சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 151

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

     

    12-02-2016 — வெள்ளி

    இயற்கை இரகசியத்தை அதாவது சூக்குமம், காரணம் என்று இரண்டு நிலைகளையும் எந்த அளவுக்கு உணர்கிறோமோ அந்த அளவுக்கு வாழ்வில் பொறுப்புணர்ச்சி ஏற்படும்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) சூக்குமம், காரணம் என்றால் என்ன?
    2) ஏன் அவற்றை இயற்கையின் இரகசியங்களாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    3) பொறுப்புணர்ச்சி என்பது என்ன?
    4) பொறுப்புணர்ச்சி எவ்வாறு அவசியமாகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 150

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

     

    06-02-2016 — சனி

    ஆண்டவனுக்கு தரும் மரியாதைக்கு அடுத்தது கடமைதான்.

    … அரிஸ்டாட்டில்.

    பயிற்சி:– 1) என்ன கூறுகிறார் அறிஞர் அரிஸ்டாட்டில்? 2) இதுபோன்றே கடமையையும் கடவுளையும் இணைத்து வேறு அறிஞர்கள் சொல்வதென்ன?

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.

    நன்றி,

    வாழ்க வளமுடன்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 149

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    05-02-2016 — வெள்ளி

    யாருக்கு இது கடைசிப் பிறவியாக இருக்கிறதோ அவர்களே முந்தைய பிறவிகளில் செய்த செயல்களின் பலனை, குறிப்பாக அதனை துன்பமாக அனுபவிக்கிறார்கள்.

    . . . அன்னை சாரதா தேவியார்.

    பயிற்சி—
    1) இது எவ்வாறு சரியாக உள்ளது?

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 148

    வாழ்க மனித அறிவு                                                                                    வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 148            

       30-01-2016—சனி

    அகந்தை இருக்கும் இடத்தில் ஆண்டவன் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டான். ‘நான்’ ‘எனது’ என்று எண்ணிக் கொண்டு செயலாற்றுபவர்கள் எந்தக் காலத்திலும் ஆண்டவனை அடையவே முடியாது.

    ….. பகவான் ஸ்ரீரமணர்.

    பயிற்சி—

    1)    ஏன் பகவான் ஸ்ரீரமணர் அவ்வாறு கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 147

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

    29-01-2016—வெள்ளி

    “அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அடிப்படையில் ஆற்றுகின்ற கடமையெல்லாம் அன்பின் செயலாகும்.“

                                                                       …..   வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    பயிற்சி—

    1)   ‘அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு’ என்பதற்கும், இதற்கும் உள்ள ஒற்றுமை என்ன?

    2)   ‘கடமை’ என்று கூறுவதனைக் கவனிக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    திருக்காப்பிட்டுக் கொண்டது –

    விளக்கம்:-

    திருக்காப்பிட்டுக் கொள்ளுதல் என்றால் என்ன என்று சில சத்சங்க அன்பர்கள் கேட்கின்றனர். வள்ளலார் அவர்கள் 30-01-1874(தைப்பூசம்) வடலூரில் உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத்தில் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதிமயமானார். 30-01-1874 வெள்ளிக்கிழமை இரவு 12-00 மணிக்கு திருக்காப்பிட்டுக் கொண்டார் (கதவை தாழிட்டுக் கொண்டார்). தாழிட்டுக் கொள்வதற்குமுன்வள்ளலார் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருட்செய்தியைஇன்றும் சித்தி வளாகம் சுவற்றில் காணலாம். அதனைக் காணும்போது நமக்குள் எழுகின்ற சிந்தனைகள்தாம் எத்தனை, எத்தனை? 24-01-2016 மற்றும் 27-01-2016 ஆகிய நாட்களில் வெளியாகிய அறிவிற்கு விருந்தில் இடம் பெற்றன. அந்த அருட்செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

    இங்கு அமைதியாகவும், மௌனமாவும் இருக்க வேண்டும்.

    அருட்பெருஞ் ஜோதி                                அருட்பெருஞ் ஜோதி

                 தனிப்பெருங் கருணை                               அருட்பெருஞ் ஜோதி

     

    30-1-1874 ம் ஆண்டு ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19 ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு திரு அருட்பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் பொழுது திருவாய் மலர்ந்தருளியது.

    “இதுவரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ஆனால் அச்சில் வார்ப்போம். ஆகாவிடில் மிடாவில் வார்ப்போம். நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப்போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது. வெறு வீடாகத்தானிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்.

       இனி இரண்டரை கடிகை நேரம் உங்கள் கண்களுக்குத் தோன்றமாட்டோம். இவ்வுலகத்திலும் மற்றெங்கிலும் இருப்போம். பின்னர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வருவார். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பல நிகழ்த்துவோம். திருவருட்செங்கோலாட்சி செய்வோம். அகவினத்தார்க்குச் சாகா வரமும், ஏனையோர்க்குப் பரிபக்குவ நிலையையும் அளிப்போம் நாம் திருக்கதவை மூடியிருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் “ஆண்டவர் அருள் செய்வார்“

    இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம் இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்திவிடுவோம். அஞ்ச வேண்டா. சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.“

                                                                                                  வள்ளலார்

                                                          திருவருட்பா காரணப்பட்டு கந்தசாமி பதிப்பு(1924)

                                                                     பாலகிருஷ்ணன் பதிப்பு

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 146

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

    23-01-2016—சனி

    பிறரை மேய்ப்பதோ, அடக்கி ஆள்வதோ இன்ப ஊற்றைக் கெடுத்துவிடும். நாம் செய்வதோடு விட்டுவிடு. அதற்குப் பதில் எதிர்பார்ப்பதை மறந்துவிடு.

    …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) அடக்கி ஆள்வதில் எவ்வாறு இன்ப ஊற்று கெடுகின்றது என்கிறார்?
    2) ஏன் எதிர்பார்ப்பதை மறந்து விடச் சொல்கிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்.

    அறிவிப்பு—

    வாழ்க வளமுடன்.

    23-01-2016 அன்று தைப்பூசத்திருநாள்.   வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘வள்ளலார் அவர்கள் கடை விரித்தது விரித்ததுதான்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.

    மேலும், அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்) அவரிடம் அருள் வேண்டி வணங்கி மடல் வரைவோம்.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க வளமுடன்.

    23-01-2016 தைப்பூசத்திருநாள். வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால் அன்று சிறப்பு அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில் அவரிடம் அருளை வேண்டி வணங்கி நிற்போம்.

    வாழ்க வளமுடன்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 145

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    22-01-2016 — வெள்ளி

    அறிவு குறைவாயிருப்பதைவிட கவனமின்மை அதிகக் கெடுதலைச் செய்கிறது?

    …. பெஞ்சமின் பிராங்ளின்

    பயிற்சி—
    1) இது எவ்வாறு சரியாக இருக்கும்?
    2) நுண்மான் நுழைபுலன் திறமைக்கும் இப்பொன்மொழிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? சிந்தித்து உங்களுக்குள்ளாகவே பதில் கூறவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    வாழ்க வளமுடன்.

    23-01-2016 அன்று தைப்பூசத்திருநாள்.   வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘வள்ளலார் அவர்கள் கடை விரித்தது விரித்ததுதான்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.

    மேலும், அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்) அவரிடம் அருள் வேண்டி வணங்கி மடல் வரைவோம்.

    வாழ்க வளமுடன்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 144

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    16-01-2016 — சனி

    “பேரியக்க மண்டலம் தூலம், சூக்குமம், காரணம், ஆகிய மூன்றடுக்கு இயக்க நிலைகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. சூக்குமமும், காரணமும் புலன்களுக்கு எட்டாது. ஆறாவது அறிவுக்கு மாத்திரம் எட்டக் கூடியவை“

                                                                                     ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    தெளிந்தோர்(28-12-1964)
    தூலம், சூக்குமம், தெய்வம் இம்மூன்றுக்கும்
    தொடர்பு அறிந்தவர் தெளிந்த அறிவினர்
    காலம், தூரம், வேகம், பருமன் நான்கின்
    கணக்கையும் உணர்வையும் அறிந்தோர் அன்னார்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இரண்டு அருட்கூற்றுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து இக்கூற்றுக்கு சொந்தமானவர்
    மகிழ்ந்ததுபோல மகிழவும். வாழ்க வளமுடன்.

    2) காலம், தூரம், பருமன், வேகம் கணக்கையும், உணர்வையும் அறிதல் என்றால் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு:-

    வாழ்க வளமுடன்.

        அடுத்த அடுத்த அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில்

    (17-01-2016 ஞாயிறு)

    1)   சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது? என்கின்ற வினாவிற்கான விடையும்,

     

    2)   ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.’ என்கின்ற …ஸ்பானியப் பழமொழியின் கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

    வாழ்க வளமுடன்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 143

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    15-01-2015 — வெள்ளி

    ஆன்மப் பேரொளியை மறைத்திருக்கும் தன்முனைப்புத் திரை நீக்கப்பட்டுவிட்டால் மனிதனே தெய்வம்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஆன்மாவை பேரொளி என்று கூறுவதனைக் கவனிக்கவும்.
    2) இந்த அமுத மொழியினை வைத்துக் கொண்டு தன்முனைப்பு என்பதனைத் தெளிவாக அறியவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு:-

    வாழ்க வளமுடன்.

        அடுத்த அடுத்த அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில்

    (17-01-2016 ஞாயிறு)

    1)   சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது? என்கின்ற வினாவிற்கான விடையும்,

     

    2)   ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.’ என்கின்ற …ஸ்பானியப் பழமொழியின் கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

    வாழ்க வளமுடன்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 142

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    09-01-2016 — சனி

    இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும் பொழுது அவற்றின் நிலையாமையை நினைவுகூர். இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடைவாயாக.

    ….. அன்னை சாரதா தேவியார்.

    பயிற்சி—
    1) ஏன் நிலையாமையை நினைவு கொள்ளுங்கள் என அன்புடன் எச்சரிக்கிறார்?
    2) நிலையாமையை நினைவு கூர்ந்தால் என்ன நடக்கும்?
    3) நிலையாமையை அறிவதற்கும் ஞானத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறியிருக்கிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 141

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

     

    08-01-2016 — வெள்ளி

    தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை கீழானவர்களாக மாற்றிவிடும்.

    ….. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி:–
    1) எப்படி?
    2) ஆகவே என்ன செய்ய வேண்டும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 140

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    02-01-2016 — சனி

     மறைந்திருக்கும் இயற்கையே கடவுளின் இரகசியம்.

                                                                                                                  ….   ஸ்ரீ அரவிந்தர்.

    பயிற்சி—

    1)   இயற்கையும் கடவுளும் வேறுவேறா?

    2)   திருவேதாத்திரியம் கடவுளின் இரகசியத்தை வெட்டவெளிச்சமாக்கிவிட்டதல்லவா?

    3)   எவ்வாறு வெட்டவெளிச்சமாக்கி உள்ளது என ஆழ்ந்து சிந்திக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    Loading