2016

Yearly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 226

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    29-10-2016 — சனி

    ‘மனதில் பார்க்கும் வெற்றுக் காட்சியை தீர்மானமாக அடைய நினைத்தால், முயற்சி செய்தால்,  அதன்படி வெற்றி பெற்ற வீரனாக வாழ ஆரம்பித்தால், மிக எளிதாக வெற்றியும் வந்துவிடும்’

    . . . ஹென்றி டேவிட் தோரா

    பயிற்சி—

    1) இது உண்மையாக நடக்குமா?
    2) அப்படியானால் எல்லோருமே இவ்வாறு செய்யலாமே!
    3) குறிப்பாக இளம் வயதில் இளைஞர்கள் இவ்வாறு செய்து பார்க்கலாமே!
    4) இது எந்த நியதியின்படி நடக்கின்றது?
    5) மகரிஷி அவர்கள் கூறியுள்ளதனை ஹென்றி டேவிட் தோராவின் கூற்றுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமா?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 225

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    28-10-2016 — வெள்ளி

    “வாழ்வு என்பது சிந்தனையே!  நல்ல சிந்தனையே சிறந்த வாழ்க்கையாகும்”

    . . . கீரீஸ் நாட்டுப் பழமொழி.

    பயிற்சி—

    1) என்ன சொல்கின்றது பழமொழி?
    2) வாழ்வையும் சிந்தனையையும் ஒன்று எனக் கூறுகின்றது பழமொழி. இது எவ்வாறு?
    3) நல்ல சிந்தனையால் வாழ்வு எவ்வாறு சிறப்பாக அமையும்?
    4) ஆறாம் அறிவுடன் மனிதன் வாழ்வதால் சிந்தித்துதானே வாழ வேண்டும்? வாழ்வது என்பது நொடிக்கு நொடி நடந்து கொண்டுதான் இருக்கின்றது? அப்படியானால் சிந்திப்பவர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பர்?
    5) ஏன் சிந்திப்பது கடினமாக உள்ளது மனிதனுக்கு? சிந்திப்பதற்கு பயிற்சி அவசியமா? பயிற்சி இல்லாமையால் சிந்திப்பது கடினமாக உள்ளதா?
    6) சிந்திப்பதால் என்னென்ன உலகியல் லாபங்கள் உள்ளன?

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-223

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    27-10-2016 – வியாழன்

    சீர்திருத்தம் என்றால் என்ன? அது ஏன் தேவை?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading