சிந்திக்க அமுத மொழிகள்-290
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்-290
02-05-2020-சனி
தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்,
தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்.”
. . . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி:
- என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
- தெய்வநிலை அறிந்தோர்களில் இருவகை உள்ளனர் என்பதுபோலல்லவா கூறுகின்றார்?
- தெய்வம் ஒன்றுதான். அவ்வாறிருக்கும்போது தெய்வநிலை அறிந்தவர்களில் இரண்டு வகையினர் எவ்வாறிருக்க முடியும்?
- உயிரை உணர்ந்தவர்கள் தான் தெளிவாக தெய்வத்தை அறிந்தவர்களோ?
- தெளிவாக அறிவறிந்தவர் ஒருவராகும் என்பதால் அறிவே தெய்வம் என அறிந்தவர்கள்தான் கோடியில் ஒருவரா?
- அப்படியானால் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடர்களாகிய நாம் கோடியில் ஒருவரா? அந்த புண்ணியம், பெரும்பாக்கியம் செய்தவர்கள்தானே நாம் அனைவரும்?! அவர் கூறும் ஒருவர் இப்போது பலராகிவருகின்றனரா அவருடைய போதனையும் சாதனையும் கொண்ட மனவளக்கலையால்?
- என்ன சொல்ல வருகிறார் மகரிஷி அவர்கள்? அதனை அறிய ஞானக்களஞ்சியம் பாடல் எண். 1693 ஐ வாசிக்கவும்.
- வேறுயாராவது இது போன்று(in this context) கூறியுள்ளனரா?
வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
https://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
![]()


Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.