வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
FFC – 23
19-11-2014
ஆறாம் அறிவு வாழ்க்கையில் உற்ற வயதில் கேட்க வேண்டிய வினாக்கள் உள்ளன. அவ்வினாக்களை உற்ற வயதில் கேட்டு விடைகளை அறிவுபூர்வமாகப் பெற்று அதன்படி வாழ்ந்தால்தான் அவன் வாழும் காலம் முழுமைக்கும் மகிழ்ச்சியாக வாழலாம். அவன் வாழும் சமுதாயத்தையும் வாழ வைத்து மகிழலாம். வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில்(உதாரணத்திற்கு ஐம்பது வயதில்) அவ்வினாக்கள் எழுந்து எப்போது விடைகளை அறிந்து அதற்கேற்ப வாழ்ந்து மகிழ்ச்சியை அனுபவிக்க எஞ்சியுள்ள வாழ்நாள் போதுமானதாக இருக்காது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வினாக்களை எல்லோரும் கேட்பதில்லை என்று நேற்றுப் பார்த்தோம். இன்றைய விருந்தில்
அவ்வினாக்கள் என்ன,
அவைகளுக்கு என்ன விடைகள், எவ்வாறு விடைகள் கிடைக்கும்,
அவைகள் எவ்வாறு மகானாக்கும் என்று பார்க்க இருக்கிறோம்.
எல்லோருமே இன்பத்தைத்தான் விரும்புவர். இதில் தவறில்லை. ஆனால் துன்பமும் வந்துவிடுகின்றது. அதனை அவ்வாறே ஏற்று இன்ப-துன்ப பிறவிப்பிணியிலேயே வாழ் நாள் முழுவதும் வாழ்வது என்பது பழக்கமாகிவிட்டது. அதாவது சிந்திப்பது இல்லை. சிந்தித்தால் வரும் முதல் வினாதான்
1) இன்பம், துன்பம் என்பது என்ன? அவைகள் எவ்வாறு வருகின்றன?
அடுத்த வினாவினைப் பார்ப்போம். இன்ப துன்பத்தை அனுபவிப்பது உயிர்தான். மனிதனுக்கு ஆசைகள் ஏராளமாக உள்ளன. மனிதன் ஆசைப்படுகிறான் என்றால் அவனது உயிர்தானே ஆசைப்படுகின்றது. உயிர் போனப் பிணத்திற்கு ஏது ஆசை? உயிருக்குள்ள முதல் ஆசை தன் மீதுதான். உயிர் மதிப்பற்றது என்கிறோம். உயிரை யாரும் துறப்பதற்கு விரும்புவதில்லை. எவ்வாறு கறந்த பால் மீண்டும் முளை புகாவோ அதுபோல் உடலைவிட்டு வெளியேறிய உயிர் மீண்டும் உடலில் நுழைய முடியாது.
உற்றார் உறவினரின் உயிர் இழப்பு பெரும் பாதிப்பையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. உயிர் போய்விட்டால் உடலுக்கேது மதிப்பு? உடல் அழுகிவிடும். துர்நாற்றம் வீசும். அப்படியிருக்கின்ற உயிரை யாராவது இதுவரை பார்த்திருக்கிறார்களா, ஏன் உயிரைப் பார்க்க முடியவில்லை என்கின்ற சிந்தனை பரவலாக மனிதர்களிடம் வந்திருக்க வேண்டும். உயிரைப் பற்றிய அறிவு பரவலாக பரவவில்லை. ஆகவே அடுத்து எழ வேண்டிய இரண்டாவது வினா
2) உயிர் என்பது என்ன?
அடுத்ததாக எழ வேண்டிய வினாவினைப் பார்ப்போம். இறைமீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிகம். இறைமீது நம்பிக்கை இல்லாதவர்கள் இறை மறுப்புக் கொள்கை உடையவர்கள் வெகு சிலரே. அவர்கள் மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள். எனவே கண்களால் காணமுடியாத, காட்ட முடியாத இறையை அவர்கள் இல்லை என்கின்றனர். இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதுவது மூடநம்பிக்கை என்கின்றனர். அது அவர்களின் சிந்தனைச் சுதந்திரம்.
மனிதனின் செயலுக்கு ஏற்ற விளைவினைத் தரவல்லது இயற்கை என்பதனை இருதரப்பினருமே
அறிந்து அறவாழ்வு வாழ்வது மனிதம் என்று அறிந்து விழிப்புநிலையில் வாழ வேண்டும். இருதரப்பினருக்குமே வாழ்வதற்கு காற்றை,ஒளியை, நீரை, உணவைத் தருவது ஒரே இயற்கைதான்.
இறை மீது நம்பிக்கைக் கொண்டு இறைவழிபாடு செய்து வருபவர்கள் யாரும் அவா்கள் வாழ்நாளில், இறையைக் காணாமலேயே வாழ்நாள் முடிந்து விடுகின்றது. இச்சூழலில் எழ வேண்டிய அடுத்த வினா:
3) இறைவன் என்பவர் யார்? அவர் ஏன் இந்த பிரபஞ்சத்தைப்(universe) படைத்தார்?
அடுத்ததாக எழ வேண்டிய வினாவினைப் பார்ப்போம். யாரும் விரும்பிப் பிறப்பதில்லை. ஒருநாள் பிறந்தவர் இறந்தே தீர வேண்டும். ஆகவே இறக்கவேப் பிறக்கிறான் மனிதன். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டக் காலம் அவனது வாழ்நாள் எனப்படுகின்றது. மனிதர்கள் வாழ்நாளில் எல்லோருக்கும் எல்லாம் சமமாகக் கிடைப்பதில்லை. குறைந்த பட்சம் இன்றியமையாத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடமாவது எல்லோருக்கும் கிடைக்க வேண்டாம். இம்முன்றும் கிடைக்காமல் போனால் அதனை என்ன என்று அழைக்கிறான் மனிதன்? ஏழ்மை என்கிறான். வறுமை என்கிறான். இதுபற்றிய கேள்வி எழவேண்டாம் மனிதனுக்கு! ஆகவே இந்த கேள்விதான் நான்காவதாகும். ஆகவே நான்காவது வினா.
4) வறுமை ஏன் வருகின்றது?
இந்த நான்கு வினாக்களுமே தான் மகோன்னத வினாக்கள் என்கிறோம் நாம். இந்த நான்கு வினாக்களும் எவ்வாறு மகானாக்கும் மகோன்னத வினாக்கள், யாரை மகானாக்கியுள்ளது என நாளைப் பார்ப்போம். நாளைத் தொடரும்…….
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.