இன்றைய விருந்து

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 5/?

    ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 5/?

    FEAST FOR CONSCIOUSNESS – FFC – 90

    அறிவிற்கு விருந்து – அ.வி. – 90

     

    10-06-2015—புதன்

    சென்ற  நான்கு விருந்துகளில் ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்று சிந்தித்து வருகிறோம். இதுவரை சிந்தித்ததை சுருக்கமாகச் சற்று நினைவு படுத்திக் கொள்வோம்.

    1)   ஒழுங்காற்றலாகிய  இயற்கை/இறை மனித உடலில்  ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு, உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில்,   மனித மனதிலும்,   சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர்வதற்கு, மனிதன் எவ்வாறு இறைக்கு  வழிவிட வேண்டும் என்பது  பற்றியும்,

    2)   வள்ளுவர் கூறும் ஒழுக்கமுடைமையாகிய ஒழுக்கச்செல்வம் பூா்த்தி செய்யும்  மனிதனின் தேவை என்பது, மனிதன் மனிதனாக வாழ்வதுதான் என்றும்,

     3)   எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது, பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் மனதுடன் போராட்டம் நடப்பது நின்று விடும்.  விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியைத் தரும்  என்றும் அறிந்தோம்.

     4)   சென்ற விருந்தில் கருவில் திருஉடையவர்கள் தவிர, மற்றவர்கள் ஏன் ஒழுக்க வாழ்விற்கு  போராட வேண்டியிருக்கின்றது,

     என்றும் அறிந்து கொண்டோம்.

    ன்றைய விருந்தில்,

           ஔவையார், மூதுரையில் நான்கு நல்லவைகளைக்  கூறுவதனைக் கவனிப்போம்.  கருமைய அறிவியல் மற்றும் கல்வியின் நான்கு அங்கங்களையும் அறிவோம்.

         ஒழுக்கமின்மையில் பல காலம் பழகிவிட்டு,ஒழுக்கம் கடைபிடிப்பிடிக்கும் மாற்றத்திற்கு   திடீரென வருவதென்பது போராட்டமாக இருக்கும் என்பதால்,  ஒழுக்கம் கடைபிடிப்பதை விட்டுவிடலாம்  என்று சௌகரியமாக எடுத்துக்  எடுத்துக்கொள்ளமுடியாது. ஒழுக்கமற்ற வாழ்க்கை ஒரு வேளை, ஆரம்பத்தில் சுகமாக இருப்பதுபோல் தோன்றினாலும், முடிவில் துன்பத்தையே நிச்சயமாக, தனக்கோ, அல்லது தன் வம்சாவளிக்கோ கொடுக்கும். அப்போது யார் அந்த துன்பத்தை அனுபவிப்பது? முதலில் இன்பம் அனுபவித்த அறிவுதான் அந்த துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அல்லது தனது வம்சாவளியான மகனோ அல்லது மகளோ, அல்லது அவர்களையும் கடந்து, பேரனோ, பேத்தியோ அனுபவிக்க வேண்டியிருக்கும். அல்லது அவரது ஏழாவது தலைமுறையிலும் அனுபவிக்கலாம்.

        ஒழுக்கமின்மையின் விளைவாகத் துன்பம் வரும்போது ‘ஒழுக்க வாழ்வில் இருந்து பிறழாமல்இருந்திருந்திருந்தால் இப்போது இத்துன்பம் வந்திருக்காதே’ என்று   வருந்தி என்ன பயன்? ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்’ என்பது போல்தான் அது.  நல்லொழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள எதார்த்த–சிரமத்தை எடுத்துக் கூறுவது எதற்காகவெனில்,

       1) உலகநாதர் உலக நீதியில் அறிவுறுத்தியதுபோல் மனம் போன போக்கெல்லாம் போகாமல்  இருக்கவும்,

       2) ஒழுக்கம் கெட்ட பிறகு  திருந்துவதற்கு முயற்சி செய்வதில் உள்ள சிரமத்தை எடுத்துக் கூறி எச்சரிக்கவும்,

       3) மனிதன் ஒழுக்கம் கடைபிடிப்பதில் ஓயாது, தளரா விடா முயற்சியுடன்  தற்சோதனைப் பயிற்சியினை செய்து வருவதற்கும்,

     4) ஒழுக்கத்தின் அவசியம் மனப்பூர்வமாக அறிந்து. அதனை கடைபிடித்து வரும் வேளையில் எதிர்பாராமல் வரும்  சிரமங்களை கையாள்வதற்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து மனம் தளராமல் இருந்து பிறவிப்பயனை எய்துவதற்காகவும்,

    5) ஒழுக்கம் என்பது உயிரைவிட சிறந்தது என்பதால், உயிர் வாழ்வதற்கு, மூச்சுக்காற்றை சுவாசிப்பது போல், ஒழுக்கம் என்கின்ற காற்றினை, எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்க,         நல்லோர்களின் இணைப்பைத் தேடி அவா்களுடன் சத்சங்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.

        என்று அறிவுறுத்துவதற்காகவேதான். 

        இப்போதும் ஔவையார் கூறும் மூதுரையைக் கவனத்தில் கொள்வோம்.

    moodhurai-ovvaiyar

     

    •  நான்கு நன்றுகளைக் கூறுகிறார் அவ்வையார்.  நன்று என்பது என்ன?
    • நல்லது என்று பொருள்.  பாராட்டைத் தெரிவிக்கும் சொல்.
    • எது நல்லதாக அமையும்?  எதற்காக நல்லோரைக் காண விழைகிறோமே அது நல்லதாக அமையும் என்று பொருள்.
    • அதாவது அடிப்படையில் நல்லொழுக்கத்தை கற்று அதன் வழி நிற்பதற்காகவே நல்லாரைக் காண விழைவதால் அது நல்லதாகவே அமையும் என்று பொருள்.
    • ‘நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே’ என்பது எதற்காக?
    • நல்லார் குணங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே!
    • எப்போது நல்லவருடைய குணங்களை ஒரு மனிதன் பாராட்டுவான்? எடுத்துரைப்பான்?
    • அவனுக்கு நல்லாரின் குணங்கள் மிகவும் பிடித்திருந்தால் அக்குணங்களின் தன்மை தானாகவே, மீண்டும், மீண்டும் நினைவிற்கு அடிக்கடி வந்துபோகும்.  இவனும் விரும்பி நினைவிற்கு கொண்டு வருவதோடு, அதனை பிறர்க்கும் எடுத்துச் சொல்வான்.
    • அவ்வையார் கூறுவதில் உள்ள அறிவியல் என்ன?
    • திருவேதாத்திரிய மந்திரம் 10 உரைப்பதுபோல், இயல்பூக்க நியதிதான் அந்த அறிவியல்.
    •  ‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது. ரசிக்கவும் முடியாது.’ என்பது இயல்பூக்கத் தேற்றத்தின்(theorem) கிளைத்தேற்றம்(Corollary). என்பதால், நல்லாரின் குணத்தைப் பெறுவதற்காக,  நல்லாரைச்சந்தித்து அவரது குணங்களில்  உயர்ந்து வருகிறான் என்று பொருள்.
    • ஆகவே நன்று என்று அவ்வையார் கூறுவது,  நல்லொழுக்கனாக மாறுவதேயாகும்.  

           சிறப்புக்களையும், பெருமையையும் உடைய ஒழுக்கம் கடைபிடிப்பதை மனிதன் ஏன் விரும்புவதில்லை? பழக்கப்பதிவிடம், விளக்கப்பதிவு தோற்பதேயாகும்.  அதாவது நல்லொழுக்க விளக்கப்பதிவு, நல்லொழுக்கமில்லாப் பழக்கப்பதிவிடம்(தீயொழுக்கப்பதிவு), தோற்கின்றது.  இந்நிகழ்விற்குப் பின்னால் உள்ள அறிவியலை(hidden Science in  the defeat of Wisdom bythe habits) ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்கின்ற பொன் மொழியை உதிர்த்து, அதற்கான அறிவியல் விளக்கமும் அளித்துள்ளார் முதன் அறிவியல்-அறிவியலாளர்.  அதுதான் திருவேதாத்திரியத்தின் மகிமையிலும் மகிமை.

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதில் உள்ள அறிவியல் விளக்கம் என்ன? முதன் அறிவின்—அறியவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே மனிதன் போராட வேண்டியிருக்கின்றது என்கின்ற எதார்த்தத்தை கூறுவதோடு நின்று விடாமல் அதற்கான அறிவியல் விளக்கமும் தருகிறார். எதார்த்தத்தை மட்டும் கூறியிருக்கலாம்.  ஆனால் அதனுள் மறைந்துள்ள அறிவியல் உண்மையையும் கூறுகிறார்.  ஏன்?  எந்த ஒரு குறைபாட்டையும், அதனை சரி செய்வதில் உள்ள சிரமங்களை கூறுவதோடு மட்டும் இருந்துவிடாமல்,

       அந்தக் குறைபாடுகள் ஏன் வந்தன,  அதனைச் சரிசெய்வதில் என்னென்ன சிரமங்கள் ஏற்படுகின்றன, ஏன் ஏற்படுகின்றன என்கின்ற விளக்கங்களையும் கூறுவதால், தனிமனிதன்  நிலையில், மனிதன் தனது குறைபாட்டினை சரி செய்துகொள்ளும் பயிற்சியில் உறுதியும், வெற்றி அடைவோம் என்கின்ற நம்பிக்கையும் ஏற்பட்டு தன்னைத்திருத்திக் கொள்வதில் தளராது விடாமுயற்சி செய்து வெற்றி கொள்ள முடியும்.

         குறைபாடு என்பது ஒரு தனிமனிதனிடம் மட்டும் இல்லை.  பல கோடி தனிமனிதர்களைக் கொண்டதுதான் இந்த சமுதாயம்.  ஆகவே ஒரு தனிமனிதன் திருந்தியதால் வரும் பயன் மட்டுமே போதாது இந்த சமுதாயத்திற்கு.   சமுதாயத்தில் திருந்திய நல்வாழ்வு வாழாத அனைவருமே திருந்தி, நல்வழியில் வாழ வேண்டும்.

    ஆகவே சமுதாய அளவில் குறைபாடுகளைத் திருத்துவதற்கு, சமுதாயப் பொறுப்பாளர்கள்

    • சரியான நடவடிக்கைகளையும் எடுக்கவும்,
    • அதற்கான சீரானத் திட்டங்களையும்,
    • எவ்விடத்தில்,
    • எப்போது அத்திட்டங்களை
    • எவ்வாறு கொண்டு வரவேண்டும்

    என்று  முயலும்போது,

    • ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதில் உள்ள அறிவியல் விளக்கம்’ கவனத்தில் கொண்டால் சிறப்பாக அமைய உதவியாக இருக்கும்.

