January 2017

Monthly Archives

  • சிந்திக்க வினாக்கள்-248

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-248

        23-01-2017 – திங்கள்


    சுவாமி விவேகானந்தர் கல்வியின் நான்கு தூண்களாக எவற்றை கூறுகிறார்? வேதாத்திரி மகரிஷி கூறும் கல்வியின் நான்கு அங்கங்களோடு அவை எவ்வாறு பொருந்துகின்றன? 

     வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 249

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 249

                                            21-01-2017 —சனி

    வாழ்க்கையில் கஷ்டங்களைக் காணாதவன் தன்னைப் பெரிய மனிதனாக உயர்த்திக் கொண்டதே

    கிடையாது!

                                                                            . . . தியோடர் ரூஸ்வெல்ட்

     பயிற்சி—

    1)    பெரிய மனிதனாக ஆவதற்கு கஷ்டங்களைக் காணவேண்டும் என்கிறாரே அறிஞர்

    தியோடர் ரூஸ்வெல்ட் அவர்கள்.  ஏன்?

    2)    ‘பெரிய மனிதராவது’ என்பது நேர்மறையானது(positive).  ஆனால் ‘கஷ்டங்களைக் காணவேண்டும்’ என்பது எதிர்மறையாக உள்ளதே!  ஏன்?

    3)    இது எதனை அறிவுறுத்துகின்றது?

    4)    நம் குருதேவர் அவர்களை இக்கூற்றிற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா?  வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 248

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotus

                                                             சிந்திக்க அமுத மொழிகள் – 248

                                            20-01-2017 — வெள்ளி

        நம்மை அறிமுகப்படுத்துபவை நம் சொற்கள் அல்ல.
          நம் வாழ்க்கையே நம்மை அறிமுகப்படுத்துகின்றது.’

                                                                                                          . . . மகாத்மா காந்தி


    பயிற்சி—
    1) என்ன கூறுகின்றார் மகாத்மா காந்தி?
    2) மனிதகுலத்திற்கு தேவையானதைத்தானே அறிஞர்கள் பொன்மொழிகளாக வெளிப்படுத்துகின்றனர். ஆகவே இங்கே ‘அறிமுகப்படுத்துவது பற்றி கூறப்படுவதால் அறிமுகப்படுத்துவது மனிதனுக்குத் தேவையாகின்றதல்லவா?
    3) அப்படியானால் ‘அறிமுகப்படுத்துவது’ என்றால் என்ன?
    4) இப்பொன்மொழியின் உட்கருத்து என்ன?
    5) உட்கருத்தை நேரிடையாகவே சொல்லியிருக்கலாம் அல்லவா?! ஏன் இவ்வாறு அறிஞர்கள் மறைமுகமாகக் கூறுகின்றனர்?  

    6) இப்பொன்மொழிக்கும் புகழ், உயர்புகழ் ஆகியவற்றிற்கும் தொடர்பு

    உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்