October 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 223

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     21-10-2016—வெள்ளி.

    தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது. உன்னைத் தவிர யாராலும்  உன்னை மகிழ்விக்க முடியாது.

    . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) இது யாருக்கான இலக்கணமாக உள்ளது?
    2) ‘உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது’. என்பதன் உட்பொருள் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 224

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    21-10-2016—வெள்ளி

     

    “தூய்மையான இன்பத்தை அறிந்தவர்கள் இறைவனை அறிந்தவர்களாவர்.”

    . . . அரவிந்தர்.

    பயிற்சி—
    1) இன்பத்தில் தூய்மையானது என்பதால் தூய்மையற்றது உள்ளதா. அது என்ன?
    2) தூய்மையான எண்ணம் என்பது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-221

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     20-10-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
    ———— ஒலியால் சங்கீதம் பயனற்றுக் காண்பதைப்போல் ————– காண்போர்

    அறிவில் நற்குணங்கள் பயனற்றிருக்கும்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்