மேலும் உண்மை விளங்க …………? 2/? -FFC-337

வாழ்க திருவேதாத்திரியம்!                       வளர்க திருவேதாத்திரியம்!!

மேலும் உண்மை விளங்க …………?–2/?

 சிறப்பு அறிவிற்கு விருந்து – 337

FFC – 337

இணையதள பதிவேற்றம் – 1012

நாள்: 15-08-2024

உ.ச.ஆண்டு: 15-08-39

 வாழ்க வளமுடன்! 

நேற்றைய(14-08-2024) தொடர்ச்சி…..

  1. தலைப்பிற்குள் மூழ்குவோம்:

தலைப்பிலுள்ள நேரிடையான வார்த்தைகளுக்கும், மறைமுக வார்த்தைகளுக்கும் விளக்கம் காண்போம்.          தலைப்பு

 ‘மேலும் உண்மை விளங்க ……?’  என்றுள்ளது.  அன்பர்களே ஆழ்ந்து சிந்திப்போம்  இந்த தலைப்பை ஒட்டி எழும் வினாக்கள் என்னென்ன?

  • மேலும் என்றால்….?
  • முன்னர் ………..?
  • முன்னர் விளங்கிய உண்மை எது?
  • இப்போது விளங்கும்  உண்மை எது?
  • உண்மை விளங்கியதால் யாருக்கு என்ன நிகழ்ந்தது?
  • தனி ஒருவருக்கு நன்மையா?
  • மனித குலத்திற்கும் சேர்ந்தே நன்மையா?
  1. சிந்தனை-கருவி:

தனி ஒருவரான நம் சிந்தனையின் கதாநாயகரான நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பெற்ற  உண்மை விளக்கம் அவருக்கு மட்டுமே சொந்தமாகவில்லை.  அவருக்கு மட்டுமே    நன்மையாகவுமில்லை.    இயற்கை /இறைநிலை தெரிவிக்கும்  உண்மைகளை சமுதாயத்திற்கு தெரிவிக்கும் சிந்தனை-கருவியாக வாழ்நாள் முழுவதும் அவர் செயல்பட்டு வாழ்ந்ததால்  (as mouth-piece of Nature/Almighty) தனி  ஒருவரான  அவருக்கும் சமுதாயத்திற்கும் இணைந்தே அவ்வுண்மை பயனாகியது.  உலகை உய்விக்க வெளியாகிய உண்மை என்பதால்,  இப்பவும், எப்பவும், எப்போதும்  திருக்குறள் இவ்வுலகம் உள்ள வரை பயனாகிக் கொண்டேதான் இருப்பதுபோல் திருவள்ளுவரை மானசீகக் குருவாக கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக  இயற்கை/இறை  விரும்பி சமுதாயத்திற்குத் தெரிவித்த உண்மைகள் உலகம் உள்ள வரை பயனாகவே இருக்கும் என்பது திண்ணம்.

  1. அறிந்ததை சமுதாயத்திற்கு தெரிவிப்பது இயற்கை நீதி

மகரிஷி அவர்கள்  இயற்கையின்/இறைநிலையின்  சமுதாயத்திற்கும் தெரிவிக்கும் சிந்தனை-கருவியாக செயல்பட்டதால், இயற்கை முதலில் தனக்கு  தெரிவிப்பதை, முறைப்படி (in turn) சமுதாயத்திற்கு தெரிவிக்கும், இயற்கை நீதியின் அடிப்படையில்(மகரிஷி அவர்களின் மகா சமாதிக்கு முன்னர் ஒரு மாதத்திற்கு முன்னர்  கடைசியாக  அருளிய, இறைநிலையின் தன்மாற்ற சரித்திரம் எனும் நூலில் இரண்டாவது பக்கத்தில் – பத்தி 2 ல் காணலாம்) கடமையும், பொறுப்பும், கருணையும் இணைந்த  பண்புள்ளவராகத் திகழ்ந்ததால் அவருக்கும், சமுதாயத்திற்கும் சேர்ந்தே நன்மையாகியது.

  1. விளக்கி விளங்கியது:

விளங்கிய   உண்மை  அறிவைப் பற்றியது.  உண்மையை,  அவரே விளங்கிக்கொண்டாரா? அல்லது இயற்கை/இறை  அவருக்கு விளக்கியதா? இயற்தை/இறை விளக்கி அவர் விளங்கிக்கொண்டார். இவ்வாறு கூறுவது அடக்கத்தின்பால் அல்ல. தன்முனைப்பு கரைந்த விழிப்பு நிலையில் கூறுவது   ‘விளக்கி விளங்கியது’ என்பது.   இயற்கை தனக்கு விளக்க, அதனை மக்களுக்கு  விளக்குவதாக  மகரிஷி அவர்களே கூறுவார்.

அறநெறிப்பண்பில் ஈகையும் ஒன்றாக இருப்பதற்கேற்பவும்,

 ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்ற  திருமூலரின் அறிவுரைக்கேற்பவும்,

தனி ஒருவருக்கு கிடைக்கின்ற  விளக்க-அறிவொளி சமுதாயத்திற்கும் போய்ச்சேர வேண்டும் என்கின்ற இயற்கை நீதியின்படியும்,

தான் பெற்ற விளக்க-அறிவொளியை  சமுதாயத்திற்கும் பாய்ச்சிவிடும் உயரிய பண்பாளர்  மகரிஷி அவர்கள்.

