September 2015

Monthly Archives

  • FFC – 119-இறை அருள் பெற…….

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற…….

    FFC – 119

    16-09-2015–புதன்

    அற உணர்வே இறை உணர்வு:

    எண்ணமே இயற்கையின் சிகரம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எவ்வாறு எண்ணம் இயற்கையின் சிகரமாகும்?

    இயற்கை வேறு, இறை வேறு அல்ல. இறையின் மறு விஞ்ஞானப் பெயர்தான் இயற்கை. எண்ணமே இயற்கையின் சிகரம் என்கின்ற போது எண்ணமே இறை என்றுதானே பொருள்.

    எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகும் என்கின்ற வினாவிற்கான பதிலைப் பார்ப்போம்.

    இயற்கையின் ஆரம்ப நிலை எது?

    இயற்கையின் ஆரம்ப நிலை வெளி.

    அந்த வெளியைத்தான் இறைவெளி என்கின்றனர் மெய்ஞானிகள். இறைவெளியின் நான்கு தரங்களாவன: வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம். நான்கு தரங்களில் மூன்றாவதாக பேரறிவு இருந்தாலும் சுத்த அத்வைதிகள் அறிவே தெய்வம் என்கின்றனர். ஏன்? மீண்டும் வினா எழுந்துள்ளது.

    இறைவெளி வற்றாயிருப்பாகவும், பேராற்றலாகவும் இருந்தாலும் பேரறிவு மட்டும் அதற்கு இல்லையானால் அது ஒன்றுமில்லாததாகத்தான் இருந்திருக்க வேண்டும். இறை வெளி தன்னிறுக்கத்தால், துகள்களாகி பஞ்ச பூதங்களாகி பின்னர் கோடானகோடி நட்சத்திரங்களாகி அதில் நாம் வாழும் பூமியைக் கொண்ட ஒரு சூரியக் குடும்பமும் ஆகியிருக்க முடியாது. உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது? ஆயிரம் போ்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் அவர்களைக் கண்காணிக்க எத்தனை மேற்பார்வையாளர்கள் தேவையிருக்கின்றனர். மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றனர் என்றால், அவா்களுடைய அறிவுதானே கண்காணிக்கின்றது. அதுபோல் இத்துனைப் பெரிய பிரபஞ்சமாகி, கோடான கோடி உயிரினங்களாகி, இறுதியில் மனித அறிவாக பரிணமிக்கின்றது என்றால் அதற்கு யார் காரணம்? இது மூன்றாவது வினாவாகிவிட்டது. பேரறிவு தான் காரணம்.

    அந்த பேரறிவுதான் இப்போது நீங்களுமாகி அடியேனுமாகி, எல்லோருமாகி  சிந்திக்கின்றது. ஆகவே அறிவே இயற்கையின் ஆதிநிலையில், இறைவெளியில் அறிவாக இருந்துள்ளது. எண்ணம் என்பது என்ன? எது எண்ணுகின்றது? அறிவின் பணிகள் என்னென்ன? எண்ணுவது, உணர்வது, ஒழுங்கு படுத்துவது ஆகியவைகளாகும். ஆகவே எண்ணக்கூடிய அறிவை, இயற்கைக் கொண்டுள்ளதால் எண்ணம் என்பது இயற்கையின் சிகரமாகின்றது. மலையின் உச்சியைச் சிகரம் என்போம். சிகரம் என்கின்ற சொல்லிற்கு சிறப்பு, உன்னதம் என்றும் பொருளுண்டு. ஆகவே எண்ணமே இயற்கையின் சிகரம் என்பது சரியே என்கின்ற முடிவிற்கு வருகிறோம். இறை என்பதும் இயற்கை என்பதும் ஒன்றே என்பதால் எண்ணம் என்பது வேறு அல்ல, மனிதனிடம் உள்ள அறிவாகிய இறையேதான் எண்ணுகின்றது என்று பொருளாகின்றது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதன் ஏன் இறை அருள் பெறமுடியாமல் துன்பப்பட வேண்டியுள்ளது?

