சிந்திக்க அமுத மொழிகள்- 09
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-11-2014
தனது உண்மையை உணர்வதே கடவுளின் இருப்பை உணர்வதாகும்.
…….. பகவான் ஸ்ரீரமணர்
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-11-2014
தனது உண்மையை உணர்வதே கடவுளின் இருப்பை உணர்வதாகும்.
…….. பகவான் ஸ்ரீரமணர்
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-11-2014
எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அது தான் மனம் என்பது
சரியா? சரி என்றாலும், சரியில்லை என்றாலும் காரணம் கூறவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
FFC – 24
20-11-2014
கடந்த இரண்டு நாட்களாக ”மகானாக்கும் மகோன்னத வினாக்கள்” என்கின்ற தலைப்பிலே அறிவிற்கான விருந்தை அருந்தி வருகிறோம். ஆறாம் அறிவின் சிறப்பே சிந்திப்பது. எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் ஏன். எதற்கு, எவ்வாறு என வினாக்கள் எழுப்பி அறிவுப் பூர்வமான விடைகளைப் பெற்று வாழ்க்கையை அவ்வாறு வாழ்ந்திட வேண்டும் எனப் பார்த்தோம். ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்கிறோம், ஒரு நாள் இறக்கப் போகிறோம் என்றில்லாமல் மனித அறிவு வாழ்ந்ததற்கு அர்த்தம் இருக்க வேண்டும். எண்ணிலடங்கா முறைகள் இப் புவியில் வந்து போயிருந்தாலும்(பிறவிகள்) இந்த முறையாவது(பிறவியலாவது), வந்ததற்கான அடையாளம் பதிக்க வேண்டும்.
குறைந்த பட்சம் முக்கிய நான்கு வினாக்களையாவதுக் கேட்டு விடைகளை அறிவுபூர்வமாகப் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பார்த்தோம். இன்று அந்த நான்கு வினாக்களும் மகானாக்கும் வினாக்கள்தானா, அவைகளுக்கான விடைகள் என்ன, அவ்வாறு அவ்வினாக்களைக் கேட்டு அறிவுபூர்வமாக விடைகளைப் பெற்று வாழ்ந்து யாராவது மகானாக ஆகியிருக்கிறார்களா என அறிய இருக்கிறோம்.
இந்த நான்கு வினாக்கள்தான் வேதாத்திரி என்கின்ற சிறுவரை பின்னர் வேதாத்திரி மகானாக்கியது. இந்த நான்கு வினாக்களை பன்னிரண்டு வயதிற்குள் உள்ளம் எழுப்பிக் கொண்டேயிருக்கத் தொடங்கியது வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு. அவ்வினாக்களுக்கு மகரிஷி அவர்கள் கண்ட விடைகள்தான் வேதாத்திரியம் என்கின்ற பெயரில் ஆன்மீகத்தில் பாரிஜாத மரமாகி(கற்பனை), தேவலோகத்தில் விரும்பியதைத் தரும் பாரிஜாத மலர்களைப் பூக்க வைத்துக் கொண்டு, அதனுள் சுரக்கும் தேனை அருந்த உலகெங்கும் உள்ள அறிவுத் தேனீக்களை ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. அறிவுத் தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாத மலரை மொய்த்த வண்ணம் இருக்கின்றன.
மகரிஷி அவர்களின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்பு வரைதான் என்றாலும், அவர் பிரபஞ்ச பல்கலைக் கழகத்தில் படித்த படிப்பு ஏராளம், ஏராளம், ஏராளம். Though he did not study in any University in the world, He studied in the city of Universe in which the world is located. After his third standard study in school, His further study took place in the Universe, the Kingdom of Mother Nature). பிரபஞ்சக் கல்வியில் அவர் அடைந்த உன்னதத் தேர்ச்சியினை வைத்து, இயற்கை, பள்ளியில் ஆரம்பித்து பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப்படிப்பு வரை, யோகமும் மனித மாண்பும் என்கின்ற பாடமாக எடுத்துச் சென்றுள்ளது.
சுருங்கச் சொல்வதென்றால் சிந்தனையாளர்களுக்கு ஆசான் இயற்கையே. எனவே இயற்கை–ஆசான் முற்றிலும் கீழ்படிதல் உள்ள மாணவருக்கு (implicit obedient studnt) தன்னுடைய, இதுவரைத் தெளிவாக அறியாதிருந்த இரகசியங்களையெல்லாம் தெளிவாக்கிவிட்டது, அவ்வாறு கருணையோடு மனித சமுதாயத்திற்கு வேதாத்திரி மகரிஷி வழியாகக் கொடுத்தது தான் வேதாத்திரியம்.
