சிந்திக்க அமுதமொழிகள்

  • வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 240

    23-12-2016 — வெள்ளி

    “நற்குணங்களையே நான் அறிவென்று கொள்கிறேன்”

    . . . அறிஞர் சாக்ரடீஸ்

    பயிற்சி—
    1) நற்குணங்களைத் தவிர்த்த குணங்கள் இருப்பின் அது என்ன?
    2) மனிதனுக்கு அறிவு எங்கிருந்து வந்துள்ளது?
    3) நற்குணங்களையே அறிவு என்று சொல்வது சரிதானே?!

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

  •  

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 239

    17-12-2016 — சனி

    ‘மிகச் சிறந்த விஞ்ஞானம் ஆத்ம ஞான விஞ்ஞானம்’

    . . . சுவாமி ரங்கநாதானந்தர்.

    பயிற்சி—
    1) ஆத்ம ஞான விஞ்ஞானம் என்பது என்ன?
    2) எதனை அறிந்தால் ஆத்ம ஞான விஞ்ஞானம் பெறலாம்?
    3) எப்படி ஆத்ம ஞான விஞ்ஞானம் மிகச் சிறந்த விஞ்ஞானமாகின்றது?
    4) அப்படியானால் மனவளக்கலைஞர்கள் பாக்கியசாலிகள் தானே?!

    .
    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

  • வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 238

    16-12-2016 — வெள்ளி.

    மாயையில் வீழ்ந்து மனிதன் தன் சொந்த இயல்பை மறந்து விடுகிறான்.

    . . . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

    பயிற்சி—
    1) சொந்த இயல்பு என்றால் எது?
    2) சொந்த இயல்பை இழப்பதால் நடப்பது என்ன?
    3) மாயைக்கும் இறைக்கும் மகரிஷி அவர்கள் தொடர்பு படுத்திக் கூறும் சாம்யம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

  • வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 237

    10-12-2016 — சனி

    ‘சிந்தித்து, சிந்தித்து மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து என்கின்ற நூலில் எழுதியுள்ள கவிகள் பல உள்ளன. அந்நூலில் உள்ள கவிகள் ஒவ்வொன்றையும் பல முறைகள் நீங்கள் படிக்க வேண்டும். இல்லை என்றால் அந்தக் கவிகளுடைய முழு அர்த்தத்தையும், நான் எந்த அறிவு நிலையில் இருந்து கொண்டு எழுதினேன் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியாது.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) அவருடைய அறிவு நிலையினை ஏன் நம்மைப் புரிந்து கொள்ளச் சொல்கிறார்?
    2) அவரது அறிவுநிலையினை புரிந்து கொள்வதால் என்ன பயன்?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 235

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 235

    03-12-2016 — சனி

    ‘அகந்தையைத் துறந்தால் அருளைப் பெறலாம்’

    . . . ஸ்ரீ ரமண மகரிஷி.

    பயிற்சி—
    1) இது உண்மையன்றோ!
    2) இது எவ்வாறு நடக்கின்றது?

    3) அருள் இல்லை என்றால் விளைவு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்             வளா்க அறிவுச் செல்வம்

  • வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 234

    02-12-2016—வெள்ளி

    சிந்தனை செய்வதுதான் நம் ஒவ்வொருடைய வாழ்வு என்னும் கட்டடத்தின் கடைக்கால் ஆகும்.

    . . . புத்தர்

    பயிற்சி:
    1) என்ன கூறுகின்றார் புத்தர்?
    2) மனித வாழ்வில் எதார்த்த நிலை என்ன?
    3) எதார்த்த நிலையால் விளைவு என்ன?
    4) திருவேதாத்திரியத்தின் தோற்றத்தால்தானே வாழ்வின் நோக்கம் அறிய முடிந்தது. அதுவரை அது தெரியவில்லையே. இது எதனுடைய விளைவு?

