சிந்திக்க அமுதமொழிகள்

 • சிந்திக்க அமுத மொழிகள்- 338

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 338

  19-09-2020  — சனி

   

  புகழ் கள்ளைவிடக் கொடியதாகும். கள்ளைக் குடித்தால்தான் போதை வரும். ஒருவனைப் புகழ்ந்தவுடனேயே அவன் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். புகழ் கொடிய சத்துருவாகும்.

  …. ஸ்ரீ சாந்தானந்தர்.

  பயிற்சி—
  1) இதனை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா?
  2) புகழ் பற்றிய கெடுதலை எல்லா அறிஞர்களும் கூறுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள் புகழ் பற்றிக் கூறுவதென்ன?
  3) புகழ் பற்றி அறிஞர்கள் கூறுவது அவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதா? அல்லது மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதா?
  4) புகழ் பற்றி கூறுவது அறிவு பூர்வமானதுதானா என்று கண்டுபிடிக்க முடியுமா?
  5) புகழுக்கும் பேரின்பத்திற்கும் உள்ள உறவு என்ன? விளக்க முடியுமா? விளக்கவும்.
  6) புகழில் சிக்காமல் இருக்க எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது?

  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


   

 • சிந்திக்க அமுத மொழிகள்- 337

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 337

  18-09-2020  — வெள்ளி

   

  நல்லார் இணக்கமும் அடியார்களோடு உறவாடுதலும் தெய்வத்தை உணரவேண்டும் என்கின்ற ஆர்வமும் இந்த மனிதப் பிறவிக்கு உகந்த விஷயங்கள்.

  ….ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்

  குறிப்பு:- 1)  “நல்லார் இணக்கம்” பற்றி வேறு அறிஞர்கள் சொன்னவைகளுடன் இணைத்துப் பார்க்கவும்,
                    2)  “அடியார்களோடு உறவாடுதல்” பற்றி வேறு அறிஞர்கள் சொன்னவைகளுடன் இணைத்துப் பார்க்கவும்.

  வாழ்க மனவளக்கலைச் செல்வம்!  வளர்க மனவளக்கலைச்  செல்வம்!!

  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


   

 • சிந்திக்க அமுத மொழிகள்- 336

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 336

  12-09-2020  — சனி

   

  எங்கு உனது ஆற்றலும், உலகின் தேவையும் சந்திக்கின்றனவோ அங்குதான் உனது லட்சியம் உள்ளது”.

   ….. அறிஞர் அரிஸ்டாட்டில்.

  பயிற்சி:

  1) எதனை லட்சியமாகக் கொள்வது என யோசிப்பவர்களுக்கு அறிஞர் அரிஸ்டாட்டில் கூறும் யுக்தி சரிதானே?!
  2) மனவளக்கலைஞர்களுக்கு அறிஞர் அரிஸ்டாட்டில் கூறுவதுபோல் ‘எந்த லட்சியம்’ வரவேற்பு கம்பளத்தை விரித்து காத்துக் கொண்டிருக்கின்றது?
  3) அது சரியானதுதானா?

   

  வாழ்க மனவளக்கலைச் செல்வம்!  வளர்க மனவளக்கலைச்  செல்வம்!!

  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


   

 • சிந்திக்க அமுத மொழிகள்- 335

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 335

  11-09-2020  — வெள்ளி

   

  வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

   

  மனம் போனபோக்கில் நடப்பதோ, ஆசை வயப்பட்டு எல்லாவற்றையும் அனுபவிக்கத் துடிப்பதோ, நமக்குள் இருக்கும் இன்ப வெறியை அதிகரிக்கச் செய்து விடும். தர்ம சாத்திரங்கள் சொல்லும் அறிவுரைகளைப் பின்பற்றி நம்மை நாமே கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுவோம்.”

  . . . ஸ்ரீ அரவிந்தர்.

  பயிற்சி:

  1) ஸ்ரீ அரவிந்தா் அன்று கூறியது இப்போது நடந்தேறிவருகின்றதா?எவ்வாறு?

  2) மனவளக்கலை இதனை எவ்வாறு நிறைவேற்றி வருகின்றது?

   

  வாழ்க மனவளக்கலைச் செல்வம்!  வளர்க மனவளக்கலைச்  செல்வம்!!

  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 334(71)

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 334(71)

  05-09-2020  — சனி

   

  ஒன்றை மனதில் எண்ணி அதையே சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவனது உள்ளம் அதே வழியைச் சென்று அடைந்துவிடும்.”

  …..புத்தர்.

  பயிற்சி—
  1) இவ்வுண்மையில், புத்தருடன் மகரிஷி அவர்கள் எவ்வாறு ஒன்று படுகிறார்?

  வாழ்க மனவளக்கலைச் செல்வம்!  வளர்க மனவளக்கலைச்  செல்வம்!!

  வாழ்க மனித அறிவு!!  வளர்க மனித அறிவு!!

  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 333(153)

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 333(153)

  04-09-2020  — வெள்ளி

   

  பாறையை சுமப்பதுபோல், மனதில் வஞ்சத்தை வைத்து வாழ்வது வாழ்க்கையாகாது”

  . . . வள்ளலார்.

  பயிற்சி—
  1) அறுகுணங்களில் ஒன்றான வஞ்சத்தை பாறையோடு ஒப்பிடுவதனைக் கவனிக்கவும்.
  2) ஏன் அவ்வாறு கூறுகிறார்?
  3) வள்ளலாரின் இக்கூற்று சமய சம்பந்தமானதா அல்லது அறிவுபூர்வமானதா அல்லது விஞ்ஞானபூர்வமானதா? எதனை அடிப்படையாகக் கொண்டிருந்தால் நலமாய் இருக்கும்?
  4) உங்கள் விடையினை நியாயப்படுத்தவும்.

  வாழ்க மனவளக்கலைச் செல்வம்!  வளர்க மனவளக்கலைச்  செல்வம்!!

  வாழ்க மனித அறிவு!!  வளர்க மனித அறிவு!!

  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 332

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 332

  29-08-2020  — சனி

  குறையை நிறைவாக்குதல் ஞானம்!!

   

  தன்னிடம் உள்ள குறையை  உணர்வதே ஞானம்.”

  – மகாத்மா காந்தி

  பயிற்சி:

  1. என்ன கூறுகிறார்  தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள்?
  2. i) குறையை உணர்வதே ஞானமாவிடுமா? எப்படி?        ii) அவ்வளவு எளிமையானதா ஞானம்?     iii)  தன் குறையை தானே உணர்ந்த தெளிவில்தான், அடுத்ததாக  தன்(மனிதனின்) சிறப்பிற்கு உயர தன்னைத் திருத்திக்கொண்டு நிறைவாக்கிக் கொள்ள முயல்வானல்லவா?  iv)  குறை நீங்கி நிறைவு மலரும் தெளிவில்தான்  ஞானம் பிறக்குமல்லவா?  
  3. புத்தர் போன்ற அருளாளர்கள் கடும் தவம் புரிந்து பெற்ற ஞானமா மகாத்மா காந்தி கூறும் ஞானம்?  இரண்டும் ஒன்றா?
  4. இதில் தெளிவு பெற வேண்டுமெனில் ஞானம் என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?
  5. திரு வேதாத்திரியம் ஞானம் பற்றி கூறி உள்ளது என்ன?
  6. திரு வேதாத்திரிய விளக்கத்தை வைத்து மகாத்மா காந்தி கூறும் ஞானமும் திரு வேதாத்திரியம் கூறும் ஞானமும் ஒன்றா என்று அறியலாம் அல்லவா?
  7. மனவளக் கலையின் நான்கு  செயல் முறைகளில் ஒன்றான தற்சோதனை என்பது என்ன? இப்போது தற்சோதனையை எளிமையாக வரையறுக்க முடியுமா?
  8. அந்த வரையறையின்படி மகாத்மா காந்தி கூறும் ஞானமும் திரு வேதாத்திரியம் கூறும் ஞானமும் ஒன்றா என உறுதிப் படுத்தவும்!
  9. i) தன்னிடம் உள்ள குறையை உள்ளபடியே அறிந்து கொள்வது சிரமமா? ii) சிரமமெனில் எப்போது எந்த பிறவியில் தெரிந்து கொள்வது?   iii) தன்னிடம் உள்ள குறையை தானே அறிந்து கொள்வதனை எது தடுக்கின்றது? iv) தன்முனைப்பா? பிறர் தன் குறையைச் சுட்டிக்காட்டி ஏற்றுக்கொள்வதில் மனித இயல்பான தன்முனைப்பு எழலாம்? தன்முனைப்பு எழுவது சரியா?  பிறர் தன் குறையைச் சுட்டிக்காட்டும்போது  ஏற்றுக்கொண்டு  குறையை நிவர்த்தி செய்ய முயல்பவர் புத்திமிக்கவர் அல்லவா? தன் குறையை தானே உணர்ந்துகொள்வதில் தன்முனைப்பு எழ முடியுமா?  தன்முனைப்பின் விளைவு துன்பம்தானே? v) தன் குறையை அறியாதிருப்பது அறிவின் ஏழ்மையா?   vi)  அஃதாவது அறியாமையா?  vii) அலட்சியமா? viii) உணர்ச்சிவயமா?  ix)  விளைவு துயரமா? மகிழ்ச்சியா? x)  கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் கூறும் “நம் நற்பண்பிற்கும், அறிவாற்றுலுக்கும் ஏற்பத்தான் மகிழ்ச்சி இருக்கும்” என்கின்ற அமுதமொழியினை நினைவு கூறவும்.நேற்றைய(28-08-2020) சிந்திக் அமுத மொழிப் பயிற்சி.
  10. ஞானம் அடைந்தவர்களிடம் குறைகள் இருக்காதல்லவா? எனவே தன்னிடம் உள்ள குறைகளை அறிந்து அதனை சரிசெய்து கொள்வது தானே ஞானமாக இருக்க முடியுமல்லவா?

             Let Agility of Human Consciousness  improve!!

                Let us improve Agility of our Consciousness!!

  அறிவொளியை மனவளக்கலையால் பிரகாசிக்கச் செய்வோம்!!

  வாழ்க மனவளக்கலைச் செல்வம்!  வளர்க மனவளக்கலைச்  செல்வம்!!

  வாழ்க மனித அறிவு!!  வளர்க மனித அறிவு!!

  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • 28.08.2020, வெள்ளி

  அறிவிப்பு

  வாழ்க வளமுடன்.
  மென்பொருள் புதுப்பித்தலின்போது சில பதிவுகள் விடுபட்டுவிட்டன. சிரமத்திற்கு மன்னிக்கவும். 
  விடுபட்ட பதிவுகள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

 • சிந்திக்க அமுத மொழிகள்- 331

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 331

  28-08-2020  — வெள்ளி

  நற்பண்புடைய அறிவாற்றலும் மகிழ்ச்சியும்!!

   

  “நம் நற்பண்பிற்கும் அறிவாற்றலுக்கும் ஏற்பத்தான் நம் மகிழ்ச்சி இருக்கும்.”

  – அரிஸ்டாட்டில்

  பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் அறிஞர் அரிஸ்டாட்டில்?
  2. எது நற்பண்பு,  எது அறிவாற்றல் என  வரையறுக்க(define) முடியுமா?
  3. நற்பண்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உள்ள தொடர்பு என்ன?
  4. அதே போன்று அறிவாற்றலுக்கும் மகிழ்ச்சிக்கும் என்ன தொடர்பு?
  5. மனித மனம் எப்பொழுதும் அதிகமான பலனை எதிர்பார்க்கும் (Calculative) இயல்புடையதாக இருப்பதால்  மகிழ்ச்சியையும் அதிகமாகத்தானே எதிர்பார்க்கும்?
  6. அப்படியானால் நற்பண்பையும், அறிவாற்றலையும் பெருக்கிக்கொள்ள  என்ன செய்ய வேண்டும் இன்றைய மனிதகுலம்?
  7. மனவளக்கலைஞர்கள் அந்த வகையில் புண்ணியம் செய்தவர்கள்தானே? எப்படி?
  8. நற்பண்பிற்கும் அறிவாற்றலுக்கும் ஏற்பத்தான் மகிழ்ச்சி இருக்கும் என்பது ‘செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு’  என்கின்ற இயற்கை நீதியின்  அடிப்படையில்  நிகழ்கின்றதல்லவா?
  9. இயற்கையே/இறையே மனிதனிடம் அறிவாகத் திகழ்வதால் அறிவாற்றலை பெருக்கிக் கொள்வதில் இறையருளை அல்லவா  மனிதன் பெறுகிறான்?
  10. ‘நல்லவர் உள்ளம் இறைவன் இல்லம்’ என்கின்ற   ஆன்றோர் மொழிக்கிணங்க   எல்லோரிடமும் இறை வீற்றிருந்தாலும்(Indweller) நற்பண்புடைய மனிதன்   புனிதனாகவல்லவா திகழ்கின்றான்?

  வாழ்க வேதாத்திரியம்!  வளர்க வேதாத்திரியம்!!

  வாழ்க சிந்தனைச் செல்வம்! வளர்க சிந்தனை செல்வம்!!

  வாழ்க மனித அறிவு!!  வளர்க மனித அறிவு!!

   

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 324

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 324

  01-08-2020  — சனி

  ஆனந்தம் நம் உள்ளத்தில் எந்த அளவுக்கு மறைமுகமாக உண்டாகின்றதோ அந்த அளவுக்கு நாம் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் உடையவர்களாக இருக்கிறோம்.”

  -சுவாமி விவேகானந்தர்.

  பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
  2. ஆன்ம சாதனையில் ஆனந்தம் ஏன் மறைமுகமாக  ‘உண்டாகிறதோ’ எனக் கூறுகிறார்?
  3. நேரடியாக ஆனந்தம் தெரியாதா? மறைமுகமாகத் தான் இருக்குமா? மறைமுகமாக உண்டானால் எப்படி ஆன்மசாதகன் அறிந்துகொள்ள முடியும்?
  4. ஆன்ம சாதனையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு அளவுகோலா?
  5. ஆன்மசாதகனுக்கு மறைமுகமாக உண்டாகும் ஆனந்தம் தெரியவந்தால் விளக்கப்பதிவு வலிமை பெற்று வருகின்றது என்றுதானே பொருள்?
  6. பழக்கப்பதிவு வலிமை இழந்து வருகின்றது என்றுதானே பொருள்?
  7. உள்ளத்தில் ஆனந்தம் உண்டானால், அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்தில் மட்டுமே இயங்கிவந்த ஆன்ம சாதகனின் ஆன்மா, அவற்றையெல்லாம் கடந்து, பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசத்திற்கு வந்துவிட்டது என்றுதானே பொருள்?
  8. பலன் ஏதும் இல்லாமல் எந்த ஒரு செயலையும் எவ்வாறு தொடரமுடியும்? அவ்வாறிருக்க ஆத்ம சாதகனுக்கு அந்த மறைமுக ஆனந்தம்தானே பயிற்சியை தொடர்ந்து செய்வதற்கு ஊக்கம் தரும்?
  9. இந்த அமுதமொழி ஆன்மசாதகர்களுக்கு ஊக்கம் அளிக்கிறதல்லவா? 

  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க  திருவேதாத்திரியம்!!

   

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 323

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 323

   

  31-07-2020  — வெள்ளி

  பழக்கமும் விளக்கமும்

  பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஜீவன் மனிதன்.

  — வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம்

  எண்ணிலடங்கா பிறவிகளில் பெற்ற பழக்கப்பதிவுகள் இப்பிறவியில் மட்டுமே பெற்ற விளக்கப்பதிவை வெற்றிகொள்கின்றது. பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவைத் தன்பக்கம் சாய்த்து விடுகின்றது.

   

  பயிற்சி:

