May 2022

Monthly Archives

  • சிந்திக்க கவிகள்-13

          வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்-13

    05-05-2022-வியாழன்

    குறிப்பு: முதல் முறையாக சத்சங்கத்தின் இப்பகுதியில்  கலந்துகொள்பவர்கள் கவியினால் பயன் பெற மேற்கண்ட புதுயுக்தியை படித்துவிட்டு வரவும். ‘கவியினால் பயன் பெற’  என்பது  கவியினால் சிந்தித்தல் என்பதாகும்.    வாழ்க வளமுடன் அன்பர்களே! பயிற்சிக்கு முன்னர் கவியினால் பயன் பெற புதுயுக்தியை படித்துவிட்டீர்களா அன்பர்களே!

    இயல்பும் உயர்வும்

    அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு

    அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு”

    . . .  வேதாத்திரி மகரிஷி

    . . .  (மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து-22-12-1953)

    பயிற்சி:

    1. என்ன கூற வருகிறார் அறிவிற்கு அறிவியல் தந்த அருட்தந்தை அவர்கள்?
    2. இயல்பு என்றால் என்ன?
    3. உயர்வு என்றால் என்ன?
    4. அறிவு என்பது என்ன?
    5. உணர்ச்சி/உணர்வு என்பது என்ன?
    6. இயல்பு இயல்பாகவே இருந்துவிட்டால் என்ன நேரிடும்?
    7. அறிவு உயர்ந்ததா, உணர்வு உயர்ந்ததா?
    8. ஏன் அறிவு உணர்ச்சியை வெல்ல வேண்டும்?
    9. அறிவு உணர்ச்சியை வெல்வதற்காகத்தான் அகத்தாய்வு பயிற்சியா?
    10. அகத்தாய்வு பயிற்சி எவ்வாறு அறிவு, உணர்ச்சியை வெல்ல வைக்கின்றது?
    11. “மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்“ என உலகநாதா் உலகநீதியில் கூறுவது அறிவு உணர்ச்சியை வெல்வதற்காகவா?
    12. அறிவு உணர்ச்சியை வெல்வதற்கும், அளவும்-முறையும் (Limit and Method) காப்பதற்கும் தொடர்பு உள்ளதா?
    13. பொறிவாயில் ஐந்தவித்தான் என்பதற்கும் அறிவு உணர்ச்சியை வெல்வதற்கும் தொடர்பு உள்ளதா?
    14. புலன்களின் வலையில் சிக்காமல் (பொறிtrap) இருப்பதற்கும் அறிவு உணர்ச்சியை வெல்வதற்கும் தொடர்பு உள்ளதா?  வாழ்க வளமுடன்!

    வாழ்க திருவேதாத்திரியம்!  திருவேதாத்திரியம்! 

    வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!


  • சிந்திக்க அமுத மொழிகள்-334

    வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-334

                                                                                                         03-05-2022-செவ்வாய்

     

     

    அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய மூன்று வகையிலும் அறிவு வறுமை நிலவுகிறது.                                        

                                                      . . . . .    வேதாத்திரி மகரிஷி

     பயிற்சி:

    1. என்ன கூற வருகின்றார் அறிவின் முதல் அறிவியளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    2. வறுமை என்பது என்ன?

    3. அடிப்படை பொருளாதார வசதி இல்லாத நிலைமையாகிய வறுமையையா இங்கே குறிப்பிடுகிறார் சிந்தனையாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    4. வறுமைக்கு எதிர்ச்சொல் என்ன?

    5. அறிவின்வறுமைக்கு  எதிர்ச்சொல்லாக   அறிவுச்செல்வம் என்பதாக வைத்துக்கொள்ளலாமா?

    6. அப்படியானால் அறிவுச்செல்வம் என்பது என்ன?

    7. அறிவுச்செல்வமும் இறையருளும் ஒன்றா?

    8. இறையருளை வேண்டாதவர்தான் யார் இருப்பர்? அவ்வாறிருக்கும்போது அறிவே இறையாக உள்ளதால் இறையருளை விரும்புபவா் அறிவின் வறுமையிலிருந்து விடுபடவேண்டுமல்லவா?

    9. திருவள்ளுவர் கூறும் பத்து உடைமைகள் என்னென்ன?

    10.அறிவுச்செல்வமும், நாணமுடைமை உள்ளபட திருவள்ளுவர் கண்டுபிடித்த பத்து உடைமைகளும்(அதிகாரங்கள்)  ஒன்றா?

    11. இறையருளை வேண்டுபவர் அறியாமையிலும், அலட்சியத்திலும், உணர்ச்சிவயத்திலும் உழன்றுகொண்டிருந்தால் இறையருள் எப்போது கிட்டுவது?

    12. அறிவின் உயர்வு(அறிவின்மேன்மை) உள்பட மனிதனுக்கு அவசியமான ஏழுவித சம்பத்துக்களில் மனிதர்களி்டம் காணப்படும்  வேறுபாடுகளுக்கான காரணிகள்  பதினான்கு  இருக்கும்போது(உலக சமாதான நூல் கவி எண். 18) அறிவின் வறுமையான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவற்றிலிருந்து மனிதகுலம் விடுபட என்ன செய்ய வேண்டும்? எல்லோருக்கும் அது சாத்தியமா?  ஐயமில்லை! எல்லோருக்கும் எல்லாம் வேண்டும். ஐயமா?  ஐயமில்லை! எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்.  ஜயமே!!! 

    13. அறிவிற்கான இயல் ஏற்படுத்தியுள்ள அறிவை அறிந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் தீர்வு என்ன?

    14. அறியாமை நீங்க வழி சொல்லப்பட்டிருக்கின்றதா திருவேதாத்திரியத்தில்?

    15. அலட்சியம் நீங்க வழி சொல்லப்பட்டிருக்கின்றதா திருவேதாத்திரியத்தில்?

    16. உணர்ச்சிவயம் நீங்க வழி சொல்லப்பட்டிருக்கின்றதா திருவேதாத்திரியத்தில்?

    17. இச்சிந்தனைக்கு இவ்வளவு கேள்விகள் அவசியமா?

    18. அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால் அது தன்னை அறிந்து முடிக்கும் வரையில் அமைதி பெறாது என்று மகரிஷி அவர்கள் கூறுகின்றாரே,  அந்த வகையில் சேர்ந்ததா இவ்வளவு கேள்விகளும்?!

    19. அறிவு தன்னை அறிவது என்பது என்ன?

    20. அறிவின் மூலத்தை அறிவது தன்னை அறிவதாகுமா?

    21. அறிவின் மூலம் எது என்கிறார் திருவள்ளுவர்?

    22. மனவளக்கலைஞர்கள் ஆரம்பநிலையில் உள்ளவர்கள் தெளிவு பெற இவ்வளவு கேள்விகளுக்கும் விடைகாணலாமன்றோ?!

    23. இவைகள் மட்டும்தான் கேள்விகளா?

    இன்னும் ஏதேனும் கேள்விகள் இருப்பின் அவற்றையும்  எழுப்பி விடைகாண வேதாத்திரி மகரிஷி அவர்களின் காப்பு இருந்துகொண்டே இருக்கும். 

    அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற அன்பர்களை அழைக்கின்றாரே பேரின்பாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எது தெய்வம், யார் தெய்வம் என அறிந்துகொள்ள வேண்டாமா?! வாருங்கள் அன்பர்களே அறிவை அறிந்து இன்புறுவோம்.

    மகரிஷி அவர்களின் அழைப்பில் உறுதி இருப்பதைக் கவனிப்போம்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                 வளர்க அறிவுச் செல்வம்!!