வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 311
20.06.2020— சனி
வாழ்வில்நமக்குசொந்தம்என்றுசொல்லக்கூடியசொத்துநம்செயல்களே”
–ஜேம்ஸ் ஆலன்
பயிற்சி:
-
- என்ன கூற விரும்புகிறார் அறிஞர் ஜேம்ஸ் ஆலன்?
- சொந்தம் என்றால் என்ன?
- சொந்தம், சொத்து, செயல்கள் ஆகிய மூன்றையும் ஏன் இணைத்தும், தன் கண்டுபிடிப்பை சமுதாயத்திற்கும் கூறுகிறார்?
- எப்படி மூன்றையும் இணைத்து கூற முடிகிறது அறிஞரால்? இதுவரை நாம் இவ்வாறு சிந்திக்கவில்லையே! அறிஞர்கள் மட்டும் தான் சிந்திக்க முடியுமா? இப்போது சிந்திக்கின்றோமே! அது எவ்வாறு சாத்தியமாகின்றது?
- வாழ்வில் வேறு சொந்தம் ஏதும் இல்லையா? அது பற்றி ஒன்றும் கூறவில்லையே!
- சொத்து என்றால் என்ன? நம்முடைய செயல் எப்படி சொத்தாகின்றது?
- நம்முடைய செயலை நம் சொத்து என்கிறார். சரி! ஒப்புக்கொள்கிறோம். செயல் புரிந்துதான் சொத்து சேர்க்க முடியும். ஆனால் நாம் செயல் ஏதும் புரியாமலேயே நமக்கு ஒரு சொத்து இருக்கின்றது. அந்த சொத்தில் எல்லோருக்குமே பங்கு உண்டு. அது எது?
- நாம் செயல் புரியாமலேயே நமக்காக சொத்து ஒன்று காத்துக்கொண்டிருக்கின்றது. அதனைத் தேடிக் கண்டுபிடித்து நமதாக்கிக் கொள்ள வேண்டாமா?! அந்த சொத்தை அனுபவிப்பது தானே நமது பிறப்புரிமை!
- அதற்கு நாம் என்ன பெயர் சூட்டலாம் ? ஏற்கனவே பெயர் சூட்டியிருக்கிறோமா?
- அறிஞர்களின் அமுத மொழிகளை அறிந்துகொண்டால் மட்டுமே போதாவா? அறிந்து கொண்டு மகிழ்வதே போதுமானதா?! இவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டுமா? ஏன் சிந்திக்க வேண்டும்?
- இல்லையென்றால் இயல்பூக்க நியதியினை எவ்வாறு பயன்படுத்தி பயன் பெறமுடியும்?
- சுருக்கமாக, அமுதமொழிகளின் ஆழ்ந்து ஆழ்ந்த புரிதலின் பயன்கள் என்ன? ஒன்றா? பலவா? வாழ்க வளமுடன்!
குறிப்பு:
அன்பர்களே வாழ்க வளமுடன்!
இந்தப் பயிற்சியில் இதுவரை 12 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்கு எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடைகண்டு மகிழவும். இவ்வாறாக சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் வளர்த்துக் கொள்ளலாம்.
வாழ்க சிந்தனைச் செல்வம்! வளர்க சிந்தனைச் செல்வம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!
![]()



Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.