சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 222

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    15-10-2016 — சனி.

    “கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப விரிவடைகின்றது. இதுபோல் அறிவு வளர வளர அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும் பெருகிக்கொண்டே இருக்கும்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:—
    1) இவ்விரண்டு நிகழ்ச்சிகளுக்கும் எதில் எவ்வாறு ஒத்திருக்கின்றது?
    2) ‘அறிவு வளர வளர’ என்றால் என்ன பொருள்?
    3) வாய்ப்பும், வசதியும் பெருகுவதை வைத்து என்ன செய்யலாம்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 221

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

     

    14-10-2016 — வெள்ளி.

    ‘நல்ல ஆலோசனைகளை விரும்பிக்கேட்டால் திறமைகள் அதிகரிக்கும்.’

    . . . கபீர்.

    பயிற்சி—
    1) திறமைகள் அதிகரிப்பது நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்டால் எவ்வாறு அதிகமாகின்றது?
    2) விரும்பிக் கேட்டால்தான் திறமைகள் அதிகமாகுமா?
    3) எந்த நியதியின் கீழ் இது நடைபெறுகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 220

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    08-10-2016 — சனி.

    “ஆசைகளில் ஆனந்தத்தைத் தேடவேண்டாம். ஆனந்தத்தின் ஊற்று நம்முள்ளே இருக்கிறதே தவிர வெளியில் இல்லை.”

    . . . டால்ஸ்டாய்.

    பயிற்சி—
    1) டால்ஸ்டாய் என்ன கூறுகிறார்?
    2) ஆசை வேறு ஆனந்தம் வேறா?
    3) ஆனந்தம் என்பது என்ன?
    4) நம்முள் இருக்கின்ற எது ஆனந்தத்தைத் தருகின்றது?
    5) ஆனந்தம் புறப்பொருட்களில் இல்லையா?
    6) இதனை எவ்வாறு கூறுகிறார் திருவள்ளுவர்?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 219

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    07-10-2016 — வெள்ளி.

    “அமைதி என்பது ஆழமான புரிதலில் ஏற்படுவது”

    . . .   உலகப் புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

    பயிற்சி—
    1) எதனை அமைதி என்கிறார் விஞ்ஞானி?
    2) அமைதி பற்றி விஞ்ஞானி கூறுகின்றாரே!
    3) ஆழமான புரிதல் என்பது என்ன?
    4) அமைதி என்பதனை ஏன் புரிதலோடு இணைத்துக் கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 218

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

     

    01-10-2016 — சனி

    “ஆழ்ந்த மன ஏக்கத்தால் அழுதால் இறைவனைக் காணமுடியும்.”
                                                                                                        . . .    பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

    பயிற்சி:–
                     1) ஞானயோகத்தில் இறைவனைக்கான என்ன செய்ய வேண்டும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 217

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

     

    30-09-2016 — வெள்ளி.

    “உன்னிலே நானடங்க என்னுளே நீ விளங்க,
    உனது தன்மை ஒளிர, என துள்ளம் தூய்மை பெற்றேன்.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ‘உன்னிலே நானடங்க’ என்பதன் பொருள் என்ன?
    2) ‘என்னுளே நீ விளங்க’ என்பதன் பொருள் என்ன?
    3) ‘இறைவனது தன்மை ஒளிர்வது என்பது என்ன?
    4) இறைவனது தன்மை ஒளிர உள்ளம் தூய்மை பெற்றதாக மகரிஷி அவர்கள் கூறுவதனை வேறு அருளாளர்கள் எவ்வாறு கூறுகின்றனர்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 216

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

     24-09-2016 — சனி

    பொதுவாக நல்லவராக இருக்காதீர்கள். நல்ல காரணங்களுக்காக நல்லவராக இருங்கள்.”

    . . . ஹென்றி டேவிட் தோரே.

    பயிற்சி— 1) இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 215

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    23-09-2016 — வெள்ளி.

    இறைவனே உலகம் என்ற நம்பிக்கை உறுதியாக உண்டானால் எல்லாப் பிரச்சனைகளும் ஒழிந்து  தீர்வு பெற்றுவிடுவீர்கள்.

    . . . பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

    பயிற்சி—
    1) எவ்வாறு எல்லாப் பிரச்சனைகளும் ஒழிந்து தீர்வு கிடைக்கும்?
    2) தன் பிரச்சனைக்கும் சமுதாயப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்குமா?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 214

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    17-09-2016 — சனி

    ‘சுவர்களைக் கட்டாதீர்கள். பாலங்களைக் கட்டுங்கள்.’
                                                                                            . . . கன்பூசியஸ்

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் கன்பூசியஸ்?
    2) சுவரையும் பாலங்களையும் சுட்டிக்காட்டுகிறாரே!

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 213

                             வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    16-09-2016 — வெள்ளி.

    “திறந்துகொள்! தான், தனது என்று சொல்லும் சிற்றறையை! வெளியே வா! பழுக்கும் ஞானம்.”
                                                   . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இப் பொன்மொழியின் பொருள் என்ன?
    2) ஞானத்திற்கும் ‘தான், தனது’ என்பதற்கும் உள்ளத் தொடர்பு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 212

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    10-09-2016 — சனி

    மறைந்திருக்கும் இயற்கையே கடவுளின் இரகசியம்.

    …. ஸ்ரீ அரவிந்தர்.

    பயிற்சி—
    1) இயற்கையும் கடவுளும் வேறுவேறா?
    2) திருவேதாத்திரியம் கடவுளின் இரகசியத்தை வெட்டவெளிச்சமாக்கிவிட்டதல்லவா?
    3) எவ்வாறு வெட்டவெளிச்சமாக்கி உள்ளது என ஆழ்ந்து சிந்திக்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 211

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

                                                                                                                                       09-09-2016 — வெள்ளி

     

    தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை கீழானவர்களாக மாற்றிவிடும்.

                                                                                                                        ….. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி:–

    1)   எப்படி?

    2)   ஆகவே என்ன செய்ய வேண்டும்.?

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                 வளா்க அறிவுச் செல்வம்

    Loading