பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது சுத்தத்தவறு. பொறுமைக்கு எல்லை வரையறை செய்தால் அதுதான் வஞ்சம்.
….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி:
1) ‘சுத்தத்தவறு’ என்று அழுத்தமாக ஆணித்தரமாக சொல்வதால், இதனை ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வேண்டியுள்ளதல்லவா?
2) வஞ்சம் வரும் வழி, போகும் வழி என்ன?
கடந்த அறிவிற்கு விருந்தில், செம்பொருளாகிய மெய்ப்பொருளை அறிந்து, அறிவை முழுமை அடையச் செய்து கொண்டிருக்கின்ற மனவளக்கலைஞர்களாகிய நாம், எது அறிவு என்று திருவள்ளுவர் கூறுவதனை அறிந்து கொண்டோம். இன்றும் ‘எது அறிவு’ என்று கூறுகின்ற மற்றுமொரு குறளையும் அறிந்து கொள்வோம். மெய் உணர்தல் “பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும் செம்பொருள் காண்பது அறிவு”குறள் எண் 358
பொருள்:‘பிறவித்துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு, முக்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு’ என அறிஞர்கள் இக்குறளுக்குப் பொருள் கூறுகின்றனர்.
இங்கு ஆய்வு செய்ய வேண்டியவைகள் மூன்று உள்ளன. அவையாவன:
இக்குறளில் ‘பிறப்பு என்னும் பேதைமை’ என்றுதான் உள்ளது. ‘துன்பம்’ என்கின்ற வார்த்தையே காணப்படவில்லை.இருப்பினும் இக்குறளுக்குப் பொருள் கூறும்போது பிறவியைத் துன்பமாகக் கருதி ‘பிறவித்துன்பத்திற்குக் காரணமான அறியாமை’ என்கின்றனர் பொருள் கூறும் அறிஞர்கள்.எனவே பிறவி எவ்வாறு துன்பமாகும் என ஐயம் நமக்கு எழலாம்.
‘பிறவியைத் துன்பமாகக் கருதுவது’ உலகியல் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூறுகின்ற கூற்றாகவல்லவா இருக்கின்றது என்று மற்றுமொரு ஐயமும் எழலாம்.
விரக்தி என்பது என்ன?
விரக்தி என்பது, வாழ்க்கையில் துக்கம், இழப்பு, கவலை, ஆகியவைகள் ஏற்படும்போது, அம்மூன்றிற்கும்
என்ன காரணம் என்று அறியாமலே இருக்கும்போதும்,
மேலும் காரணம் என்ன என்று எளிதில் அறிய முடியாமல் இருக்கும்போதும்,
காரணம் அறிந்து கொள்ளும் திறன் இல்லாமல் இருக்கும்போதும்,
தன்மேலேயே, ஒருவகை கற்பனையான மனோநிலையில் ஏற்படும் வெறுப்பு.
முன்வினை மற்றும் இப்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள பாவச்செயல்களின் விளைவால், துன்பங்கள் அதிகமாகி, அதற்கானக் காரணம் முன்வினையும், தான் இதுவரையில் செய்துள்ள தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவச் செயல்களே என்று அறியமாமல் தவிக்கும்போது வருவது ஒருவகை விரக்தி.
ஆனால் ‘பிறவியே துன்பம்’ என்று திருவள்ளுவர் கூறுவது விரக்தியால் அல்ல. மாறாக பேரறிவின் தன்மையான விவேகத்தால் கூறப்படும் கூற்றாகும். ‘விவேகத்தால் கூறப்படும் கூற்று என்பது எவ்வாறு’ என்கின்ற மூன்றாவது ஐயம் எழலாம்.
விவேகம்(Wisdom) என்பது ஒன்றின் நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் அறிவு. இயற்கையின் ஆதிநிலையாகிய/இறைநிலையாகிய மெய்ப்பொருள் வேகத்தையும்(Force), விவேகத்தையும்(Consciousness)தானே கொண்டுள்ளது.
எனவே, மெய்ப்பொருளை அறியும் நோக்கத்தில், பயணித்துக் கொண்டிருக்கும் அறிவிற்கு,இறுதி பிறவியில் ஏற்படுகின்ற,எதார்த்த நிலையை புரிந்து கொள்கின்ற தெளிவேவிவேகத்தின் வெளிப்பாடாகும்.
பிறவி என்பது துன்பமாகத்தானே உள்ளது!? எதற்கு துன்பமாக உள்ளது? துன்பம் என்பது உணர்வு என்பதால், உணர்வை அறிந்துகொள்ளும் அறிவிற்கு பிறவி துன்பமாக இருக்கின்றது. அதாவது ஆன்மாவில் இருக்கும் அறிவுதான் பிறவியைத் துன்பமாக உணர்கின்றது. ஏனெனில்,
பேரறிவே தன்னையே அறிந்து கொண்டு(சுத்த அத்வைதம்) இன்புற எடுத்துக் கொண்ட
மனிதஉரு தன்மாற்ற பயணத்தில்,
அறிவு தன்னை அறியாமலேயே இருப்பதும்,
தன்னை அறிய முயலும்போதும் ஏற்படுகின்ற தடைகளும் துன்பங்களாகவேத்தானே இருக்க முடியும்?
மாற்றாக இவ்வாறாகவும் புரிந்து கொள்ளலாம்.எப்படி?மனித அறிவு மெய்ப்பொருளை, பேரறிவை அறிந்து கொள்வது என்பது எப்போது சாத்தியமாகும்?ஆன்மா தன்னை முழுவதுமாகத் தூய்மை செய்து கொள்ளும்போதுதான் சாத்தியமாகும். தூய்மை செய்வது என்பது,
ஏற்கனவே உள்ள அழுக்கை நீக்கினால்தானே சாத்தியாமாகும்!
ஏற்கனவே பல பிறவிகளில், அறிவு, அறியாமையால்
ஆணவம்(தன்முனைப்பு), கன்மம்(பாவப்பதிவுகள்), மாயை(எதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல் இருத்தல், அறிய வேண்டியதை அறியாதிருத்தல், பொருளல்லவற்றை பொருள் எனக் கொள்ளுதல்) ஆகிய மும்மலங்களால் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற
தீய வினைகளின் பதிவுகளே ஆன்மாவில் உள்ள அழுக்குகளாகும்.
ஆகவே தீய வினைகளின் பதிவுகள் செயலிழக்கச் செய்வது என்பது ‘செயலுக்குரிய விளைவு உண்டு’ என்கின்ற இயற்கை/இறை நீதியின்படி தீயச்செயல் பதிவுகளுக்கு, விளைவுகள் வரும்போது அது துன்பங்களாகவே வந்துதானே தீர வேண்டும்.
எனவே ஆன்மாவிற்கு பிறவி என்பது, இயற்கையின் நியதியின்படி, தன்னிடம் பதிந்துள்ள செயல் பதிவுகளுக்கேற்ப விளைவுகளைத் தருகின்ற ஒரு சாதனம்(Medium). மேலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம், வாழ்க்கை என்பது என்ன என்று எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறோமா?! சற்குருவின் அருளால் அறிவுக்கண்–சிந்தனைக்கண் திறந்தபிறகுதானே இப்போது சிந்தித்துப் பார்க்கிறோம்.
வாழ்க்கை என்பது என்ன?
வாழ்க்கை என்பது இன்ப—துன்ப அனுபவங்களே அன்றி வேறு ஏதும் அல்ல! யாருக்குமே துன்பமில்லாமல் வாழ்நாள் முடிந்து விடுவதில்லை.
சிலருக்கு இன்பம் அதிகமாகவும், துன்பம் குறைவாகவும் இருக்கலாம்.
அல்லது
இன்பம் குறைவாகவும், துன்பம் மிகுதியாகவும் இருக்கலாம்.
துன்பம் வரும்போது, இன்பம் வந்தபோது அனுபவித்த நினைவுகளைக் கொண்டு துன்பத்தை சரிசெய்து கொள்ள முடிகின்றதா மனிதனால்?! இல்லையே! துன்பம் வரும்போது மனிதன் துவண்டு விடுகின்றானே!
ஒரு வேளை உதாரணத்திற்கு, ஒருவருக்குப் பிறந்ததிலிருந்து துன்பம் என்று சொல்லும் அளவிற்குத் துன்பமே வந்ததில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் முற்பிறவிக் கருமையப் பதிவுகளை யார் அறிவார்?! ஆகவே துன்பம் இல்லாமல் இருக்கும் ஒருவர், இனிமேலும் தமக்குத் துன்பம் வராது என நினைக்கவோ/சொல்லவோ முடியுமா? முடியாது. இதனை மற்றவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்தும்கூட அறிந்து கொள்ளலாம்.
