May 2022

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்-335 (994th Posting)

    வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-335  (994th Posting)

                

        22-05-2022 — ஞாயிறு

     அறிவு வளர்ச்சி

    மனிதனுடைய மகத்துவத்தை அவனே அறிந்துகொண்டு மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உலகமுழுதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.”

                                                          . . . வேதாத்திரி மகரிஷி.

    பயிற்சி—

    1. மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை தற்போது அறிந்துகொள்ளவில்லை என்கிறாரா மகரிஷி அவர்கள்?
    2. ந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார்?
    3. மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை அறியாததுதான் இன்று மனிதகுலம் படும் எல்லாத்துன்பங்களுக்கும் காரணமா?
    4. மனிதனின் மகத்துவம் பற்றி மகரிஷி அவர்கள் ஏதேனும் கவிகளின் வாயிலாகத் தெரிவித்துள்ளாரா? ஞா.க. கவிகள் [எண் 290(1955) மற்றும் 297(03-01-1959)] என்ன கூறுகின்றன?
    5. முன்னாள் ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை-Evolution is  still incomplete) என்று கூறியுள்ளதையே மகரிஷி அவர்கள் ’மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை தற்போது அறியவில்லை’ என்கிறாரா? 
    6. ஆதிமனிதனிலிருந்து கருத்தொடராக வந்துள்ள இன்றைய மனிதகுலம் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் தன்னுடைய மகத்துவம் தெரியாமலா இருக்கின்றது?
    7. பல்லாயிரம் ஆண்டுகளாக தன் மகத்துவத்தை உணராத மனிதகுலம் தன் மகத்துவத்தை உணர்கின்ற காலம் அருகிலேயே உள்ளது என்பது ஆச்சரியத்தை அல்லவா தருகின்றது? எப்படி அவருக்கு அந்த வருங்கால உணர்தல் சாத்தியமாகின்றது? நமக்கு அதுபோன்ற வருங்கால உணர்தல் திறன் இல்லாமல்தானே உள்ளது! எப்போது வரும்?
    8. மனிதனாக வாழ்கின்ற சூழ்நிலைகள் விரைவிலேயே உருவாகிவிடும் என்றால், தற்போது மனிதன் எவ்வாறு வாழ்கின்றான் என்கிறார் மகரிஷி அவர்கள்?
    9. விரைவிலேயே உருவாகிவிடும் என்பது வருங்கால உணர்தல் என்பதுதானே? வருங்காலத்தைப்பற்றி அறிஞர்கள் கூறும் போது இரண்டுவிதமாகக்  கூறலாம்? ஒன்று  நல்ல காலம் விரைவில் வரவேண்டும் என்று தன்விருப்பத்தைக் கூறலாம்.  மற்றொன்று வரும் என்று உறுதியாகவும் கூறலாம். நல்ல காலம்  உருவாகிவிடும் என்பது திண்ணம் என்று கூறியுள்ளதால் அந்த நல்ல காலம் வந்துவிடும் என்று றுதியாகத்தான்(positively) கூறுகிறார் அல்லவா?
    10. இவ்வாறு எதன் அடிப்படையில் றுதியாகக் கூறமுடிகின்றது மகரிஷி அவர்களால்? 
    11. *ஒன்றுமிலா ஒன்றிலிருந்து ஆரம்பித்த இயற்கை/இறை தனது தன்மாற்றப் பயணத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால்தான் மனிதகுலம் தோன்றியுள்ளது.  தன்மாற்றமாக இருப்பதால்(தானே மாறியுள்ளதால்) இயற்கைக்கு /இறைக்குள்ள மகத்துவம் மனிதனுக்கும் உண்டல்லவா?  அம்மனிதனுக்கும் தெரியுமல்லவா? ஆகவே அதனை வைத்து உறுதியாகக் கூறுகிறாரா?(* மனித புலனறிவிற்கு) 
    12. மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படியிருக்கும்போது இத்தனை நாட்களாக மனிதன் தன் மகத்துவத்தை அறியாத நிலை நிலவும்போது விரைவில் மகத்துவத்தை உணரும் நிலை உருவாகிவிடுமா என்கின்ற ஐயமல்லவா ஏற்படுகின்றது! பல்லாயிரம் ஆண்டுகளில் உருவாகாத அணுவியல் விஞ்ஞானம்(atomic theory) இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி இயற்கை தன் ரகசியங்களை விஞ்ஞானத்தின் மூலம் அறிவித்துவருவதுபோல் மனிதனும் தன் மகத்துவத்தை அறிந்து கொள்ளும் நிலை வெகுவிரைவில் உருவாகும் என்கிறாரா?
    13. இயற்கையில் பல்லாயிரம் ரகசியங்கள் உள்ளன.   ஆனால் அவற்றையெல்லாம் மனிதன் குறுகிய ஆயுட்காலத்தில் தனது அறிவால் அறியமுடியாது என்றாலும்  மனிதகுல வாழ்வு சிறப்புற எதனை அறியவேண்டுமோ,  அதாவது இயற்கை/இறை தன்னுடை மாற்றத்தை ஆதிநிலையிலிருந்து தான் அசைந்ததிலிருந்து  ஆரம்பித்து படிப்படியாக விளக்கி ஆறாம் அறிவுடைய மனிதன் வரை வேதாத்திரி மகரிஷி அவர்களால் மூலம் விளக்கி,   மனிதன் தன் மகத்துவத்தை அறிந்துகொள்ளும் சூழ்நிலைகள் விரைவில் உருவாகிவிடும் என்பதனையும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாகவே தெரிவிக்கின்றதா?
    14. மேலும் புலி மானை அடித்துக் கொல்லும் உதாரணத்தை எடுத்துக்கொண்டு சிந்திப்போமா அன்பர்களே?! Discovery Channel-ல் புலி மானைத் துரத்திப் பிடிக்கும் காட்சிகளைக் கண்ணுறுபவர்களின் நெஞ்சங்கள் பதைபதைக்கும். அதற்காக புலிகளெல்லாம் இனி மான்களை வேட்டையாடக்கூடாது, வருங்காலங்களில் புல்லை மட்டுமே தின்னவேண்டும் என்று  எதிர்பார்ப்பது போலவா உள்ளது மகரிஷி அவர்கள் கூறுவது? அல்லவே! மனிதன் தன் மகத்துவத்தை உணர்ந்து மனிதனாக வாழ்வது நடைமுறையில் சாத்தியம் தானே!  என்ன அன்பர்களே?
    15.  மனிதன் தன்  மகத்துவத்தை அறிகின்ற சூழ்நிலை விரைவிலேயே உருவாகிவிடும் காலம் எந்த நியதியின் ஊக்கத்தால்  நடக்கும்?
    16.  இனி நம் பொறுப்புகளும் கடமைகளும்# என்னென்ன?   (# இயற்கை ஐந்தறிவு வரை அதுவே அயரா விடாமுயற்சி செய்து தனது தன்மாற்றத் தொழிற்சாலையில்(Transformation industry) தானே ஒரே முதலாளியாக (sole proprietor) இருந்து நடத்தி வந்தது. ஆதி மனிதனாக வந்த பிறகு, ஆறாம் அறிவு வளர்ந்த போது மனிதனும், இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்டான்(share holder). மனிதன் பங்குதாரராகிவிட்டாலும் இயற்கை/இறையேதான் செயல் இயக்குனா் (Ever Managing Director) என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையின் மனித –- தன்மாற்றத் தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்ட பிறகு, அந்த தொழிற்சாலையின் இலாபத்திற்கும் (வாழ்க்கையில் மகிழ்ச்சி) நஷ்டத்திற்கும் (துன்பம்) பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

        இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில், கடைசியான மனித உற்பத்தியில், இன்னமும் ஒழுங்கு படுத்தப்பட்ட உற்பத்தி regular production ஆரம்பிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை – Evolution is still incomplete” என்கிறார். ஆதிமனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும், இன்னமும், இயற்கையின் தன்மாற்ற மனித உற்பத்தியில் மாதிரி முறையில்தான் (prototype) உற்பத்தி (மகான்கள், அறிஞா்கள்) நடை பெற்று வருகின்றது. ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எண்ணாமல் பரிணாம வளர்ச்சி இல்லை. ஆகவே மனவளக்கலைஞர்களின் ஆதங்க எண்ணங்கள் குருபிரானின் புனிதஎண்ணங்களோடு இணைந்து வலுப்பெற்றால்தான் மனிதனுடைய மகத்துவத்தை அவனே அறிந்துகொண்டு மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உலகம் முழுதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்கின்ற  மகரிஷி அவர்களின் புனித எண்ணங்கள் நிறைவேறி மனிதகுலம் தனது பூர்வீக சொத்தான (hereditary wealth) அமைதியை அனுபவித்து இன்புற்றிருக்கும்! வாழ்க வளமுடன்!)

    மகரிஷி அவர்களின் அழைப்பில் உறுதி இருப்பதைக் கவனிப்போம்.

    வாழ்க அறிவுச் செல்வம்!                 வளர்க அறிவுச் செல்வம்!!