இயற்கை எல்லோருக்கும் இவ்வாறாக ஆசானக இருக்கத் தயாராக இருக்கின்றது.. மனிதன் தான் தயாராக இல்லை. புலன்வழி வாழ்க்கையையே மேலானதாகவும், அதுவே வாழ்க்கையாகவும் நினைத்துக் கொண்டு மாயையில் வாழ்கிறான். உயிர் வாழ்வதற்கு, புலன் வழி வாழ்க்கை தேவை என்பதால், அதனை அளவுடனும், முறையுடனும் வாழ்ந்து கொண்டு, அறவோனாக வாழ்வதற்கு அறிவுவழி வாழ்க்கை வாழ வேண்டும். அறவோனாக வாழும் போதுதான் துன்பம் இராது. இருப்பினும் துன்பம் வந்தாலும்., வந்த துன்பத்தைப் போக்கவும், எதிர்கொள்ளத் துணிச்சலும் இருக்கும். மனதின் உணர்வுகளான நான்கு படிகளில் இறுதிப் படியான பேரின்பத்தை அடைய முடியும்.
எவ்வாறு வாழ வேண்டும் எனத் தெரியாமல் இருந்த மனித குலத்திற்கு வாழ்வியல் கல்வியைத் தந்து அறவொளி வீசச் செய்துள்ள இந்த நான்கு வினாக்களை மகோன்னதக் கேள்விகள் என அழைக்கக் கூடாதா? மொழி மனிதனுடையக் கருத்துக்களைத் தெரிவிக்கின்ற ஊடகம். ஆன்மீகத்தில் மறை பொருட்களான இறை, உயிர். மனம், அறிவு ஆகியவைகளைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரவா்கள் உணா்ந்த அனுபவங்களின் மூலமாகத்தான் வாழ்க்கையோடு இணைத்துப் பொதுப்படையாக்கித் தெரிவிக்க வேண்டியுள்ளது. உணர்ந்தது உணர்ந்தவருக்குத் தெளிவாக இருந்தாலும், அதனை எளிமையாக்கி பிறர்க்குப் விளங்குமாறுத் தெரிவிப்பதற்கு மொழிவளம் அவசியம். ஆகவே ஆன்மீகக் கல்விக்கெனத் தனிமொழித் தேவை. அந்த மொழித் தேவையைப் பூர்த்தி செய்கின்றது வேதாத்திரிய ஆன்மீக மொழி. ஆன்மீக வரலாற்றில் வேதாத்திரியத்தின் தோற்றம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது இவ்வளவுச் சிறப்புகளை ஏற்படுத்தியது அந்த நான்கு வினாக்கள் தானே ! வேதாத்திரிய எண்ணப் பள்ளியில்(Vethahiri’s school of thoughts) ஆர்வமுள்ள மாணவனாக ஆறு மாதம் இருந்து வந்தாலே அம்மாணவர் இயற்கை அன்னையின் வரலாற்றையும், அதன் குழந்தைகளின் மனித சமுதாயம் உய்வதற்கான வழிகளையும் அறிந்து பிறர்க்கும் எடுத்துச் சொல்லும் அளவிற்கு அறிவு வளர்ச்சி பெறும் என்பது உறுதி.
எனவே இந்நான்கு வினாக்களையும் மகோன்னத வினாக்கள் எனக் கூறி அறிவு மகிழக் கூடாதா? மகோன்னதம் என்கின்ற சொல் உருவாக்கப்பட்டச் சொல்(coined word). உன்னதம் என்றாலே தன்மையில், பண்பில், இயல்பில் மிக உயர்வானது என்று பொருள். மேன்மையானது என்று பொருள். பயன்பாட்டில் மிகச்சிறந்தது என்றும் பொருள். மகா என்கின்ற சொல் சிறப்பு அல்லது கீர்த்திவாய்ந்த என்று பொருள். ஒன்றின் தன்மையை மிகுவித்துக் காட்டும் அடைமொழியான மகா என்னும் சொல்லை உன்னதமான என்கின்ற சொல்லுக்கு முன்னர் சோ்த்து ”மகோன்னதமான” எனப்படுகின்றது.
மகரிஷி அவர்களுக்கு பன்னிரண்டு வயதிற்கு முன்னரே உள்ளத்தில் எழத் தொடங்கியது அந்நான்கு வினாக்கள். அந்த நான்கு வினாக்கள்தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த வேதாத்திரியக் குழந்தையை பின்னர் மகானாக்கியதால் அந்த நான்கு வினாக்களையும் மகானாக்கிய மகோன்னத வினாக்கள் என்று போற்றிப் பேரானந்தம் அடைகிறோம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம். இதுவரை எந்த வினாக்கள் மகானாக்கிய மகோன்னத வினாக்கள் என்று பார்த்தோம். நாளை அந்த மகோன்னத வினாக்களுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்த விடைகளைச் சுருக்கமாக நாளைய விருந்தாக அருந்துவோம். நாளைத் தொடரும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 ![]()
	Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.