December 2018

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 282

    வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 282

     

    29-12-2018 — சனி

    “ பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே நல்ல செயல்களையே பழகிக்கொள்ள வேண்டும்”                                                                                                          

                                                                                                                                                                                     . . .    ஓர் அறிஞர்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர்?
    2) பழக்கம் என்பது என்ன?
    3) பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்றால் என்ன பொருள்?
    4) பழக்கம் என்பது சக்தி வாய்ந்தது என்று சொல்லி இருக்கலாம் அறிஞர். ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது என்கிறார் அறிஞர். இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?
    5) ஒழுக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    6) பழக்கத்திற்கும் எண்ணத்திற்கும் தொடர்புள்ளதா?
    7) இந்த அறிஞரும் வேதாத்திரி மகரிஷி அவர்களும் பழக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்ற கண்டுபிடிப்பில் எவ்வாறு இணைகிறார்கள்?
    8) விளக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    9) பண்பேற்றம், பழக்கம், விளக்கம், ஒழுக்கம் இந்நான்கிற்கும் என்ன தொடர்பு?
    10) அறிஞர் ரூஸோ ஒழுக்க வாழ்வு பற்றி என்ன கூறுகிறார்? (இந்த இணையதள சத்சங்கத்தில் அது பற்றி உரையாடி இருக்கிறோம்.)
    11) ‘இளமையில் கல்’ என்று ஏன் கூறுகின்றார்?
    12) ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ ,’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பதற்கும் பழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
    13) இச்சிந்தனையின் முடிவில் நாம் என்ன முடிவிற்கு வர இருக்கிறோம்?
    14) வேதாத்திரியக் கல்வி முறையில் ஒழுக்கப்பழக்க அறிவு இடம் பெற்றிருப்பதாலும், கல்வி என்பது பள்ளியிலிருந்து ஆரம்பிப்பதால், கருத்தியலும், செய்முறையும் இணைந்த ஒழுக்கவியல் பாடம் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மற்ற பாடங்களைப்போல் கட்டாயப் பாடமாக்க வேண்டும். இந்த புனித அலைகளை எல்லா அருளாளர்களையும் மனதில் நினைந்து வணங்கி வான்காந்தத்தில் பரவவிடுவோம்.

     

    வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                  வளா்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க வினாக்கள்-283

    வாழ்க மனித அறிவு!                                                                          வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-284

     

    27-12-2018 – வியாழன்

    1.      பண்பேற்றம் என்றால் என்ன?

    2.      அது எதன் அடிப்படையில் நிகழ்கிறது?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                    வளர்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க அமுத மொழிகள் – 281

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 281

     

    21-12-2018 — வெள்ளி.

    “மனிதனுடைய சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது உண்டாகும் இன்பம் பேரின்பமாகும்.”

    . . . புளூடார்க்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் புளூடார்க்?
    2) சிந்தனையும் செயலும் சேர்வது என்பது என்றால் என்ன பொருள்?
    2) சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது இன்பம் உண்டாகுமா? எப்படி?
    3) அந்த இன்பம் எப்படி பேரின்பமாகும்?
    4) மனித மனம் லாபம் பார்த்து (கணக்குப்பார்த்து – human mind is so calcurlive) செயல் புரியும் தன்மை
    உடையதால், இன்பத்தைவிட பேரின்பம் அதிகமாக இருக்கும்போது அறிஞர் புளூடார்க் கூறுகின்றபடி
    சிந்தனையையும் செயலையும் சேர்த்து செய்து பேரின்பம் அடையலாமே!
    5) இதே போன்று சிந்தனையுடன் செயலையும் இணைத்து ஏதாவது கவி அருளியுள்ளாரா வேதாத்திரி
    மகரிஷி அவர்கள்?
    6)  இரு அறிஞர்களும் எவ்வாறு இணைகிறார்கள் இவ்வுண்மையின் கண்டுபிடிப்பில்?

     

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்