February 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 50

    வாழ்க மனித அறிவு     வளர்க மனித அறிவு

    21-02-2015—சனி

    பணம் செய்வதை எல்லாம் எழுதி வை. செலவழித்தது அவசியம்தானா என்று சிந்தித்துப் பார். சிக்கனம் தானாக வரும்.

    ….. மகாத்மா காந்தி அவர்கள்

    பயிற்சி—1) சிக்கனம் என்பது என்ன?
    2) சிக்கனம் என்பது அவசியமா? ஏன்?
    3) சிக்கனம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?
    4) சிக்கனத்திற்கும் இறை உணர்விற்கும் தொடர்புள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

     

  • சிந்திக்க அமுத மொழிகள்- 49

    வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

    20-02-2015–வெள்ளி

     

    ஒழுக்கம் போர்க்களம் போன்றது.   அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம்மனதோடு போராட வேண்டும்.

                                                                                                                                 … ரூஸோ

    பயிற்சி—

             1) என்ன சொல்கிறார் அறிஞர் ரூஸோ?  ஒழுக்கம் உயிரைவிட மேலானது. அப்டியிருக்கும்போது ஏன்    ‘‘ஒழுக்கம் போர்க்களம் போன்றது’ என்கிறார்?

            2) இதே கருத்தை ஒட்டி மகரிஷி அவர்கள் கூறும் அமுத மொழி என்ன?

            3) பழக்கப் பதிவுகள், விளக்கப் பதிவுகள் என்றால் என்ன?
           4) இவ்விரண்டிற்கும் உள்ள உறவு என்ன?
           5) இவ்விரண்டில் எது வலிது? ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள் – 48

    வாழ்க மனித அறிவு        வளர்க மனித அறிவு

    19-02-2015 — வியாழன்

    வாழ்க வளமுடன்.

     

    எல்லோரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பத்தையே விரும்புகிறோம்.   எனவே இன்ப-துன்பத்தைப் பற்றி அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டாம்? அதற்கான வினா இதோ!

    இன்பமும், துன்பமும் ஒரே உணர்ச்சியின் ஏற்றத்தாழ்வான இரு நிலைகளே என்கிறார் மகரிஷி அவர்கள். எவ்வாறு? விளக்கவும்.

    (காண்க – இன்பம் துன்பம்—ஞானக் களஞ்சியம் பாகம்- 2- பகுதி 6.6 – பக்கம் 475 -481 )

    வாழ்க மனித அறிவு   வளா்க மனித அறிவு