  1. பதிதல், பதிவு என்றால் என்ன?
  2. (i) பழக்கம் என்பது என்ன?   (ii) பழக்கப்பதிவு என்றால் என்ன? (iii) அது எப்படி நடைபெறுகின்றது?
  3. விளக்கம் என்பது என்ன?
  4. (i) விளக்கப்பதிவு என்றால் என்ன? (ii) அது எவ்வாறு நடைபெறுகின்றது?
  5. போராட்டம் என்கிறாரே மகரிஷி அவர்கள்! அப்படியென்றால் என்ன பொருள்?
  6. ஏன் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம் நடக்கின்றது?
  7. பழக்கப்பதிவை விளக்கப்பதிவு வெற்றிகொள்ள ஆன்மசாதகன் என்ன செய்ய வேண்டும்?
  8. விளக்கப்பதிவை வலிமையாக்க ஆன்மசாதகன் என்னென்ன செய்ய வேண்டும்?
  9. (i) ஊக்கமுடைமை என்றால் என்ன? (ii) ஊக்கமுடைமை விளக்கப்பதிவை வலிமையாக்குமா?
  10. முயற்சி…?
  11. (i) சத்சங்கம் என்றால் என்ன? (ii) சத்சங்கத்தை எத்தனை வகையாக கொள்ளலாம்? (iii) சத்சங்கத்தால் விளக்கப்பதிவின் வலிமையை அதிகரிக்க முடியுமா?
  12. விளக்கப்பதிவின் வலிமையை அதிகரித்துக் கொண்டு   பழக்கப்பதிவை  வெற்றிகொள்ள  ஐயன் திருவள்ளுவரும், அவ்வைத்தாயும் எவ்வாறு உறுதணையாக இருக்கின்றனர்? Avvaiyar & Thiruvalluvar - Prosper Spiritually
  13. (i) இயல்பூக்க நியதி  எவ்வாறு  பழக்கப்பதிவை விளக்கப் பதிவு வெற்றிக்கொள்ள  உதவியாக இருக்கும்? (ii) இயல்பூக்க நியதி தானாகவே உதவி செய்யுமா? (iii) அல்லது ஆன்மசாதகன் இயல்பூக்க நியதியை யுக்தியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?  வாழ்க வளமுடன்!

  வாழ்க வேதாத்திரியம்!  வளர்க வேதாத்திரியம்!!

   

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 322(268)

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 322(268)

  25-07-2020  — சனி

  எண்ணத்தின் வலிமை


  மனிதத் தன்மை, மேன்மை கைக்கு எட்டாத வானமல்ல, நாம் விரும்பினால் கைக்கு எட்டக்கூடியதே!

                                                                         . . .   கன்பூசியஸ்


   பயிற்சி—

  1)    என்ன கூறுகிறார்  சீன அறிஞர் கன்பூசியஸ்?

  2)    மனிதன் என்பவன் யார்?

  3)    மனிதனை வரையறை செய்ய முடியுமா(Can man be defined)?

  4)    i)தன்மை என்றால்  என்ன? 

         ii) மனிதத் தன்மை என்றால் என்ன?

      iii) மனிதனின் சிறப்புகள் பற்றி நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்               என்ன கூறுகிறார்? 

         iv) அக்கவியினை (ஞா.க.கவி எண் 290)நினைவு கூர்வோம்? 

          v) அவற்றில் எத்தனை   நம்மிடம்     உள்ளன என தற்சோதனை செய்து                          பார்க்கலாமே!

  5)  i) மேன்மை என்றால் என்ன?

       ii) மனித மேன்மை என்றால் என்ன?

  6)  அறிஞர் கன்பூசியஸ்  ஒப்புமையில் பயன்படுத்துகின்ற உவமேயத்தின் சிறப்பு என்ன? ஏன் வானம் என்கின்ற உவமேயத்தைப் பயன்படுத்துகிறார் அறிஞர் கன்பூசியஸ்?

  7) கைக்கு எட்டினால் …………….. ????!!!!

  8) அறிஞர் கன்பூசியஸ் மொழிகின்ற அமுத மொழியின்  அறிவியல் என்ன?

  9) அறிஞர் கன்பூசியஸ் கண்டுபிடித்த உண்மைக்கும் மனவளக்கலையின் சங்கல்பத்திற்கும் தொடர்பு/உறவு இருக்கின்றதா? எவ்வாறு  தொடர்புள்ளது?

  10)    பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கன்பூசியஸ் எண்ணியது இப்போது நிறைவேறி வருகின்றதா?  இப்போது என்றால் …………  ?????!!!!!

  11)    எண்ணத்தின் வலிமைதான் என்னே!  நாமும் அது போன்ற சமுதாயநல எண்ணங்களை பிரயோகிப்போமே!

  12)    அன்று  கன்பூசியஸ் கூறிய  ‘விருப்பம் கைகூடக்கூடியது’  என்பதனை இந்த நூற்றாண்டில் நிறைவேற்றிக் கொண்டிருப்பது எது?

   

  வாழ்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!

  வளர்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!!

  வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!