     

     

  • சிந்திக்க வினாக்கள்-331-வருங்காலம் உணர்தல்

    வாழ்க மனித அறிவு!                                 வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-331

    15-05-2022-ஞாயிறு        

    வருங்காலம் உணர்தல்

                                                               

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 331  – (993rd Posting)

    எந்த அடிப்படையில்,  வருங்காலத்தை உணர்தல் ஒரு வியப்பிற்கான செயலே அல்ல என மானுடத்தை உள்ளடக்கிய இயற்கைக்கு  இயல் ஏற்படுத்தித் தந்துள்ள  வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) வியப்பில்லை என்றால் வருங்காலம் உணர்தல் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் அல்லவா? ESP(Extra Sensory Perception) இல்லைதானே!?

    2) சாதாரண நிகழ்ச்சி என்றால் எல்லோருக்கும் இது சாத்தியம்தானே!?

    3) எல்லோருக்கும் சாத்தியமில்லை எனில் யார் யாருக்கு  வருங்கால உணர்தல் சாத்தியம்?

    4) வருங்கால உணர்தல் நிகழ்வதற்கு  ஏதாவது நிபந்தனைகள் உண்டா?

    5) எப்படி அவர்களுக்கு மட்டும் சாத்தியமாகின்றது?

    6) அவர்கள்  தனிப்பிறவிகளா?

    7) வருங்காலம் உணர்தல் ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று  எந்த அடிப்படையில் மகரிஷி அவர்களால் மட்டுமே கூறுமுடிகின்றது?  பால பருவத்திலேயே இயற்கை/இறை நான்கு மகோன்னத கேள்விகளை*   அவருள் எழுப்பியதல்லவா?

    (* மகானாக்கிய  மகோன்னத கேள்விகள்:  1. இன்பம், துன்பம் என்பது என்ன? அவைகள் எவ்வாறு வருகின்றன? 2. உயிர் என்பது என்ன? 3. கடவுள் என்பவர் யார்? அவர் ஏன் இந்த பிரபஞ்சத்தைப்(universe) படைத்தார்? 4.வறுமை ஏன் வருகின்றது?)

    8) மனவளக்கலைஞர்களுக்கு வருங்காலம் உணர்தல் என்பது சாத்தியமா? எப்படி? எவ்வாறு?

    9) மகரிஷி அவர்கள் தான் அனுபவித்ததைத்தான் சமுதாயத்திற்குத்  தெரிவிப்பார் என்பதால் வருங்கால உணர்தலாக  மகரிஷி அவர்கள்  கூறியுள்ளது என்னென்ன?

    10)  இதுவரை அவர் கூறியது என்னென்ன நடந்துள்ளன?

    11) என்னென்ன நடக்க வரிசையில் காத்திருக்கின்றன?

    12) “ஓருலக ஆட்சி வரும் என்று நான் நினைத்துவிட்டேன். ஓர் உலக ஆட்சி வந்தே தீரும்”   என்று மகரிஷி அவர்கள் கூறியுள்ளது வருங்கால உணர்தல் தானே?!

    13) ‘வருங்காலம் உணர்தல்’பற்றி ஒருவருக்கு மட்டுமேவா பொறுப்பு?  மற்றவர்களின் பொறுப்பு என்ன அதில் உள்ளது?

    14) வருங்கால உணர்தல் யாரால் நிகழ்கின்றது? இயற்கையால்/இறையால் நிகழ்கின்றதா அல்லது மனிதனால் நிகழ்கின்றதா?

    15) வருங்கால உணர்தல் எப்போது, எவ்வாறாக நிகழ்கின்றது?

    16)வருங்கால உணர்தல் என்பது என்ன? இன்றைய சூழலில் வருங்காலம் உணர்தல் பற்றிய சிந்தனை எந்த வகையில் மனிதகுலத்திற்கு  அவசியமாகின்றது? 

    17) வருங்கால உணர்தல் ஓர் அறிவியல் அடிப்படையில் தானே உள்ளது?

    18)’எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’  என்கின்ற பரிணாம அறிவியலுக்கும், வருங்காலம் உணர்தல் என்கின்ற அறிவியலுக்கும் தொடர்புள்ளதா? என்ன தொடர்பு அது?

    19) ஒருவர் வருங்காலம் பற்றி அறிவித்ததில் மற்றவர்கள் பங்கு என்ன?

    20) குறிப்பாக  மனவளக்கலைஞர்களின் பொறுப்புகளும், கடமைகளும் என்னென்ன?

     

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                   வளர்க அறிவுச்   செல்வம்!!


