சிந்திக்க அமுத மொழிகள்-274

வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்க அமுத மொழிகள்–274

12-01-2018-வெள்ளி

amudhamozhi_38

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.”

. . . புத்தர்.

பயிற்சி:

1) அறியாமை என்று எதனைக் கூறுகின்றார் புத்தர்?

 2) ‘அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது’ என்கிறாரே புத்தர்! 

3) அறியாமை ஆயுள் முழுவதும் அப்படியே இருந்துவிட்டு போகலாமா?

4) அறியாமை நீங்கினால் அதன் விளைவு, திருவள்ளுவர் கூறுவது போன்று அறிவு அறிவுடைமை ஆகுமா?

5) அறியாமை பற்றி வேதாத்திரிய அறிவியல்(அறிவு+இயல்) அகராதி (Vethathrian Dictionary of Science of Consciousness) என்ன கூறுகின்றது?

6) என்றோ (சுமார் இருபத்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர்) வாழ்ந்தார் புத்தார். ஆனால் இன்று நாம் அறியாமை பற்றி புத்தர் எண்ணிய எண்ணங்களை அறிந்து கொண்டு, வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘அறியாமை’ பற்றி எண்ணிய எண்ணங்களோடு ஒப்பீடு செய்து, அறிவின் அறிவியல் உருவானது பற்றி நினைந்து மகிழ்ச்சி அடையலாமே!  இவ்வாறு எல்லாம் இயல்பூக்க நியதியினை பயன்படுத்தி பண்பேற்றத்தில் ஏற்றம் பெறலாமே!

7) அன்பர்களே புத்தரின் இந்த அமுதமொழியைத் தூண்டுகோலாகக் கொண்டு ஒரு சிறு கட்டுரை எழுதிப்பார்க்கலாமே! எழுதும்போது புத்தர் என்னென்ன எண்ணி, இந்த அமுதமொழியினை அருளினாரோ அவையெல்லாம் நமக்கு தெரிய வருமே! புத்தரைப்போன்றே சிந்தனையாளர்களாகலாமே! வேதாத்திரிய அகராதி அதற்கு நமக்குத் துணை செய்யக் காத்திருக்கின்றதே!

8) ஆழ்ந்த சிந்தனையில், உள்ளே இருக்கும் உத்தமனுடன்ஒருவேளை பேசுகின்ற  ஆனந்த அனுபவ வாய்ப்பைப் பெறலாமே!  சுயசிந்தனையே இறையுடன் பேசுவதுதானே! வாதி பிரதிவாதியாக இருந்து சிந்திக்கலாமே!  வாழ்க வளமுடன்!

9) இன்னும் ஏதேனும் வினாக்கள் உங்களுக்குள் இருந்தால் அவ்வினாக்களை எழுப்பி விடை காணலாமே!

 

வாழ்க வளமுடன். வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments