Satiya Narayanan

Author Archives

  • விழிப்பு நிலை -சிந்திக்க வினாக்கள்-324

    வாழ்க மனித அறிவு!                                       வளர்க மனித அறிவு!!

    விழிப்பு நிலை

    சிந்திக்க வினாக்கள்-324

                                                                           19-03-2022-சனி                            

    வாழ்க வளமுடன்!

     

    பிரதான வினா(Main Question): 324

    ஏன் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஐயுணர்வில் மயங்குவதை வேரறுந்த மரத்திற்கு ஒப்பிடுகிறார்?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) மயக்க நிலையில் உணர்வு இருக்காது.  ஆனால் இங்கே ஐயுணர்வில் மயங்குதல் என்கின்றாரே வேதாத்திரி மகரிஷி அவர்கள்!? ஐயுணர்வில் மயங்குதல் எனில் உணர்வு இருக்கின்றதே!  அப்படியானால் அவர் கூறும் மயங்குதல் என்றால் என்ன பொருள்? ஐவகை மயக்கமா?

    2) வேரறுந்த செடிக்கு ஒப்பிட்டிருக்கலாம்?  ஏன் வேரறுந்த மரத்திற்கு ஒப்பிடுகிறார்? அவ்வாறு ஒப்பிடுவது கவிஞரின், (அதுவும் அருட்கவிஞரின்)  சுதந்திரமோ?! அவருக்கு இயற்கை/இறை கொடுத்த வார்த்தையோ?!  அல்லது இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது உள்ளதோ!?

    3) வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுவதில்  என்ன புனிதம்(முக்கியத்துவம்) உள்ளது?(Is there any sanctity in it?)

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                    வளர்க அறிவுச்   செல்வம்!!

    குறிப்பு: நாளை(20.03.2022) சத்சங்க நிகழ்ச்சியில் அறிவிற்கு விருந்து(Feast for Consciousness) நடைபெறும்.  அதில் இடம் பெறும் தலைப்பு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ மூன்றாம் பகுதி.  பகிர்ந்துகொள்ள கலந்துகொள்ளவும்.  வாழ்க வளமுடன்! 

    Loading