வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 320
18-07-2020 — சனி
முதன்மையான வித்தியாசம்!
நற்பண்புகள் விண்மீன்கள் போன்றதாகும். இரக்கம் விண்மீன்களிடையே நிலவை போன்றது.
. . . அறிஞர் பிராப்ட் பெர்ட்டியஸ்
பயிற்சி—
1) அறிஞர் என்ன கூற விரும்புகிறார்?
2) இந்த அமுத மொழியினைக் கண்ணுறும்போது நமது சிந்தனை ஓட்டம் எங்கெல்லாம் செல்லுகின்றது?
3) i) வாரப்பத்திரிகையாக இருந்தாலோ அல்லது மாதப்பத்திரிகையாக இருந்தாலோ அவற்றின் பக்கங்களின் மேலோ அல்லது கீழோ, பக்கங்களின் ஓரங்களிலோ அமுத மொழிகளைக் காண முடிகின்றது. இதன் நோக்கம் என்ன?
ii) அந்த பத்திரிகையை வழக்கமாக படிப்பவர்களில் எல்லோருமே அந்த அமுத மொழியிள் அமுதத்தைப் பருகுகின்றனர் என்று கூற முடியுமா?
iii) ஆம் என்றால் ஏன்?
iv) இல்லை எனில் ஏன்?
v) அமுதமொழிகளை படிக்க வேண்டியது அவசியமா?
vi) அமுத மொழிகளைப் படிப்பதால் ஏற்படும் பயன்கள் என்ன? படித்துவிட்டு நன்றாக உள்ளது என்பதோடு படித்ததன் பயன் முடிந்துவிடுகின்றதா? அல்லது என்ன செய்ய வேண்டும்? என்ன ஏற்படவேண்டும் வாசிப்பவருக்கு?
vii) சிந்தனை வளத்தைப் பெருக்க என்ன செய்யலாம்? (புத்தக உலகில் இப்போதெல்லாம் அறிஞர்களின் அமுதமொழிகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளிவருகின்றன)
viii) சிந்திக்க அமுதமொழிகள் பயிற்சிக்கும் மனிதஅறிவினில் மாற்றம் ஏற்படுவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? உள்ளது எனில் அந்த மாற்றம் எந்த நியதிப்படி நடக்கின்றது?
4) இந்த அமுத மொழியில் கூறப்பட்டுள்ள இரண்டு பொருட்களுக்கிடையே (நற்பண்பு, இரக்கம்) உள்ள வித்தியாசம் என்ன?
5) i) பண்பு, நற்பண்பு, இரக்கம் என்றால் என்ன?
ii) மனிதனுக்கு நற்பண்புகள், இரக்கம் இரண்டுமே வேண்டும். ஆனாலும் அறிஞர் பிராப்ட் பெர்ட்டியஸ் எது எதனைவிட சிறந்ததாகக் காண்கிறார்?
iii) ஏன்?
iv) மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள வித்தியாசங்களில் எது முதன்மையானதாகத் திகழ்கின்றது?
6) அறிஞர் பிராப்ட் பெர்ட்டியஸ் கையாண்டுள்ள உவமைகளிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன? அல்லது இதே கண்டுபிடிப்பை ஏற்கனவே அறிந்திருந்தால் இதனை எதனோடு இணைத்து மேலும் சிந்திக்கலாம்?
7) நம் குருபிரான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இரக்கம் பற்றி உரைநடை மற்றும் கவியின் வாயிலாக என்ன கூறுகிறார்? இரக்கம் பற்றி கூறும் கவியினை நினைவு கூறவும்.
வாழ்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!
வளர்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!!
வாழ்க சிந்தனைச் செல்வம்! வளர்க சிந்தனைச் செல்வம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.