     

  • சிந்திக்க வினாக்கள்-330

    வாழ்க மனித அறிவு!                             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-330

                                                                                    06-05-2022-வெள்ளி

    இயற்கை/இறை மனவளக்கலைஞர்களை தடுத்தாட்கொள்ளல்

         

    பிரதானவினா(Main Question)

    ஒவ்வொரு மனிதனின் அடித்தளத்தில் இருப்பது அன்பும் கருணையும் என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். 

    அடைத்திருக்கும் அழுக்குகள் நீங்கி எப்போது அந்த அன்பும், கருணையும் பீறிட்டு மேலோங்குகின்றன என்கிறார் மகரிஷி அவர்கள்?

    துணைக் கேள்விகள்(Sub questions)

    1. என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2. ஒவ்வொரு மனிதனும் சமுதாயப் பிராணியாகத்தான்(social being) வாழவேண்டியிருப்பதால் துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்கு பிணக்கில்லா இணைக்கத்தை ஏற்படுத்தும் ஒவ்வொருவரிடமுள்ள அன்பும் கருணையும் மேலோங்கித்தானே ஆக வேண்டும்?!
    3. ஒவ்வொரு மனிதனுமே மற்றவரிடம் அன்பையும் கருணையையும் தானே எதிர்பார்க்கின்றான்.  அப்படியிருக்கும்போது தான்   எதனை மற்றவரிடம் எதிர்பார்க்கின்றானோ  அதனைத் தானே இவனும் மற்றவருக்குத் தரவேண்டுமல்லவா? இது இயற்கை நியதிதானே?
    4. அடித்தளம் என்றால் என்ன?
    5. ஒவ்வொருவரிடமும் அடித்தளத்தில் அன்பும், கருணையும் உள்ளது என்பது எந்த அடிப்படையில் அமைந்துள்ளது?
    6. பீறிட்டு’ என்றால் என்ன?
    7. மேலோங்குதல்’ என்றால் என்ன?
    8. சஞ்சித அழுக்கு மூட்டையில் விலங்கினப்பண்பையும் இருப்பாகக் கொண்டு பிறந்த மனிதனிடம் அன்பும் கருணையும் எப்போது பீறிட்டு மேலோங்கும் என்கிறார்?
    9. ‘அறிந்தது சிவம்; மலர்ந்தது அன்பு’  என்கின்ற ஆன்றோர் மொழியைப்  பிரதிபலிக்கும் புனித நிகழ்வல்லவா அன்பும் கருணையும் பீறிட்டு மேலோங்குவது?
    10. இந்நிலை மேலோங்குவதற்கு, தவம், தற்சோதனை பயிற்சிகள் தவிர வேறு ஏதேனும் பிரத்யேகப் பயிற்சி/பாடம் உள்ளனவா? அந்த பயிற்சிக்கு/பாடத்திற்கு  என்ன பெயர் வைத்துள்ளார்?
    11. தனக்கு வாழ்வில் ஏற்பட்ட எந்த இரண்டு வாழ்க்கை நிகழ்ச்சிகள் அந்தப் பாடத்தை  மனவளக்கலையில் அமைக்கவைத்தது?
    12. அந்த   வாழ்க்கை நிகழ்ச்சிகளால்   கண்டுபிடிக்கப்பட்ட  ‘உணர்ச்சி அறிவை வெல்வது இயல்பு’ எனும் மானுட இயல்பை  ‘அறிவால் உணர்ச்சியை   வெல்வது உயர்வு’ என்கின்ற முழுமனிதப்பண்பாக மாற்றியமைக்க, முயன்று பயிற்சி செய்து வெற்றியடைந்து  நற்பேறு பெற்றதன்  விளைவாகப் பெற்ற அந்த அனுபவமே மனவளக்கலையில்  பாடமாகியதன் பெயர் என்ன?
    13. அழுக்குச்சாமி, பாரதியாரிடம் வந்து தான் சுமந்துவந்த அழுக்கு மூட்டையை இறக்கி வைத்துவிட்டு  “நான் என் அழுக்கு மூட்டையை இறக்கிவிட்டேன்.  நீ எப்போது உன் அழுக்கு மூட்டையை இறக்கிவைக்கப்போகிறாய்?” என்று வினவிய  நிகழ்ச்சியின் வாயிலாக இறையருள் பாரதியாரை தடுத்தாட்கொண்டதுபோல் அல்லவா உள்ளது இறைநிலை வேதாத்திரி மகரிஷி அவர்களை தூதுவராக்கி மனவளக்கலைஞர்களை ஒட்டுமொத்தமாக(enmass)  தடுத்தாட்கொள்வது உள்ளது மகரிஷிஅவர்களின் இக்கூற்று?
    வாழ்க  அறிவுச்செல்வம்!                                              வளர்க அறிவுச் செல்வம்!!