    5) வாழ்வியல் உண்மைகள் பல உள்ளன. மகரிஷி அவர்கள் சிந்தித்ததால் அவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  இன்னமும் வாழ்வியல் உண்மைகள் பல உள்ளன.  சிந்திக்கவும்! சிந்திக்கவும்.  கண்டுபிடிக்கவும். பயன்படுத்தவும். வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்          வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 234

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 234

     26-11-2016—சனி

    “ உண்ணும் உணவு உனக்குக் கிடைத்த வகை எண்ணி உண்ணுதல் உன் கடன்.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஏன் இவ்வாறு கூறுகிறார்?
    2) ‘கடன்’ என்று கூறுவதால் இதன் முக்கியத்துவம் என்ன?
    3) இக்கூற்றை அறியும்போது வேறு என்ன நினைவுகள் வருகின்றன?

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 233

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 233

    25-11-2016—வெள்ளி

    “அனுபோகப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அளவிற்கேற்றவாறு வாழ்வில் அல்லல் மிகுந்து வரும், அமைதிகெடும், செயலில் அன்புநெறி பிறழும்.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இக்கூற்றில் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?
    2) அனுபோகப் பொருட்களின் எண்ணிக்கைப் பெருகும் அளவிற்கேற்றவாறு செயலில் அன்புநெறி பிறழும் என்கிறாரே? இது எவ்வாறு? இதில் அறிவியல் உள்ளதா?
    3) இவ்வுண்மையினை எவ்வாறு திருவள்ளுவர் கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 232

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 232

    19-11-2016 — சனி

    “உலகியலின் சாயல் சிறிது இருந்தாலும் இறைக்காட்சி கிடைக்காது”

    . . . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

    பயிற்சி—
    1) இது பக்திமார்க்கத்திலுள்ளவர்களுக்கு கூறியுள்ளதுபோல் இருக்கின்றது. இருப்பினும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது என்ன?
    2) ஞான மார்க்கத்திலுள்ளவர்களுக்கு இது பொருந்துமா?
    3) திருவள்ளுவர் இது பற்றி கூறுவது என்ன?
    4) இக்கூற்றிலுள்ள உண்மையினை திருவேதாத்திரியம் எவ்வாறு கூறுகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 231

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 231

    18-11-2016 — வெள்ளி

    “வழி தவறிச் சென்றுவிட்டால் திரும்பி வரலாம். வாய் தவறிப் பேசிவிட்டால் திரும்பப் பெற
    முடியாது”

    . . . ஒர் அறிஞர்

    பயிற்சி—
    1) இக்கூற்று என்ன அறிவுரையைக் கூறுகின்றது?
    2) இப்பிழை நிகழ்ந்து விடாமல் இருக்க மனிதனுக்குத் தேவையானது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்      வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 230

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 230

    12-11-2016 — சனி

    “நிலையாமையைப் பற்றிச் சிந்தித்தால் தற்பெருமை அழிந்துவிடும்”

    . . . புத்தர்

    பயிற்சி—
    1) இக்கூற்றிலிருந்து முதலில் அறிய வேண்டியது தற்பெருமை கொள்ளக் கூடாது என்பது. ஏன் தற்பெருமை கொள்ளக் கூடாது?
    2) தற்பெருமை கொள்வது பழக்கமாகிவிட்டதால் என்ன செய்வது?
    3) தற்பெருமை கொள்வதால் என்ன தீமைகள் வரும்?
    4) தற்பெருமைக்கும் நிலையாமையை அறிவதற்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரீதியானதா?
    5) நிலையாமையை அறிவாதால் தற்பெருமை எவ்வாறு நீங்கும்? அதிலுள்ள அறிவியல் என்ன?
    6) இவ்வுண்மையைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறியுள்ளது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 229

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 229

    11-11-2016 — வெள்ளி

    பகுத்தறிவால் திட்டமிட்டுவதைக் காட்டிலும் தெய்வீகப் பார்வையால் திட்டங்களை வகுத்துக்கொள்வது சிறப்பாகும். ஏனென்றால் மனித முயற்சியைக் காட்டிலும் தெய்வீக சக்தி நம்மை விரைவில் கரை சேர்க்க வல்லாதாகும்.

    . . . அரவிந்தர்

    பயிற்சி—
    1) ‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று திருவள்ளுவர் கூறுவதற்கும் அரவிந்தர் கூறுவதற்கும் ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதுபோல் தெரிகின்றதா?
    2) அப்படியானால் இக்கூற்றிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்