May 2020

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 298(241)

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 298(241)

     

    24-05-2020 — ஞாயிறு

    தோணியில் ஏறிக்கொள்; வாழ்வாகிய கடல் ஆழமானது; கடக்கக் கஷ்டமானது; சான்றோருடன்  உறைவதே அதனின்று கரையேற்றும் தோணியாகும்.”

    . . . குருநானக்

    பயிற்சி—
    1) அவ்வையார் இதேபோன்று கூறும் வரிகள் என்ன?
    2) திருவள்ளுவர் எந்தக் குறளில் இதுபோன்று கூறுகிறார்?
    3) இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
    4) இதுபோன்று அறவோர்களின் அறிவுரை இருந்தும் அதனை அலட்சியம் செய்த சமுதாயத்திற்கு இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகாவது செயல்படுத்தக் கூடிய அறிவுரைகள் கிடைத்துள்ளது அல்லவா? மகரிஷி அவர்களின் அறிவுநிலைக்கு உயர்ந்து நெஞ்சார வேதாத்திரியத்தைப் போற்றி வாழ்த்துவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 297(221)

    வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள் – 297(221)

    23-05-2020 — சனி

    நல்ல ஆலோசனைகளை விரும்பிக்கேட்டால் திறமைகள் அதிகரிக்கும்.”

    . . . கபீர்.

    பயிற்சி—
    1) நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்டால் திறமைகள் எவ்வாறு அதிகமாகின்றது?

    2) விரும்பிக் கேட்டால்தான் திறமைகள் அதிகமாகுமா?

    3) திறமைகள் என்றால் என்ன?  என்னென்ன திறமைகள் அதிகமாகும்?

    4) எந்த நியதியின் கீழ் இது நடைபெறுகின்றது?

    5) அவ்வைத்தாய் அருளியுள்ள ‘அறம் செய விரும்பு’ , ‘சான்றோர் இனத்திரு’, ‘ பெரியாரைத் துணைகொள்’ மற்றும் ‘மேன்மக்கள் சொல்கேள்’ என்கின்ற அமுத மொழிகளை இதனுடன் தொடர்பு படுத்தி சிந்திக்கலாமன்றோ!

    6) பொய்யாமொழிப் புலவர்   ‘பொியாரைத் துணைக்கோடல்’  பற்றி பத்து கோணங்களில் இயற்றியுள்ள பத்து குறட்பாக்களையும் இன்றைய சிந்திக்க அமுதமொழியுடன் தொடர்பு படுத்தியும் விரிவாக சிந்திக்கலாம்.

    7) நம் குருநாதர் குருவணக்கம் பாடல்கள்  வரிசையில் ‘குருவின் சேர்க்கையில்’என்கின்ற தலைப்பில் “எப்பொருளை எச்செயலை” என ஆரம்பி்க்கும் பாடலில் அருளியுள்ள வேதவாக்கினை   இன்றைய அமுதமொழியுடன் தொடர்பு படுத்தி மேலும் விரிவாக சிந்தித்து, சிந்திக்கும் ஆற்றலை மேலும், மேலும் வளர்த்துக்கொண்டு  பயன்பெறலாம்.   

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க அமுத மொழிகள்- 296(230)

    வாழ்க மனித அறிவு!                வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 296(230)

    22-05-2020 — வெள்ளி

    நிலையாமையைப் பற்றிச் சிந்தித்தால் தற்பெருமை அழிந்துவிடும்”

    . . . புத்தர்

    பயிற்சி:
    1) இக்கூற்றிலிருந்து முதலில் அறிய வேண்டியது தற்பெருமை கொள்ளக் கூடாது என்பது. ஏன் தற்பெருமை கொள்ளக் கூடாது?
    2) தற்பெருமை கொள்வது பழக்கமாகிவிட்டதால் என்ன செய்வது?
    3) தற்பெருமை கொள்வதால் என்ன தீமைகள் வரும்?
    4) தற்பெருமைக்கும் நிலையாமையை அறிவதற்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரீதியானதா?
    5) நிலையாமையை அறிவதால் தற்பெருமை எவ்வாறு நீங்கும்? அதிலுள்ள அறிவியல் என்ன?
    6) இவ்வுண்மையைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறியுள்ளது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                   வளா்க அறிவுச் செல்வம்!!