பிறவி எடுப்பதே புலன்களின் வழியாக இன்பம் அனுபவிப்பது மட்டுமே அல்ல. இது சாதாரண இன்பம். சற்றேறக்குறைய மூன்று லட்சத்து இருத்தைந்தாயிரம் (65,00000÷ 20=3,25,000) பிறவிகளில், ‘தின்றுத் திரிந்து உறங்கி அனுபவித்ததுதானே இந்த சாதாரண இன்பம்! மகரிஷி அவர்கள் அழைப்புக்கவியில் ‘தின்றுத் திரிந்து உறங்கவா பிறந்தோம்’ என அன்புடன் வினவி அறிவுறுத்துவதனை நினைவில் கொள்ள வேண்டும்.
புலன்களின் உதவியின்றி அனுபவிக்கின்ற இன்பம் ஒன்று உள்ளது மனிதப்பிறவிக்கு. அந்த இன்பத்தை ஏற்கனவே முற்பிறவியில் அனுபவித்திருந்தால் இப்போது இந்தப் பிறவி எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது என்ன இன்பம்? அதற்கு என்ன பெயர். பொருள், மெய்ப்பொருள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது போன்றாதா அது? ஆம்! மனம் நான்கு நிலைகளை அனுபவிக்கக்கூடியது என்றும், இதுவரை மனதைப் பற்றிய தெளிவான கருத்துக்கள் வெளியாகாத நிலையில் ‘மனம் உயிரின் படர்க்கை நிலை‘ என்றும் கூறுகிறார், மனதை வளப்படுத்தும் கலையை வகுத்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
புலன்களின் துணையில்லாமல் அனுபவிக்கும் இன்பம் பேரின்பம்(ecstasy) என்பது அமைதியும் திருப்தியும் கலந்த இன்பம் என்கிறார் மகரிஷி அவர்கள். பேரின்பத்தில் அமைதியும் இருக்கும். திருப்தியும் இருக்கும்.ஆனால் புலனின்பத்தில், அறிவின் அறியாமையால், திருப்தி வாராமல், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என அவா நீடித்துக் கொண்டே, ‘அளவு கடைப்பிடித்தலும், முறையை மாற்றாமையும்’ என்கின்ற இன்பத்தின் சாம்யத்திற்கு (formuala for pleasure—to follow implicitly limit and method)உட்படாமல்போய், புலன்களின் செல்களுக்குப் பொருந்தா உணர்வு ஏற்பட்டு, விளைவு, இன்பமே துன்பமாகிவிடுகின்றது.ஆனால் பேரின்பம் என்பது அறிவின் அறியாமை நீங்கிய நிலையில் அனுபவிக்கப்படுவதால், புலன் இன்பங்களை அளவு, முறையோடு அனுபவித்தும், பேரின்ப நிலையை அனுபவிப்பதால் அங்கே புலன்களுக்கு பொருந்தா நிலை ஏற்படுவதில்லை. மாறாக பேரின்ப போதையில் திளைக்கலாம்.
ஆகவே பிறவி ஆன்மாவிற்கு துன்பமே என்கின்றனர்
ஆன்றோர்கள். அதனால்தான் ‘மீண்டும் பிறவா வரம்
வேண்டும்’ என்கின்றனர் பக்தியில் திளைத்தவர்கள்.
எவ்வாறு கடல் நீர் ஆவியாகி மேகமாகி, ஆறவாரமிட்டுக் கொண்டு, ஆறாகவும், நதியாகவும் ஓடி மீண்டும் கடலை சென்றடைந்ததும் அமைதியடைகின்றதோ, அதேபோன்று ஆன்மா எங்கிருந்து புறப்பட்டதோ, மீண்டும் அங்கேயே சேர்வதற்காகத்தான் மனிதப்பிறவி எடுக்கின்றது. இஃதன்றி, ஆன்மா மாறான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால்(புலன்மயக்கம் கொண்டு, பிறவியின் நோக்கம் அறியாமல்), ‘பிறவியே துன்பம்’ என மனிதனுக்குத் தெரியாமல் போனாலும், .இயற்கையின்படி மனிதனுக்கு பிறவி துன்பமே. துன்பம் வருகின்றபோது ஏன் துன்பம் வந்தது/வருகின்றது என்று சிந்திக்க வேண்டாமா மனிதன்? துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது என்கின்ற கேள்வி எழுந்துவிட்டால் அது மனிதனை இறை உணர்விற்கு அழைத்துச் செல்லும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
இளைஞர் ஸ்ரீ வேதாத்திரியை பின்னர் மகானாக்கிய, அவருள் இளமையிலேயே எழுந்த உன்னத வினாக்களில் ஒன்றுதான் ‘துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது’ என்பது. இதே போன்றுதான் இளவரசராக இருந்த புத்தருக்கும் துன்பம் பற்றிய வினா எழுந்ததால்தான் பின்னர் போதிமரத்தடியில் ஞானம் பெற்றார்.
