2017

Yearly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 245

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 245

    07-01-2017 — சனி


    ஏற்றிவைக்கும் ஒவ்வொரு விளக்கும் வெளிச்சத்தைத் தருவதுபோல் மனிதன் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் முன்னேற்றத்தைத் தரும்”

                                                              . . . அறிஞர் ரூஸோ


    பயிற்சி:–

    1. முன்னேற்றம் என்று எதனைக் குறிப்பிடுகிறார் அறிஞர் ரூஸோ?
    2. எதில் முன்னேற்றம் வரும்?
    3. நற்செயல் செய்வதனை வலியுறுத்த அறிஞர் ரூஸோ கூறும் உவமானத்தைக் கவனிக்கவும்! சிந்திக்கவும்!
    4. அறிஞர் கூறுவது என்ன?
    5. சிந்திக்க அமுத மொழிப் பயிற்சிக்காக ஏற்கனவே நாம் எடுத்துக் கொண்ட அறிஞர் ரூஸோவின்  அறிவுரைகளை நினைவிற் கொண்டு வரவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 244

    வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 244

     

    06-01-2017  — வெள்ளி


    இறைவனை நேசித்தால் விவேகமும், வைராக்கியமும் தானாக வரும்”.  

                                                               . . .  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.


     பயிற்சி—

    1. நேசிப்பது என்பது என்ன?
    2. இறைவனை நேசிப்பது என்பது என்ன?
    3. இறைவனை எவ்வாறு நேசிப்பது?
    4. விவேகம் என்பது என்ன?  அதன் அவசியம் என்ன?
    5. வைராக்கியம் என்பது என்ன? எதற்கு வைராக்கியம் அவசியமாகின்றது?
    6. இறைவன் உருவமாக இருந்தால்தான் நேசிக்கவும், ரசிக்கவும் முடியுமா?
    7. இறைவன் அரூபி எனத்தெரிந்து விட்டதால் அவனை நேசிக்க முடியாதா?  ரசிக்க முடியாதா?
    8. இறைவனை நேசித்தலுக்கும், விவேகம் மற்றும் வைராக்கியம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?
    9. மேற்கொண்டு சிந்திக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-243

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-243

        05-01-2017 – வியாழன்

     சச்சிதானந்தம் என்கின்ற சொல்லின் உருவாக்கம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

       

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்


    Loading