சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 251

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 251

                                            28-01-2017 —சனி

    தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை?

                                                                                    …..  சுவாமி விவேகானந்தர்.  

    பயிற்சி— 

    1)    தூய்மையும் எவ்வாறு வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளது?

    2)    தூய்மை வெற்றிக்கு இன்றியமையாதது என்பதால், சுவாமி விவேகானந்தர் கூறும் ‘வெற்றி’ என்பது குறிப்பிட்டு ‘ஒன்றைக்’ குறிக்கின்றதா?

    3)    அல்லது எல்லா வெற்றிகளையுமே குறிப்பிடுகின்றாரா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 250

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 250

                                            27-01-2017 —வெள்ளி

    சிந்திக்காமல் பேச ஆரம்பிப்பது குறி பார்க்காமல் செலுத்தப்படும் அம்பைப் போன்றது.

                                                                  . . .   பழமொழி.                 

     

    பயிற்சி:

    1) சிந்தித்துப் பேசுவதால் என்ன நிகழ்கின்றது?

    2) சிந்தித்துப் பேசுவதால் என்ன பயன்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு


  • சிந்திக்க அமுத மொழிகள் – 249

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 249

                                            21-01-2017 —சனி

    வாழ்க்கையில் கஷ்டங்களைக் காணாதவன் தன்னைப் பெரிய மனிதனாக உயர்த்திக் கொண்டதே

    கிடையாது!

                                                                            . . . தியோடர் ரூஸ்வெல்ட்

     பயிற்சி—

    1)    பெரிய மனிதனாக ஆவதற்கு கஷ்டங்களைக் காணவேண்டும் என்கிறாரே அறிஞர்

    தியோடர் ரூஸ்வெல்ட் அவர்கள்.  ஏன்?

    2)    ‘பெரிய மனிதராவது’ என்பது நேர்மறையானது(positive).  ஆனால் ‘கஷ்டங்களைக் காணவேண்டும்’ என்பது எதிர்மறையாக உள்ளதே!  ஏன்?

    3)    இது எதனை அறிவுறுத்துகின்றது?

    4)    நம் குருதேவர் அவர்களை இக்கூற்றிற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா?  வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 248

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotus

                                                             சிந்திக்க அமுத மொழிகள் – 248

                                            20-01-2017 — வெள்ளி

        நம்மை அறிமுகப்படுத்துபவை நம் சொற்கள் அல்ல.
          நம் வாழ்க்கையே நம்மை அறிமுகப்படுத்துகின்றது.’

                                                                                                          . . . மகாத்மா காந்தி


    பயிற்சி—
    1) என்ன கூறுகின்றார் மகாத்மா காந்தி?
    2) மனிதகுலத்திற்கு தேவையானதைத்தானே அறிஞர்கள் பொன்மொழிகளாக வெளிப்படுத்துகின்றனர். ஆகவே இங்கே ‘அறிமுகப்படுத்துவது பற்றி கூறப்படுவதால் அறிமுகப்படுத்துவது மனிதனுக்குத் தேவையாகின்றதல்லவா?
    3) அப்படியானால் ‘அறிமுகப்படுத்துவது’ என்றால் என்ன?
    4) இப்பொன்மொழியின் உட்கருத்து என்ன?
    5) உட்கருத்தை நேரிடையாகவே சொல்லியிருக்கலாம் அல்லவா?! ஏன் இவ்வாறு அறிஞர்கள் மறைமுகமாகக் கூறுகின்றனர்?  

    6) இப்பொன்மொழிக்கும் புகழ், உயர்புகழ் ஆகியவற்றிற்கும் தொடர்பு

    உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 247

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 247

    14-01-2017 — சனி


    ‘ஞானம் என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம். அறிவையறிந்த தெளிவு என்பது சிறப்பான விளக்கம்’

                                                                        ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  

    பயிற்சி—

    1)   ‘ஞானம்’ என்பதற்கானப் பொருளை பொதுவான, சிறப்பான என்று ஏன் இரண்டுவிதமாகக் கூறுகிறார்?

    2)   அறிவை அறிந்த தெளிவு என்றால் என்ன?


  • சிந்திக்க அமுத மொழிகள்- 246

    வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 246

    13-01-2017  — வெள்ளி

    ‘தேடுதலும், உண்மையைக் கண்டுபிடிப்பதில் விடாமுயற்சியும், தெளிந்த அறிவும் உயர்ந்த     மனிதனை உருவாக்கும்.’

     

                                                           . . . உலகப்புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

    பயிற்சி:

    1)   என்ன கூறுகிறார் விஞ்ஞானி?

