சிந்திக்க வினாக்கள்- 318

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

lotus

 

சிந்திக்க வினாக்கள்- 318

30-07-2020 – வியாழன்

மனிதனின் அடையாளம்

  1. மனிதவாழ்வில் துன்பங்கள் ஏன்?
  2. மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்பதாலா துன்பங்களை அனுபவிக்கிறான்? 
  3. மனிதனுக்குத் தன்னுடைய அடையாளம் தெரியாதா?
  4. வாழ்க்கையில் என்ன வேண்டும்?
  5. எதில் வெற்றி பெற வேண்டும்?
  6. பிறவியின் நோக்கமே தன்னை(self realization)அறிய வேண்டும். அதற்கான வினாதான் “நான் யார்?” என்பது. அதாவது நான் யார் என அறிய வேண்டும் என்கின்றபோதே தான் யார் எனச் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்றாகின்றது அல்லவா?
  7. தன்னை அறிவதுதான் வாழ்வின் நோக்கம் எனில், தன்னைத் தவறாக அடையாளம் காண்பது என்பது பிறவியின் நோக்கத்திற்கு எதிரானது தானே?
  8. இயற்கை/இறைதான் மனிதாக வந்துள்ளது. தன்னுடைய சரியான, உண்மை நிலையை அறியாமல் தவறாகத் தன்னை அடையாளம் காண்பதென்பது இயற்கைக்கு முரணானதுதானே?
  9. ஆகவே, இயற்கை எதற்காக மனிதனாக வந்ததோ, அதற்கு எதிர் மறையாக வாழ்ந்து இயற்கையின் இனிமையைக் கெடுத்தால் விளைவு துன்பம் தானே?
  10. மனிதன் கொண்டிருக்கின்ற தவறான அடையாளம் எது?
  11. மனிதன் தன்னை சரியாக அடையாளம் காணின் என்னென்ன நன்மைகளை அடைகிறான்? அதனால் சமுதாயம் அடையும் நன்மைகள் என்னென்ன?
  12. தன்னை இறையுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? அல்லது அழிகின்ற உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? எது சிறப்பு? நீங்களே சிந்தித்துப் பாருங்களேன்!

வாழ்க வளமுடன்!

 

வாழ்க வேதாத்திரியம்! வளர்க வேதாத்திரியம்!!