இயற்கையின்/இறையின் திட்டம் நிறைவேற, பொறுப்பையும் கடமையையும் உணர்ந்த பிறகு மகரிஷி அவர்கள் சீடர்களுக்கு கூறும் அறிவுரையைக் — “Information, conformation, Transformation”கவனிக்க வேண்டும். அதாவது அவர் கூறுவதனை தகவலாக எடுத்துக் கொள்ளச் சொல்கிறார், “Doubt what I say’ என்பார். திருவள்ளுவர் அறிவுறுத்துவதுபோல் அந்த தகவல் சரிதானா, சரியில்லையா, அந்த தகவல் உண்மைதானா, என சீடர்களை உறுதிப்படுத்தச் சொல்கிறார். உறுதிப்படுத்திய பிறகு அவ்வாறு தன்னை மாற்றிக் கொள்ளச் சொல்கிறார். ஏன் இவ்வாறு சொல்கிறார்? வீடு கட்ட வேண்டும் என முடிவு செய்தாகிவிட்டது. அடுத்தது அதற்கான வரைபடத்தை(plan- Blue print) தயார் செய்து அரசிடம் approvalவாங்கி வைத்துவிட்டால் போதாது. வீடு கட்டி முடிந்ததாகிவிடுமா? அந்த வரைபடம் போல் வீட்டைகட்டி அதில் குடியேற வேண்டும். அதுபோல் அவர் கூறும் தகவல்களை சரிபார்ப்பதோடு இருந்துவிடாமல் தகவல்களை சரிபார்த்த பிறகு தன்னிடம் மாற்றத்தைக் கொண்டுவந்தால்தான் பலன் ஏற்படும் என்கிறார். மாற்றத்தால்தான் பலன் ஏற்படும்.
அவர் சிந்தித்து சொன்ன கருத்தை சீடரும் சிந்தித்தால் தனதாக்கிக் கொள்ள முடியும். அப்போதுதான் சீடரிடம் மாற்றம் வரும். ‘உடற்பயிற்சி செய்யச் சொல்கிறார். அதனால் உடற்பயிற்சி செய்கிறேன்’ என்றில்லாமல், ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உடற்பயிற்சி எவ்வாறு பயனளிக்கின்றது என்பதனை அறிந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
எப்போதும் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மையை விளங்கிக் கொள்ள ஆர்வம் வேண்டும். ஏன் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்? மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். இயற்கையின் இரகசியம் எது என்றும், அதனை அறிய வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கிறார் மகரிஷி அவர்கள்.
மகரிஷியின் இந்த அறிவுரையை துணையாகக் கொண்டு நம் சிந்தனையைத் தொடர்வோம்.
பேரியக்க மண்டலத்தில் இயக்கத்தை உற்று நோக்கினால், அது மூன்றடுக்கு இயக்க நிலைகளாக .இயங்கிக் கொண்டிருப்பதை அறியலாம். அவையாவன – தூலம், சூக்குமம், காரணம். தோற்றங்கள் என்றாலே அது தூல வடிவில் இருக்கும். வடிவம் இருந்தாலும் அந்த தூல வடிவமே அத்தோற்றத்தின் உண்மை நிலையாகாது. அதனால்தான் திருவள்ளுவர் எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருளின் மெய்ப்பொருளை(உண்மை நிலை) காண்பது அறிவு என்கிறார். அந்தத் தோற்றம் இயக்க நிலைதான். அந்த தோற்றத்தில் இரண்டு இரகசியங்கள் அடங்கியுள்ளன.
. உதாரணத்திற்கு உடலை எடுத்துக் கொள்வோம். உடல் வடிவமுள்ளது. அந்த வடிவமே உடல் ஆகிவிடவில்லை. உடலே மனிதனாகிவிடமுடியாது, உடல் செல்களால் ஆனது. அந்த உடலுக்குள் உயிர் இருக்கின்றது. பஞ்ச பூதங்களில் முதல் பௌதீகப் பிரிவான விண் உடலில் சுழன்று ஓடிக்கொண்டிருக்கின்றது, அதுவே உயிர் எனப்படுகின்றது. நுண்ணியதாக இருப்பதால் அது நுண்ணுடல் எனப்படுகின்றது. உயிர் புலன்களுக்கும், கருவிகளுக்கும் எட்டாமல் சூக்கும நிலையில் உடல் முழுவதும் ஓடுவதால் இது சூக்கும உடல் எனப்படுகின்றது. சூக்கும உடலில் அமைந்துள்ள விண்களின் தற்சுழற்சியால் வெளியேறும் இறைத்துகள்களால் எழும் அலைகளால் அமைந்ததே சீவகாந்தக்களம். இது காரண உடல் எனப்படுகின்றது. உடல் என்பது தூலம், சூக்குமம், காரணம் ஆகிய மூன்றடுக்கு இயக்க நிலைகளாக உள்ளது. ஆகவே எந்த ஒரு இயக்கத்திலும் தூல நிலை புலன்களுக்கு தெரியும். ஆனால் சூக்குமமும், காரணமும் புலன்களுக்கு எட்டாது. இரகசியமாக இருக்கும். இந்த மூன்றும் தனித்தனியாக இயங்க முடியாது. எனவே இந்த மூன்றும் ஒன்றால் ஒன்று நிலை பெறுகின்றது, சிறப்புப் பெறுகின்றது. இந்த உண்மையை உணரும்போதுதான் மனிதனுக்கு இயற்கையின் தன்மையை அறிந்து, எந்த அளவுக்கு வாழ்க்கையைச் செம்மைப்படுத்த முடியும் என்கின்ற தெளிவு உண்டாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
இயற்கையின் இரகசியம் என்பதே சூக்குமம், காரணம் என்கின்ற இரண்டு நிலைகளுமாகும். இயற்கையின் இரகசியம் எந்த அளவிற்கு உணரப்படுகின்றதோ அந்த அளவுக்கு வாழ்வில் பொறுப்புணா்வு ஏற்படும் என்கிறார். அவ்வாறில்லாமல் தூலம் புலன்களுக்கு எட்டுவதால் அதன் மேன்மையிலேயே அறிவைச் செலுத்தி வந்தால் அது மயக்கத்திற்குத்தான் வழி வகுப்பதாகிவிடும் என்கிறார்.
மனிதனுக்கும் பேரியக்க மண்டலத்திலுள்ள எல்லா சடப்பொருட்களுக்கும் உண்மை என்பதும் மேன்மை என்பதும் இயற்கையாக அமைந்துள்ள இயல்பான குணங்கள். மேன்மை புலன்களால் உணரமுடிவதால், அதனை மட்டும் அனுபவித்துவிட்டு உண்மையை அறியாமல் இருக்கக்கூடாது.
ஆகவேதான் ‘நான் என்பது உடலல்ல, நான் என்பது, அறிவு’ என்கின்ற உண்மை தெளிவாகியதால்தான் ‘நான் யார் என்ற தத்துவமே நாமாக உள்ளோம்’ என்கின்ற உண்மை விளங்குகிறது. உலக சகோதரத்துவம் உண்மையாகின்றது. அதனால்தான் ஒவ்வொரு மனிதனும் உயிரறிவு பெறவேண்டும் என்கிறார். மகரிஷி அவர்கள்.
மலரை எடுத்துக் கொள்வோம். மலர் தோற்றமுடையது. தோற்றம் மட்டுல்லாமல், அதற்கு வண்ணமும் உண்டு. வாசமும் உண்டு. தோற்றம் என்பது தூல நிலை. மலரின் சூக்கும நிலை என்ன? மலர் எதனால் ஆனதோ அதுதான் அதன் சூக்கும நிலை. மலர் அணுக்களால் ஆனது. அணுக்கள் மலரின் சூக்கும நிலை. மலரின் காரண நிலை எது? மலருக்கு வண்ணத்தையும் வாசத்தையும் கொடுப்பது எது? மலரிலிருந்து வரும் காந்த அலைகள். அந்த காந்த அலைகள் தான் வண்ணமிகு, வாசமிகு மலராக காட்சி அளிப்பதற்குக் காரணமாக உள்ளது.மலராக காட்சி அளிக்கும் நிகழ்ச்சிக்கு தூல நிலை, கூக்கும நிலை, காரண நிலை ஆகிய மூன்றடுக்கு இயக்கங்கள் அவசியமாகின்றன. இவ்வாறாக மலரின் இரகசிய ஆனால் உண்மை நிலையைக் கொண்டுதான் மலர் வழியே மறைபொருளை விளக்க முடிகின்றது.
இயற்கை அழகை இரசிக்கும் எண்ணம் மிகமிக உயர்ந்துள்ளது. மலரின் உண்மை நிலையை உணராதவர்கள் மலரின் அழகை ரசிப்பதற்கும், மலரின் உண்மை நிலை அறிந்தவர்கள் மலரின் அழகை ரசிப்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. இரண்டாமவர் மலரை ரசிப்பது அவரை இறையுணர்விற்கு கொண்டு செல்லும். இதே போன்றே விடுமுறை நாட்களில் இயற்கை காட்சிகளைப் பார்ப்பதற்கு வெளியில் செல்கிறோம். இயற்கை காட்சிகளின் உண்மையை அறிந்தவர்கள் அன்று பூராவும் இறை உணர்விலேயே இருப்பர். எனவே மேன்மையை அனுபவிப்பதுபோல், உண்மையையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அந்த ஆர்வம் மிகுபட உண்மையை அறிந்து கொள்வதன் அவசியத்தை உணரவேண்டும், அதற்கு உண்மை என்கின்ற சொல் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்று வேதாத்திரி மகரிஷி அவா்கள் கூறும் விளக்கத்கை அறிய வேண்டும்.
மனிதனும் சரி மற்ற சடப்பொருட்களும் இயற்கையிலிருந்துதான் உருவாகியுள்ளது. எனவே உண்மை என்பதும் மேன்மை என்பதும் மனிதனுக்கும் பேரியக்க மண்டலத்திலுள்ள எல்லா சடப்பொருட்களுக்கும் இயற்கையாக அமைந்துள்ள இயல்பான குணங்கள் என்கிறார் மகரிஷி அவர்கள். உண்மை என்பது — உள்+மை= உண்மை. உள்ளடங்கியது உட்பொருள். மேன்மை என்பது புறச்சிறப்பு. எனவே இந்த இரண்டு சொற்களில் உள்ள எழுத்துக்களான ‘உள்’, ‘மை’ ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கியது தான் உண்மை என்கின்ற சொல் என்கிறார். மேலும் அவர் கூறுவதாவது:- மேன்மை என்பது புறச்சிறப்பு. மேலாக புலன்களுக்கு எடுத்துக்காட்டுவது. புலன் உணர்வுக்கு உட்பட்ட மேன்மையிலேயே அறிவைச் செலுத்தி வந்தால் அது மயக்கத்திற்குத்தான் வழிவகுக்கும். உண்மையை அறியும்போதுதான் மேன்மையின் சிறப்பை எந்த அளவிலே, எந்த முறையிலே நாம் அனுபவிக்க முடியும் என்று தெரிந்து கொள்ளலாம் என்கிறார்.
அடுத்த விருந்தில் 02-12-2015 புதனன்று இன்பம் துய்த்தலில் உள்ள உண்மையை ஆராய்வோம்.
இன்றைய விருந்தின் சுருக்கம்:
1) இயற்கையின் இரகசியம் எது என அறியப்பட்டது. 2) உண்மை என்கின்ற சொல்லின் உருவாக்கம் பற்றி அறிந்தது. அ) அதிலிருந்து புலன் மயக்கத்திலிருந்து தெளிவு பெறுவது பற்றியும், ஆ) திருவள்ளுவர் மெய்ப்பொருளை ஏன் அறிய வேண்டும் என்று சொல்கிறார் என்பது பற்றியும் அறியப்பட்டது..
உழைப்பு மூவகைத் தீமைகளைப் போக்குகிறது. அவையாவன, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.
…… அனுபவமொழி
பயிற்சி— 1) ‘பொழுது போகாமை’ அவ்வளவு கொடுமையானதா? எப்படி? நன்மை இழக்கப்படுகின்றதா? 2) பொழுது போகாமைக்கும் கெட்டபழக்கத்திற்கும் என்ன தொடர்பு? 3) இதனாலன்றோ ‘An idle mind is devil’s paradise’ என்கின்றனர்?
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.