  1. இறைக்கின்ற கிணறுதான் ஊறும்:

 ‘இறைக்கின்ற கிணறுதான்  ஊறும்’ என்பதுபோல்  தனக்கு இயற்கையால்/இறையால் அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்ற   உண்மைகள்  அனைத்தையும் ஒன்று விடாமல் சமுதாயத்திற்கு   தெரிவிக்கும் பொறுப்பு இருந்ததால், உலகமக்கள் அனைவரும்  உய்வதற்கான உண்மைகளை இயற்கை அன்னை அவருக்குத்  தன் இரகசியங்களை மேலும், மேலும்  அம்பலமாக்கிவிட்டாள் என்பதே நிதசர்ன உண்மை.    அதனால் உலகம்  மேலும் மேலும் உய்ந்து கொண்டேதான் வருகின்றது என்பதனை நடைமுறையில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.   உலகம் விரைவில் உய்ந்து முழுவதுமாக ஏற்றம் பெற்றுவிடும் என்பது திண்ணம்.  தொடர்வோம் நம் சிந்தனையை ஊக்கத்துடனும், ஆழமாகவும்.  மேலும் ’உண்மை விளங்கியதால்  என்ன நிகழ்ந்தது?

  1. அறிவின் அறிவியல் தோற்றமாயிற்று:

விஞ்ஞானத்தில் எத்தனையோ துறைகள்    (different branches of Science) எற்பட்டு வரும் நிலையிலும், மனிதகுல நன்மையைக் கருதி, எல்லா விஞ்ஞானத் துறைகளுக்கும் முதன்மை விஞ்ஞானமான அறிவிற்கென தனி  அறிவியல் ஒன்று  (Exclusive Science of Consciousness) தேவை என விஞ்ஞானம் நினைக்காத  நிலையிலும்,  தனி  ஒருவரான   வேதாத்திரி மகரிஷி அவர்களால், அந்த தேவை அறியப்பட்டு, உருவாக்கப்பட்டு, முழுமை பெற்று சமுதாயத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது அறிவிற்கான தனி அறிவியல்.

  1. நல்ல எதிர்காலம் உலகிற்கு:

அறிவின் அறிவியல் தோற்றத்தின்  விளைவு நல்ல எதிர்காலம் உலகிற்கு வந்துவிட்டது.   வருங்காலம் உணரும் ஞானத்தால்  ‘நல்ல எதிர்காலம் உலகிற்கு வந்து விட்டது’ என மகரிஷி அவர்கள் கூறுவதனை, அவர் எண்ண ஓட்டத்துடன் இணைந்துவிட்ட நாமும், நல்ல எதிர்காலம் உலகிற்கு காத்துக் கொண்டிருக்கின்றது என உறுதிபடுத்திய பிறகு, பயனாளியராக இருக்கும் நாம் மனப்பூர்வமாக, இதயப்பூர்வமாக மகிழ்ச்சியோடு  அவர் கூறும்  உண்மையை  ‘ஆம்!’ என ஆமோதிக்கிறோம்.

உலகிற்கு நல்ல காலம் வந்துவிட்டது என எப்போது கூறியுள்ளார்? 1955 ல்  அருளிய கவியின் வாயிலாகக் கூறியிருக்கிறார். அதனை  நாம்   70  ஆண்டுகள் சென்றுதான்   இந்த நன்னாளில்  அக்கவியினை நினைவுபடுத்தி மகிழ்கிறோம்.

                                                 

  1. இன்றுள்ள சூழலில் உலகம் எப்படி உய்வடைய முடியும்?

உலகம் உய்வடையும் என்பது திண்ணம் என்கிறார் மகரிஷி அவர்கள். எப்படி அவர் திட்ட வட்டமாகக் கூறகிறார்?    அறிவிற்கான தனி அறிவியல் அவரால் உருவாக்கப்பட்டதால் உலகம் உய்வடையும் எனத் திட்ட வட்டமாகக் கூறுகிறார்.  காரணம் அறிவின் அறிவியலால்,

அறிவின் இருப்பிடம்,

கடவுள் என்பவர் யார்?

கடவுளிலிருந்து மனிதன் வரையிலான அதன் தன்மாற்ற

சரித்திரம்,

எப்படி அறிவேதான் தெய்வம்,

உயிர் என்பது என்ன,

பிறவியின் நோக்கம்,

நான் யார் என்கின்ற கண்டுபிடிப்பை அவரவர்களே

கண்டுபிடிக்கும் நிலை,

இன்ப துன்பம் ஏன் வருகின்றது?

வறுமைக்கான காரணங்கள்,

மனிதனின் சிறப்பு,

உலக சகோதரத்துவம்

சமுதாயச் சிக்களுக்கான காரணங்களும் அதற்கானத் தீர்வுகள்

உலக அமைதியின் அறிவியல்

                   அறிவின் வறுமைகளான அறியாமை, அலட்சியம்,

                   உணர்ச்சிவயம் போக்குவதற்கான ஒழுக்கவியல் கல்வி

 ஆகியவைப் பற்றிய அறிவு (Knowledge) ஏற்பட்டுவிட்டதால் இனி மனித குலத்திற்கு ஏற்றம் ஆரம்பித்துவிட்டது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

  1. மகரிஷி அழைப்பில் நாமும் இணைவோம்:

ஏற்ற ஏணியில் முதல் படியில் ஏறிய நாமெல்லாரும் நமது உலக – சகோதரர்களையும் ஏணியில் ஏறி அற்புதமாம் அறிவின் இருப்பிடம் அறிய மகரிஷியுடன் இணைந்து அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற உலக மக்களை அன்போடு அழைக்கின்றோம். 1970 ஆம் ஆண்டு அவர் விடுத்துள்ள அழைப்புக் கவியினை நினைவு கூர்வோம்.

வாழ்க வளமுடன்!    தொடரும். 


           வாழ்க வையகம்!                                                                வாழ்க வளமுடன்!!

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments