சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 279

    வாழ்க மனித அறிவு!                                              வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 279

     

    07-12-2018 — வெள்ளி

    “ பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணம்தான் உயர்வானது.”

                                                                                                                 . . . வேதாத்திரி மகரிஷி.
    பயிற்சி—
                             1) என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

                   2) எண்ணத்தை இயக்கம் என்கிறாரே?  எண்ண இயக்கத்தை  பிரபஞ்ச இயக்கத்தோடு ஒப்பிடுகிறாரே! இது எப்படி?

                             3) இத்தகைய சிறப்புடைய இயக்கமான எண்ண ஆற்றலைக் கொண்ட மனிதகுலம் ஏன் அல்லல் பட வேண்டும்?
                             4) அல்லலுக்கு என்ன தீர்வு?
                             5) எண்ணம் பற்றி பல அறிஞர்கள் கூறியிருந்தாலும் இவ்வாறாக வேறு யாராவது கூறியிருக்கிறார்களா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                         வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 278

    சிந்திக்க அமுத மொழிகள் – 278

                

       24-11-2018 — சனி

    lotus

     அறிவின் பயனை அடைய சினத்தைத் தவிர்க்க வேண்டும்.”   அண்ணல் காந்தி அடிகள்.

    பயிற்சி—

    1)   என்ன கூறுகிறார் அண்ணல் காந்தி அடிகள்?

    2)   அறிவின் பயன் ஒன்றா? பலவா?

    3)   என்னென்ன?

    4)   இறுதியான பயன் என்ன?

    5)   அறிவின் சக்தியும் பயனும் ஒன்றா? அல்லது வேறு வேறா?

    6)   அறிவின் பயனை அடைய சினம் தடையாக உள்ளதா?

    7)   சினம் அறிவின் பயனை அடைவதற்கு எவ்வாறு தடையாக உள்ளது?

    8)   அறிவின் பயன், சினம் தவிர்த்தல் இந்த இரண்டில் எது முக்கியம்?

    9)   அத்தடையாகிய சினத்தை எவ்வாறு தவிர்ப்பது?

    10)  அச்சக்தியை/அறிவை வளர்த்துக் கொள்ளவதென்றால் எவ்வாறு வளர்த்துக்கொள்வது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

     வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு


     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 277

    சிந்திக்க அமுத மொழிகள் – 277

                

       23-11-2018 — வெள்ளி

    lotus

     

    அறிவுதான் சக்தி. அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.”    சுவாமி விவேகானந்தர்.

     

    பயிற்சி—

    1)   என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

    2)   அறிவு தான் சக்தி என்றால் என்ன பொருள்?

    3) அச்சக்தியை/அறிவை வளர்த்துக் கொள்ளவதென்றால் எவ்வாறு வளர்த்துக்கொள்வது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

     வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு


     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் 276

    வாழ்க மனித அறிவு                                                                                    வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள் -276

                    10-11-2018 — சனி

     உன் கொடிய பகைவன் உன்னிடம் இருக்கும் அறியாமைதான்” -அறிஞர் லா ரோஷ் புக்கோ.

     

    பயிற்சி—

    1)   என்ன கூறுகிறார் அறிஞர் லா ரோஷ் புக்கோ?

    2)   அறியாமை அவ்வளவு கொடியதா?

    3)   என்ன செய்யும் அறியாமை?

    4)   அவ்வாறெனில் எவ்வாறு அறியாமை போக்கிக் கொள்வது?

    5)   அதற்கான பயிற்சி உள்ளதா?

    6)   சுயமாக அறியாமையைப் போக்கிக் கொள்ள முடியாதா?

    7) அறியாமை நீங்கினால் விளைவு என்ன?

     வாழ்க அறிவுச் செல்வம்                            வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 275

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 275

                

       09-11-2018 — வெள்ளி

     Analysis_of_Thought

    துவக்கத்தை விட முடிவை பற்றி அதிகமாக சிந்தனை செய்ய வேண்டும்” -அறிஞர் ஷோபன்.

                                                                           

    பயிற்சி—

    1) என்ன கூறுகிறார் அறிஞர் ஷோபன்?

    2) துவக்கம் என்றால் என்ன? முடிவு என்றால் என்ன?

    3) துவக்கத்தைவிட ஏன் முடிவு பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும் என்கிறார் அறிஞர் ஷோபன்?

    4)  அறிஞர் ஷோபனும் வேதாத்திரி மகரிஷி அவர்களும் எவ்வாறு இணைகிறார்கள் இந்த கண்டுபிடிப்பில்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                      வளா்க அறிவுச் செல்வம்

     


     

    Loading

  • அறிவிப்பு-14-03-2018-புதன்

    வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

    அறிவிப்பு

    14-03-2018-புதன்

    அன்பர்களே!
    வாழ்க வளமுடன்!

    இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும். (Click)

    சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன்படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

    தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்-274

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்–274

    12-01-2018-வெள்ளி

    amudhamozhi_38

    அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.”

    . . . புத்தர்.

    பயிற்சி:

    1) அறியாமை என்று எதனைக் கூறுகின்றார் புத்தர்?

     2) ‘அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது’ என்கிறாரே புத்தர்! 

    3) அறியாமை ஆயுள் முழுவதும் அப்படியே இருந்துவிட்டு போகலாமா?

    4) அறியாமை நீங்கினால் அதன் விளைவு, திருவள்ளுவர் கூறுவது போன்று அறிவு அறிவுடைமை ஆகுமா?

