வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 328
15-08-2020— சனி
அமைதி
உன்னைத் தவிர வேறு யாராலும் உனக்கு அமைதியைத் தர முடியாது”
. . . எமர்சன்
பயிற்சி:
- என்ன கூறுகிறார் அறிஞர் எமர்சன்? உண்மைதானே!
- (i) அமைதி என்பது என்ன? (ii) அது எப்படி இருக்கும் மனதிற்கு ? (iii) அதனை மனம் எப்படி, எப்போது, எப்படி இருந்தால் அனுபவிக்க முடியும்?
- அமைதியை வேறு யாரும் தர முடியாது என்றால் என்ன பொருள்?
- (i)அமைதி என்பது மனிதகுலத்தின் பூர்வீகச் சொத்து. எவ்வாறு? (ii)அமைதி பூர்வீகச் சொத்தாக இருந்தும் ஏன் பூர்வீகச் சொத்தை அனுபவிக்க முடியவில்லை மனிதகுலத்தால்?
- (i) மனிதன் உண்மையில் அமைதியை அனுபவிக்க விரும்புகின்றானா? (ii) இல்லையெனில் ஏன் விரும்புவதில்லை? (iii) விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
- மனிதனுள்ளே ஆனந்தவடிவமான உத்தமன் கோயில்கொண்டிருந்தும், மனிதனால் ஏன் உத்தமனாக இருந்து, அமைதியையும், அதற்கு அடுத்த நிலையான பேரானந்தத்தையும் அனுபவிக்க முடியவில்லை?
உடம்புக்குள் இறைவன் இருப்பதை அறிவீர்
“உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே.”
. . . திருமூலர் – திருமந்திரம் 725
7. அமைதிக்கு திருவேதாத்திரியம் அருளும் அருமருந்து என்ன? அது ஒன்றா அல்லது இரண்டு கலந்த கூட்டு அருமருந்தா(Combined Divine Medicine)
வாழ்க உலக அமைதி! வருக உலக அமைதி விரைவில்!!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.