February 2016

Monthly Archives

  • சிந்திக்க வினாக்கள்-155

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    29-02-2016 – திங்கள்

     

    தான் பண்பில்–குணத்தில் உயர்ந்து வருவதனை, எதைக் கொண்டு சரியாக, துல்லியமாக தானாகவே கண்டுபிடிக்க முடியும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

  • FFC – 167-வினா விடை – 16

    வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

    வினா விடை – 16

     FFC – 167

    28-02-2016—ஞாயிறு

    சிந்திக்க வினாக்கள்-114
    (08-10-2015 – வியாழன்)

    (அ) தன்மாற்றத்தில்(பரிணாமத்தில்) ஏன் ஆறாம் அறிவிற்கென்று புலன் ஏதும் உருவாகவில்லை?
    (ஆ) இதனால் அறியப்படுவது என்ன?

    விடை:

    அறிவியலில் ‘பரிணாமம்-Evolution) என்பது, திருவேதாத்திரியத்தில் தன்மாற்றம்(self transformation) எனப்படுகின்றது. ஏன்? உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்களின், ‘விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணையவேண்டும்’ என்ற எண்ணத்தை அவருக்கு பின்னர் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார். மெய்ஞ்ஞானம் தன்னை, மனித குலத்தில் எளிதாக பரவவிட விஞ்ஞானம் உதவிடவேண்டும் என்றுதான் நினைக்கின்றது.

    திருவேதாத்திரியத்தின் பலதுறைகளில் ஒன்றான இயற்கையியல்/இறையியல், இப்பிரபஞ்ச தோற்றத்திற்கான மூலத்தை உறுதி படுத்திவிட்டது. பிரபஞ்சத்தின் மூலத்தை ஏற்றுக் கொண்டது, ஆகவே அதனைத் துணிந்தும் அறிவித்தும்விட்டது. இப்பிரபஞ்ச மூலத்தை ஏற்று அந்த மூலமே இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி/இறைநிலை/வெட்டவெளி என்கின்றது. அந்த மூலப்பொருளேதான் எல்லாமாகவும் மாற்றம்(transform) அடைந்துள்ளதால், பரிணாமம் என்று சுற்றி வளைத்து சொல்லாமல் நேரிடையாகவே, சுத்தவெளியே, தானாகவே, மாற்றம் அடைந்துள்ளதால் அந்த மாற்றத்தை (தன்னுடையமாற்றம்) தன்மாற்றம் (self transformation) என்கின்றது.

    மகரிஷி அவர்கள் கூறும் ‘பரிணாமம் என்பது இயற்கையினுடைய தன்மாற்றமே’ என்பதற்கு சான்றாக வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்டமரபில் வந்து உதிக்கின்ற மகான்கள் வரிசையில் ஒருமகானான மகா கவி பாரதியார் ஏற்கனவே கூறியுள்ளதனை எடுத்துக்கொள்ளலாம்.

    எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனில் கேளீரோ?’ எனக் கேட்கின்றார் மகான் மகா கவி பாரதியார். இதற்கும், பரிணாமம் என்பது இயற்கையின் தன்மாற்றமே என்பதற்கும் என்ன தொடர்பு என ஐயம் எழலாம். ‘எதனூடும்(எதன் ஊடும்)’ என்றால் ‘எந்தப் பொருட்களில் உள்ளும்’ என்று பொருள். எந்தப்பொருளும்-எல்லாப்பொருளும் இந்த பிரபஞ்சத்திற்குள் அடங்கியதுதானே! எந்தப் பொருட்களுக்குள்ளும்/எல்லாப் பொருட்களுக்குள்ளும் அறிவேதான் பொதுவாக உள்ளது, அதுவே தெய்வம் என்கிறார், மகான் மகா கவி பாரதியார்.

    FFC_167-பாரதியார் படம்

    அரூபமாக உள்ள அறிவே எல்லாப்பொருட்களிலும் பொதுவாக இருப்பதால், அரூபத்தில் பல இருக்க முடியாது. என்பதாலும் அறிவு-இயற்கை-இறை ஒன்றே பலவாக மாற்றமாகியது என்றுதானே பொருள். ஆகவே மகரிஷி அவர்கள் இப்போது கூறும் இயற்கையின் ஆதிநிலையே தன்மாற்றமாகியுள்ளது என்பதனை மகான் மகா கவி பாரதியாரின் அப்போது கூறிய கூற்றிலிருந்து உறுதியாகின்றது. தன்மாற்றம் என்பது என்ன என்பதனை உறுதிபடுத்திவிட்டோம்.

    இப்போது ‘சிந்தனைப்பயிற்சிக்கு எடுத்துக்கொண்ட வினாவிற்குள்’ செல்வோம்.
    வினா ஆறாம் அறிவு பற்றியது. எனவே இப்பிரபஞ்சத்தில் ஏன் உயிரினங்கள் தோன்றின என்கின்ற வினாவை எழுப்பி அதற்கு விடை காண வேண்டும். உயிரினங்கள் என்பது என்ன? சடப்பொருட்களுக்கு உணர்வு கிடையாது. உயிரினங்களுக்கு உணர்வு உண்டு. உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்னர் சடப்பொருட்களாகிய பஞ்சபூதங்கள் மட்டுமே இருந்தன. அவற்றிலிருந்து காந்தம் உருவாகிக்கொண்டிருந்தது. அந்த காந்தம், அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளாக தன்மாற்றம் அடைந்து கொண்டிருந்தன.

    எனவே ஆதிநிலையிலிருந்த அறிவு இவற்றை உணா்வதற்கான உந்துதலின் (urge) விளைவே உயிரினங்களாகின. அவையே ஒரறிவு முதல் ஐயறிவு சீவராசிகள். மகான் மகா கவி பாரதியார் அவர்களின் கண்டுபிடிப்பான ‘எங்கும், எதிலும் அறிவு இருக்கின்றது’ என்பதால், பஞ்சபூதங்களிலிருந்த அறிவு, தனக்கே உரிய (அதாவது அறிவிற்கே உரிய) இயல்பாகிய உணருதல்-அறிதல் என்கின்ற உந்துதலால் ஐவகை பிரபஞ்ச நிகழ்ச்சிகளை உணர்வதற்கு கருவி தேவை. அந்த தேவைக்காக உருவானதே புலன்கள்(five senses) ஐந்தும்.

    புலப்படுத்துதல் என்றால் தெரியாமல் இருக்கின்ற ஒன்றை தெரியப்படுத்துதல். அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து புறநிகழ்ச்சிகள் வெளியே (உடலுக்கு வெளியே நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே அதனை உடலுக்குள் இருக்கின்ற கருமையத்தில் இருக்கும் அறிவு தானாகவே உணரவோ/அறியவோ முடியாது. ஆகவே எல்லை கட்டிய உடலுக்கு வெளியே நடக்கும் புறநிகழ்ச்சிகளை அறிவு (Nature-இறை) தெரிந்து கொள்வதற்காக சர்வ வல்லமையுடைய இயற்கையின் நிறைநிலையும் மற்றும் பொருண்மையும்-‘Entelechy’ ( kindly try to understand here, this ability of Nature in the light of the meaning of English word ‘Entelechy’ found in the dictionary. Already we have discussed ‘Entelechy’ in our Satsang) அமைத்துக் கொண்டதுதான் ஐந்து புலன்களும்.

    கண் என்கின்ற புலன் இல்லையானால் ஒளி இருப்பதை உணர முடியாது. கண் என்கின்ற புலன் இருந்தால் ஒளியை உணரமுடியும். ஒளி இருப்பதை கண் என்கின்ற கருவி அறிவிற்கு தெரியப்படுத்துவதால், அதாவது புலப்படுத்துவதால் ‘கண்’ புலன் என்று பெயர் பெறுகின்றது. காது என்கின்ற கருவி அறிவிற்கு தெரியப்படுத்துவதால், அதாவது புலப்படுத்துவதால் ‘காது’ புலன் என்று பெயர் பெறுகின்றது. ஆகவே ஐந்து புலன்களுமே உடலுக்குப் வெளியே-புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை, உடலுக்கு உள்ளே உள்ள கருமையத்தில் உள்ள அறிவு உணர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட உணர் கருவிகள்.

    இயற்கையின் ஆதிநிலையே ஐம்பூதங்களாகி தன்மாற்றம் அடைந்தது. ஒவ்வொரு பூதம் உருவாகி வரும்போதும் அததற்குரிய காந்த தன்மாற்றமும் ஏற்பட்டு வந்தன. அவையே விண்ணில் அழுத்தம், காற்றில் ஒலி, நெருப்பில் ஒளி, நீரில் சுவை, மண்ணில் வாசனை. ஆகவே பஞ்சபூதங்களாகிய பிறகு இயற்கையின் ஆதிநிலையாகிய அறிவு பிரபஞ்ச நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக உணர்வதற்காக ஒவ்வொரு புலன்களைக் கொண்ட உயிரினங்களாகியது. அவையே முதலில் ஒர் அறிவு சீவனான தாவரம்(ஒர் அறிவு – தொடுஉணர்வு), அடுத்ததாக இரண்டு அறிவு சீவனான புழு, அடுத்ததாக மூன்றாவது அறிவு சீவனான எறும்பு, அதற்கடுத்ததாக நான்காவது அறிவு சீவனான பாம்பு, ஐந்தாவதாக ஐயறிவு சீவன்களான பசு, புலி ஆகிய தோன்றின.

    அதன் பிறகு மனித இனம் தோன்றியுள்ளது. மனிதன் தன்னை ஆறாம் அறிவுடையவன் என வகைப்படுத்திக் கொண்டான். ஆனால் மனிதஇன தன்மாற்றத்தின்போது மனிதனுக்கு ஏற்கனவே உள்ள ஐந்து புலன்களைத் தவிர, ஆறாம் அறிவிற்காக கூடுதலாக புலன் ஏதும் உருவாகவில்லை. ஏன் என்று அறிவதே இன்றறைய அறிவிற்கு விருந்து.

    பொதுவாக உணர்தல்/அறிதல் என்பது அறிவின் இயல்பு என்பதால், பிரபஞ்சத்தின் ஐவகை நிகழ்ச்சிகளை உணர்ந்துவிட்டான பிறகு இயற்கை எதனை உணர்வதற்காக ஆறாம் அறிவுடைய சீவனான மனிதவடிவில் தன்மாற்றம் அடைந்தது? இதற்கானக் காரணம் என்ன?

    காரணத்தை அறிய விலங்கினங்களுக்கும் மனிதஇனத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் கொண்டு அறியலாம். அந்த வித்தியாசங்கள் என்னென்ன? மனிதன் கல்வி கற்கிறான். அதனால் எழுதப் படிக்கத் தெரியும், இதற்கு கண்களும், காதுகளும், நாவும், கைவிரல்களுமே போதும். மேலும் பேசுகிறான் எண்ணங்களை சொல்லாக வெளிப்படுத்துகிறான். தொழிலறிவு கற்கிறான். சிரிக்கிறான். நாணமுடையவனாக இருக்கிறான். நாகரீகமாக வாழ்கிறான். பண்புடையவனாக இருக்கிறான். இதற்காக ஆறாம் அறிவிற்கு என பிரத்யேகப் புலன் ஏதும் அவசியமில்லை மனிதனுக்கு.

    எழுதவும், படிக்கவும், பேசவும் என்பதற்காகமட்டுமேவா இயற்கை ஐந்தறிவு சீவனிலிருந்து ஆறறிவுசீவனான மனிதனாக தன்மாற்றம் அடைந்திருக்கும்!?
    கல்வி கற்க முடிகின்றது மனிதனால் என்கின்றபோதே ஆறாம்அறிவின் முதன்மையான பயன் சிந்திக்க முடியும் என்பதாகின்றது. சிந்தித்தலின் பயன் என்ன? சிந்தித்தலின் பயனாகத்தான் ஆதிமனிதனிலிருந்து, இன்றுள்ள நாகரீக மனிதன் வரை தன்மாற்றம் முன்னேற்றம் அடைந்து வந்துள்ளது.

    சிந்திப்பது என்பது என்ன, ஏன், எதற்கு என்கின்ற மூன்று வினாக்களை எழுப்பி விடைகாண்பதேயாகும். அப்படிப்பார்க்கும்போது ஆறாம் அறிவின் பயன் ஐயுணர்வுகளை அறிவதோடு, கூடவே ஐயுணா்வை உணர்கின்ற நான் யார், நான் ஏன் பிறந்தேன், முடிவில் எங்கு செல்லப்போகிறேன், நான் உணா்கின்ற ஐவகைநிகழ்ச்சிகளுக்கும் மூலம் எது, இந்நிகழ்ச்சிகள் ஏன், எவ்வாறு நடக்கின்றன என சிந்தித்து தன்னையே அறிந்துகொள்ளும் பயனை ஆறாவது அறிவு அடைய வேண்டும் என்பதே இயற்கையின் உள்ளார்ந்திருக்கையாக(inherence) உள்ளது.

    ஆகவே சிந்தனையால் இக்கேள்விகளைக் கேட்டு விடையை பெறுவதற்கு ஆறாவது அறிவிற்கு புலன்கள் ஏதும் தேவையில்லை. ஆகவே இயற்கை ஆறு அறிவுடைய மனிதஇனத்திற்கென பிரத்தியேகமாக புலன் எதனையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஏற்கனவே உள்ள ஐந்து புலன்களே போதுமானது. உடல் முழுவதும் தோல் என்கின்ற புலன் தொடுஉணர்வை அறிந்து கொள்கின்றது. மற்ற நான்கு புலன்களான கண்கள், காதுகள், மூக்கு. நாக்கு தலையின் முன்பக்கமான முகத்தில் இடம் பெறுமாறு வடிவமைத்துக் கொண்டது இயற்கை. இந்த நான்கு புலன்களைக் கொண்டே மனிதனின் முகம் அழகுடன் உள்ளது. வேறு புலன்களுக்கு முகத்தில் இடமில்லை. இவ்வாறு கூறுவதனால் முகத்தில் இடமில்லை என்பதற்காக ஆறாம் அறிவிற்காக புலன் ஏதும் ஏற்படுத்திக் கொள்வில்லை என்று பொருளாகா!

    ஆறாம் அறிவின் சிறப்பான சிந்தனையின் விளைவு, அறிவு முடிவில் தன்னையே உணர்ந்து கொள்ளுதலாகும். தன்னையே உணர்ந்து கொள்ளும் உணர்வு அகஉணர்வு. ஐம்புலன்கள் வழியாக உணர்ந்து கொள்ளும் உணர்வு புறஉணர்வு. புறஉணர்விற்குத்தான் அறிவிற்கு புலன்கள் என்கின்ற கருவிகள் தேவை.
    ஆனால் அகமாக இருக்கின்ற அறிவை/இறையை நானே என உணர்வது அக உணர்வு. எனவே தன்னையே யார் என்கின்ற உணர்வதற்கு தனியாக புலன் ஏதும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் அருளாளர்கள் வழிநடந்து சிந்திப்பதே ஆகும். அந்த வழியில் வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபில் வந்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்களின் வழிநடந்து, மகரிஷி அவர்கள், நம்மிடம் இதுவரை ஏற்றப்படாமல் இருந்துவந்த சிந்தனை விளக்கை ஏற்றி வைத்துள்ளார்.
    சாதாரணமாக விளக்கு சுடர் விட்டு தொடர்ந்து பிரகாசமாக எரிவதற்கு அதற்கு வேண்டிய எண்ணெய் ஊற்றியும், திரியின் முனையை நிமிண்டியும், அவ்வப்போது புது திரியை மாற்றிக் கொண்டும் இருப்பதுபோல் மகரிஷி அவர்கள் ஏற்றி வைத்துள்ள சிந்தனை விளக்கை தொடர்ந்து சுடர்விட, அருளாளர்கள் அருளியுள்ள நூல்களை படிப்பது (அவற்றில் மகரிஷி அவர்களின் நூல்களும் இடம் பெறவேண்டும்) சத்சங்கங்களில் கலந்து கொள்வது. நமக்குள்ளே சிந்தனையின் மூலம் சத்சங்கம் நடத்துவதும் பேருதவியாக இருக்கும். சிந்தனை விளக்கு சுடர்விட, ,ஆன்மபேரொளி அருளொளியை வீசச்செய்கின்ற வாழ்வை கடமையாக ஆற்ற வேண்டும்.

    துணைக்கேள்விக்கான பதில் என்ன? ஆறாம் அறிவின் நோக்கம்/பயன் இயற்கையின் ஆதிநிலையை/இறையை/தன்னை அறிதலாகும். இது அகஉணர்வு என்பதால் ஆறாம் அறிவிற்கு இதற்காக வழக்கத்தில் உள்ளது போன்ற உருவமுள்ள புலன்(conventional sense with physical appearance) ஏதும் தேவையில்லை என அறிந்து கொண்டோம். ஆனால் உருவமில்லாததை உணர, உருவமில்லா கருவியான சிறந்த–சிந்தனை ஒன்றே போதும். இயற்கையின் ஆதிநிலை/இறை அரூபமாக உள்ளதால் பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல், அதனை உணா்வதற்கு அரூபமாக உள்ள அறிவால்தான் முடியும். ஆகவே இம்முறையான அகவழிபாட்டிற்கு புலன்கள் ஏதும் தேவையில்லை.

    அறிவாகிய இறையை உணர்வதற்கு அகத்தவத்தால் தான் சாத்தியம் என்றும் உறுதிபடுத்தியபிறகுதான் நாம் அறிவை அறியும் மனவளக்கலையை பயின்று வருகிறோம். வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை. வாழ்க சிந்தனைச் செல்வம். வளர்க சிந்தனைச் செல்வம். வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 156

     

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    27-02-2016—சனி.

    “மனம் போனபோக்கில் நடப்பதோ, ஆசை வயப்பட்டு எல்லாவற்றையும் அனுபவிக்கத் துடிப்பதோ, நமக்குள் இருக்கும் இன்ப வெறியை அதிகரிக்கச் செய்து விடும். தர்ம சாத்திரங்கள் சொல்லும் அறிவுரைகளைப் பின்பற்றி நம்மை நாமே கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுவோம்.”

    . . . ஸ்ரீ அரவிந்தர்.

    பயிற்சி— 1) ஸ்ரீ அரவிந்தா் அன்று கூறியது இப்போது நடந்தேறிவருகின்றதா? எவ்வாறு? 2) மனவளக்கலை இதனை எவ்வாறு நிறைவேற்றி வருகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு.

                                                                        26-02-2016

    அன்புடையீர்,

                 வணக்கம். வாழ்க வளமுடன்.  (24-02-2016- புதன்கிழமை) அறிவிற்கு விருந்து, அன்று மாலை 5-00PM அளவில் updation செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்னர் (5-00 PM on 24-02-2016)

    முன்னர் இணையதளத்தை பார்வையிட்டவர்களின் நலன் கருதி இங்கே அப்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. வாசித்து பயன் பெறவும். அல்லது முழுவதுமாக மீண்டும் அன்றைய (24-02-2016) அறிவிற்கு விருந்தை அருந்த வேண்டும் என நினைக்கின்றவர்கள் தயவு செய்து இங்கே சொடுக்கவும்

     

    (Click here please).

    http://www.prosperspiritually.com/category/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

       வாழ்க வளமுடன்.  

    விடை – 15

    FFC – 166

    24-02-2016—புதன்

    சிந்திக்க வினாக்கள்-143

    (18-01-2016 – திங்கள்)

     

    மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?

     

    Updated portion of FFC 166 posted Yesterday(24-02-2016)  

     

    இப்போது தெய்வப்புலவர் திருவள்ளுவரை வணங்குவோம். திருவள்ளுவரை உலகமே போற்றுவதாலும், திருக்குறள் உலகப் பொதுமறை நூல் எனப்போற்றப்படுவதாலும், திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதிலிருந்தும் திருவள்ளுவரின் அரிய பெருமைகள் தெரிய வந்தாலும், திருவள்ளுவரின் அறிவாற்றலை நினைத்துப்போற்றுவதாலும், இயல்பூக்க நியதியின் பயனை அடைய முடியும் என்பதற்காக, நம் குருதேவர் வழியாக திருவள்ளுவர் பற்றி அறிவது சிறப்புடையதாகும்.   திருக்குறளை அறிவுக்கடல் என்கிறார் நம் மகரிஷி அவர்கள். அதனை நாம் ஆராய்ச்சி செய்து அதனை ஏற்றுக்கொள்ளலாமே.

      இறைஉணர் பயிற்சியாளர்கள் பயிற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவது?

      முதல் படி: ஆராய்ச்சியாகும்.

    1)   முதலில் இறை என்பது எது,

    2)   இறை எவ்வாறு இப்பிரபஞ்சமாகியது,

    3)   இறை எவ்வாறு நாமாக ஆகியுள்ளது அல்லது இறைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன,

    4)   கண்களால் காணமுடியாத ஒன்று எவ்வாறு இறையாக இருக்கமுடியும்,

    5)   அப்படியானால் இறையைக் கண்டதாக அருளாளர்கள் கூறுவது என்ன   போன்ற வினாக்களின் மூலமாக ஆராய்ச்சியினைத் தொடங்க வேண்டும்.

      இரண்டாவது படி: தெளிவு பெறுதலாகும்.

    இவ்வளவு ஆராய்ச்சி செய்ததன் முடிவு என்னவாக இருக்க வேண்டும்? தெளிவு பெறவேண்டும் என்பதேயாகும். என்ன தெளிவு அது?

    1)   இறை என்பது எது,

    2) அதற்கும் நமக்கும் உள்ள உறவு என்ன,

    3) பிறந்து இறக்கப்போகின்ற இவ்வாழ்க்கையின் பொருள் என்ன,

    4) புலன்இன்பங்களில் அளவு மீறி, முறையையும் மாற்றி, மயக்கமுற்று புலன்களுக்கு அடிமையாகிய அறிவை மீட்டு விடுதலை செய்து (Liberation) தன்னையே உணர்வது ஒன்றேதான் என்கின்ற தெளிவுதான் முதற்படியான ஆராய்ச்சியின் முடிவு அது.

    5) இதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்பதனை உறுதியாக கருத்தில் கொண்டு கடமை ஆற்றுவதே மனித வாழ்க்கையின் பொருள், அர்த்தம், நோக்கம், பயன், பேரின்பம். மரணமிலா பெறுவாழ்வு வாழ்தல் என்கின்ற தெளிவு.  

    மூன்றாவது படி: பயிற்சியாகும்.   ஆராய்ச்சி செய்து, தெளிவு பெற்ற பிறகு செய்யவேண்டியது பயிற்சியாகும். ‘கற்க கசடறக் கற்பவை; கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்பதற்கேற்ப முறையான பயிற்சியாகிய மனவளக்கலையை மேற்கொள்ள வேண்டும்.  

    நான்காவது படி: வெற்றி பெறுவதாகும்.   வெற்றி பெறுவது. இது கர்மயோக வாழ்வு வாழ்ந்து மரணமிலா பெறுவாழ்வு வாழ்வதாகும். மனித வாழ்வில் முழுப்பயனளிக்கக்கூடிய, எக்காலத்திற்கும், எவ்விடத்திற்கும், பொருத்தமானவையாக இருக்கும் நூல்கள் எது எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். அவை, ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி என்கின்ற நான்கு படிகளின் வழியாக திறமை அடைந்த அறிஞர்கள் எழுதும் நூல்களே என்கிறார் மகரிஷி அவர்கள். அத்தகைய நூல்களில் மிகச் சிலவே உள்ளதாகவும் கூறுகிறார். அவற்றில் ஓர் சிறந்த உயர்வைப் பெற்று மிளிர்வதுதான் திருக்குறள் என்கிறார்.

        அத்தகைய நூலாசிரியரின் திறமை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.   1)   மெய்ப்பொருள் விளக்க நிலை பெற்று முழுமை பெற்றிருக்க வேண்டும் அந்த நூலாசிரியர் என்கிறார். 2)   மேலும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்:– விரிந்த அறிவோடு வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும். 3)   சிறப்புற்று வாழ்வதற்கான நெறிகளை வகுத்திருக்கப்பட வேண்டும் அந்த நூலில் என்கிறார் மகரிஷி அவர்கள்.   அத்தகைய சிறப்புக்களுடைய ஒரு நூல் திருக்குறள் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேல் திருவள்ளுவர் அல்லது திருக்குறள் என்கின்ற பெயரைச் உச்சரிக்கும்போதே இத்தனை சிறப்புக்களும் காதுகளில் வந்து ஒலிக்க வேண்டும். மகரிஷி அவர்கள் தான் அடைந்த பயனின் நன்றி உணர்வாக தன்னுடைய மானசீகக்குருவாகிய திருவள்ளுரை போற்றுகிறார்.

        நம் நம்குருவிடம் பெற்று வருகின்ற கிடைத்தற்கரிய பயனை அடைந்து வருவதால், நாம் போற்ற வேண்டியது, மேற்கண்ட சிறப்புகள் அத்தனையும் பெற்ற ஒரு நூலாசிரியரும், நூலும் முறையே வேதாத்திரி மகரிஷி அவர்களும், அவர் அருளியுள்ள நூலான திருவேதாத்திரியமும் ஆகும் என நினைந்து நினைந்து  பணிவுகலந்த பெருமையினால் மனம் குளிர்ந்து, குளிர்ந்து, குருவின் காணிக்கையாக அறுகுணங்களிலிருந்து விடுதலை பெற்று, நாம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே பெற்று விடுவதேயாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

        ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் விரைவில் பண்பேற்றம் பெறுவதற்கு மகரிஷி அவர்கள் கூறியபடி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழியான ‘எப்பொருளை, எச்செயலை, எவ்வுயிரை, எக்குணத்தை அடிக்கடி நினைந்து வந்தால் நினைப்பவரின் ஆற்றல் அப்பொருளினுடைய தன்மையினை அறிவிலும் உடலிலும் மாற்றம் பெறக்காணலாம்’ என்கின்ற சூட்சுமத்தை பயன்படுத்திய வகையில் இன்றைய அறிவிற்கு விருந்து, தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மாக்கள், செயல்கள், குணங்களைப்பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குருவருளும், திருவருளும் என்பதனை நினைக்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.

    வாழ்க திரு பொருந்திய திருவேதாத்திரியம், வளர்க திரு பொருந்திய திருவேதாத்திரியம். வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்.