    5) அறியாமை பற்றி வேதாத்திரிய அறிவியல்(அறிவு+இயல்) அகராதி (Vethathrian Dictionary of Science of Consciousness) என்ன கூறுகின்றது?

    6) என்றோ (சுமார் இருபத்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர்) வாழ்ந்தார் புத்தார். ஆனால் இன்று நாம் அறியாமை பற்றி புத்தர் எண்ணிய எண்ணங்களை அறிந்து கொண்டு, வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘அறியாமை’ பற்றி எண்ணிய எண்ணங்களோடு ஒப்பீடு செய்து, அறிவின் அறிவியல் உருவானது பற்றி நினைந்து மகிழ்ச்சி அடையலாமே!  இவ்வாறு எல்லாம் இயல்பூக்க நியதியினை பயன்படுத்தி பண்பேற்றத்தில் ஏற்றம் பெறலாமே!

    7) அன்பர்களே புத்தரின் இந்த அமுதமொழியைத் தூண்டுகோலாகக் கொண்டு ஒரு சிறு கட்டுரை எழுதிப்பார்க்கலாமே! எழுதும்போது புத்தர் என்னென்ன எண்ணி, இந்த அமுதமொழியினை அருளினாரோ அவையெல்லாம் நமக்கு தெரிய வருமே! புத்தரைப்போன்றே சிந்தனையாளர்களாகலாமே! வேதாத்திரிய அகராதி அதற்கு நமக்குத் துணை செய்யக் காத்திருக்கின்றதே!

    8) ஆழ்ந்த சிந்தனையில், உள்ளே இருக்கும் உத்தமனுடன்ஒருவேளை பேசுகின்ற  ஆனந்த அனுபவ வாய்ப்பைப் பெறலாமே!  சுயசிந்தனையே இறையுடன் பேசுவதுதானே! வாதி பிரதிவாதியாக இருந்து சிந்திக்கலாமே!  வாழ்க வளமுடன்!

    9) இன்னும் ஏதேனும் வினாக்கள் உங்களுக்குள் இருந்தால் அவ்வினாக்களை எழுப்பி விடை காணலாமே!

     

    வாழ்க வளமுடன். வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 273

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 273

    15-12-2017 — வெள்ளி

    ‘உலக சிக்கல்களை ஒரு நொடியில் உணர்த்திடலாம். ஒருவராலும் அதனை உடன் திருத்திட முடியாது’

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஏன் அவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2) பின்னர் எவ்வாறு தீர்க்க முடியும்?
    3) மனவளக் கலைஞர்களின் பெரும் பங்கு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 272

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 272

     

    09-12-2017 — சனி

     

    எல்லோருக்கும் வழி தெரியும். ஆனால் பயணிப்பது ஒரு சிலர்தான்.

    ….. புத்தர்

     

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் புத்தர்?
    2) காரணம் என்ன?
    3) இதனையே கீதையில் கண்ணன் எவ்வாறு உரைக்கிறான்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 271

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 271

    08-12-2017 — வெள்ளி

    உடல் வலிமை என்பது மிருகத்தன்மை; நீதிநெறியின்பாலான வலிமையே உயர்ந்தது, சிறந்தது.  . . வெண்டேல் பிலிப்ஸ்

     

    பயிற்சி—
    1) உடல் வலிமை எப்போது மிருகத்தன்மையாகின்றது?
    2) நீதிநெறியின் பாலான வலிமை என்பது என்ன?
    3) ஏன் உடல் வலிமையையும் நீதிநெறியின்பாலான வலிமையும் இணைத்துச் செல்கிறார் அறிஞர் வெண்டேல் பிலிப்ஸ்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 270

    வாழ்க மனித அறிவு                                                         வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 270

    02-12-2017 — சனி

    ஆன்மிக சாதனையில் கவனக்குறைவாக இருப்பவர்கள் துன்பத்தைத் தேடி வரவைக்கிறார்கள்

    …..சுவாமி யதீஸ்வரானந்தர்

    பயிற்சி:–

    1) ஆன்மிக சாதனையின் நோக்கம் என்ன?
    2) அந்த நோக்கத்திற்கு கவனக்குறைவு துன்பத்தைத் தேடி வரவைக்கும்  அளவிற்கு எவ்வாறு பாதகமாக உள்ளது?
    3) அப்படியானால் ஆன்மிக சாதனையின் நோக்கம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 269

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 269

    01-12-2017 — வெள்ளி

     

     

    நான் யார்? எதற்காக இங்கு வந்துள்ளேன்? என்பதை அறியாத வரை வாழ்க்கை என்பது சாத்தியமில்லை!

    …. லியோ டால்ஸ்டாய்

    பயிற்சி—
    1) வாழ்க்கை சாத்தியமில்லை என்றால் என்ன பொருள்?
    2) எதற்காக நாம் இப்பூவுலகிற்கு வந்துள்ளோம்?
    3) ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்கின்ற முதுமொழிப்படி நிகழ்வுகள் தற்பொழுது நடைமுறையில் இல்லாத சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் மாதா பிதா செய்த புண்ணியத்தால் வேதாத்திரி மகரிஷி அவர்களைத் தரிசித்து குருவாக அடையச் செய்த இயற்கையின்/இறையின் நோக்கம் என்ன?
    4) ‘நான் யார்?’ அறியாத முன் வாழ்க்கை சாத்தியமில்லை எனில் வாழ்ந்தது என்னவாகும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading