சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 244

    வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 244

     

    06-01-2017  — வெள்ளி


    இறைவனை நேசித்தால் விவேகமும், வைராக்கியமும் தானாக வரும்”.  

                                                               . . .  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.


     பயிற்சி—

    1. நேசிப்பது என்பது என்ன?
    2. இறைவனை நேசிப்பது என்பது என்ன?
    3. இறைவனை எவ்வாறு நேசிப்பது?
    4. விவேகம் என்பது என்ன?  அதன் அவசியம் என்ன?
    5. வைராக்கியம் என்பது என்ன? எதற்கு வைராக்கியம் அவசியமாகின்றது?
    6. இறைவன் உருவமாக இருந்தால்தான் நேசிக்கவும், ரசிக்கவும் முடியுமா?
    7. இறைவன் அரூபி எனத்தெரிந்து விட்டதால் அவனை நேசிக்க முடியாதா?  ரசிக்க முடியாதா?
    8. இறைவனை நேசித்தலுக்கும், விவேகம் மற்றும் வைராக்கியம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?
    9. மேற்கொண்டு சிந்திக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 243

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 243

    31-12-2016 — சனி

    “சிந்திப்பதைவிட நம்புவது எளிதானது அதனால்தான் சிந்தனையாளர்களைவிட நம்பிக்கைவாதிகள் அதிகமாக இருக்கிறார்கள்.”

    . . . புருசு கால் வெர்ட்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர்?
    2) எது சிறந்தது? ஏன்?
    3) அறிஞரின் ஆதங்கம் என்ன?
    4) இருபதாம் நூற்றாண்டின் நிலை என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 242

    வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 242

     

    30-12-2016 — வெள்ளி

    “பித்தா! நீ எமனை மறந்தாய், இந்த உடல் நிச்சயம் அன்று, மாவில் உப்பு கலப்பது போல் சிறு மண்ணுடன் மண்ணாகிவிடும்.”

    . . . அரவிந்தர்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அரவிந்தர்?
    2) இதனை வேறு சான்றோர்களின் கூற்றுடன் இணைத்து சிந்தனை செய்யலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 241

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 241

    24-12-2016 — சனி

    “தோணியில் ஏறிக்கொள்; வாழ்வாகிய கடல் ஆழமானது; கடக்கக் கஷ்டமானது; சான்றோருடன்  உறைவதே அதனின்று கரையேற்றும் தோணியாகும்.”

    . . . குருநானக்

    பயிற்சி—
    1) அவ்வையார் இதேபோன்று கூறும் வரிகள் என்ன?
    2) திருவள்ளுவர் எந்தக் குறளில் இதுபோன்று கூறுகிறார்?
    3) இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
    4) இதுபோன்று அறவோர்களின் அறிவுரை இருந்தும் அதனை அலட்சியம் செய்த சமுதாயத்திற்கு இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகாவது செயல்படுத்தக் கூடிய அறிவுரைகள் கிடைத்துள்ளது அல்லவா? மகரிஷி அவர்களின் அறிவுநிலைக்கு உயர்ந்து நெஞ்சார வேதாத்திரியத்தைப் போற்றி வாழ்த்துவோம்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 240

    23-12-2016 — வெள்ளி

    “நற்குணங்களையே நான் அறிவென்று கொள்கிறேன்”

    . . . அறிஞர் சாக்ரடீஸ்

    பயிற்சி—
    1) நற்குணங்களைத் தவிர்த்த குணங்கள் இருப்பின் அது என்ன?
    2) மனிதனுக்கு அறிவு எங்கிருந்து வந்துள்ளது?
    3) நற்குணங்களையே அறிவு என்று சொல்வது சரிதானே?!

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  •  

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 239

    17-12-2016 — சனி

    ‘மிகச் சிறந்த விஞ்ஞானம் ஆத்ம ஞான விஞ்ஞானம்’

    . . . சுவாமி ரங்கநாதானந்தர்.

    பயிற்சி—
    1) ஆத்ம ஞான விஞ்ஞானம் என்பது என்ன?
    2) எதனை அறிந்தால் ஆத்ம ஞான விஞ்ஞானம் பெறலாம்?
    3) எப்படி ஆத்ம ஞான விஞ்ஞானம் மிகச் சிறந்த விஞ்ஞானமாகின்றது?
    4) அப்படியானால் மனவளக்கலைஞர்கள் பாக்கியசாலிகள் தானே?!

    .
    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 238

    16-12-2016 — வெள்ளி.

    மாயையில் வீழ்ந்து மனிதன் தன் சொந்த இயல்பை மறந்து விடுகிறான்.

    . . . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

    பயிற்சி—
    1) சொந்த இயல்பு என்றால் எது?
    2) சொந்த இயல்பை இழப்பதால் நடப்பது என்ன?
    3) மாயைக்கும் இறைக்கும் மகரிஷி அவர்கள் தொடர்பு படுத்திக் கூறும் சாம்யம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 237

    10-12-2016 — சனி

    ‘சிந்தித்து, சிந்தித்து மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து என்கின்ற நூலில் எழுதியுள்ள கவிகள் பல உள்ளன. அந்நூலில் உள்ள கவிகள் ஒவ்வொன்றையும் பல முறைகள் நீங்கள் படிக்க வேண்டும். இல்லை என்றால் அந்தக் கவிகளுடைய முழு அர்த்தத்தையும், நான் எந்த அறிவு நிலையில் இருந்து கொண்டு எழுதினேன் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியாது.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) அவருடைய அறிவு நிலையினை ஏன் நம்மைப் புரிந்து கொள்ளச் சொல்கிறார்?
    2) அவரது அறிவுநிலையினை புரிந்து கொள்வதால் என்ன பயன்?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 235

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 235

    03-12-2016 — சனி

    ‘அகந்தையைத் துறந்தால் அருளைப் பெறலாம்’

    . . . ஸ்ரீ ரமண மகரிஷி.

    பயிற்சி—
    1) இது உண்மையன்றோ!
    2) இது எவ்வாறு நடக்கின்றது?

    3) அருள் இல்லை என்றால் விளைவு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 234

    02-12-2016—வெள்ளி

    சிந்தனை செய்வதுதான் நம் ஒவ்வொருடைய வாழ்வு என்னும் கட்டடத்தின் கடைக்கால் ஆகும்.

    . . . புத்தர்

    பயிற்சி:
    1) என்ன கூறுகின்றார் புத்தர்?
    2) மனித வாழ்வில் எதார்த்த நிலை என்ன?
    3) எதார்த்த நிலையால் விளைவு என்ன?
    4) திருவேதாத்திரியத்தின் தோற்றத்தால்தானே வாழ்வின் நோக்கம் அறிய முடிந்தது. அதுவரை அது தெரியவில்லையே. இது எதனுடைய விளைவு?

    5) வாழ்வியல் உண்மைகள் பல உள்ளன. மகரிஷி அவர்கள் சிந்தித்ததால் அவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  இன்னமும் வாழ்வியல் உண்மைகள் பல உள்ளன.  சிந்திக்கவும்! சிந்திக்கவும்.  கண்டுபிடிக்கவும். பயன்படுத்தவும். வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 234

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 234

     26-11-2016—சனி

    “ உண்ணும் உணவு உனக்குக் கிடைத்த வகை எண்ணி உண்ணுதல் உன் கடன்.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஏன் இவ்வாறு கூறுகிறார்?
    2) ‘கடன்’ என்று கூறுவதால் இதன் முக்கியத்துவம் என்ன?
    3) இக்கூற்றை அறியும்போது வேறு என்ன நினைவுகள் வருகின்றன?

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்

    Loading