    மனிதன் எண்ணுகிறான் என்றால் அவனுள் இருக்கின்ற பின்னப்பட்ட இறையே தான் எண்ணுகின்றது. பின்னர் என்ன குறைவு மனிதனுக்கு? சில அத்வைதத்தில் எப்படி பொருள். மெய்ப்பொருள் ஊள்ளதோ. அதுபோல் அறிவாகிய இறைக்கும் மனித அறிவிற்கும் வித்தியாசப்படுத்துவதற்காக கலங்கமிலாப் பேரறிவை சுத்த அறிவு என்கின்றனர். அப்படியானால் மனித அறிவுடன் கலங்கங்கள் சேர்ந்து விட்டன என்றாகின்றது. பேரறிவு கலங்கமில்லாதது. அது மனித அறிவாக வரும்போது அதனுடன் பரிணாமக் கசடுகளும் சோ்ந்து வந்துவிட்டன, இங்கே இறை அருளைப் பற்றி அருளியுள்ள வாசகம் இந்த இணைய தளத்தின் வாயில் பக்கத்தில்(Home page)http://www.prosperspiritually.com/ இருந்தாலும் அதனை மீண்டும் இங்கே நினைவு படுத்திக் கொள்வோம்.

    FFC-119-நல்ல பயனுள்ள

     என்று இறைஅருள் பெறுவது பற்றி அருளியுள்ளார் ரிஷிகளில் பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள். வெட்டவெளியாகியப் பிரம்மத்தை வெளிச்சமாக்கி விட்டார் பிரம்ம ரிஷி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இக்காலப் பிரம்ம ரிஷியின் அருட் கூற்றைக் கூர்ந்து நோக்குவோம். யாருக்கு இறையருள் கிடைக்கும் என்கின்ற வினாவை எழுப்பிச் சிந்திப்போம்.

    அறச்செயல்கள் இருக்க வேண்டும். அறச் செயல்கள் நல்ல பயனுள்ளதாக இருக்க வேண்டும் என மிகக் கவனமாகக் கூறுகிறார் இக்காலப் பிரம்ம ரிஷி. அறம் என்றாலே ஒழுக்கம். கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்டதுதான் அறம் என்பது இக்கால பிரம்ம ரிஷியின் அறத்திற்கான வரையறை. அப்படி இருக்கும்போது அறம் என்பது நல்ல பயனுள்ளதைத்தானே கொடுக்கும்! இருப்பினும், நல்ல பயனுள்ள அறச்செயல்கள் இருக்க வேண்டும் என்கிறார் இக்காலப் பிரம்ம ரிஷி அவர்கள்.

    இரண்டாவதாக அதற்கேற்ற எண்ணங்கள் இருக்க வேண்டும் என்கிறார். எண்ணம்தான் எல்லா செயல்களுக்கும் வித்து. எனவே நல்லபயனுள்ள அறச்செயல்களும் அதற்கேற்ற எண்ணங்களும் இருப்பவைரைச்சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் என்கிறார். அருட் பேராற்றல் என்றும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் “லும்” என்று சேர்த்து  ‘அருட்பேராற்றலும்’ என்று கூறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். இது இறை அருளில்லையா? இத்தகைய தன்மையுடைய அருளைத் தவிர வேறு என்ன இறைஅருள் வேண்டும் மனிதனுக்கு? என்னவெல்லாம் தருகின்றது இக்கால பிரம்ம ரிஷி கூறும் இறையருள்.

    FFC-119-முதலில் காப்பளிக்கின்றது

     

    வேறு என்ன வேண்டும் இந்த இறை அருளினால்? மனிதப் பிறவியின் பயன் இறையுணர்வாயிற்றே, அதனை இந்த இறை அருள் தரவில்லையே என ஐயம் உள்ளதா? ஏன் இறையுணர்வைத் தரவில்லை இந்த இறை அருள்? இறையுணர்வு என்பது என்ன? இக்கால பிரம்ம ரிஷி அவர்கள் கூறும் இறையுணர்விற்கான வரையறையை நினைவில் கொண்டு வந்தால் இந்த ஐயம் தீர்ந்துவிடும்.

    “அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகமையே இறையுணர்வு” என்கிறாரே நம் இக்கால பிரம்ம ரிஷி அவர்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறையருளில் அவர் கூறும் இறையுணர்வு கிடைக்கவில்லையா? நல்ல பயனுள்ள அறச்செயல்கள் என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்.

