சிந்திக்க அமுத மொழிகள் – 340-இணையதள பதிவேற்றம் – 1014

வாழ்க வையகம்!                                                                                                  வாழ்க வளமுடன்!

வள்ளல் பெருமகனாரின் கடைசி அமுதமொழிகள்

சிந்திக்க அமுத மொழிகள் – 340

      இணையதள பதிவேற்றம் – 1014 

                                                                                                                                                                                                                                                                                                            நாள்:  22-04-2025                                                                                                        உ.ச.ஆண்டு:  22-04-0040

                              வள்ளலாரின் கடைசிச் செய்தி — உலக சமுதாயத்திற்கு

    வாழ்க வளமுடன்!

       இன்று, ‘சிந்திக்க’ அமுத மொழி’ பயிற்சியில் வள்ளல் பெருமகனார் உலக சமுதாயத்திற்கு விடுத்துள்ள கடைசிச்செய்தியை –  அமுத மொழியை எடுத்துக்கொள்வோம்.  நம் இணையதள சத்சங்கம் வழக்கப்படி கேள்விகளுடன் பயிற்சியியைத்  தொடங்குவோம். வாழ்க வளமுடன்!

வள்ளலாரின் கடைசி அமுதமொழியில் உள்ள    ஒவ்வொரு வார்த்தையையுமே தனித்தனியாக எடுத்துக்கொண்டு சிந்திப்போம்.

பயிற்சி:

1) என்ன கூறிவிட்டுச் சென்றுள்ளாா்  அருட்பிரகாச வள்ளலார். இதில் உள்ள   முக்கியத்துவம் என்ன?

2)  “இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம்”இந்த வாக்கியத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?

3) “கேட்டு, திருந்தி, எழுச்சி பெற்று  திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்” என்கிறாா்.  அப்படியா?

a) ‘திருந்தி’ என்பதன் பொருள் என்ன?

b) ‘எழுச்சி பெற்று’ என்பதன் பொருள் என்ன? இங்கு வள்ளலார் கூறும் ‘எழுச்சி பெற்று’ என்பதனை அவரின் அணுக்கச் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள ‘இன்றேனும், விரைந்து  எழுச்சி பெற்று’ உய்வீர் என்பதோடு இணைத்து பொருள் காண முடிகின்றதா?

c) ‘திறத்தில்’ என்பதன் பொருள் என்ன(நம்மிடம் திறன் உள்ளது என்று அடிக்கோட்டிட்டுக் காட்டுகிறாா்)

d) ‘ஒருவரேனும் தேறிலர்(என்னே அக்கறை மனிதகுலத்தின்மீது!)’

4) “இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்துகொள்வோம்”.  இக்கூற்றிலிருந்து நமக்குத்தெரிவிக்கும் கருத்து என்ன? 

a) ‘புகுந்துகொள்வோம்’ என்றால் …. எப்படி?

5) “இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கிருப்போம்.”? என்ன கூறுகிறார் வள்ளலார்?

6) திருத்திவிடுவோம் அஞ்சவேண்டாம்” என்று பன்மையில் கூறியிருக்கிறார்.

a) திருத்திவிடுவோம்’ என்றால் என்ன பொருள் ?

b) ‘அஞ்சவேண்டாம்’ என்றால்…???

c) பன்மையில் கூறுகிறாரே! யார் யாரையெல்லாம் சேர்த்து பன்மையில் கூறுகிறார்?

d) ஏன் அஞ்ச வேண்டாம் என்கிறார்?

7) ‘அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்’ அளிப்போம் என்கிறார்.

a) அகவினத்தார் என்றால் யார் அவர்?

b) சாகா வரம் தருவோம் என்றால்…? யாருக்கெல்லாம் இது வரை சாகா வரம் கொடுத்துள்ளார்?

c) ‘ஏனையோர்க்கு’ என்றால் யார் அந்த  ஏனையோர்கள்?

d) ‘பரிபாக நிலை’ என்றால் என்ன பொருள்?

e) வள்ளலார் கூறியதுபோல் பரிபாக நிலை சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? ஏற்படுத்தப்பட்டு வருகின்றதா?

8) ‘அளிப்போம்’ என்கிறார்.

a) அந்த நிலை அளித்துப் பெறுவதா?

b) அல்லது தானாகப் பெருவதா?

c) தானாகப் பெறுவதென்றால் எப்படி?

d) ‘நிலையாமை – உணர்வதையும்’  ‘பரிபாக நிலையையும்’ தொடர்பு படுத்துகிறாரா வள்ளலார்?

9) இக்கேள்விகளை வள்ளலாரின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் கேட்டிருந்தால்  என்ன பதில் கூறியிருப்பார் மகரிஷி அவர்கள்?

 மேலேகுறிப்பிட்டுள்ள எட்டு கேள்விகளுக்குமான நம்முடைய பதில்களை மகரிஷி அவர்களின் பதில்களோடு ஒப்பிட்டுப் பாா்த்தால் நம்முடைய எல்லா பதில்களும் ஒத்துப் போகின்றதா?  அல்லது ஒரு சில பதில்கள் மட்டும்  ஒத்துப்போகின்றது என்றால் அவை எவை எவை?  சிந்திப்போம் அன்பர்களே!

வள்ளலார் இந்த இறுதி செய்தியினை அருளிய அன்று(30-01-1874) 150 ஆண்டுகளுக்குப் பின்னர்,  தன்  இறுதி செய்தி இவ்வாறெல்லாம் சிந்திக்கச் செய்யும்  என எதிர்பாா்த்திருப்பாரா? அப்படிக் கேட்பதைவிட இவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டியே இந்தச் செய்தியினை அருளியுள்ளாரா? தங்களின் பதில் என்ன?  வாழ்க வளமுடன்!

                        நாளையும்(23-04-2025) இப்பயிற்சியினைத் தொடர்வோம்.

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

வாழ்க மனித அறிவு!  வளர்க மனித அறிவு!!

வாழ்க அறிவுச் செல்வம்!                          வளா்க அறிவுச் செல்வம்!!

 

 

 

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments