August 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 208

    வாழ்க மனித அறிவு                                                          வளர்க மனித அறிவு

     

    27-08-2016—சனி

    “சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்.”

    . . . கன்பூசியஸ்.

    பயிற்சி—
    1) கோழைத்தனம் என்பது என்ன?
    2) ஏன் கோழைத்தனத்தை சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுடன் ஒப்பிடுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 207

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

       26-08-2016—வெள்ளி

     

    “ஒருவரிடம் உள்ள அறியாமையே அவர் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளது.

    . . . பிளேட்டோ.

     

    பயிற்சி—

    1)   எந்த துன்பத்திற்கும் காரணம் அறியாமைதானா?

    2)   துன்பத்திற்குப் பொதுப்படைக் காரணம் அறியாமைதானா?

    3)   இது முற்றிலும் சரி என எடுத்துக் கொள்ள முடியுமா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                 வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-205

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    25-08-2016 – வியாழன்

    அறியாமை

     

    அ) பொதுவாக அறியாமை என்பது என்ன?

    (ஆ) அதனால் விளைவது என்ன?

    (இ) வாழ்வியலோடு இணைத்து அறியாமைக்கு பொருள் கூறவும்.

    (ஈ) எவையெல்லாம் அறியாமைகள்?

    (உ) ஒருவரின் அறியாமையால் மற்றவருக்கு பாதிப்பு உண்டா? எவ்வாறு?

    (ஊ) அவ்வாறு பாதிப்பு உண்டாகும்போது முதலாமவரின் நிலை என்ன?

    (எ) முதலாமவர் அந்நிலையினை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

    (ஏ) ஏன் இயற்கையில் இந்த நிலை?! இது நியாயமா?

    (ஐ) அறியாமையை சமுதாயத்தில் எவ்வாறு நீக்கலாம்?

    (ஒ) இவ்வினாக்களுக்கான விடையைத் தொகுத்து அறியாமை என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதிப்பார்க்கலாமே!

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்