அதாவது ‘துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது’ என்பதற்கு ‘இறை உணர்விற்கும்’ தொடர்பு உள்ளதே இதற்கானக் காரணம்.‘மனிதப் பிறவியில் இறை உணர்வு பெற்றிட வேண்டும்’ என்பது இயற்கையின் நோக்கமாக உள்ளதால், அதனை அறியாமலோ அல்லது மறந்தோ அல்லது அலட்சியப்படுத்தியோ வாழ்வது இயற்கைக்கு முரணான வாழ்க்கையாகத்தானே அமையும். இயற்கைக்கு முரண்பட்டு வாழ்ந்தால், விளைவு துன்பம் தானே!?
எனவே துன்பத்திற்கான காரணத்தை அறிந்து அதனைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் ஆழ்மனதிலிருந்து(மனதின் மறுமுனையிலிருந்து) வந்துவிட்டால், அதற்கான ஒரே தீர்வான ‘இறை உணர்வு பெறுவதே’ என்பதனை அறிவு கண்பிடிக்கின்றது.மேலும், இதற்கு இயற்கையே/இறையே துணையாகவும், காப்பாகவும் அமைகின்றது. எனவேதான் மகரிஷி அவர்கள் ‘துன்பம் ஏன் வருகின்றது’ என்கின்ற வினா வந்துவிட்டால் அது இறை உணர்விற்கு கொண்டு செல்லும் என்கிறார்.
அறிவு தன்னை அறியாத அறியாமையின் காரணமாக துன்பம் தரக்கூடிய மீண்டும் மீண்டும் பிறப்பு—இறப்பு என்கின்ற, ஓயாத சுழற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளும் அறியாமை நீங்கிய அறிவால்தான் முடியும் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். அந்த அறிவுதான் ‘அறிவு’ என அறிவிற்கு வரையறையை கூறுகிறார் அறிஞர் திருவள்ளுவர்.
மேலும் முக்தி என்பதும் வள்ளுவர் கூறும் அறிவின் நிலையே அது. இதனையே நம் குருதேவர் அவர்கள் ‘அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை, அது முக்தி என்கிறார். ‘அவன் நீ ஒன்றாய் அறிவது’ என்பது எப்போது சாத்தியமாகின்றது? ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற திறனை அறிவு பெறும் நிலையில்தான் சாத்தியமாகின்றது.
மனிதன் பண்பாட்டில் உயர்வதற்கு பண்பேற்றம் பெறவேண்டும். அதற்கு மனிதப்பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறவேண்டும். அதாவது ஆறறிவுடன் வாழ்கின்ற மனிதன், அதற்கு பொருத்தமாக, இறை உணர்வு பெற்று பிறவிப்பயனை பெற்றிடல் வேண்டும் என்று ‘மலர் வழியே விளங்கும் மறைபொருள்’ என்கின்ற தலைப்பில், சுத்த அத்வைத வி்ஞ்ஞானத்தை எளிமையாக விளக்க விரும்பிய மகரிஷி அவர்கள் அக்கவியின் கடைசி வரிகளில் கூறுகிறார்.
இந்த நிலை என்பது மனிதகுலத்தில் இயற்கையின் ஆதிநிலையின்/இறைவெளியின் இயல்பூக்க நியதியின்படி நடந்தே ஆக வேண்டியதே!இருப்பினும், ‘Fraction demands Totality Supplies’ என்பதனையும் கண்டுபிடித்த மகரிஷி அவர்கள், இறை உணர்வால் மலர வேண்டிய ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய நெறிகளைக் கொண்ட அற உணர்வு மலர்ந்திட அறிவு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்கின்ற திறனைப் பெற்றிட வேண்டும் என்கின்ற சங்கல்பத்தை வாழ்த்தாக அமைத்துள்ளார் உலகநல வாழ்த்துப்பாவில்.வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இத்துடன் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற உலகை வாழ்த்தும் மகா மந்திரத்தின் உட்பொருளை விரிவாக பதினோறு விருந்துகளில் அருந்தினோம். இதனை மீண்டும், மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்து, கொண்டு வந்து, ஆழ்ந்து விரிந்து சிந்தித்து உலகை வாழ்த்தும் புனித எண்ணமான மகா மந்திரத்திற்கு ஆற்றலையும், திணிவையும் அளிப்போம்.
வாழ்க உலக சமாதானம். மலரட்டும் விரைவில் உலக சமாதானம்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.