FFC – 151-வினா விடை 3

வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

வினா விடை 3

FFC – 151

03-01-2016 — ஞாயிறு

 சிந்திக்க வினாக்கள்-119

(26-10-2015 – திங்கள்)

(அ) ‘சிறிய நான்’, ‘பெரிய நான்’ என்றால் என்ன பொருள்?
(ஆ) எந்நிலையில் ‘சிறிய நான்’ அற்றுப்போகும் என்கிறார் மகரிஷி அவர்கள்?
விடை
(அ) மனிதன் தன்னை உடலோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் நான் ‘சிறிய நான்’. உலக மக்களில் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுறுவர்களைத் தவிர பெரும்பாலோர் இந்நிலையில் தான் உள்ளனர்.

‘பெரிய நான்’ என்பது யார்? ‘பெரிய நான்’ என்பது எல்லாம்வல்ல பேரறிவேதான். அல்லது இயற்கையின் ஆதிநிலை. அல்லது பேரறிவே எங்கும் நீக்கமற இறைந்து கிடப்பதால் காரணப்பெயராக அழைக்கப்படும் ‘இறை’. ஆகவேதான் நம்முடைய சத்சங்கத்தில் ஆதிநிலையாகிய வெளியை, பேரறிவை இயற்கை/இறை என அழைத்து வருகிறோம். அந்தப் பேரறிவிலிருந்து பின்னப்பட்டவர்கள்தான்(FRACTIONATED) இந்த உலகமக்கள் அனைவரும். எனவே தான் மனிதர்கள் சின்ன நான்கள்.
எனினும் ‘‘பேரறிவே நானாக’ இருக்கிறேன் என்று அறிந்து அந்த வெளிச்சத்தில் வாழ்க்கை நடத்த முடியும். அப்போது . “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி” என்கின்ற மகரிஷி அவர்களின் பொன்மொழி உறுதிபடுத்தப்படும்.
இஃதன்றி ‘அவனை (பெரிய நானை) மறந்தால் நீ சிறியோன்(சின்ன நான்), அவனை(பெரிய நானை) அறிந்தால் நீ பெரியோன்.’ என்று மகரிஷி அவர்கள் கூறும் நிலைக்கும் மனிதன் உயரமுடியும். இந்த நிலைக்கு உயர்வதற்கு, உலகமக்கள் அனைவரும் அல்லலுராமல் பூர்வீகசொத்தான அமைதியினை அனுபவிக்க இயற்கை அளித்துள்ள அருமருந்தான மனவளக்கலை செய்து வருகின்றது.
(ஆ) தன்முனைப்பு அற்ற நிலையில் ‘சிறிய நான்’ அற்றுப் போகும்.
“தன்முனைப்பு கரையும். காணும் தெய்வம்” என்கிறர் ஒரு கவியில்.

சிந்திக்க வினாக்கள்-120
(29-10-2015 – வியாழன்)

கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!

ஞாலத்தை அறிவது விஞ்ஞானம் . மூலத்தை உணர்வது மெய்ஞ்ஞானம் .

 …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

சிந்திக்க அமுத மொழிகள்- 121
(30-10-2015—வெள்ளி)

எதன்மீது ஆசை இல்லையோ அவற்றால் துன்பமில்லை.
… பழமொழி
பயிற்சி—
1) இப்பழமொழியில் உள்ள விஞ்ஞானம் என்ன?
2) திருவள்ளுவர் இக்கருத்தை எந்த அதிகாரத்தில் என்ன குறள் அருளியுள்ளார்?

விடை

1) தேவை வேறு ஆசை வேறு. தேவை இருந்தால், வசதி வாய்ப்பு இருந்தால், அதனை அடைவதற்கு முயற்சி செய்யலாம். தேவையில்லாமல் ஆசையிருந்தால் அவற்றால் துன்பம் வரும். தேவையின் அடிப்படையில் ஆசை இருக்க வேண்டும். தேவையில்லாமல் ஆசைப்படும் பொருள் மீது எண்ணம் செல்லும். அதனை அடைய முயற்சி செய்தாக வேண்டும். அதனை அடையலாம். அல்லது அடையமுடியாமலும் போகலாம். எஞ்சி நிற்பது கவலை.
2) ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.’

பொருள்:- ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தப்பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. பொருட்கள் நிலையற்றவை. நிலையற்ற பொருட்களை அடைவதற்காக பிறவி எடுக்கவில்லை. நிலையான பொருளோடு ஆன்மாவை இணைத்துக் கொள்ளவே மனிதப்பிறவி.

மனவளக்கலை பாகம் 1 என்கின்ற நூலில் ’கவலை ஒழித்தல்’ பாடத்தில் ஆரம்பத்திலேயே இக்குறளை மகரிஷி அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். அனுபோகப் பொருட்கள் அதிகமாக உடல் நலம் கெடும். சொத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக மனஅமைதி கெடும். பாதுகாக்கப்படவேண்டிய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்க அதிகரிக்க சுதந்திரம் கெடும்.

சிந்திக்க அமுத மொழிகள்- 122
(31-10-2015—சனி)

கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்களை உணராமல் இருப்பவனே சரியான குருடன்.
….. ஓர் அறிஞர்.
பயிற்சி—
1) தன்குற்றங்களை அறிந்து கொள்வது பற்றி காந்திஜி கூறுவது என்ன?
2) எதனால் தன்குற்றங்களை உணர முடிவதில்லை?

விடை

1) தன்குற்றங்களை அறிவது ஞானம் என்கிறார் காந்திஜி. (Hyper link) ஞானம் என்பது தெளிவு. ஞானத்திற்கு சிறப்பான விளக்கம் அறிவை அறிந்த தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே குற்றம், குறையற்ற அந்த பேரறிவை அறிய வேண்டுமெனில், மனிதன் தன்னிடமுள்ள குற்றம், குறைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். அறிவை அறிகின்ற பயிற்சியில் இருப்பவர் தன் குற்றங்களை அறிந்து தற்சோதனையின் வாயிலாகவும், சத்சங்கத்தில் கலந்து கொண்டு சரி செய்து கொண்டு வருவார். தன்னிடமுள்ள குற்றம், குறைகளை நீக்கிக்கொள்ள முயற்சிப்பதே ஞானத்தின் பலபடிகளைக் கடப்பதற்கு முதற்படி(First step). எனவே தான், தன்குற்றங்களை அறிந்து கொள்வது ஞானம் என்கிறார் காந்திஜி. தன் குற்றம் குறைகளை பிறர் கூறி ஒருவர் அதனை எடுத்துக் கொண்டு(அறிவுரையாக) தன்னை திருத்திக் கொள்ள ஒவ்வொருவரின் தன்முனைப்பு தடையாக இருக்கும். ஒருசிலரே இதற்கு விதிவிலக்கு.

2) தன்முனைப்பால் தன்குற்றங்களை உணர முடிவதில்லை. பெரும்பாலும் ஒருவர் செய்கின்ற குற்றங்களால் பிறருக்கு துன்பம் ஏற்படும். அவ்வாறு இருக்கும் போது, பிறா் உணர்வை தன் உணர்வு போல் மதிக்கத் தெரியும் மனிதம் மறைந்து, விலங்கினப்பண்பு தலைதூக்கிவிடுகின்றது. அல்லது தெரிந்து அலட்சியம் செய்வது தன்முனைப்பின் விளைவாக இருக்கின்றது.
மனித இன பரிணாமத்தில் மனிதம் ஆரம்பித்த முதல் நாளை, அறம் தோன்றிய முதல் நாள் என அறுதியிட்டு கூறுகின்றார் மகரிஷி அவர்கள். இக்கவியினை ஞானக் களஞ்சியம் – கவி எண் 494 ல் காணலாம். வாசித்து மனனம் செய்து பயன்பெறவும். வாழ்க வளமுடன்.

FFC-151-பிறஉயிர் உணர்தலாகி

 

வாழ்க அறிவுச் செல்வம்                                            வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments