சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 127

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    20-11-2015—வெள்ளி

     

    இறந்தவர்களை கடல் தன்னுள் வைத்துக் கொள்வதில்லை. கரையோரம் ஒதுக்கி விடும். அதுபோல ஒழுக்கமற்றவர்களுடனான நட்பை நீங்கள் ஒதுக்கிவிடுங்கள்.

    ….. புத்தர்

    பயிற்சி—
    1) இந்த உண்மையை, தக்க உவமானம், உவமேயத்தைக் கொண்டு கூறியுள்ளதை ரசிக்கவும். மகிழவும். வாழ்வியல் உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டு உங்களுக்கே எடுத்துக்கூறவும், ஏன், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி விளங்க வைக்க எளிமையாக இருக்கும்.

    2) ‘பெரியாரைத் துணைக் கொள்’, ‘அறிவினரைச் சேர்ந்திருத்தல் இனிது’ என்பனவற்றை நினைவில் கொண்டு வந்து மகிழவும்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 126

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     14-11-2015—சனி

    ஒன்றை மனதில் நினைந்து அதையே அடிக்கடி சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவனது உள்ளம்
    அதே வழியைச் சென்று அடைந்துவிடும்.

    …. புத்தர்.

    பயிற்சி—
    1) புத்தர் கூறுவதில் உள்ள இயற்கை நியதி என்ன?
    2) அந்த நியதியினைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு கூறவும்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 125

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    13-11-2015—வெள்ளி

    உண்மையில் கடவுளும், குருவும் வேறல்லர்; ஓர் உருவானவரே.
                                                                                                                                ….. ஸ்ரீ ரமணர்.
    பயிற்சி—
    1) இந்த பொருளோடு இணைக்கக்கூடிய குறள் எதேனும் உள்ளதா?
    2) குருவையும், கடவுளையும் இணைத்துக் கூறும் வேறு கூற்றுக்களை(ஸ்லோகம்) நினைவு கூறவும்.

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
    நன்றி.

    வாழ்க வளமுடன்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 124

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    07-11-2015—சனி

     

    ‘முயற்சி’, கானல் நீர் அல்ல. முக்கியமாக அது ஜீவநதிக்கு அழைத்துச் செல்லும்.

                                                                                                                                                              ….. கதே

    பயிற்சி—
    1) முயற்சி பற்றி வேறு அறிஞர்கள் கூறியுள்ளதை நினைவு கூறவும்.
    2) முயற்சியையும் ஞானத்தையும் இணைத்து மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை நினைவு கூறவும்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 123

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    06-11-2015–வெள்ளி

    அனுபவித்து அனுபவித்து புத்தி பெற அறுபது ஆண்டுகள் வேண்டும். அனுபவித்தவர்களிடம் புத்தி பெற அரை நாள் போதும்.

    ….. கி.ஆ.பெ. விசுவநாதம்

    பயிற்சி—
    1) “மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்”, “பெரியாரைத் துணைக்கொள்”, “மேன்மக்கள் சொல் கேள்” ஆகியவற்றிற்கும் இதற்கும் உள்ள பொருத்தத்தை அறியவும்.
    2) அனுபவித்தவர்களிடம் புத்தி பெற அரை நாள் போதும் என்றிருக்க, அறநூல்களில் உள்ள அறவுரைகளை மனிதன்/சமுதாயம் மதித்து நடக்காதது மிக வருந்தத்தக்கதாக உள்ளது அல்லவா?
    3) மகரிஷி அவர்கள் இது பற்றி இயற்றிய ஆதங்கக் கவியினை நினைவிற் கொண்டு வருவோம்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 122

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

     31-10-2015—சனி

    கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்களை உணராமல் இருப்பவனே சரியான குருடன்.

    ….. ஓர் அறிஞர்.

    பயிற்சி—
    1) தன்குற்றங்களை அறிந்து கொள்வது பற்றி காந்திஜி கூறுவது என்ன?
    2) எதனால் தன்குற்றங்களை உணர முடிவதில்லை?

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 121

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    30-10-2015—வெள்ளி

    எதன்மீது ஆசை இல்லையோ அவற்றால் துன்பமில்லை.

                                                                                                                … பழமொழி

    பயிற்சி—
    1) இப்பழமொழியில் உள்ள விஞ்ஞானம் என்ன?
    2) திருவள்ளுவர் இக்கருத்தை எந்த அதிகாரத்தில் என்ன குறள் அருளியுள்ளார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 120

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    24-10-2015—சனி

    முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.
                                                                                                                                                       …ஸ்பானியப் பழமொழி
    பயிற்சி—
    1) இப்பழமொழி எச்சரிப்பது என்ன?
    2) நம்மை ஏற்கனவே இது பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எச்சரித்திருப்பது என்ன?
    3) எனவே குழந்தை பெறுவதிலும், வளர்ப்பதிலும் பெற்றோர்கள் கொள்ள வேண்டிய கவனம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 119

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

     

    23-10-2015—வெள்ளி

    “செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்”

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 118

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

     17-10-2015—சனி

    “வினைப்பயனே தேகங் கண்டாய்”
                                                                       …… பட்டினத்தார்.

    பயிற்சி—
    1) இதன் பொருள் என்ன?
    2) எது எதனால் தேகத்தை எடுத்துள்ளது?

                                   அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here)பதிவு செய்யவும்.

    நன்றி,

    வாழ்க வளமுடன்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 117

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    16-10-2015—வெள்ளி

    இயற்கையைப் பற்றிய சிந்தனையில் மனம் நிறைந்த மகிழ்ச்சியும், நிறைவையும் பெறும் போதும், இறைநிலையோடு இணைந்து இயங்கும்போதும் பேரின்பம் அடைகின்றது.
    .. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) என்ன அறிவுறுத்துகிறார் மகரிஷி அவர்கள்?
    2) சிந்திப்பது எவ்வளவு அவசியமாகின்றது அல்லவா?
    3) பின்னர் ஏன் சிந்திப்பது கடினமாக உள்ளது சிலருக்கு?
    4) புலன் மயக்கத்திற்கும் சிந்திப்பதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

     

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here)பதிவு செய்யவும்.

    நன்றி,

    வாழ்க வளமுடன்

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 116

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

     

    10-10-2015—சனி

    இறைவனை தனது அறிவாகக் காண்பவனே அறிவுள்ளவனாவான்.

                                                                                                                    …. ஸ்ரீ சாந்தானந்தர்.

    பயிற்சி—
    1) இக்கூற்று சரிதானே?
    2) மற்றவர்கள்? அறிவில்லாதவர்களா?
    3) இக்கூற்று எவ்வாறு சரியாக உள்ளது?

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய,  புதிதாக

    ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here) பதிவு செய்யவும்.

    நன்றி,

    வாழ்க வளமுடன்

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading