சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 92

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    18-07-2015–சனி

    பணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் உண்மையான மனிதன். பணத்தை எப்படி
    உபயோகின்றதென்பதை தெரிந்து கொள்ளாதவர்கள் மனிதர்கள் என்கின்ற பெயருக்கு உரியவரல்லர்.

    ….. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

    பயிற்சி—
    1) அடிமை என்று எவ்வாறு குறிப்பிடுகிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்?
    2) உண்மையான மனிதன் என்று அவர் கூறுபவர் யார்?
    3) பணத்தை உபயோகிப்பது என்பது எப்படி?
    4) “புவி வாழ்வின்” இயல்பு என்பது பணத்தைப் பொருத்த வரை எவ்வாறு உள்ளது?
    5) மகரிஷிக்கு மூத்தவரான பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது போன்று மகரிஷி
    அவர்கள் தன் வாழ்க்கையைப்பற்றிக் கூறும் கவி என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 91

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    17-07-2015வெள்ளி

    நிறைகுடம் ததும்பி ஒலிப்பதில்லை. அதுபோல் கடவுளை அறிந்தவன் அதிகம் பேசுவதில்லை.

    ….. ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

    பயிற்சி—
    1) ஏன் ஒலிப்பதில்லை?
    2) அதிகம் பேசாதது சரியா?
    3) சரியில்லை என்றால் அதிகம் பேசலாமா? என்ன எச்சரிக்கை தேவை?

    வாழ்க அறிவுச் செல்வம்                                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 90

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    11-07-2015—சனி

     

    மனிதனாகப் பிறந்த பிறகு பெருமை தரும் ஏதாவது செயலைத் செய்தே தீர வேண்டும். உலகைவிட்டு நீ செல்லும் நாளில் உலகம் உனக்காக அழ நீ சிரித்துக் கொண்டே செல்வாயாக.

    …..சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) பெருமை தரும் செயல்கள் என்னென்ன?
    2) எதற்காக உலகம் அழும்?
    3) நம்மை சிரித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். எந்நிலையில் இருந்தால் அவர் கூறுவது போல் சிரித்துக் கொண்டே போக முடியும்?
    4) நம் அனுமதியுடன்தான் உயிர் பிரிய வேண்டுமல்லவா? ஏன் அத்தகைய எண்ணம்?
    5) இன்னும் ஏதாவது வினாக்கள் உங்களுக்கு எழுந்தால் எழுப்பி விடை காணுங்களேன். மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்களேன். உங்களுக்காகவே ஒரு சிறிய சத்சங்க வட்டம் அமைத்துக் கொள்ளுங்களேன்.
    6) .இல்லையெனில், ஆன்ம செழிப்புறு இணைய தள சத்சங்கத்திற்கு கருத்துரைப்பகுதியின் வாயிலாக தெரிவிக்கலாமே! வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 89

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    10-07-2015—வெள்ளி

    சிறந்த மனிதன் நற்குணங்களைப் பற்றிச் சிந்திக்கிறான். சாதாரண மனிதன் தன் சௌகரியங்களைப்  பற்றி சிந்திக்கிறான்.

    ….. அறிஞர். சார்லஸ் டிக்கன்ஸ்.

     

    பயிற்சி—

    1) இருவரையும் ஒப்பிட்டு என்ன கூற விரும்புகிறார் அறிஞர். சார்லஸ் டிக்கன்ஸ்.
    2) அகத்தாய்வாளர்கள் என்ன விளங்கிக் கொள்ள வேண்டும்?
    3) “இன்முகமும் எளிமையும் எனது செல்வம்” என்று மகரிஷி அவர்கள் கூறியதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 88

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    04-07-2015—சனி

    நாம் உழைக்காவிட்டால் நாட்களும் புனிதமாகாது. வாழ்வும் புனிதமாகாது. உழைக்க உழைக்கத்தான் வாழ்க்கையும் புனிதமாகும்.

