வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள் – 333
09-04-2022 — சனி
மதித்தொழுகல்!!!
எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது, குருவின் உயர்வு, மதிப்போரை தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும் ”
. . . வேதாத்திரி மகரிஷி.
பயிற்சி—
- என்ன கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
- குரு என்பவர் யார்?
- குருவை யார் மதிப்பர்?
- மதித்தல் என்றால் என்ன?
- ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ எப்போது மதிப்பு வரும்?
- ஒழுகுதல் என்றால் என்ன?
- மதித்தல் வேறு ஒழுகுதல் வேறா?
- ஒழுகுதலுக்கு மதிப்பு அவசியமா?
- “குருவை மதித்து ஒழுகினால் குருவின் உயர்வு மதிப்பவரின் தரம் உயரும்” என்பது அறிவியலா?
- உயர்கின்ற பயன் எந்த இறை நியதியின் கீழ் கிடைக்கின்றது?
- மதித்தொழுகலின் பயன் என்ன?
- குருவின் உயர்வு என்றால் என்ன?
- மதிப்போரின் தரம் என்றால் என்ன?
- மதிப்பவரின் தரம் உயரும் என்றால் அந்தத் தரம் என்ன?
- மதித்தொழுகலின் விளைவாக பிறவிப்பயன் கிடைக்கும் என்றால் பிறவிப்பயன் என்பது என்ன?
- பிறவிப்பயன் பெறுவது ஒவ்வோர் மனிதனுக்கும் அவசியம் தானே?
- எந்த கோணத்தில் பிறவிப்பயன் அவசியமாகின்றது மனிதனுக்கு?
- பிறவிப்பயன் தரும் நன்மைகள் என்ன? ஒன்றா? பலவா?
- ஏன் மனிதர்கள் பிறவிப்பயன் அடைவதற்கு முயற்சி செய்வதில்லை?
- குருவை மதிப்பதில் சீடருக்கு என்ன சிரமம் இருக்கப் போகின்றது?
- ஏழு எழுத்துக்களைக் கொண்ட குருவை “ம தி த் தொ ழு க ல்“ என்கின்ற வார்த்தையில் என்னென்ன படிநிலைகள் உள்ளன என்பதனை பட்டியலிட்டு செயல்படுத்தலாமன்றோ?
- “குருவின் உயர்வு (உயர்ந்த குருவின் தன்மைகளும், அருட்பார்வைகளும், அருட்செய்திகளும்) குருவை மதிப்பவரின் தரத்தை உயர்த்தும்” என்று மகரிஷி அவர்கள் கூறியிருப்பது, திருமூலர் குருவைத் தேடுவதில் இருக்கும் எச்சரிக்கையை நினைவு படுத்துகின்றதல்லவா?
அபக்குவன்!!
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே.”
. . . திருமூலர்
(அபக்குவன் என்று கொடுக்கப்பட்ட தலைப்பு சிந்திக்கக் கூடியது)
23. திருமூலரின் உண்மை-குரு பற்றிய எண்ணம்போல் பக்குவ-
மனவளக்கலைஞர்கள், வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாகப்
பெற்றமைக்கு பூர்வபுண்ணியம் செய்திருக்க வேண்டும் அல்லவா?
24. இந்த அமுதமொழியில் ஐயங்கள் வேறு ஏதேனும் இருப்பின் அவற்றைக் கேள்விகளாக தங்களுக்குள்ளாகவே எழுப்பி சிந்தனை செய்து – சுயசத்சங்கம் நடத்தி பயன்பெறலாமன்றோ?
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!