         உதாரணத்திற்கு ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ போன்ற ஆன்றோர்கள் மொழிந்துள்ளதை கவனத்தில் கொண்டால்,  “ஆளும் வளரனும், அறிவும் வளரனும்” என்கின்ற திரைப்படப் பாடல் ஒன்று கூறுவதுபோல் குழந்தையிலிருந்து உடல் வளர்ந்து வருவதுபோல், அறிவும் வளரவேண்டியிருப்பதால், மாணவர்களிடையே ஒழுக்கத்தை இயல்பாக மலரச் செய்வதற்கு, பள்ளிக்கல்வியிலே ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை(ஐந்து வயதிலிருந்து பதினேழாம் வயதிற்குள்) வாழ்க்கையில் மிக மிக அவசியமான, ஒழுக்கத்திற்கு முதல் கவனம் கொடுக்க வேண்டியிருப்பதால், மற்ற பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்து, ஒழுக்கத்தைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும். ஒழுக்கத்தை இயலாக்கிடவேண்டும். மற்ற பாடங்களில் காட்டும் ஆர்வத்தைவிட மாணவர்கள் இளம்வயதில் ஒழுக்கவியல் பாடத்தில் அதிக கவனமும், ஆர்வமும் காட்டுவர். ஏனெனில் ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதனிடம் அறிவாக திகழ்வதால், அது ஒழுக்கத்திற்கு வருவதற்காகத்தான் காத்திருக்கின்றது. அதற்கு இளம்வயது பிராரப்த கர்மா சோ்த்துக் கொள்ளாத சரியான பருவம். ஆகவே மற்ற பாடங்களில் உள்ள ஆர்வத்தைவிட ஒழுக்கவியல் பாடம் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் மாணவர்கள்.

        ஒழுக்கம் என்பது மரபணுவுடன் தொடர்புடையதால், தொடர்ந்த முறையான, பன்னிரண்டு வருட கருத்தியல் மற்றும்  செய்முறைப் பயிற்சியாலன்றி ஒழுக்கப்பண்பை, மரபணுவில் பதிய வைக்க முடியாது.  மரபணுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கு நூறு ஆண்டுகள் கூட ஆகும் எனக்கூறப்படுகின்றது. ஆகவே மரபணுத் தொடர்புடைய  ஒழுக்கப்பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தி, குழந்தைகளுக்கு மாணவப் பருவத்திலேயே ஐந்து வயதிலிருந்து பதினேழாம் வயதிற்குள் ஒழுக்கவியல் கல்வியினைக் கொடுத்து விடவேண்டும்.  ஐந்து வயதிற்கு முன்னரும் தாய், தந்தையர்கள் குழந்தை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி அடிப்படை ஒழுக்கப்பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.  அதற்கு முதல் ஆசிரியா்களான பெற்றோர்களும்,  ஒழுக்கத்தின் அவசியத்தை நன்கு உணர்ந்து, தங்களின் செராக்ஸ் நகல்களான குழந்தைகளுக்கு ஒழுக்கப்பழக்கங்களை கற்றுக் கொடுக்க, செராக்ஸ் நகலின் மூலமான(original)தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு உதவுவதற்காகவே வேதாத்திரி மகரிஷி என்கின்ற கருணாமூர்த்தி மூலம் இயற்கை/இறை அருளியதுதான் மனவளக்கலை.

    இத்தருணத்தில்  06-02-2011 அன்று வெளிவந்த தினமலா், சென்னை நாளிதழில் வந்துள்ள “நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதை மரபணுதான் தீர்மானிக்கின்றது” என்கின்ற செய்தியினை பகிர்ந்து கொள்வோம்.  அச் செய்தி வந்ததை  ஒட்டி,  ஆன்ம செழிப்புறு இணையதள ஆசிரியா், அன்று, அன்பர்களுடன் இ-மெயிலில் பகிர்ந்து கொண்ட சிந்தனை விருந்து இப்போது இணையதள சத்சங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.  வாழ்க வளமுடன். 

     

    gene_dinamar_news

    dinamalar_news_06.02.2011

    அறிவின்–அறிவியலாளர், மனிதகுல விடிவெள்ளியான, சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறையாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் கல்வி என்பது,

    1)   எழுத்தறிவு,

    2)   தொழிலறிவு,

    3)   ஒழுக்கப்பழக்கறிவு,

    4)   இயற்கைத்தத்துவறிவு

    ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.  விவேகானந்தர் கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே உள்ள முழுமையை வெளிக் கொண்டுவரவேண்டும் என்கிறார்.  ஆகவே கல்வி என்பது ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால், முதல் வகுப்புக்குக் கல்வியிலேயே ஒழுக்கவியல் பாடத்தை மற்ற பாடங்களுடன் கட்டாயப்பாடமாக்கி கற்றுத்தரப்பட வேண்டும்.

    வாழ்க திருவேதாத்திரியம், வளர்க திருவேதாத்திரியம், வாழ்க மனிதகுலம். வளர்க மனித குலம். வாழ்க மனித அறிவு  வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம்.  வளர்க அறிவுச் செல்வம் என்கின்ற எண்ண அலைகளை வான் காந்தத்தில் பரப்பியும், நிரப்பியும்  வருவோமாக.

    அடுத்த விருந்தில், பழக்கத்திற்கு விளக்கத்திற்கும் இடையே போராட்டமாக உள்ளதில் உள்ள அறிவியல் உண்மையை மெய்ஞான அறிவியலாளர்  கூறுவதனை மேலும் அறிவோம் தொடரும்  14-06-2015

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 4/?

    ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 4/?

    FEAST FOR CONSCIOUSNESS – FFC 89

    அறிவிற்கு விருந்து – அ.வி. – 89

     

    07-06-2015—ஞாயிறு

         சென்ற மூன்று விருந்துகளில் ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்று சிந்தித்து வருகிறோம். இதுவரை சிந்தித்ததை சுருக்கமாகச் சற்று நினைவு படுத்திக் கொள்வோம்.

    1)   ஒழுங்காற்றலாகிய  இயற்கை/இறை மனித உடலில்  ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு, உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில்,   மனித மனதிலும்,   சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர்வதற்கு, மனிதன் எவ்வாறு இறைக்கு  வழிவிட வேண்டும் என்பது  பற்றியும்,

     2)   வள்ளுவர் கூறும் ஒழுக்கமுடைமையாகிய ஒழுக்கச்செல்வம் பூா்த்தி செய்யும்  மனிதனின் தேவை என்பது, மனிதன் மனிதனாக வாழ்வதுதான் என்றும்,

     3)   எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது, பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் மனதுடன் போராட்டம் நடப்பது நின்று விடும்.  விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியைத் தரும்  என்றும் அறிந்தோம்.

     ன்றைய விருந்தில்,

     கருவில் திருஉடையவர்கள் தவிர, மற்றவர்கள் ஏன் ஒழுக்க வாழ்விற்கு  போராட வேண்டியிருக்கின்றது என்று அறிய இருக்கிறோம்.,

     ஆதிமனிதனிடமிருந்து, கருத்தொடராக மனிதகுலம் வந்துள்ளதால்,  விலங்கினப்பண்பாகிய பிறர் வளம் பறித்தல் கருமையப்பதிவுகளாக வந்துள்ளன. ஆதிமனிதனுக்குப் பிறகு வந்த பல  தலைமுறைகளில், அவ்விலங்கினப்பண்பு செயலற்றுப் போகாமல்(மறையாமல்), மனிதனிடம் ஒழுக்கமின்மையாக வடிவெடுத்துள்ளது  எவ்வாறு என்று பார்ப்போம்.  விலங்கினப்பண்பு என்பது பிறர் வளம் பறித்தல் ஆகும். பிறருடைய வளத்தை பறித்தலாகும். அது விலங்கினங்களுக்குரியது. விலங்கினங்களில், பிறர் வளம் பறித்தல் என்பது உணவைப் பெறுவதற்காக நடைபெறுகின்றது. விலங்கினங்களுக்கு  ஆறு அறிவைவிட குறைவாக உள்ளதால் அவற்றிடம் அன்பையும், கருணையையும் கொண்ட பண்பு என்பது எதிர்பார்க்க முடியாது.

    ஆனால், ஆறாம் அறிவு மலர வேண்டிய மனிதனாக  வரும்போது, பிறர்வளம் பறித்தல் என்பது பிறருக்கு துன்பமளித்தலாகிவிடுகின்றது. மனிதனைப் பொருத்த வரை,

    பிறருக்கு துன்பமளித்தல் என்பது,

    தெளிவாக, சரியாக, அறிவுப்பூர்வமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவேதாத்திரியத்திய,

    ஒழுக்க வரையறையின் படி,  

        ஒழுக்கமில்லாததே ஆகும்.  

    ஒழுக்கம் என்பது மனிதனின் அன்பையும், கருணையையும் பிரதிபலிக்கும் அருட்கண்ணாடி.

    ஆகவே ஒழுக்கமின்மை என்பது அன்பும் கருணையும் அற்ற விலங்கினச் செயல்.

    இவ்வாறாக விலங்கினப்பண்பாகிய பிறர்வளம் பறித்தலே ஒழுக்கமின்மையாக மாறி, பல தலைமுறைகளில் வாழ்ந்துவிட்டது ஆன்மா. எனவே விலங்கினப் பண்பாகிய பிறர்வளம் பறித்தலே ஒழுக்கமின்மையாக–தீயொழுக்கமாகமாறி, அது ஆன்மாவிற்குப் அழுத்தமான பழக்கமாகிவிட்டது.

    இந்நிலையில்–

    • இப்போது, இப்பிறவியில்,  ஒழுக்கம் பற்றிய அறிவியலும்(Science of Discipline),
    • ஒழுக்க  வாழ்வே புண்ணியம் தரக் கூடியது என்கின்ற உண்மையும்,
    • ‘செயலிலே விளைவாக வருபவன் இறைவன்’ என்று திருவேதாத்திரியம் மொழிவதால்,
    • இறைவழிபாட்டின்  இலக்கணமே, இறைக்கு இணக்கமான ஒழுக்க வாழ்க்கையை வாழ்வதே என்பதும்,
    • ஏற்கனவே ஆன்மா பல தலைமுறைகளில் செய்துள்ள பாவங்களை சமன்படுத்த இனிமேலாவது ஒழுக்க வாழ்வு வாழவேண்டும் என்கின்ற முடிவும், இந்தப் பிறவியிலாவது உற்ற வயதில் கிடைத்திருந்தால்  பரவாயில்லை.

    ஆனால், பெரும்பாலும் மனிதனின் வாழ்நாளில்,

    மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்கின்ற விளக்கங்கள் இளம் பிராயத்தில் கிடைக்காமல்,

    காலம் கடந்து கிடைப்பதால், அதற்குள், இப்பிறவியில், மனிதன் ஏற்படுத்திக் கொண்ட பிராரப்த கா்மமும், ஏற்கனவே அவன் பிறக்கும் போது, பல தலைமுறைகளில் சேர்த்துக்கொண்டு வந்துள்ள சஞ்சித கர்மமும் இணைந்து  கொள்வதால்,

    பழக்கப்பதிவின் அழுத்தம், விளக்கப்பதிவின் அழுத்தத்தைவிட வலிமை உடையதாக இருப்பதால், பழக்கப்பதிவு விளக்கப்பதிவை வென்றுவிடுவது எதார்த்தமாக உள்ளது.

    எதார்த்தம் என்பதால் அதன் போக்கிற்கு விட்டு விட முடியாது.  எதார்த்தம் நல்லதாக இருந்தால் பரவாயில்லை.  எதார்த்தம் தீமையை அளிப்பதாக இருந்தால் அதனை கடும்முயற்சியுடன் பயிற்சி செய்து மாற்றியே ஆகவேண்டும்.  அதற்கு தவம், தற்சோதனை அடங்கிய  மனவளக்கலை சிறந்த பயிற்சியாக உள்ளது.  இதுவரை ஆன்மீகம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது உலகியல் வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டாலும் சரி, தவத்துடன் கூடிய தன்னைத்திருத்திக் கொள்ளும் தெய்வீகப் பயிற்சியான தற்சோதனைப் பயிற்சி  இல்லை.

    ‘நல்லதையே எண்ணுதல் வேண்டும்’, ஆறுவது சினம்’, ‘பேராசை பெருநஷ்டம்’ என்று அறிவுரைகள் இருந்ததே தவிர அதற்கான பயிற்சிகள் இல்லை.  இப்போது மனவளக்கலை அதனை கருத்தியலாகவும், செய்முறை பயற்சியாகவும் அளித்து வருகின்றன.  எனவேதான் மனவளக்கலை என்பது ஒரு சாதனை மார்க்கம் எனப்படுகின்றது.

    ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’  என்பதால், ஐந்து வயதிலிருந்து பதினேழு வயது வரை பள்ளிக் கல்வியுடன் சேர்த்து ‘ஒழுக்கவியல் பாடம்’ கட்டாயப் பாடமாகப் படிக்கும் வாய்ப்பிருந்திருந்தால், ஒழுக்கம் கடைபிடிப்பது கடினமாக இராது. ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரையில் நடத்துவதற்க்கான பாடத்திட்டங்கள் (syllabus contents)  மனவளக்கலை யோகாவில் உள்ளன.

    ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்று ஆன்றோர்கள், எதார்த்தத்தை கூறியுள்ளார்கள்.  இதன் பொருள் குழந்தைப்பருவத்தில்/இளமையில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கமே இறக்கும் வரை தொடரும் என்பதாகும்.  பழைய பழக்கத்தை மாற்றுவது கடினம் என்பதால் இளமையிலே நற்பழக்கங்களைக் பழகிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது அறிஞர்களால்.  அப்படி இல்லாத காரணத்தால், ஒழுக்க வாழ்க்கை  வாழ்வதற்கு அறிஞர் ரூஸோ கூறியுள்ளது போல் மனதுடன் போராட வேண்டியிருக்கின்றது.

    1282131249_315467b

    ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

    போராட்டம் என்பது என்ன?— கயிறு இழுக்கும் போட்டி (tug of war)

    ஒழுக்கமின்மை–பழக்கத்திற்கும், ஒழுக்கவாழ்வு—விளக்கத்திற்கும்(between habit and wisdom) இடையே கயிறு இழுக்கும் போட்டி போல் (tug of war) போராட்டம் நடைபெறுகின்றது.  எண்ணிலடங்கா தலைமுறைகளில் ஏற்பட்டுள்ள ஆன்மாவின் பழக்கப்பதிவுகளின் அழுத்தத்தை, இப்பிறவிக்கு கொண்டு வந்துள்ள மனிதன், இப்பிறவியில்  விளக்கம் கிடைத்த பிறகு, ‘ஒழுக்க வாழ்வு வாழவேண்டும்’ என்கின்ற முடிவு எடுத்தாலும்,  விளக்கப்பதிவுகளின் அழுத்தம் மிக மிகக் குறைவாக இருப்பதால்  பழக்கப்பதிவை வெற்றி கொள்வதில் அதிக சிரமம் உள்ளதாக இருக்கின்றது.  இதனைத்தான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள்.  இதனை கயிறு இழுக்கும் போட்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    கயிறு இழுக்கும் விளையாட்டுப் போட்டி என்பது, இரு குழுக்கள்(teams) எதிர் எதிராக நின்று கொண்டு கயிற்றை இழுக்கும் ஒரு விளையாட்டு.  அந்த விளையாட்டில் எந்தக்குழுவால் அதிக வலிமையுடன், கயிறு இழுக்கப்படுகின்றதோ, அந்த பக்கம் வலிமை குன்றிய குழுவிலுள்ளவர்கள் சாய்ந்து விடுவர்.  அவர்கள் தோற்றவர்களாகிவிடுவர்.

    • பழக்கப்பதிவிற்கும், விளக்கப்பதிவிற்கும் இடையே நடக்கும் கயிறு இழுக்கும் போட்டியில்,
    • பழக்கப்பதிவின் அழுத்தம் அதிகமாக உள்ளதால்,
    • விளக்கப்பதிவின் அழுத்தம் குறைவாக இருப்பதால்,

    பழக்கப்பதிவு விளக்கப்பதிவை, தன்பக்கம் இழுத்து  சாய்த்துக் கொள்கின்றது.

    இதனைத்தான் இரண்டு அறிஞர்களும் ஒழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள போராட்டமாக எடுத்துக் கூறுகின்றனர்.  ஒழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள சிரமங்களை அறிஞர்கள் போராட்டம் என்பதனை  கீழே காட்டியுள்ள சுருக்கமாக விளக்கும் படங்கள் (Schematic Diagrams)மூலம் அறிந்து கொள்வோம்.

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம்

    படம் -1.1: எண்ணிலடங்கா பிறவிகளில் பழகிய பழக்கப்பதிவுகளுக்கும் இப்போதைய பிறவியில் மட்டுமே பெற்ற விளக்கப்பதிவுக்கும் இடையே போட்டி

     

    படம் -1.2. எண்ணிலடங்கா பிறவிகளில் பெற்ற பழக்கப்பதிவுகள் இப்பிறவியில் மட்டுமே பெற்ற விளக்கப்பதிவை வெற்றிகொள்கின்றது. பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவைத் தன்பக்கம் சாய்த்து விடுகின்றது.

    படம் -1.2: எண்ணிலடங்கா பிறவிகளில் பெற்ற பழக்கப்பதிவுகள் இப்பிறவியில் மட்டுமே பெற்ற விளக்கப்பதிவை வெற்றிகொள்கின்றது. பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவைத் தன்பக்கம் சாய்த்து விடுகின்றது.

     

    படம். 1.1 & 1.2 கருவில் திரு இல்லாதவர்களின்,  ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதில் உள்ள போராட்ட நிலையை சுருக்கமாக விளக்கும் படங்கள் (Schematic Diagram showing the struggle between Habit and wisdom for those without Spiritual Prudence at the time of birth).

    படம். 2. கருவில் திரு உடையவர்கள் ஒழுக்கம் கடைபிடிப்பதில் வெற்றி பெறும் நிலையைச் சுருக்கமாக விளக்கும் படம். (Schematic Diagram showing the struggle between Habit and wisdom for those with Spiritual Prudence at the time of birth itself).  பழக்கப்பதிவுகள் எண்ணிலடங்கா பிறவிகளின் வழியாக வந்திருந்தாலும் முந்தைய பிறவியில்/பிறவிகளில்  அவற்றை செயலிழக்கச் செய்து வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவது என்பது ஆழ் மனதில் இருந்திருக்கும்.

    படம். 2. கருவில் திரு உடையவர்கள் ஒழுக்கம் கடைபிடிப்பதில் வெற்றி பெறும் நிலையைச் சுருக்கமாக விளக்கும் படம். (Schematic Diagram showing the struggle between Habit and wisdom for those with Spiritual Prudence at the time of birth itself). பழக்கப்பதிவுகள் எண்ணிலடங்கா பிறவிகளின் வழியாக வந்திருந்தாலும் முந்தைய பிறவியில்/பிறவிகளில் அவற்றை செயலிழக்கச் செய்து வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவது என்பது ஆழ் மனதில் இருந்திருக்கும்.

     

    படம்-1  கருவில் திருவில்லாதவர்கள் ஒழுக்கவாழ்வு வாழ்வதில் சந்திக்கும் போராட்டத்தினை எடுத்துக் காட்டும்  படம்.  ஒழுக்க வாழ்வு வாழ்வதில் உள்ள போராட்டத்தினை கயிறு இழுக்கும் போட்டியுடன் ஒப்பிடலாம். கயிறு இழுக்கும் போட்டி என்பதால்,ஒரு குழுதான் வெற்றி பெறமுடியும்.  போட்டியில் இருகுழுக்களிலும்  சமமான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் இருந்தாலும், மிகுந்த வலிமையுடன் கயிற்றை இழுக்கும் குழுதான் வெற்றி பெறமுடியும். இரண்டு குழுவிலும் சமமான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் இருந்தாலும் ஒரு குழுவிற்குத்தான், அதிக வலிமையுடன் இழுக்கும் திறமை உள்ளது என்றிருக்கும் போது,  பழக்கப்பதிவிற்கும், விளக்கப்பதிவிற்கும் இடையே நடக்கும் மனப்போராட்டத்தில், பழக்கப்பதிவின் குழுவில் எண்ணிலடங்கா பிறவிகளின் பதிவுகள் இருப்பதால், விளக்கப்பதிவின் குழுவில் இந்த ஒரு பிறவியின் விளக்கப்பதிவு மட்டுமே உள்ளதால் பழக்கப்பதிவு வெற்றி பெறுவது எளிதாக உள்ளது.  எனவேதான் ஒழக்க வாழ்விற்கான கயிறு இழுக்கும் போட்டியில் பழக்கப்பதிவே வெற்றி பெற முடிகின்றது. காரணம் பழக்கப் பதிவு இன்று நேற்று ஏற்பட்டதன்று.  தொன்றுதொட்டு, காலங்காலமாக பழக்கப்பதிவின் ஒவ்வொரு பிறவியிலும் மீ்ண்டும் மீண்டும், மீண்டும் (மீண்டும்infinite — to the power infinite)அழுத்தம் பெற்றுள்ளதால் பழக்கப்பதிவு விளக்கப்பதிவை வெற்றி கொள்கின்றது.

    அப்படியானால், விளக்கப்பதிவின் அழுத்தம் அதிகரிக்க எத்தனை தலைமுறை காத்திருக்க வேண்டுமோ என ஐயமும், அச்சமும் எழலாம்.   இப்பிறவியிலே மட்டும், பெற்ற  விளக்கப்பதிவுகளைக் கொண்டே, பழக்கப்பதிவை இப்பிறவியிலேயே வெற்றிக் கொள்வதற்காக இயற்கை கருணையோடு கொடுத்ததுதான் கருத்தியல், செய்முறைப் பாடங்கள் அடங்கிய திருவேதாத்திரியமாகும். எனவே கருவில் திருஉடையவர்களல்லாதவர்கள்கூட இப்பிறவியிலேயே திரு எய்த முடியும் என்கின்ற  உறுதியினை அருளுகிறார்  அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    படம்-2-  கருவில் திரு உடையவர்களுக்கு  ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் என்பது எழ வாய்ப்பில்லை.  அப்படி ஏதேனும் போராட்டம் எழுந்தாலும் அவர்கள் எளிதில் பழக்கப்பதிவை வெற்றி கொள்வர்.  அவர்கள் முந்தைய பிறவிகளில் தீய வினைகளை சமன்படுத்தியவர்கள்.  மேலும் முற்பிறவியிலேயே, வாழ்வின் நோக்கம் என்பது என்ன என்று அவர்களின் ஆழ்மனது சிந்திருக்கலாம்.  அவர்கள் பண்பாளர்களாக, அல்லது பண்பாளராக ஆவதற்காகக் கருமையப் பதிவுகளை பிறக்கும் போது சொத்தாக கொண்டு வந்தவர்களாக இருப்பர்.

    அடுத்த விருந்தில் (10-06-2015 – புதன்),பழக்கப்பதிவிடம், விளக்கப்பதிவு தோற்பதற்குப் பின்னால் உள்ள அறிவியலை(hidden Science behind  the defeat of understanding bythe habits) வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளவாறு அறிவோம்தொடரும் 10-06-2015 – புதன்.

     

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 3/?

    ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 3/?

    FEAST FOR CONSCIOUSNESS – FFC – 88

    அறிவிற்கு விருந்து – அ.வி. – 88

    03-06-2015—புதன்

    Swamiji

    இதுவரை ‘Science’ எனும் அறிவியலில் அறிவைப்பற்றிய(Consciousness) எளிமையான விளக்கங்கள் இல்லாத நிலையில், சென்ற விருந்தில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவை, தான் அனுபவத்தில் அறிந்ததோடு மட்டுமல்லாது, அதனை இயலாக்கி, உலகசமுதாயம் அறிவை தன் அனுபவமாக அறிந்து கொள்ளும் வகையில் அறிவுப்பூர்வமாக தெரிவித்துள்ளதால் அறிவைப்பற்றிய இயல், அறிவின்—இயல் என்றும், அதனை முதன் முதலில் தெரிவித்ததால், வேதாத்திரி மகரிஷி அவர்களை முதல் அறிவின் –அறிவியலாளர் என்றும் அறிந்து கொண்டோம். ஏற்கனவே ‘science’ என்கின்ற ஆங்கில வார்த்தை, தமிழில் அறிவியல் என்று சொல்லப்படுவதால், ‘the Science of Consciousness’ ஐ அறிவியல் என்று சொல்லாமல், அறிவின்—அறிவியல் என்கிறோம்.

    இன்றைய விருந்தில் ‘What is Science?’, விஞ்ஞானம், மற்றும் அறிவியல் ஆகிய சொற்களின் பொருள் பற்றியும், போராட்டம் என்பது என்ன, மனதுடன் போராடுவது என்பது என்ன என்று அறிந்து கொள்ள இருக்கிறோம். ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டிய காரணத்தையும், பல்லாயிரம் தலைமுறைகளில் ஆன்மா ஏற்படுத்திக் கொண்ட வினைப்பதிவுகள் மற்றும் அதன் அழுத்தத்தையும், அது விளக்கப்பதிவை வெற்றி கொள்ளாமல் இருக்க எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    Science of Consciousness – அறிவு இயல்/அறிவியல்/அறிவின் இயல்

    Let us know what is Science? Science is the concerted human effort to understand, or to understand better, the history of the natural world and how the natural world works, with observable physical evidence as the basis of that understanding. The word science comes from the Latin “scientia,” meaning knowledge. … obtained and tested through scientific method [and] concerned with the physical world.
    Science is the study, description, experimental investigation and theoretical explanation of the nature and behaviour of phenomena in the physical and natural world. A branch of systematised knowledge as an object of study.

    ‘Science’ என்பது என்ன? ‘Science’ என்பது இயற்கையைப்பற்றியும், எவ்வாறு இயற்கை இயங்குகின்றது, இயற்கையிலுள்ள பொருட்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும் அறிவு பூர்வமாக அறிவது. இயற்கையிலுள்ள பொருட்கள் எவ்வாறு தோன்றின என அறிய வேண்டுமானால், பொருட்களுக்கு அடிப்படையாக உள்ளதை அறியவேண்டும். ஆகவே பொருட்களுக்கு அடிப்படையாகவுள்ள அணுக்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இயற்கை இயங்குகின்ற தன்மைகளை அறிந்து கொள்ளும் விளக்கமே விஞ்ஞானமாகும். விண்+ஞானம்=விஞ்ஞானம்.

    அணுவின் அசைவு நிகழ்ச்சியாகும். அதிலிருந்து அணுக்கள் கூடி இணைந்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் காலம், தூரம், பருமன், வேகம் என்கின்ற 4 அளவைகளால்(measurements) கணிப்பது விஞ்ஞானமாகும். அந்த நிகழ்ச்சிகளால் மனித வாழ்வில் ஏற்படுகின்ற விளைவுகளை யூகித்து தன்னுடைய விருப்பத்திற்கும், தேவைக்கும், ஏற்றபடி அவ்விளைவுகளைப் பயன்படுத்தவும், இந்த நோக்கமும், செயலும் வெற்றி பெற உடல் கருவிகட்குத் துணைக் கருவிகளாக இயந்திரங்களையும், நுட்ப அளவைக் கருவிகளையும் உற்பத்தி செய்து பயன் கொள்வதும் விஞ்ஞானத்தின் சிறப்புக்கள்.

    ‘Science’ என்கின்ற ஆங்கில வார்த்தை தமிழில் `விஞ்ஞானம்’(விண்+ஞானம்=விஞ்ஞானம்) என்று சொல்லப்பட்டு வந்தது. இப்போது ‘Science’ என்கின்ற ஆங்கில வார்த்தை தமிழில் அறிவியல் என அழைக்கப்பட்டு வருகின்றது. ‘விஞ்ஞானம்’, ‘அறிவியல்’ ஆகிய இரண்டு சொற்களின் பொருளை கவனிப்போம்.

    விஞ்ஞானம் என்பது விண்ணைப்பற்றிய ஞானம்; ஞானம் என்றால் அறிவு, தெளிவு என்று பொருள். விஞ்ஞானம் என்றால் விண்ணைப்பற்றிய அறிவு. அதாவது அணு, அதன் துணை அணுக்களான புரோட்டான், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகியவைகளைப்பற்றிய அறிவு. ஆகவே அது விஞ்ஞானம் எனக்கூறப்பட்டு வந்தது.

    அறிவியல் என்கின்ற சொல் ஒரே சொல்லல்ல. அது இரண்டு சொற்களைக் கொண்டதாக உள்ளது. அதாவது அறிவு, மற்றும் இயல் என்கின்ற சொற்களைக் கொண்டது. இந்த இரண்டு சொற்களைச் சேர்த்துத்தான் அறிவியல் என அழைக்கப்படுகின்றது. (மருத்துவம்+இயல்=மருத்துவவியல்) மருத்துவ இயல் (Medical Science) என்றால் அதில் மருத்துவம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும், அதில் மருத்துவம் பற்றி ஆராயப்படும். அதுபோன்று ‘Science’-அறிவியல்(அறிவு+இயல்=அறிவியல்) என்றால் அறிவைப்பற்றி ஆராய்ச்சி செய்யப்படவேண்டும். ஆனால் இதுவரை இடம் பெறவில்லையே. அறிவை பற்றி ஆராய்ச்சி இருக்கும் இயல்தானே அறிவியல் எனப்படவேண்டும். தற்போது ‘Science’ ஐ அறிவியல் என்று வழக்கத்தில் பொதுவாக கூறிவருவதால், அறிவு பற்றிய அறிவியலை– ‘Science of Consciousness’ஐ நாம் ‘Medical Science’ ‘Physical Science’ என்று கூறுவது போல் அறிவின்-–அறிவியல் என்கிறோம். அறிவை ஐயமின்றி நுணுகி ஆராய்ந்து அறிந்தவரை அறிவின் அறிவியலாளர் (Scientist of Consciousness) என்கிறோம்.

    ‘பாவம், புண்ணியம்’ என்பது மதச்சார்புடைய வார்த்தைகள் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், ‘பாவம், புண்ணியம்’ என்பதனை அறிவியலாக்கி பாவம் என்பது ஒழுக்கமின்மையாகவும், தீயொழுக்கமாகவும், புண்ணியத்தை ஒழுக்கமாகவும் அறிவியல் ரீதியாகக் கூறுகிறார் மகரிஷி அவா்கள்.

    ஒழுக்கத்திற்கு மகரிஷி அவர்கள் கூறும் வரையறை என்ன? எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் விளைவால் தனக்கோ, பிறர்க்கோ, சமுதாயத்திற்கோ, எந்தவகையிலும் நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ தீங்கு நிகழாமல், நன்மையே இருந்தால் அது ஒழுக்கமாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே ஒழுக்கத்தின் விளைவு நன்மையாகின்றது. ஆகவே ஒழுக்கம் எப்போதும் நன்மையைத் தருவதால் அது புண்ணியச் செயலாகின்றது. தீங்கு நிகழ்ந்தால் அது ஒழுக்கமின்மை- தீயொழுக்கம் என்றாகின்றது. ஒழுக்கமின்மை தீங்கைத் தருவதால் அது பாவமாகின்றது.

    அறிஞர் ரூஸோ, சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர், மகரிஷி அவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி கூறியுள்ள கூற்றுகளைப் பார்த்தோம். இந்த நான்கு கூற்றுகளையும் இணைத்து நாம் சிந்திக்க வேண்டியது என்ன? அறிஞர்கள் நன்றாக கூறியுள்ளார்கள் என்று கூறிவிட்டு விட்டு, அதோடு சென்று விடுவதா? இதற்காகத்தானா இந்த நான்கு அறிஞா்களும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறியுள்ளனர்?! சமுதாயம், ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக, சமுதாய அக்கறையோடு சொல்லி இருக்கிறார்கள் நான்கு அறிஞர்களும்.

    ‘ஒழுக்கம் போர்க்களம் போன்றது’ என்று ரூஸோ சொல்வதால் ஒழுக்கம் கடைபிடிப்பது கடினம் என்று ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் இருந்து விடுவதா? திருவள்ளுவர் ஒழுக்கத்ததைப்பற்றிக் கூறி 2046 வருடங்கள் கழிந்து விட்டன. இது வரை வந்துள்ள அறநூல்களே போதும் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேலும் புதிய அறநூல்கள் ஏதும் அவசியம் இல்லை என்கிறார். அறம்பிறழா நெறி நின்று வாழ, அவசியமான பொருட்களுடன் கல்வி கிட்டுவதற்கு அறவோர்களை திட்டமிட்டு அமுல் செய்ய வேண்டுகோள் விடுக்கிறார் அறநெறியாளரும், உலகநலத் தொண்டருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். இங்கே சாதனையே அறநெறி(21.12.1961) என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.

    FFC-88-3-6-15-சாதனையே அறநெறி-கவி

    “ஒழுக்கம் போர்க்களம் போன்றது”, என்று அறிஞர் ரூஸோ சொல்வதால், போரிட்டுத் தான் ஒழுக்கத்தை வெல்ல வேண்டும் என்றாகின்றது. ஒழுக்க வாழ்வு வாழ வேண்டுமெனில் ஓயாமல் (இடை விடாது – தொடர்ந்து– consistent effort) மனதோடு போராட வேண்டும் என்கிறார் அறிஞர். ‘ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்’ என்பதால் கடைசி மூச்சு வரை மனப்போராட்டம் செய்து கொண்டு போராட்ட வாழ்க்கைதான் வாழ வேண்டுமா? அப்படியில்லை. எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் போராட்டம் நின்று விடும். விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியினைத் தரும்.

    வினைப் பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப்போக்க ஒவ்வொருவரும், வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். (சிந்திக்க வினாக்கள்—76–28-05-2015–வியாழன்  Click here) தொண்ணூறு வயது முதியவர் கூட கடைசி மூச்சு வரை ஒழுக்க வாழ்வு வாழ்ந்தேதான் ஆக வேண்டும்.

    இங்கே மகரிஷி அவர்கள் கூறும் மனிதனைப்பற்றிய வரையறையை கவனிப்போம் “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் மனிதன்”, என்கிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்களின் இந்தக் கூற்று ரூஸோ அவர்கள் கூறும் ஒழுக்கத்தைப் பற்றியா? ஆம். ஒழுக்கமில்லாமல் அறியாமையாலோ அல்லது அலட்சியத்தாலோ அல்லது உணர்ச்சி வயத்தாலோ, அல்லது இம்மூன்றும் சேர்ந்த அறிவின் குறைபாடுகளாலோ
    முழுமையான ஒழுக்கமில்லாமல்,
    பல தலைமுறைகள் வாழ்ந்து விட்ட ஆன்மாவிற்கு,
    இன்று ஒழுக்கவாழ்வின் மேன்மையை அறிந்து கொண்டு,
    நாளை முதல் ஒழுக்க வாழ்வு வாழ்வதென்பது,

    ஏற்கனவே ஒழுக்க நெறியில், வாழ்ந்து வரும், கருவில் திருஉடையவர்களைத்தவிர மற்றவர்களுக்கு சிரமம்தான் என்கின்ற எதார்த்தத்தை எடுத்துச் சொல்வதுதான் மகரிஷி அவர்கள் மனிதனைப் பற்றிக் கூறும் அந்த வரையறை. சிரமம் என்கின்ற எதார்த்த நிலையைக் கூறினாலும் பல்லாயிரம் பிறவிகளாக பழிச்செயல்களை செய்திருந்தாலும், ஒரு பிறவியிலேயே அதனை மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றலை இயற்கை கருணையோடு கொடுத்துள்ளது என்கிறார் மகரிஷி அவர்கள். அதுதான் தவமும், அறநெறிவாழ்க்கையுமாகும்.

    மனிதனுக்கான பொதுவான வரையறைகள் என்ன?

    Man is a bundle of thoughts. —————————————– மனிதன் எண்ணங்களின் தொகுப்பு.

    Man is a social animal. ———————————————— மனிதன் ஒரு சமுதாயப் பிராணி.

    Man is a living being endowed with sixth sense. —————— மனிதன் ஆறாம் அறிவுடைய ஒரு உயிரினம்.

    மகரிஷி அவர்கள் கூறும் மனிதனுக்கான வரையறை என்ன? மகரிஷி அவா்கள் மனிதனுக்குக் கூறும் வரையறையாவது — “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்”

    மகரிஷி அவர்கள் கூறும் மனிதனுக்கான இந்த வரையறை, அறிஞர் ரூஸோ, “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” (சிந்திக்க அமுதமொழி – 49 – 20-02-2015—வெள்ளிக்கிழமை Click here) என்று கூறுவதோடு ஒத்துப் போகின்றது. இரண்டு பொன்மொழிகளும் ஒத்துப் போகின்றது என்றால் இரண்டு பொன்மொழிகளும் ஒரே உண்மையைக் கூறுகின்றன.

    இரண்டு பொன் மொழிகளிலும் போராட்டம் என்பது பொதுவாக உள்ளது.
    ஆகவே போராட்டம் என்பதற்கான பொருள் அறிய வேண்டும்.
    மனதுடன் போராட வேண்டும் என்கிறார் அறிஞர் ரூஸோ. எவ்வாறு மனதுடன் போராடுவது?
    மனவளக்கலைஞா்களாகிய நாம் மனதைப் பற்றி அறிவோம். மனதை செம்மைப் படுத்தும் தெய்வீகப் பயிற்சியான அகத்தாய்வு பயிற்சியையும் செய்யத் தெரியும் நமக்கு.

    இந்த இரண்டு பொன் மொழிகளும் ஒரே உண்மையினை தெரிவிக்கின்றது என்பதால், ஒழுக்கத்தைப்பற்றியே இரு அறிஞர்களும் கூறுகிறார்கள். அறிஞர் ரூஸோ, ஒழுக்கத்தைப் பற்றி நேரிடையாகவே கூறுவதற்கு, ‘ஒழுக்கம் கடைபிடிக்க போராட வேண்டும்’ என்கிறார்.

    மகரிஷி அவர்கள் ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்பதால், மகரிஷி அவர்கள் ‘பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடுவது என்று கூறுவதும், அறிஞர் ரூஸோ ‘ஒழுக்க வாழ்க்கை வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்’ என்று கூறுவதும் ஒன்றே. இருவருமே ஒழுக்கம் கடைபிடிப்பது பற்றி கூறுகிறார்கள்.

    சென்ற விருந்தில், ஏழு தலைமுறைகளில், 127 ஆன்மாக்களின் தொடர்பை அட்டவணையின் மூலம்(Chart) அறியலாம் என்று கூறி இருந்தோம். இச்சிந்தனை விருந்து நீண்டு கொண்டே இருக்கும் காரணத்தால், அதனை இவ்விருந்தில் கூற இயலவில்லை. அடுத்த விருந்தில்(07-06-2015—ஞாயிறு) அதனை அறிவோம். தொடரும் (07-06-2015—ஞாயிறு)

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 2/?

     

    ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 2/?

    FEAST FOR CONSCIOUSNESS – FFC – 87

    அறிவிற்கு விருந்து – அ.வி. – 87

    31-05-2015—ஞாயிறு

    Scientist of Consciousness

    ஒழுக்க நெறி பற்றியும், ஒழுக்கத்தை வாழ்வில் உறுதியாகக் கடைபிடிப்பதிற்கு, மனதுடன் அறிவு போராட வேண்டியுள்ளதற்கான காரணம் என்ன, அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற வழி என்ன என்று சென்ற அறிவிற்கு விருந்தில் சிந்திக்க ஆரம்பித்தோம். அச்சிந்தனையில், இது வரை புண்ணியம், பாவம் என்கின்ற ஆன்மீகச் சொற்களுக்கு முறையே நல்லொழுக்கம், தீயொழுக்கம் ஆகியன எவ்வாறு விஞ்ஞானச் சொற்களாக அமைகின்றன என்று பார்த்தோம்.

    இன்றைய சிந்தனையில்,
    தடம் புரண்ட மனிதவாழ்க்கை எனும் ரயில் என்ஜினை(derailed man’s life—rail engine) எவ்வாறு போராடி, ஒழுக்க நெறி தண்டவாளப்பாதையில் (rail track), அதாவது வாழ்க்கை எனும் ரெயில் என்ஜினை தூக்கி வைத்து, வாழ்க்கை பயணத்தை
    செம்மையாகவும் சிறப்பாகவும் முடிக்கும் வழியில் வாழ்ந்து,
    தினந்தோறும் சங்கல்பம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் உயர் புகழை அடைந்து, நாம் இப்புவிக்கு வந்து போனதற்கான அடையாளத்தை (trace of this precious human birth) இப்பிறவியிலாவது, பதிப்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    இச்சிந்தனையில் அறிவு தன்னைப் பற்றி சொல் என்று அறிவுறுத்தியதால், அறிவு பற்றி சுருக்கமாக அறிவின்–அறிவியல் மற்றும் முதல் அறிவின்–-அறிவியாலாளர் யார் என்பது பற்றியும் அறிய இருக்கிறோம். ஆகவே, இன்றைய சிந்தனையான ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்கின்ற தலைப்பிலிருந்து வெளியே சென்று விட்டதாகக்கருத வேண்டாம். இச்சிந்தனையைச் செய்து கொண்டிருக்கும் அறிவேதான், தன்னை மேம்படுத்திக் கொள்ள முழுமை அடைய விரும்பித்தான் இச் சத்சங்கத்தில் பங்கு கொண்டுள்ளது.

    ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற விளக்கத்தை பெற வேண்டும் என்று எண்ணுவது அறிவுதானே! ஆகவே அதனைப் பற்றி தெரிந்து கொள்வதும் பொருத்தமாக இருக்கின்றதல்லவா?! சந்தர்ப்பம் வரும்போது கூடுதலாகத் தெரிந்து கொள்ளப்பட வேண்டியது இருப்பதால் தெரிந்து கொள்ளவது நலம்தானே. கல்விக்கூடங்களில், நடத்தப்படும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக பாடத்திட்டம்(Syllabus) ஏற்படுத்தப்பட்டு, அதற்குமேல் அதிகமாக அந்த பாடத்தை படிக்க வேண்டிய அவசியமிருக்காது. அப்படி ஏதாவது அந்த பாடத்திட்டத்தையும் கடந்து, தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டால் அது ‘out of syllabus’ என்று கூறுவர். அதுபோல் அல்ல அறிவின் தரத்தை மேம்படுத்தி, அறிவை முழுமை செய்விக்கின்ற பாடம் என்பது. எப்பொழுதெல்லாம் கூடுதலாக தகவல்கள் கிடைக்கின்றதோ, அதனை உள்வாங்கி வைத்துக் கொண்டால் நம்முடைய தொடர் சிந்தனைக்கு உதவியாக இருக்கும்.

    ஒழுக்க வாழ்விற்கு போராடவேண்டியிருப்பதால், எப்போது அப்போராட்டம் முடிவிற்கு வரும் என்பதனை முதலில் அறிவோம். யாரும் போராட்டத்தை விரும்புவதில்லை. அமைதியைத்தான் விரும்புவா். தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்காமல், அமைதியை இழக்கவைக்கும் போராட்டத்தை இன்னமும் எத்தனை நாள்தான் நடத்தி வாழ்க்கையையே வீணடிப்பது? ஆகவே ஒழுக்க வாழ்விற்காக, மனதுடன் நடத்துகின்ற போராட்டம் எப்போது முடிவிற்கு வரும் என்கின்ற ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆகவே போராட்டத்தின் முடிவு எப்போது வரும் என்கின்ற ஐய-வினாவிற்கு விடையை அறிவோம்.

    போராட்டத்தின் முடிவு,
    ‘மனிதனாக பிறந்து விட்டவர் நல்லவனாக வாழ வேண்டும்’ என்கின்ற உன்னதமான ஆசையில், அவரவர்கள் கொண்டுள்ள மிகுந்த ஆர்வத்தைப் பொருத்தும்,
    திருவள்ளுவர் கூறும் ‘நாணத்தை’ (அதிகாரம் நாண் உடைமை- குறள் எண். 1011-1020)எந்த அளவிற்கு உடைமையாக்கிக் கொண்டிருப்பதைப் பொருத்தும்,
    ஒழுக்கப் பயிற்சியில் எடுக்கும் தளரா விடா முயற்சியினைப் பொருத்தும்,
    அவரவர் வாழும் சமுதாயச் சூழலைப் பொருத்தும்,
    மரபணு/கருமையப் பதிவுகளையும் பொருத்தும்,
    நல்லோரிடம் கொண்டுள்ள இணக்கத்தைப் பொருத்தும், அதில் காணும் பேரின்பத்தைப் பொருத்தும் அமையும்.

    அடுத்ததாக, 2046 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த – உலக பொது மறையை அருளிய அறிஞர் திருவள்ளுவர், ஒழுக்கம் பற்றி கூறுவதனை ஆராய்வோம்.

    திருவள்ளுவர், ஒழுக்கம் உயிரைவிட மேலானதாகக் கருதப்பட வேண்டும் என்று கூறி ஒழுக்கத்திற்கு ஓர் அதிகாரத்தையே ஒதுக்கி அதற்கு ஒழுக்கமுடைமை(ஒழுக்கம்+உடைமை) எனப் பெயரிட்டு பத்து குறட்பாக்களை அருளியுள்ளார். ‘உடமை’ என்றால் ‘ஒருவருடையது’ என்பதாகும், ‘ஒருவருடையது’ என்கின்றபோது, அது அவரது செல்வமாகிவிடுகின்றது. ஆகவே ஒழுக்கமுடைமை என்று கூறுவதால் ஒழுக்கத்தைச் செல்வமாகக் கருதுகிறார் அறிஞர் திருவள்ளுவர்.

    செல்வம் சோ்ப்பது எதற்காக? தேவை ஏற்படும் போது செலவழிப்பதற்காக. தேவையைப் பூர்த்தி செய்தால் மனம் இன்புறும். செல்வம் இல்லை எனில், தேவையைப் பூா்த்தி செய்ய முடியாது. தேவையைப் பூர்த்தி செய்ய வில்லையென்றால், அப்போது மனிதனுக்குத் துன்பம் தானே வரும்? பொருட்செல்வம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள உதவுவது போல், ஒழுக்கச்செல்வம் மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும். ஆகவே ஒழுக்கமுடைமை மனிதனுக்கு இன்பத்தைத் தரவல்லது. ஒழுக்கச் செல்வம் மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்கின்றபோது மனிதனின் எந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும்?

    மனிதனின் பொதுவான தேவைகள் என்ன? மனிதனின் இன்றியமையாத் தேவைகள் மூன்றாகும். அவை உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம். இந்த மூன்றுத் தேவைகளையும் பூா்த்தி செய்து கொள்வதற்கு மனிதனுக்கு பொருட்செல்வம் தேவையாக உள்ளது. அதற்காக மனிதன் உழைத்து பொருளீட்டுகிறான். அதில் ஒரு பகுதியை சேமித்து வைக்கிறான். ஒழுக்கச் செல்வம் பூா்த்தி செய்யும் அந்த தேவை என்ன? மூன்று இன்றியமையாத் தேவைகளும் மனிதனுக்கு எதற்காகத் தேவை? மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியாகவில்லையெனில் இன்பமாகத்தான் வாழமுடியுமா?

    அப்படியானால் மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் மனிதன் இன்பமாக வாழ்கின்றானா? வாழ முடிகின்றதா மனிதனால்? எதார்த்த நிலை என்ன? எதார்த்தத்தில், இரு தரப்பினருமே, அதாவது மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியானவர்களும், பூர்த்தியாகாதவர்களும் அமைதி இழந்து துன்ப வாழ்வு வாழ்கின்றனர். காரணம் என்ன?

    மூன்று இன்றியமையாத தேவைகள் பூர்த்தியானவர்கள் ‘இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்’ என்கின்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். சிக்கிக் கொண்டால் வாழ்க்கை சிக்கலாகத்தானே ஆகிவிடும். சமுதாய அமைப்பும் ‘இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்’ என்கின்ற வலையில் சுலபமாகச் சிக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலையாகவும், முரணான பேராசையை தூண்டிவிடுவதற்கு மேற்கொண்டு தூபம் போடுவதாகவும் உள்ளது.
    ஒழுக்கச் செல்வம் பூா்த்தி செய்யும் அந்த தேவைதான் என்ன?

    மனிதன் மனிதனாக வாழ்வதுதான் அந்த தேவை. மனிதன் மனிதனாகத்தானே வாழ்கிறான். வாழ முடியும். இயற்கை எவ்வாறு படைக்கின்றதோ அவ்வாறாகத்தானே(வேதாத்திரிய கருத்து படைப்புக் கருத்து அல்ல) வாழ முடியும் என ஐயங்கள் பல எழலாம். மனிதன், தான் விரும்பி பிறப்பதில்லை. இயற்கையின் தன்மாற்ற நந்தவனத்தில் வண்ணமும், நறுமணமும் கொண்டு இறுதியாகப் பூத்த மலர் தான் மனிதன். மனிதனின் பிறப்பு என்பது இயற்கையின் நிகழ்ச்சி. ஆகவே மூன்று இன்றியமையாத் தேவைகள் பூா்த்தியாகிவிட்ட பிறகு, மனிதன் மனிதனாக வாழ்வது என்பதுதான் அந்தத் தேவை. மனிதன் மனிதனாக வாழ்வது ஒரு தேவையா? இயற்கையில், மற்ற உயிரினங்கள் எதற்காக பிறவி எடுத்ததோ அதற்காகவே வாழ்கின்றன.

    உதாரணத்திற்கு, நல்ல பாம்பு படம் எடுத்து ஆடி சீறி விரோதியை பயமுறுத்தும். அது இயற்கை கொடுத்த தற்காப்புத் திறன். மற்றொரு உதாரணம் பூனை. இரையைத் தேடும் பூனை, இரையை நோக்கி நடந்து செல்லும் போது, தான் நடக்கும் சப்தத்தை இரையாகவிருக்கும் உயிர், அதாவது இரையாகிய எலி அறிந்து ஓடிவிடாமல் இருக்க கால்நகங்களை மடக்கி வைத்துக் கொண்டு நடந்து, இரை மீது பாய்ந்து இரையான எலியைக் கவ்விப் பிடிக்கும்.

    ஆனால், மனிதன் மட்டும், ஆறாம் அறிவிருந்தும், மனிதனாக வாழவில்லை. அப்படியென்றால் என்ன பொருள்? மனிதன் ஆடை அணிந்து கொள்கிறான். தன்னை அழகு படுத்திக் கொள்கிறான். இன்னும் எவ்வாறு மனிதனாக வாழ வேண்டும் என ஐயம் எழலாம் ஆறாம் அறிவிற்கு. இயற்கையின் தன்மாற்றத்தில், மனிதஇனம் விலங்கினத்திலிருந்து வந்தது. எதற்காக? மீண்டும் விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டு வாழ்வதற்காகவா? இயற்கை/இறை அன்பும் கருணையுமானது. இயற்கை/இறை மனிதனிடம் தான் சிறப்புறுகின்றது. இயற்கை/இறை தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில் மனிதனோடு உருமாற்றத்தை நிறுத்திக் கொண்டது. இதற்கு மேலும் அதற்கு உருமாற்றம் தேவையில்லை. உருவத்தில், அழகில் சிறந்து விளங்குகிறான் மனிதன். ஆனால் பெரும்பாலோர் அறிவில் சிறந்து விளங்கவில்லை; மனிததரத்தில் சிறந்து விளங்கவில்லை. எனவேதான் முன்னாள் இந்திய ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள், “இன்னமும் பரிணாமம் பூர்த்தியாகவில்லை” என்கிறார்.