    …… அறிஞா் ரஸ்டன்

    பயிற்சி—

    1) சென்ற சிந்திக்க அமுத மொழியில் சொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் அமுத மொழியும், இந்த அமுதமொழியில் சொல்லப்படுகின்ற அறிஞர் ரஸ்டன் அவர்களின் அமுத மொழியும் ஒத்திருக்கின்றதா?
    2) புனிதம் என்றால் என்ன? நாட்களும், வாழ்வும் புனிதமாகாது என்கிறாரே! என்ன பொருள்?
    3) நாட்களும், வாழ்க்கையும் புனிதமானால் என்ன பயன்?
    4) புனிதமாகவிட்டால் என்ன இழப்பு?

    வாழ்க அறிவுச் செல்வம்                                              வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 87

    வாழ்க மனித அறிவு                                                    வளர்க மனித அறிவு

    03-07-2015—வெள்ளி

    “காலத்தை, நேரத்தை வீணாக்கினால், அவர் இரக்கமற்ற முறையில் தண்டிக்கப்படுவர்“

    ….. மகாத்மா காந்தி

    பயிற்சி—

    1) ஏன் அவ்வாறு கடுமையாக எச்சரிக்கிறார்? உண்மையில் அவ்வாறுதான் நடக்கின்றதா?
    2) வாழ்க வளமுடன். யாரும் இக்குற்றத்திற்கு ஆளாக வேண்டாம். ஒரு வேளை அப்படிக் குற்றத்திற்கு ஆளாகி இப்போது உணர்ந்தால் அவா்களின சங்கல்பமும், முயற்சியும், பயிற்சியும் எவ்வாறு இருக்க வேண்டும்?
    3) வேறு அறிஞர்கள் இது பற்றி என்ன கூறி இருக்கின்றனர்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 86

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    27-06-2015—சனி

    நல்ல குழந்தைகளை உருவாக்கப் பெற்றோர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.
    பெற்றோர்களின் வாழ்க்கையானது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.

    ……. ஆர்னால்ட் பென்னட்.

    பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியர்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.

    ……எம் கோர்க்கி.

    பயிற்சி— 1) இவ்விரண்டு அறிஞர்கள் ஆதங்கப்படும் பெற்றோர்களுக்கு உதவக்கூடியக் கலை எது?
    2) எப்போது அக்கலையை பயில ஆரம்பிக்க வேண்டும்? எப்போது முடிக்க வேண்டும்?
    3) குழந்தைகளின் முதல் ஆசிரியர் யார்?

    4)அறிஞர் எம். கோர்க்கி அவர்கள்  “பெற்றோர்களை நிரந்தரமான ஆசிரியர்கள் என்றும், அவர்களுக்கு விடுமுறையே கிடையாது என்றும்” கூறுவதன் மூலம் மனித குலத்திற்கு என்ன தெரிவிக்கிறார்?

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 85

    வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

    26-06-2015—வெள்ளி

    “வாழ்க்கையின் இலட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஞானம் தான் நம்வாழ்வின் உண்மையான இலட்சியம்.”              

                                                                                                             …… சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி— 1) இது எவ்வாறு சரி?
    2) சிந்தித்து கட்டுரை எழுதி உங்களுக்குள்ளாகாகவும் மகிழுங்கள்.  பகிர்ந்து பிறரையும் மகிழச்செய்து மகிழுங்களேன். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 84

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    20-06-2015—சனி

    “வறுமையை ஒழிப்பது முதலில் நிறைவேற வேண்டிய அடிப்படைத் தேவை மட்டுமேயாகும்”. — அரவிந்தர்.

     

    பயிற்சி— 1) வறுமை என்பது இயற்கையா, செயற்கையா?
    2) காரணம் கூறவும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 83

    வாழ்க மனித அறிவு                                               வளர்க மனித அறிவு

    19-06-2015—வெள்ளி

     

    “பயனற்ற, வீணான, பகட்டான காரியங்களில் ஈடுபட்டவர்களும், கர்வம் நிறைந்தவர்களும் என்னை விட்டு வெகுதூரம் விலகியவர்கள்.”          

                                                                          …… நபிகள் நாயகம்.

    பயிற்சி— 1) மேலே கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றும் எவ்வாறு அறிவியல் ரீதியாக இறையைவிட்டு விலகச் செய்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 82

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

    13-06-2015—சனி

    “ஏகாந்தத்தில் அமர்ந்து இறைவனை நினைப்பதும், இறை அன்பர்களுடன் தொடர்பு கொள்வதும் இறை நெறியில் செல்ல உதவும்.
    …..வள்ளலார்.
    பயிற்சி— 1) ஏகாந்தம் என்பது என்ன?
    2) இறை அன்பர்கள் யார்?
    3) இறை நெறி என்பது என்ன?
    4) இவ்வுண்மையை ஒட்டி வேறு பல அறிஞர்கள் கூறியுள்ளதை ஒப்பிட்டுப் பார்த்து மகிழவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 81

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

    12-06-2015—வெள்ளி

     

    “ செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.”
                                                                                                                   ….. அறிஞர். பெர்னார்டு ஷா
    பயிற்சி— 1) அறிஞர் பொ்னார்டு ஷா என்ன அறிவுறுத்துகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்கஅமுதமொழிகள்- 80           

        06-06-2015—சனி

     “அற்பருக்குஆண்டவன்அளித்தவரமேஅகம்பாவம்”  

    –  அறிஞர். பர்ட்டன்புரூஸ்.                                                           

    பயிற்சி -1) 

    அகம்பாவம்உடையவரைஅற்பருடன்ஒப்பிடுகிறாரேஅறிஞா்பர்ட்டன்புரூஸ்.  இதுஎவ்வாறுசரி?

    அறிஞர் பர்ட்டன் புரூஸ் கூறுவது சரியே. எவ்வாறு எனில் அகம்பாவம் என்பது தன்முனைப்பாகும். “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி” என்பதால். தன்முனைப்போ அல்லது அகம்பாவமோ இருந்தால் ‘அவன்,நான்,ஒன்று’ என்றுஅறியமுடியாது. ஆகவே  அறிவு முழுமை அடையாது குறையுடைய அறிவாகத்தான் இருக்கும்.  குறையுடையது அற்பம்எனப்படும்.  ஆகவே அறிஞர் பர்ட்டன் புரூஸ் குறை அறிவுடையவர் அகம்பாவம் உடையவராகிறார் என்கிறார்.

     பயிற்சி –  2)

    மேலும் சிந்திக்கவும்.

     “அற்பருக்கு ஆண்டவன் அளித்த வரமே அகம்பாவம்” என்கின்ற கூற்றின் வழியாக அறிஞர் பர்ட்டன் புரூஸ் என்ன சொல்கிறார்? அற்பரைப்பற்றி கூறுகிறாரா? அல்லது அகம்பாவத்தைப் பற்றி கூறுகிறாரா?  அகம்பாவம்(அகங்காரம், தன்முனைப்பு) இருக்குமானால் அவன் குறையுடைய அற்பனாக இருப்பான். அந்த குறையுடைய சிற்றறிவு இறைவனை மறந்து, தன்னையே முன்னிறுத்தி,  உள்ளமாகிய அகம் தூய்மை கெட எண்ணுவது, பேசுவது, செயல்புரிவதுமாக இருந்தால் விளைவு துன்பம் தானே?!  ஆங்கிலத்தில் அகம்பாவம் EGO (Edging God Out) எனப்படுகின்றது. எனவே முழுமை அடையாத வரையில் அதாவது தெய்வநிலையை அறியாமலோ உணராமலோ இருப்பவருக்கு  அகம்பாவத்தை பரிசாகக் கொடுக்கிறார் இறைவன் என்று குறையுடையவரை (அற்பரை) ஏளனப்படுத்தி எச்சரிக்கிறார் அறிஞர் பர்ட்டன்புரூஸ்.

     மேலும் சிந்தித்தால்….

    அளித்த வரம்’ என்றுதான் கூறுகிறார்.

    அளிக்கும் வரம்’ என்று கூறவில்லை.

    காரணம்:ஞானம் பெற்றவரைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே இறைவனை எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் அயராவிழிப்பு நிலையில் இல்லாமல்,  இறைவனை மறந்த நிலையில் இருப்பதால் ‘அளித்த வரம்’ எனச் சுட்டிக்காட்டுகிறார். எனவே அகம்பாவம் இருக்கும் வரையில் முழுமையடைய முடியாது என்பதனை தெளிவுபடுத்துகிறார் அறிஞர்.  வாழ்க வளமுடன்

    Loading