சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 256

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 256

    15-10-2017 — ஞாயிறு

     நாம் அறிவுரைகளை வழங்குகிறோமே தவிர நன்னடத்தை பயிற்சி அளிப்பதில்லை. — லாரோக்பௌகாட் .

    பயிற்சி:–

     1)  அறிஞரின் கூற்றில் என்ன அறிவுரை இருக்கின்றது?

    2)  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறுவதற்கு ஒரு வாரம் கழித்து வரச் சொன்ன சம்பவத்தை நினை கூர்வோமே!வாழ்க வளமுடன்.

    3)  அறிஞரின் ஆதங்கம் இப்போது நிறைவேறியுள்ளதா?

    4)  எவ்வாறு  நிறைவேறியுள்ளது.?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 255

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 255

    14-10-2017 — சனி

    அழுக்கு அடியில் படிந்து நீர் தெளிவு அடைவது போல ஆசைகள் ஒழிந்தால் அறிவு என்னும் தெளிவு இதயத்தில் உண்டாகும்.    ராஜாஜி

     

    பயிற்சி—

      1) அறிவே தெளிவா?

     2)  அல்லது அறிவிற்கு தெளிவு அவசியமா?  அவசியம் என்றால் ஏன் அவசியம்

     3) தெளிவு பெற ஆசைகளை ஒழிக்க வேண்டும் என்பதன் மூலம் என்ன கூறுகிறார் மூதறிஞர் ராஜாஜி?

     4)  ஆசையை அழுக்குடன் ஒப்பிடுகிறாரே?  எந்த ஆசையை அழுக்குடன் ஒப்பிடுகிறார்?

     5) ‘ஆசைகள் ஒழிந்தால்’ எந்தப் பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

     6) இச்சை எனும் தலைப்பில் திருவேதாத்திரியம் அருளியுள்ள கவியினை(கவி எண்.1553 – 80 வரிகள்) நினைவு கூர்ந்து பேரின்பம் பெறவும்.

    அறிவிப்பு:  நாளை (15-10-2017 ஞாயிறு) ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்விற்கு மாற்றாக  ‘சிந்திக்க அமுத மொழி பயிற்சி’ நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளலாகின்றது.  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 254

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 254

    13-10-2017 — வெள்ளி

     

    சூழ்நிலையை நன்கு தீர்மானிக்கத் தெரிந்தவனுக்கே அதிர்ஷ்டம் உதவும். — யுப்ரீடீஸ்

    பயிற்சி—

    1) அதிர்ஷ்டம் என்பதனை எந்த பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

    2) சூழ்நிலை என்று அறிஞர் யுப்ரீடீஸ்  கூறுவது வேதாத்திரியத்தின் செயல்விளைவு தத்துவத்தோடு எவ்வாறு/எந்த இடத்தில் பொருந்துகிறது?

    3) சூழ்நிலைகளைக் கண்டுபிடிக்கும் திறன் எல்லோருக்கும் சாத்தியமா?

    4) இல்லையெனில் எவ்வாறு சாத்தியமாக்குவது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 253

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 253

                                            04-02-2017 —சனி

    சமுதாயமாகிய பெரிய மரத்தின் வேர் முதற்கொண்டு உச்சிக்கிளை வரையிலுள்ள முழு அளவிலான சீர்திருத்தமே நான் பெரிதும் விரும்புவது.

                                                             . . . சுவாமி விவேகானந்தர்.

       பயிற்சி—

    1)    இன்றைய சமுதாய சூழலில் சுவாமி விவேகானந்தர் கூறுவது எவ்வளவு பொருத்தமாக  உள்ளது என்று ஆராய்ந்து அவரோடு இணைந்து இன்புறுலாமே!

    2)    இணைந்து கொண்டு பரப்ப வேண்டிய எண்ண அலைகளை எண்ணலாமே!

    3)    சீர்திருத்தம் என்பது என்ன?

    4)    சீர்திருத்தம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்


     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 252

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 252

                                            03-02-2017 —வெள்ளி

    தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வாழ்வில் சக்தியுண்டாகும்”

     . . .  மகான் மகா கவி பாரதியார்.

     பயிற்சி—

    1)   சக்தி எதற்காக? உடல் இயக்கத்திற்காகவா?

    2)   ‘வாழ்வில் சக்தி உண்டாகும்’ என்பதன் பொருள் என்ன?

    3)   ‘தெளிந்த அறிவு’ என்பது என்ன?

    4)  ‘இடைவிடாத முயற்சிக்கும்’ வாழ்வில் ‘சக்தி உண்டாவதற்கும்’ உள்ள தொடர்பு என்ன?

     வாழ்க அறிவுச் செல்வம்                                                          வளா்க அறிவுச் செல்வம்

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 251

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 251

                                            28-01-2017 —சனி

    தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை?

                                                                                    …..  சுவாமி விவேகானந்தர்.  

    பயிற்சி— 

    1)    தூய்மையும் எவ்வாறு வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளது?

    2)    தூய்மை வெற்றிக்கு இன்றியமையாதது என்பதால், சுவாமி விவேகானந்தர் கூறும் ‘வெற்றி’ என்பது குறிப்பிட்டு ‘ஒன்றைக்’ குறிக்கின்றதா?

    3)    அல்லது எல்லா வெற்றிகளையுமே குறிப்பிடுகின்றாரா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 250

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 250

                                            27-01-2017 —வெள்ளி

    சிந்திக்காமல் பேச ஆரம்பிப்பது குறி பார்க்காமல் செலுத்தப்படும் அம்பைப் போன்றது.

                                                                  . . .   பழமொழி.                 

     

    பயிற்சி:

    1) சிந்தித்துப் பேசுவதால் என்ன நிகழ்கின்றது?

    2) சிந்தித்துப் பேசுவதால் என்ன பயன்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 249

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotusசிந்திக்க அமுத மொழிகள் – 249

                                            21-01-2017 —சனி

    வாழ்க்கையில் கஷ்டங்களைக் காணாதவன் தன்னைப் பெரிய மனிதனாக உயர்த்திக் கொண்டதே

    கிடையாது!

                                                                            . . . தியோடர் ரூஸ்வெல்ட்

     பயிற்சி—

    1)    பெரிய மனிதனாக ஆவதற்கு கஷ்டங்களைக் காணவேண்டும் என்கிறாரே அறிஞர்

    தியோடர் ரூஸ்வெல்ட் அவர்கள்.  ஏன்?

    2)    ‘பெரிய மனிதராவது’ என்பது நேர்மறையானது(positive).  ஆனால் ‘கஷ்டங்களைக் காணவேண்டும்’ என்பது எதிர்மறையாக உள்ளதே!  ஏன்?

    3)    இது எதனை அறிவுறுத்துகின்றது?

    4)    நம் குருதேவர் அவர்களை இக்கூற்றிற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா?  வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 248

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    lotus

                                                             சிந்திக்க அமுத மொழிகள் – 248

                                            20-01-2017 — வெள்ளி

        நம்மை அறிமுகப்படுத்துபவை நம் சொற்கள் அல்ல.
          நம் வாழ்க்கையே நம்மை அறிமுகப்படுத்துகின்றது.’

                                                                                                          . . . மகாத்மா காந்தி


    பயிற்சி—
    1) என்ன கூறுகின்றார் மகாத்மா காந்தி?
    2) மனிதகுலத்திற்கு தேவையானதைத்தானே அறிஞர்கள் பொன்மொழிகளாக வெளிப்படுத்துகின்றனர். ஆகவே இங்கே ‘அறிமுகப்படுத்துவது பற்றி கூறப்படுவதால் அறிமுகப்படுத்துவது மனிதனுக்குத் தேவையாகின்றதல்லவா?
    3) அப்படியானால் ‘அறிமுகப்படுத்துவது’ என்றால் என்ன?
    4) இப்பொன்மொழியின் உட்கருத்து என்ன?
    5) உட்கருத்தை நேரிடையாகவே சொல்லியிருக்கலாம் அல்லவா?! ஏன் இவ்வாறு அறிஞர்கள் மறைமுகமாகக் கூறுகின்றனர்?  

    6) இப்பொன்மொழிக்கும் புகழ், உயர்புகழ் ஆகியவற்றிற்கும் தொடர்பு

    உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 247

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 247

    14-01-2017 — சனி


    ‘ஞானம் என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம். அறிவையறிந்த தெளிவு என்பது சிறப்பான விளக்கம்’

                                                                        ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  

    பயிற்சி—

    1)   ‘ஞானம்’ என்பதற்கானப் பொருளை பொதுவான, சிறப்பான என்று ஏன் இரண்டுவிதமாகக் கூறுகிறார்?

    2)   அறிவை அறிந்த தெளிவு என்றால் என்ன?


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 246

    வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 246

    13-01-2017  — வெள்ளி

    ‘தேடுதலும், உண்மையைக் கண்டுபிடிப்பதில் விடாமுயற்சியும், தெளிந்த அறிவும் உயர்ந்த     மனிதனை உருவாக்கும்.’

     

                                                           . . . உலகப்புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

    பயிற்சி:

    1)   என்ன கூறுகிறார் விஞ்ஞானி?

    2)   ஆன்மீக சாதகர்களுக்கும் உலகப்புகழ் விஞ்ஞானி கூறும் அறிவுரை பொருந்துகின்றது அல்லவா?

    3)   விஞ்ஞானி கூறும் தேடுதல், உண்மையைக் கண்டுபிடித்தல், தெளிந்த அறிவு என்பது ஆன்மீக சாதகர்களுக்கு என்ன பொருளாகின்றது?

     

            வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்

     


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 245

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 245

    07-01-2017 — சனி


    ஏற்றிவைக்கும் ஒவ்வொரு விளக்கும் வெளிச்சத்தைத் தருவதுபோல் மனிதன் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் முன்னேற்றத்தைத் தரும்”

                                                              . . . அறிஞர் ரூஸோ


    பயிற்சி:–

    1. முன்னேற்றம் என்று எதனைக் குறிப்பிடுகிறார் அறிஞர் ரூஸோ?
    2. எதில் முன்னேற்றம் வரும்?
    3. நற்செயல் செய்வதனை வலியுறுத்த அறிஞர் ரூஸோ கூறும் உவமானத்தைக் கவனிக்கவும்! சிந்திக்கவும்!
    4. அறிஞர் கூறுவது என்ன?
    5. சிந்திக்க அமுத மொழிப் பயிற்சிக்காக ஏற்கனவே நாம் எடுத்துக் கொண்ட அறிஞர் ரூஸோவின்  அறிவுரைகளை நினைவிற் கொண்டு வரவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்


    Loading