைந்த அறிஞர்கள் எழுதும் நூல்களே என்கிறார் மகரிஷி அவர்கள். அத்தகைய நூல்களில் மிகச் சிலவே உள்ளதாகவும் கூறுகிறார். அவற்றில் ஓர் சிறந்த உயர்வைப் பெற்று மிளிர்வதுதான் திருக்குறள் என்கிறார்.

        அத்தகைய நூலாசிரியரின் திறமை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.   1)   மெய்ப்பொருள் விளக்க நிலை பெற்று முழுமை பெற்றிருக்க வேண்டும் அந்த நூலாசிரியர் என்கிறார். 2)   மேலும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்:– விரிந்த அறிவோடு வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும். 3)   சிறப்புற்று வாழ்வதற்கான நெறிகளை வகுத்திருக்கப்பட வேண்டும் அந்த நூலில் என்கிறார் மகரிஷி அவர்கள்.   அத்தகைய சிறப்புக்களுடைய ஒரு நூல் திருக்குறள் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேல் திருவள்ளுவர் அல்லது திருக்குறள் என்கின்ற பெயரைச் உச்சரிக்கும்போதே இத்தனை சிறப்புக்களும் காதுகளில் வந்து ஒலிக்க வேண்டும். மகரிஷி அவர்கள் தான் அடைந்த பயனின் நன்றி உணர்வாக தன்னுடைய மானசீகக்குருவாகிய திருவள்ளுரை போற்றுகிறார்.

        நம் நம்குருவிடம் பெற்று வருகின்ற கிடைத்தற்கரிய பயனை அடைந்து வருவதால், நாம் போற்ற வேண்டியது, மேற்கண்ட சிறப்புகள் அத்தனையும் பெற்ற ஒரு நூலாசிரியரும், நூலும் முறையே வேதாத்திரி மகரிஷி அவர்களும், அவர் அருளியுள்ள நூலான திருவேதாத்திரியமும் ஆகும் என நினைந்து நினைந்து  பணிவுகலந்த பெருமையினால் மனம் குளிர்ந்து, குளிர்ந்து, குருவின் காணிக்கையாக அறுகுணங்களிலிருந்து விடுதலை பெற்று, நாம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே பெற்று விடுவதேயாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

        ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் விரைவில் பண்பேற்றம் பெறுவதற்கு மகரிஷி அவர்கள் கூறியபடி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழியான ‘எப்பொருளை, எச்செயலை, எவ்வுயிரை, எக்குணத்தை அடிக்கடி நினைந்து வந்தால் நினைப்பவரின் ஆற்றல் அப்பொருளினுடைய தன்மையினை அறிவிலும் உடலிலும் மாற்றம் பெறக்காணலாம்’ என்கின்ற சூட்சுமத்தை பயன்படுத்திய வகையில் இன்றைய அறிவிற்கு விருந்து, தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மாக்கள், செயல்கள், குணங்களைப்பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குருவருளும், திருவருளும் என்பதனை நினைக்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.

    வாழ்க திரு பொருந்திய திருவேதாத்திரியம், வளர்க திரு பொருந்திய திருவேதாத்திரியம். வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 155

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    26-02-2016—வெள்ளி.

     

    “உயர் ஞானம் வேண்டுமானால் அறிவு அறியாமையைக் கடந்து செல்லவேண்டும்.”

    . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) இதனை எந்த அடிப்படையில் கூறுகிறார்? இக்கூற்றை மேற்கொண்டும் ஆழ்ந்தும், விரிந்தும் சிந்திக்கவும். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 154

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    20-02-2016 — சனி

    “உங்கள் சொந்த விதியைப் படைத்தவர் நீங்களே என்பதனை உணருங்கள்“

    . . . சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி—
    1) என்ன கூறி எச்சரிக்கிறார் சுவாமி விவேகானந்தர் அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 153

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    19-02-2016 — வெள்ளி

    “பாறையை சுமப்பதுபோல், மனதில் வஞ்சத்தை வைத்து வாழ்வது வாழ்க்கையாகாது”

    . . . வள்ளலார்.

    பயிற்சி—
    1) அறுகுணங்களில் ஒன்றான வஞ்சத்தை பாறையோடு ஒப்பிடுவதனைக் கவனிக்கவும்.
    2) ஏன் அவ்வாறு கூறுகிறார்?
    3) வள்ளலாரின் இக்கூற்று சமய சம்பந்தமானதா அல்லது அறிவுபூர்வமானதா அல்லது விஞ்ஞானபூர்வமானதா? எதனை அடிப்படையாகக் கொண்டிருந்தால் நலமாய் இருக்கும்?
    4) உங்கள் விடையினை நியாயப்படுத்தவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 152

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    13-02-2015 — சனி

    “எங்கு உனது ஆற்றலும், உலகின் தேவையும் சந்திக்கின்றனவோ அங்குதான் உனது லட்சியம் உள்ளது”.

     ….. அறிஞர் அரிஸ்டாட்டில்.

    பயிற்சி—
    1) எதனை லட்சியமாகக் கொள்வது என யோசிப்பவர்களுக்கு அறிஞர் அரிஸ்டாட்டில் கூறும் யுக்தி சரிதானே?!
    2) மனவளக்கலைஞர்களுக்கு அறிஞர் அரிஸ்டாட்டில் கூறுவதுபோல் ‘எந்த லட்சியம்’ வரவேற்பு கம்பளத்தை விரித்து காத்துக் கொண்டிருக்கின்றது?
    3) அது சரியானதுதானா?

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளா்க அறிவுச் செல்வம்

    Loading