    2)   ஆன்மீக சாதகர்களுக்கும் உலகப்புகழ் விஞ்ஞானி கூறும் அறிவுரை பொருந்துகின்றது அல்லவா?

    3)   விஞ்ஞானி கூறும் தேடுதல், உண்மையைக் கண்டுபிடித்தல், தெளிந்த அறிவு என்பது ஆன்மீக சாதகர்களுக்கு என்ன பொருளாகின்றது?

     

            வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்

     


  • சிந்திக்க அமுத மொழிகள்- 245

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 245

    07-01-2017 — சனி


    ஏற்றிவைக்கும் ஒவ்வொரு விளக்கும் வெளிச்சத்தைத் தருவதுபோல் மனிதன் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் முன்னேற்றத்தைத் தரும்”

                                                              . . . அறிஞர் ரூஸோ


    பயிற்சி:–

    1. முன்னேற்றம் என்று எதனைக் குறிப்பிடுகிறார் அறிஞர் ரூஸோ?
    2. எதில் முன்னேற்றம் வரும்?
    3. நற்செயல் செய்வதனை வலியுறுத்த அறிஞர் ரூஸோ கூறும் உவமானத்தைக் கவனிக்கவும்! சிந்திக்கவும்!
    4. அறிஞர் கூறுவது என்ன?
    5. சிந்திக்க அமுத மொழிப் பயிற்சிக்காக ஏற்கனவே நாம் எடுத்துக் கொண்ட அறிஞர் ரூஸோவின்  அறிவுரைகளை நினைவிற் கொண்டு வரவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள்- 244

    வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 244

     

    06-01-2017  — வெள்ளி


    இறைவனை நேசித்தால் விவேகமும், வைராக்கியமும் தானாக வரும்”.  

                                                               . . .  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.


     பயிற்சி—

    1. நேசிப்பது என்பது என்ன?
    2. இறைவனை நேசிப்பது என்பது என்ன?
    3. இறைவனை எவ்வாறு நேசிப்பது?
    4. விவேகம் என்பது என்ன?  அதன் அவசியம் என்ன?
    5. வைராக்கியம் என்பது என்ன? எதற்கு வைராக்கியம் அவசியமாகின்றது?
    6. இறைவன் உருவமாக இருந்தால்தான் நேசிக்கவும், ரசிக்கவும் முடியுமா?
    7. இறைவன் அரூபி எனத்தெரிந்து விட்டதால் அவனை நேசிக்க முடியாதா?  ரசிக்க முடியாதா?
    8. இறைவனை நேசித்தலுக்கும், விவேகம் மற்றும் வைராக்கியம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?
    9. மேற்கொண்டு சிந்திக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள்- 243

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 243

    31-12-2016 — சனி

    “சிந்திப்பதைவிட நம்புவது எளிதானது அதனால்தான் சிந்தனையாளர்களைவிட நம்பிக்கைவாதிகள் அதிகமாக இருக்கிறார்கள்.”

    . . . புருசு கால் வெர்ட்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர்?
    2) எது சிறந்தது? ஏன்?
    3) அறிஞரின் ஆதங்கம் என்ன?
    4) இருபதாம் நூற்றாண்டின் நிலை என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 242

    வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 242

     

    30-12-2016 — வெள்ளி

    “பித்தா! நீ எமனை மறந்தாய், இந்த உடல் நிச்சயம் அன்று, மாவில் உப்பு கலப்பது போல் சிறு மண்ணுடன் மண்ணாகிவிடும்.”

    . . . அரவிந்தர்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அரவிந்தர்?
    2) இதனை வேறு சான்றோர்களின் கூற்றுடன் இணைத்து சிந்தனை செய்யலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 241

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 241

    24-12-2016 — சனி

    “தோணியில் ஏறிக்கொள்; வாழ்வாகிய கடல் ஆழமானது; கடக்கக் கஷ்டமானது; சான்றோருடன்  உறைவதே அதனின்று கரையேற்றும் தோணியாகும்.”

    . . . குருநானக்

    பயிற்சி—
    1) அவ்வையார் இதேபோன்று கூறும் வரிகள் என்ன?
    2) திருவள்ளுவர் எந்தக் குறளில் இதுபோன்று கூறுகிறார்?
    3) இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
    4) இதுபோன்று அறவோர்களின் அறிவுரை இருந்தும் அதனை அலட்சியம் செய்த சமுதாயத்திற்கு இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகாவது செயல்படுத்தக் கூடிய அறிவுரைகள் கிடைத்துள்ளது அல்லவா? மகரிஷி அவர்களின் அறிவுநிலைக்கு உயர்ந்து நெஞ்சார வேதாத்திரியத்தைப் போற்றி வாழ்த்துவோம்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்