    சரி. உலகியல் வாழ்க்கைக்கு என்ன தரும் இந்த இறையருள் என ஐயம் உள்ளதா? இந்த ஐந்தையும் வைத்து உலகியல் வாழ்க்கை நடத்த முடியாதா? செல்வம் அளிக்கவில்லையே இவர் கூறும் இறை அருள் என்று நினைக்கீறீர்களா?! உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியதை இந்த இறை அருள் தரவில்லையே என நினைக்க வேண்டாம். காப்பு, வெற்றி, மகிழ்ச்சி, நிறைவு ஆகியவைகளெல்லாம் உலகியல் வாழ்க்கைக்குத் தேவையில்லையா? செல்வம் வேண்டுமானால் உழைக்க வேண்டும். அங்கே இக்காலப் பிரம்ம ரிஷி கூறும் இறையருள் வெற்றியைத்தந்தால் நிறைசெல்வம் வந்துவிடுகின்றது. உலகியல் வாழ்க்கையில் கடைசிவரை இன்னும் இன்னும் வேண்டும் என அலைகின்ற மனதிற்கு நிறைவைக் கொடுக்குமே அது இறை அருள் இல்லையா? நிறைமனமும் இறைமனமும் ஒன்றுதானே! அடுத்த அறிவிற்கு விருந்திற்கு 20.09.2015 ஞாயிறன்று சந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

  • சிந்திக்க வினாக்கள்-107

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

     

    14-09-2015 – திங்கள்

    வெளிச்சத்திலிருந்து இருட்டறைக்குள் சென்றால் பார்வை தெரிவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்வதற்கு காரணம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் செல்வம்

  • FFC – 118-இறை அருள் பெற…….

     

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற…….

    FFC – 118

    13-09-2015–ஞாயிறு

     

    கடந்த இரண்டு அறிவிற்கு விருந்தில் இறை அருள் பெறுவது பற்றி சிந்தித்து வருகிறோம். நுண்மான் நுழைபுலன் மற்றும் பரிணாமத்தில் அறத்தின் தோற்றம் பற்றியும் சிந்தித்து வருகிறோம். இன்று மனத்தூய்மை பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

    நிறுவனங்களில் பல ஊழியா்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்குப் பிறருடைய புகழை தன்னுடையதாக்கிக் கொள்ளும் எண்ணம் எங்கிருந்து வந்தது? பிறர் வளம் பறித்தலாகிய விலங்கினப் பண்பிலிருந்து வந்தது. கொலை செய்வதுதான் விலங்கினப் பண்பு என்பது கிடையாது. பிறருக்குரியதைத் தான் அபகரிப்பது கூட பிறர் வளம் பறித்தலாகிய விலங்கினப் பண்பிலிருந்துதான் வந்துள்ளது, மகரிஷி அவர்கள் காந்த தத்துவம் என்கின்ற நூலில், மனத்தூய்மை என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியின் எட்டு வரிகளைில் முதல் மூன்று வரிகளைக் கவனிப்போம்.

    FFC-118-பொருள் புகழ்

     

    என்கிறார் மகரிஷி அவர்கள்.

    பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் ஆகியவைகளைக் கவர்ந்து கொள்ளும் ஆசை பெருகியதற்கானக் காரணம் மனிதருக்குள் பிறவி தோறும் சேர்ந்து, சேர்ந்து மூட்டையாக வந்திருக்கின்ற, சஞ்சித வினைகளாக வந்திருக்கும் விலங்கினப் பதிவுகளாகிய பறித்துண்டு வாழும் தன்மைதான் என்கிறார். ஆகவே இறை அருள் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை ஆராய்வோம்.

    பொதுவாக எதற்காக இறைவழிபாடு செய்யப்படுகின்றது?

    இறைவன் தனக்குத் தேவையானவைகளைக் கொடுக்கிறான் என்பதற்காக, நன்றி உணர்வாக இறைவழிபாடு செய்யப்படுகின்றது. இறைவனிடம் வேண்டுதல் வைத்து இறைவழிபாடு நடத்தப்படுகின்றது. வேண்டுதல் நிறைவேறும்போது காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன.

    ஆனால் இணக்கத்துடன் கூடிய இறைவழிபாடு நடப்பதில்லை.

    இணக்கத்துடன் என்றால் யாரிடம் இணக்கம் வேண்டும்? இறையுடன் இணக்கம் வேண்டும். அன்பும் கருணையுமான இறையுடன் இணக்கம் என்பது மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் அன்பும் கருணையுமாக இருக்க வேண்டும்.  அதுவேதான் பேரிறைக்கு(இறைக்கு) இணக்கமான வழிபாடாகும் என்பதனைச் சிந்தித்துப்பார்த்து செயல்படவேண்டும்.
    பக்திமான்கள் இறையிடம் அருளை வேண்டுகின்றனர். மற்றவர்கள் அருளைத்தவிர மற்றவைகளை வேண்டுகின்றனா்? அருள் என்றால் இறைவனின் கருணை என்று பொருள். கருணை என்றால் சிலைவடிவிலே இறையை வணங்கும் பக்திமான்கள் இறைவனின் நேரிடைத் தரிசனத்திற்காக இறை அருளை வேண்டுகின்றனா்.
    அருள் என்றால் உயிர்களுக்கு இரங்கும் பண்பு என்று பொருள். துன்பம் முதலியவற்றைத் தீர்க்க வல்ல இறைவனின் அருள் என்று பொருள். அருள் என்பது இறைவன் கருணையுடன் தருதல். எப்போது இறைவன் தருவான்? “செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்றிருக்கும் போது, மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவினைத் தருவான். செயல் இல்லாமல் விளைவு இல்லை. ஆகவே மனிதனின் நல்ல செயல்களுக்கு உடனேயும் அல்லது காலத்தாலும் விளைவைத் தருவான். இறையாகிய பிற உயிர்களிடம் ஒருவன் அன்பும் கருணையுமில்லாத போது, இவனுக்கு எவ்வாறு இறையிடமிருந்து, இவனுடைய செயல்களுக்கான விளைவுகளாக அன்பும் கருணையும்(அருள்) வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்? இங்கே மகரிஷி அவா்களின் வினாவினைக் கவனிப்போம்.

     

    FFC-118-சொல்லெங்கே செயலெங்கே

    என வினவுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எப்போது நல்ல செயல்கள் மனிதனிடமிருந்து வெளிப்படும்? மனிதனின் அறிவு பரிணாமக் கசடுகளுடன் இருக்கும் வரை முழுவதுமாக நல்லசெயல்கள் வெளிவராது. தங்கம் என்றால் எப்போதுமே பிரகாசிக்க வேண்டும். சில நேரங்களில் பிராகசிப்பது, சில நேரங்களில் மங்கலாக இருப்பது என்றிருக்காது. அதுபோல் எப்போதும் மனிதனிடமிருந்து நல்ல செயல்கள் வெளிவரவேண்டும். இது இயலாத காரியம் என நினைத்தால்(practically/ideally impossible), தீய செயல்கள் செய்தால் தீய விளைவுகள் துன்பமாகவும் வரும். ஏற்கனவே ஊழின் காரணமாக துன்பங்களை அனுபவிப்பவா்களாவது இதனைக் கருத்தில் கொண்டு விழிப்போடு செயல்படுவார்களேயானால், அப்போது அவா்களுக்கு இறை அருள் வாயில் (ஞானம் பெறுவதற்கான) திறந்து விட்டது என்று பொருள்.

    இறையே மனித அறிவாக வந்தபோது அதனுடன் பரிணாமத்தால் வந்த விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பரித்துண்ணல் என்கின்ற ஒரு கசடு, பல கசடுகளாக மாறியுள்ளது. எனவே தான் ஸ்கந்த குரு கவசத்தில் அதனை இயற்றிய மகான் “காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்” என அருளியுள்ளார்.

    பரிணாமக் கசடுகளான தன்முனைப்பு, தான், தனது என்கின்ற மாயக்கருத்து, அதனால் உருவான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை. வஞ்சம் ஆகியக் கசடுகள் மனிதனிடம் உருவாகிவிட்டன. இதனால் பொய், களவு, சூது, கற்பழிப்பு, கொலை ஆகிய ஐந்து பழிச் செயல்கள் உருவாகிவிட்டன. பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி புண்ணாகிய மனம் எவ்வாறு இறை அருளைப் பெறமுடியும்? இறையையே தன்னுடைய அறிவாக மனிதன் வைத்துக் கொண்டு இறை அருள் இல்லாமல் இறைக்காப்பு இல்லாமல் ஏன் துன்பப்படவேண்டும்? ஆகவே மனிதன் தன்னுடைய பரிணாமக் கசடுகளை நீக்கி அறிவை முழுமைப்படுத்த வேண்டும்(to perfect the consciousness). அடுத்த விருந்தில் (16-09-2015-புதன்) அறஉணர்வே இறை உணர்வு என்பதனை அறிய இருக்கிறோம்.