வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
21-05-2016 — சனி.
வாழ்க்கையில் கஷ்டங்களைக் காணாதவன் தன்னைப் பெரிய மனிதனாக உயர்த்திக் கொண்டதே கிடையாது!
. . . தியோடர் ரூஸ்வெல்ட்.
பயிற்சி—
 1) பெரிய மனிதனாக ஆவதற்கு கஷ்டங்களைக் காணவேண்டும் என்கிறாரே அறிஞர்  தியோடர் ரூஸ்வெல்ட் அவர்கள். ஏன்?
 2) ‘பெரிய மனிதராவது’  என்பதாவது நேர்மறையானது(positive). ஆனால் ‘கஷ்டங்களைக் காணவேண்டும்’ என்பது எதிர்மறையாக உள்ளதே! ஏன்?
 3) இது எதனை அறிவுறுத்துகின்றது?
 4) நம் குருதேவர் அவர்களை இக்கூற்றிற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா? வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.
 
 
                