    அடுத்ததாக, ஒழுக்கத்தைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது என்ன? – “மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்று இயல்புகளால் உருவாக்கப்படுகிறான் மனிதன். இதில் தெய்வீக இயல்பு வளர்ப்பது ஒழுக்கமாகும்.“ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

    மனிதனின் மூன்று நிலைகளில் மூன்றாவதும் கடைசியுமான, உன்னதமுமான நிலைக்கு தெய்வீக இயல்பை வளர்ப்பதுதான் ஒழுக்கம் என்று சுவாமி விவேகானந்தர் கூறுவதனை கூர்ந்து கவனிக்க வேண்டும். மனிதனாகிவிட்டால் மட்டும் போதாது, அவ்வையார் கூறும் அரிதாகிய மனிதப் பிறவி எடுத்தமையின் பயனாகிய ஞானத்தை அடைய வேண்டும். ஞானம் பெற்றால்தான் விவேகானந்த சுவாமிகள் கூறும் – விரும்பும் தெய்வீக இயல்பை அடைய முடியும்.

    ஒழுக்கத்தைப் பற்றி முதல் அறிவின் – அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன? ‘அறிவின் – அறிவியலாளர்’ என்றால் என்ன? அறிவின் – அறிவியலைக் கண்டுபிடித்தவர் அறிவின் – அறிவியலாளர். அறிவின் – அறிவியல் என்பது என்ன? அறிவைப்பற்றிய விளக்கங்களைத் தெரிவிக்கும் இயல்-அறிவியல். அறிவின் – அறிவியல் முதன்முதலில் தந்தவர் மகரிஷி என்பதால் அவர்களை முதல் அறிவின் – அறிவியலாளர் என்கிறோம்.

    இயல் என்பது என்ன என்று சாக்ரடீஸ் கூறுவது:- “இயல்வழியாக அறிவைப் புகட்டுவதால் அது அறிவியல் எனப்படுகின்றது. ஏன், எதற்கு, எப்படி எனக்கூறுவது இயல். எதன் வழியாக, எத்துறையைப்பற்றி அறிவு புகட்டப்படுகின்றதோ, அவ்வழி அத்துறையின் இயல் எனப்படுகின்றது”. உதாரணத்திற்கு மருத்துவத்தைப் பற்றிய அறிவு புகட்டும் இயல் மருத்துவ இயல் எனப்படுகின்றது, அதுபோல் ‘அறிவை’ ப்பற்றிய அறிவை புகட்டுவதால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவைப் பற்றி ஏற்படுத்திய இயலை அறிவின்—அறிவியல் என்கிறோம்.

    அறிவைப்பற்றிய விளக்கங்கள், அதாவது,
    1) உயிர்களின் அறிவினது மூலம் (பேரறிவு ஆதியும் அந்தமும் இல்லாதது. அது தொடக்கமில்லாதது-அனாதியானது. எனவே அதற்கு மூலமில்லை)
    2) அறிவின் ஆரம்பம்,
    3) அறிவின் இருப்பிடம்,
    4) செந்நெறி,
    5) மற்றும் அறிவின் ஏழுவகை செயல்பாடுகள், (அமைப்பு, துல்லியம், ஒழுங்கு, உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல், தன்னையே அறிதல்),
    6) ஆட்சியின்றி ஆளுகின்ற செந்திறமை,

    7) மனிதன் அறிவை முழுமைப்படுத்த வேண்டிய அவசியமும்,  அதற்கான வழிகளும்

    8) செயலுக்கு எற்ற விளைவினைத் தரும் செங்கோலாட்சி.

    9) அறிவை ஆட்சி செய்து பெறுகின்ற அறிவாட்சித்தரம்(personality) பெறுவதற்கான பயிற்சிகள்,
    10) அறிவின் பூரண அமைதியான மனிதகுலத்தின் பூர்வீகசெல்வத்தை அனுபவிக்க வழிகள் – திட்டங்கள் கொண்ட உலக சமாதான திட்டம்.

    ஆகியவைப் பற்றிய அறிவுப்பூர்வமான(விஞ்ஞானமாக) விளக்கங்கள் கொடுத்துள்ளதை அறிவின்—அறிவியல்(Science of Consciousness) என்றும், அதனை அறிவுடைய எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் கண்டுபிடித்து உலகுக்கு, முதலில் சொன்ன(explorer of Consciousness) வேதாத்திரி மகரிஷி அவர்களை அறிவின் முதல் அறிவியலாளர்(First Scientist of Consciousness), என்று கூறுவது, அவருடைய கண்டுபிடிப்பின் சிறப்பை அறிந்த மகிழ்ச்சி பூரிப்பில் கூறும் போற்றுதலாகும். மேலும் நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே” என்று அவ்வையார், தான் அருளிய ‘நல்வழி’ யில் மொழிந்துள்ளார். இதே போன்று மகரிஷி அவர்கள் கூறும் கவியினை நினைவு கூர்வோம்.

    FFC-87எப்பொருளை-to-post-on-31-05-15

    நல்லோர் குணங்களை எப்போது எடுத்துரைக்க முடியும்? அவ்வையார் கூறும் அந்த ‘நன்று’ தான் என்ன? இங்கே பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் பொன் மொழியான ‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது.  ரசிக்கவும் முடியாது.’ என்பதனை கூர்ந்து நோக்க வேண்டும். கூர்ந்து நோக்கினால், அவ்வையார் கூறும் ‘நல்லோர் குணங்களுரைப்பதுவும் நன்றே’ என்பது, மகரிஷி அவர்கள் கூறுவது போல் ‘அந்த நல்லோர் குணங்களை ரசிப்பதாலும், மதிப்பதாலும் நாமும் நல்லோர் கூறும் பாதையில் உயர்ந்து வருகிறோம் என்பதில் உறுதிப்பாடு கிடைக்கப்பெற்று ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

    அடுத்த விருந்தில் அறிவியல் மற்றும் விஞ்ஞானம் பற்றியும், மனிதனுக்கான வரையறைகளில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள மனிதனுக்கான வரையறைப் பற்றியும், எண்ணிலடங்கா பிறவித் தொடரில், இப்பிறவியோடு கூடிய முந்தையை, ஏழு தலைமுறைகளில், 127 ஆன்மாக்களின் தொடர்பை அட்டவணையின் மூலமும்(Chart) அறிய இருக்கிறோம்.

    தொடரும் 03-06-2015- புதன்

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 1/?

    வாழ்க மனித அறிவு                                                          வளர்க மனித அறிவு

    ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 1/?

    FFC – 86

     

    27-05-2015—புதன்

             ஏன் இப்படியொரு தலைப்பு? இத்தலைப்பை தீர்மானித்தது யார்? ழுக்கம் போர்க்களம் போன்றதுஅதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கின்ற அமுத மொழி தந்துள்ள  அறிஞர் ரூஸோஒழுக்கத்தில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும் என்று அறிஞர் ரூஸோ கூறுவதால் ஒழுக்கத்தில் வாழ்வதை விட்டு விடமுடியுமா?  முடியாது. போராட்டம் பிறருடன் அல்ல.    ஒழுக்க வாழ்வு என்பது திருந்தி வாழ்வது. ஒழுக்க வாழ்விற்காக நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டியிருப்பதால், ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் என்பது நம்மோடு தான் நடைபெற வேண்டும்? போராட்டம் இல்லாமல் திருந்துவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல.  நம்மோடு என்றால் நம்மனதோடுதான் போராட்டம் நடைபெற வேண்டும்.  இங்கே நம் மனமேதான் குற்றவாளியாகவும், நீதிபதியாகவும் செயல் புரிந்து தண்டனை அளித்துக் கொண்டு திருந்துவதற்கு பெரும் முயற்சி செய்ய வேண்டும்.

       ஒழுக்கத்திற்கு தன்னை மாற்றிக் கொள்வதற்கு போராட வேண்டியுள்ளது என்பதால் ஒழுக்க வாழ்வை விட்டுவிடுவது என்பது புண்ணியத்தையல்லவா  இழப்பதாகிவிடும். நல்லொழுக்கம் என்பதற்கான ஆன்மீகச் சொல் ‘புண்ணியம்’.  தீயொழுக்கம் என்பதற்கான ஆன்மீகச் சொல் ‘பாவம்’.  ‘புண்ணியம்‘,  ‘பாவம்’ என்பது மதச்சார்புள்ள சொற்களல்ல (As one has the liberty to follow religion or not, ‘புண்ணியம்‘, ’பாவம்’ are not religious words to accept or not to accept. They are scientific words). ‘புண்ணியம்’,  ‘பாவம்’  என்கின்ற ஆன்மீகச் சொற்களுக்கான விஞ்ஞானச் சொற்கள் முறையே நல்லொழுக்கம், தீயொழுக்கம் ஆகும்.  விஞ்ஞானச் சொற்கள் என்பது என்ன?  நல்லொழுக்கமுள்ள எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய மூன்றின் விளைவுகள் நல்லபயன்களாகத்தானே இருக்கும்.   தீயொழுக்கமுள்ள எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் தீயபயன்களையல்லவா கொடுக்கும். இக்கூற்றில் விஞ்ஞானம் இல்லையா? நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்பதனை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாதா? இதில் ஏதும் மூடநம்பிக்கையுள்ளதா? நல்லொழுக்கம் நல்ல பயன்களையும், தீயொழுக்கம் தீய பயன்களைத்தரும் என்பது விஞ்ஞான அடிப்படையில்தான் உள்ளது.  ஆகவே நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் ஆகிய சொற்களை விஞ்ஞானச் சொற்கள் என்கிறோம்.  நாம் computer உலகில் இருக்கிறோம். Computerல் உள்ள Chipset, memory registers மற்றும்  ALU(arithmetic and logic unit) போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் நாம் அனைவரும் நம் கருமையம் என்கின்ற Chipsetல்பதியப்பெற்ற நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கப்பதிவுகளை விஞ்ஞான கண்ணோட்டத்தோடே அணுகி,  விஞ்ஞான சொற்களாக ஏற்றுக்கொண்டேதான் ஆகவேண்டும்.

         அறிஞர்கள், தாங்கள் கூறுவது அமுத மொழிகள் என்று அவர்களே சொல்லிக்கொள்வதில்லை.  எந்த சமுதாயத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அந்த சமுதாயம் தான் அறிஞர்களின் கூற்றுக்களை அமுத மொழி என அழைக்கின்றது.   மக்கள் பாராட்ட வேண்டுமென்று  என்பதற்காக, அறிஞர்கள்  அமுத மொழிகளை எழுதுவது இல்லை.    அவற்றைச் சிந்தித்து  உணர்ந்து அன்றாட வாழ்க்கைக்கு இச்சமுதாயம் பயன்படுத்தி வாழ வேண்டும் என்று விரும்பியே, இயற்கை  அறிஞர்களின் வாயிலாக அறநெறி அறிவுரைகளை அமுதமொழிகளாக வழங்கி வருகின்றது.

        அறிஞர்களின் அமுதமொழிகளோ, கவிகளோ,  எப்போது பயனாகும்  என்றால், அவற்றை கண்ணுறுகின்ற மனிதன், அந்த அறவுரைகளை மதித்து நடக்கும்போது போதுதான்.  அமுத மொழிகளை, வெறுமனே வாசிப்பதானால் அது மூளை அளவில் செல்வதோடு நின்று விடுவதில் மட்டும் பயனில்லை.   மூளை வழியாகச் சென்று அது கருமையத்திற்குள் அழுத்தமாக பதிய வேண்டும். பிறகு மனம் அதனை விரும்பி மனதில் உருவகப்படுத்த வேண்டும்(contemplate).  பின்னர் அமுத கூறியபடி  மாற வேண்டும்.

        அழுத்தமாக பதிதல் என்பது ஆழ்ந்த சிந்தனை செய்ய வேண்டும்.  மீண்டும் மீண்டும் அதனை நினைவிற்கு கொண்டு வந்து ஆராய வேண்டும்.    இப்புவி மீது அறிஞரும் வாழ்கிறார், நாமும் வாழ்கிறோம்.  அறிஞர் கூறும் அமுத மொழிகள் அவர் வாழ்க்கையில், தான் பெற்ற அனுபவம், அல்லது பிறரது வாழ்க்கையில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து அதில் கண்ட  வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் கூறுவதாகும். அறிஞரும் நம்மைப் போன்று தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து பிறந்தவர்தானே.  வாழ்வியல் உண்மைகளை அறிந்து அறிஞரால் கூறுவது நமக்கு ஏன் முன்னரே தெரியாமல் போய்விட்டது?  அறிஞர் எடுத்துக் கூறிய பிறகுதானே நமக்கு அந்த வாழ்வியல் உண்மை நமக்கு தெரிய வருகின்றது.  அப்படியே தெரிய வந்தாலும் நாமோ, இந்த சமுதாயமோ அதனை சிந்தித்து உணர்ந்து உறுதிப்படுத்தி வாழ்வதில்லை.  ஏன்?   அவ்வாறாக இச்சமுதாயம் வாழ்ந்திருந்தால் தனது பூர்வீகச் சொத்தான அமைதியை இழந்து தவிக்க வேண்டிய நிலை இருந்திருக்காது. ஏதார்த்தத்தில் அவ்வாறு இல்லை.  அதனை சிந்திக்கவே தான் இன்றைய விருந்து.

         இப்பொழுதாவது, வாழ்வியல் உண்மைகளைக் கூறும் விடிவெள்ளியான  திருவேதாத்திரியத்தை உலகசமுதாயம், மதித்து போற்றி, பின்பற்றி வாழ்வதுதான் உலக சமுதாயத்திற்கு  விடிவு.  அதற்காகத்தான், உலக சமுதாயத்திற்கு சேவை செய்யவே உலக சமுதாயச் சேவா சங்கத்தை தோற்றுவித்துள்ளார் ‘பகவான் வேதாத்திரி மகரிஷி’அவர்கள்.

         ஒழுங்காற்றலாகிய  இயற்கை/இறை மனித உடலில்  ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில்,

        மனித மனதிலும்,   சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர, மனிதன் எவ்வாறு அதற்கு வழிவிட வேண்டும் என்பது  பற்றிய, சிந்தனையை

        இன்றைய அறிவிற்கு விருந்தாக அருந்த  இருக்கிறோம்.

        அறிஞர் ரூஸோ, திருவள்ளுவர், சுவாமி விவோகனந்தர், வேதாத்திரி மகரிஷி அவர்கள் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியுள்ள அத்துனை அறிஞர்களின் அறிவாற்றல் துணையுடன்  இச்சிந்தனையை தொடங்குகிறோம்.

                     “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்;

                       அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி,

    அறிவதனை அறிவித்தார் திரு வள்ளுவர்;

    அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்,

    அறிஞர் திருமூலர்; அவ்வறிவில் ஆழ்ந்து,

    ஆனந்த கவியாத்தார். இராம லிங்கர்,

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

    அதை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.“  …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கவி இயற்றி சூசகமாக அவ்வையார் கூறிய அறிவினராகிய நல்லோர் இணக்கத்தை பெற்றுக் கொள்ளச் செய்து,

        ஒழுக்கவியலைப் போதிக்க, இரண்டாம் உலகப் பொது மறையான திருவேதாத்திரியத்தைத் தந்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களையும் நினைவு கூர்வோம்.  அகவினத்தார்க்கு சாகா வரமும், மற்றவர்களுக்கு பரிபக்குவ நிலையும், தருவதாகவும், திருத்திடுவோம் என்று,  திருகாப்பிட்டுக் கொள்ளும் போது அளித்த வள்ளலாரின் உறுதிமொழியும் நமக்கு வெகுவாக துணை நின்றே நம்மை எல்லாம் வழிநடத்துகின்றது.  அந்த வழிநடத்துவதில்  இடம் பெற்றது இன்றைய சிந்தனையும்.

    முதலில் அறிஞர் ரூஸோ ஒழுக்கம் பற்றி கூறுவதனை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். 

        “ஒழுக்கம் போர்க்களம் போன்றது.  அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கிறார் அறிஞர் ரூஸோ.  இங்கே எழுகின்ற   வினா ‘ஏன் ஒழுக்கத்தை போர்க்களத்தோடு ஒப்பிடுகிறார்’ என்பது.  ஒழுக்க நெறியில் வாழ வேண்டும் என முடிவு செய்து அதற்காக, ஆன்மீகப் பயிற்சிகளை விடாது செய்து வருபவர்கள், ஒழுக்கம் போர்க்களம் போன்றது என்று அறிஞர் ரூஸோ கூறுவதனை அனுபவித்திருப்பர்.  மற்றவர்களுக்கு அறிஞர் ரூஸோவின் இந்த வேத வாக்கு எந்த வித சலனத்தையும் ஏற்படுத்துவது கடினம்.

        ஒழுக்கத்தில் வாழ வேண்டுமானால் ஓயாமல்  மனதோடு போராட வேண்டும் என்கிறார் அறிஞர் ரூஸோ.  அப்படியானால் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டுமெனில் வாழ்க்கை முழுவதும் மனதோடு போராடிக் கொண்டிருக்க  வேண்டுமா?  மனப் போராட்டத்திற்கு முடிவு என்பது கிடையாதா? ஒழுக்கத்திற்கான  போராட்டமேதான் வாழ்க்கையாகிவிடுமே என்று ஒழுக்கத்திற்கான போராட்டத்தை கைவிட்டு விடலாமா என்று கூடத் தோன்றலாம்.  எந்த ஒரு பயிற்சிக்கும் முடிவு என்பது உண்டு.  அதுபோல் ஒழுக்கப் பயிற்சிக்கான முடிவினை, தெய்வீகப் பயிற்சியான தற்சோதனையின் வழியாக விரைவில் பெற்று விட்டால் ஒழுக்கத்திற்கான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.  பின்னர் வாழ்நாள் முழுவதும் ஆனந்த வாழ்வு வாழலாம்.

       இப்பொழுது வேண்டியது யாதெனில், ‘மனிதஇனம் ஒழுக்க வாழ்வு வாழவில்லை எனில், வேறு எந்த உயிரினம் ஒழுக்க வாழ்வு வாழமுடியும்’ என்பதனை விளங்கிக் கொண்டு, ஒழுக்கத்திற்கான சரியான வரையறையைத் தெரிந்து கொண்டு, ஒழுக்கத்திற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, அதற்கான எளிய பயிற்சிகளையும் செய்து வருவதுதான் தேவை.

       இயற்கை வகுத்துள்ள ஒழுக்கத்தைப்பற்றி அறியாதவர்கள் ஏராளம்! ஏராளம்!.  சரியான ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்படாதவர்களே அதிகம்.  ஒழுக்கப்பயிற்சியில் அது போராட்டமாக உள்ளது என மனம் தளர்வடைந்து,  ஒழுக்கப்பயிற்சியினைக்  கைவிட்டவா்களும் இருக்கின்றனா்.    ஒழுக்கத்திற்கான போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்தான் அறிஞர்கள், ஞானிகள், நெறிசார்ந்த சான்றோர்களாவார்கள்(நெறியைச் சார்ந்து இருப்பதால் அவர்கள் சான்றோர்களாகிறார்கள்).

        ஒழுக்கம் போர்க்களம் என்றால், யார் யாரிடம் போரிட வேண்டும்?  மனிதன், தான், தன்னுடனேயே போராட வேண்டும்.   “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்”  என்று உலக நீதியில்,  உலகநாதர் கூறிய வேதவாக்கினை நினைவில் கொண்டு, மனம் சொற்படி போகாமல் அறிவு சொல்லும் வழியில் சென்று கொண்டு  போராட்டத்தில் வெல்ல வேண்டும்.  போராட்டம் என்றால் இருவருக்கிடையே நடப்பது. ஒரு மனிதன் தன்னுடன் போராட வேண்டும் என்றால் இன்னொரு மனிதன் யார்? ஒரு மனிதனுக்குள் இன்னொரு மனிதன் இருப்பதாக அல்லவா அர்த்தம் ஆகின்றது.  ஒழுக்கத்தைப் பற்றி, வேறு சில அறிஞர்கள் கூறுவதனை ஆராய்ந்து இதற்கான பொருள் என்ன என்று அறிவோம்.

         போராட்டம் என்பது ஒரு செயல்.  எனவே எந்த ஒரு செயலுக்கும் விளைவு உண்டு என்பதால்,  ஒழுக்கத்திற்கான மனப்போராட்டத்திற்கும் முடிவு உண்டு.  அந்த முடிவு எப்போது கிட்டும்?  அடுத்த விருந்தில் அறிவோம்.   அடுத்த விருந்தில் அறிவின்-–அறிவியல், மற்றும் முதல் அறிவின்-அறிவியலாளர் யார் என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    தொடரும்  31-5-2015

     

    Loading